Arul Prakash

Thriller

4.4  

Arul Prakash

Thriller

தாத்தா சொத்தும்,சம்பவமும்

தாத்தா சொத்தும்,சம்பவமும்

9 mins
568


இது அஜய் மற்றும் அவங்க தாத்தா பத்தின கதை .அஜய் வயசு 21 , தாத்தா வயசு 65.அஜய்க்கு ஒரு அக்கா இருக்கா ,பேரு ரம்யா.

 

தாத்தா to அஜய் : அஜய் என்ன கேஸ் புக் use பண்றியா .

 

அஜய் : ஐயோ தாத்தா, கேஸ் புக் இல்ல face புக் .

 

தாத்தா : அது தான் . நான் உன் கூட கொஞ்சம் பேசணுமே

 

அஜய் : சொல்லுங்க தாத்தா

 

தாத்தா : நீ சொந்தமா பிஸ்னஸ் பண்ணனும் நினைக்கிறல .

 

அஜய் : ஆமா தாத்தா .

 

தாத்தா : நான் அதுக்கு பணம் தரேன் .

 

அஜய் : தாத்தா என்ன ஒரு அதிசயம் , பிஸ்னஸ்னு சொன்னவே காசு தரமாட்ட,இப்ப என்ன புதுசா இருக்கு .

 

தாத்தா : சொத்தையெல்லாம் பிரிச்சு தந்துடலாம்னு இருக்கேன் .

 

அஜய் : என்ன திடிர்னு .

 

தாத்தா : எப்படி சொல்றதுன்னு தெரியல .

 

அஜய் : சும்மா சொல்லுங்க .

 

தாத்தா : டேய் உனக்கு நம்ம ஊர்ல சகுந்தலானு ஒருத்தங்க இருந்தாங்க ஞாபகம் இருக்கா .

 

அஜய் : நீ ஒரு காலத்துல வச்சிட்டு இருந்தியே அவங்களா .

 

தாத்தா : ஆமா .

 

அஜய் : அவங்கள தான் நம்ம பாட்டி ,ஊறவிட்டு தொரத்திடிச்சே .

 

தாத்தா : ஆமா டா . அவளுக்கு ஒரு பிள்ளை கூட இருக்கு .என் பிள்ளை தான்.அவனுக்கு நான் எதுமே பண்ணது இல்ல டா, அதுனால சொத்துல பாதி பங்கு தரலாம்னு நினைக்கிறன் .

 

அஜய் : ஒ அப்போ எனக்கு கிடைக்க இருக்க சொத்துல ,அவனுக்கு பாதி போது .

 

தாத்தா : ஏன் டா அப்படி பேசுற , உனக்கு கிடைக்கிற பங்குல 3 தலைமுறை உட்கார்ந்து சாப்பிடலாம் டா .

 

அஜய் : என்னோட அம்மா அப்பா ஒரு accident ல போய் சேந்துட்டாங்க , அவங்க இருந்தா நீ இப்படி பண்ணுவியா .

தாத்தா : சகுந்தலா குடும்பத்துக்கு கொடுக்குறது என் கடமை டா .

 

அஜய் : நாளைக்கு உங்க இன்னொரு மகன் , அதாவது என் சித்தப்பா வந்து கேட்பாரு , அப்ப என்ன சொல்றன்னு பார்ப்போம் .

 

அஜய் கோபமா எழுந்து போய்டுறான் .

 

  அடுத்த நாள் அஜய் சித்தப்பா , தாத்தாவ பாக்க வராரு .

 

அஜய் சித்தப்பா to தாத்தா : என்ன சகுந்தலா குடும்பத்துக்கு பாதி சொத்தை குடுக்க போறிங்களாம் .

 

தாத்தா : ஆமா என்ன இப்போ .

 

அஜய் சித்தப்பா : எங்க அம்மா உயிரோட இருந்த இப்படி பண்ணுவிங்களா .

 

தாத்தா : டேய் நீயெல்லாம் என் கிட்ட பேசவே கூடாது , வாழ்க்கைல ஒரு வேல செஞ்சி இருக்கியாடா நீ , நம்ம சொத்தை உட்கார்ந்து சாப்டுட்டு இருக்க . கல்யாணம் ஆகி உன் சொந்த உழைப்பில ஒரு ரூபா சம்பாரிச்சு இருப்பியா .நீ என்ன கேள்வி கேட்குற . குடுக்குற பங்க வாங்கிட்டு போ .

 

அஜய் சித்தப்பா : ஓ அப்பிடியா ,சரி பாக்கலாம் நீங்க எப்படி அந்த குடும்பத்துக்கு கொடுக்கிறிங்கனு .

 

தாத்தா : போடா . மிரட்டுறானாம் .

 

 

தாத்தா சோகம் ஆகிடுறாரு , அன்னைக்கு full ah சோகமா இருக்காரு .

 

அஜய் to தாத்தா : ஏன் தாத்தா சோகமா இருக்க .

 

தாத்தா : நடந்தது எல்லாம் பாத்த இல்ல , எப்படி சந்தோசமா இருக்கறது .

 

அஜய் : சரி சரி, நீ ஒன்னும் வருத்த படாத , உன் இஷ்டப்படி செய் நான் அத தடுக்க மாட்டேன் .

 

தாத்தா : சந்தோஷம் டா , நீயாவது என் பக்கம் இருக்கியே .

 

    அடுத்த நாள் அஜய் போன் நோண்டிகிட்டு உட்கார்ந்து இருக்கான் .

 

தாத்தா to அஜய்: என்ன டா கேஸ் புக்கா .

 

அஜய் : இந்த face புக் உன் வாய்ல வராதே .

 

தாத்தா : என்ன தான் டா பண்ணுவ அதுல .

 

அஜய் : நண்பர்கள் கிட்ட பேசலாம் .

 

தாத்தா : ஓ வேற என்ன பண்ணலாம் .

 

அஜய் : எதாவது friends ah கண்டுபிடிக்கலாம் .

 

தாத்தா : friends ah கண்டுபிடிப்பியா .

 

அஜய் : எட்டாவதுல படிச்ச நண்பன் ஒருத்தன இப்படி தான் கண்டுபிடிச்சேன் .

 

தாத்தா : டேய் அப்போ சகுந்தலா குடும்பத்த இதுல கண்டுபிடிக்க முடியுமா .

 

அஜய் : ஹ்ம்ம் தேடி பாக்கலாம்.சகுந்தலா அவங்களுக்கு பிறந்த பையன் பேரு என்ன .

 

தாத்தா : ரமேஷ் .

 

அஜய் : ரமேஷ் பெரியசாமினு உன் பேரும் சேத்து போட்டு தேடி பாக்குறேன் .

 

தாத்தா : சரி .

 

அஜய் : 3 பேரு அதே பேருல காட்டுது .

 

தாத்தா : 3 பேருகிட்டையும் அவங்க அம்மா பெரு சகுந்தலவானு கேளு .

 

அஜய் :கேட்குறன் .

 

அஜய் : தாத்தா , கண்டுபிடிச்சிட்டேன் .அவங்க அம்மா பேரு சகுந்தலா , ஊரு நம்ம ஊரு தான் .

 

தாத்தா : சூப்பர் டா . போன் நம்பர் கேளு .

 

அஜய் : ஆனா அவருக்கு உங்க கிட்ட பேச விருப்பம் இல்லயாம் .

 

தாத்தா : என்ன டா இப்படி ஆகி போச்சி .

 

அஜய் : ஆனா அவங்க அம்மா face book ID தராராம் . அவங்க கிட்ட பேச சொல்லறாரு .

 

தாத்தா : சகுந்தலா face புக்ல இருக்காளா .

 

அஜய் : இப்ப எல்லாம் எல்லாரும் face புக் ID வச்சு இருக்காங்க.

 

தாத்தா : சரி ID வாங்கிக்கோ , நான் எப்படி அவகிட்ட பேசுறது .

 

அஜய் : சின்ன விஷயம் தான் உனக்கு ஒரு ID உருவாக்கிடலாம் .

 

தாத்தா : சரி ஆனா அதுல இங்கிலிஷ்ல பேசுனம் , எனக்கு வராதே .

 

அஜய் : தமிழ் keyboard இருந்தா தமிழ்ளையும் பேசலாம் . அதெல்லாம் நான் சொல்லி தரேன் . அந்த காலத்து பத்தாம் கிளாஸ்னு பெருமையா சொல்லுவ , இதெல்லாம் சின்ன விஷயம் தான் .

 

தாத்தா : சரி டா .

 

 

அஜய் face புக் எப்படி யூஸ் பண்றதுனு தாத்தாக்கு சொல்லி கொடுத்துடுறான் .

 

                        அடுத்த நாள்

 

அஜயோட அக்கா ரம்யா , தாத்தா கிட்ட பேசுறா .

 

ரம்யா to தாத்தா : என்ன தாத்தா ,சந்தோஷமா முகத்தை வச்சிட்டு , போன் நோண்டிட்டு இருக்க .

 

தாத்தா : face book .

 

ரம்யா : facebook ah .உனக்கு தான் facebook யூஸ் பண்ணவே பிடிக்காதே .

 

தாத்தா : சகுந்தலா கிட்ட பேசிட்டு இருக்கேன் .

 

ரம்யா : ஓ அப்படியா . சரி போன் நம்பர் வாங்கி வீடியோ கால்ல பேச வேண்டியது தானே .

 

தாத்தா : நேர்ல தான் பார்ப்பேன் , போன்ல பார்க்க மாட்டேன்னு சொல்லிட்டா.

 

ரம்யா : ஓ சரி, எதுக்கு புது டிரஸ் , சென்ட்லாம் அடிச்சிட்டு உட்கார்ந்து இருக்க .

 

தாத்தா வெட்க படுறாரு .

 

ரம்யா : ஓ வெட்கமா , இந்த வெட்கமெல்லாம் பார்க்க கொடுத்து வைக்காம தான் பாட்டி மேல போயிடிச்சு .

 

தாத்தா : ஏன் மா அவளை ஞாபக படுத்துற நைட் பேய்யா வந்து தூக்கத்துல அமுக்க போறா .

 

ரம்யா : அவளோ பயம் இருக்கா, ,நீ நடத்து . சரி வீட்டுக்குள்ள ஏன் ஷூ போட்டுட்டு உட்கார்ந்து இருக்க , அத மட்டும் கழட்டிடேன் .

 

தாத்தா வெட்கம் மறுபடியும்

 

ரம்யா : எதோ ஒன்னு பண்ணு. பாட்டி மறந்துடாத, நைட் வருவா .

 

ரம்யா அஜய பார்க்க அவன் ரூம் போறா .அவன் போன நோண்டிகிட்டு இருக்கான்

 

ரம்யா to அஜய் : ஹே யாருகிட்ட டா பேசிட்டு இருக்க உன் girl friend ah .எனக்கு அவள அறிமுகப்படுத்தி வைக்கமாற்ற .

 

அஜய் : அதெல்லாம் ஒன்னும் இல்ல .

 

ரம்யா : சரி , உனக்கு ஒரு courier வந்து இருக்கு ,போய் வாங்கு .

 

அஜய் : இப்ப சொல்ற எரும

 

அஜய் courier வாங்க போகும் போது அவன் போன ரூம்ல வச்சிட்டு போறான் , ரம்யா அவன் போன எடுத்து பாக்குறா .

 

அஜய் வரான் ,ரம்யா கோபமா அவன முறைக்கிறா

 

அஜய் to ரம்யா : சரி முறைக்காத எனக்கு girl friend இருக்கு , உன்கிட்ட மறைச்சது தப்பு தான்

 

ரம்யா : நான் அதுக்காக முறைக்கல .

 

அஜய் : அப்பறம் .

 

ரம்யா : டேய் முட்டாள் , தாத்தா கிட்ட சகுந்தலா மாதிரி பேசுறது நீ தானா .

 

அஜய் : ஆமா நான் தான் .

 

ரம்யா : ஏன் அப்படி பண்ற .

 

அஜய் : ஏன்னா , அப்போ தான் நமக்கு சொத்து அதிகமா கிடைக்கும் .

 

ரம்யா : என்ன டா சொல்ற .

 

அஜய் : சகுந்தலா குடும்பம் போல ஒருத்தங்கள நடிக்க வச்சி , பணத்த வாங்குறது தான் பிளான் .

 

ரம்யா : டேய் ஆனா தாத்தாக்கு சகுந்தலா முகம் தெரியுமே .

 

அஜய் : அதுக்கு எல்லாம் பிளான் பண்ணியாச்சு, நானும் சித்தப்பாவும் .

 

ரம்யா : இதுல சித்தப்பாவும் இருக்காரா .

 

அஜய் : அவர் விட்டுடுவாரா நம்ம பணம் வேற ஒரு ஆளு கிட்ட போக .

 

ரம்யா : நானும் இந்த gangல இருக்கனா .

 

அஜய் : இருந்துட்டு போ . இல்லனா தொல்லை பண்ணுவ.

 

 

                        அடுத்த நாள்

 

தாத்தா to அஜய் : ஒரு வழியா எல்லா நல்ல படியா முடியும் போல தெரியுது டா .

 

அஜய் : என்ன தாத்தா சொல்றிங்க .

 

தாத்தா : நாளைக்கு சகுந்தலா பையன் ரமேஷ் இங்க வரான் டா .

 

அஜய் : ஓ சொத்த வாங்கிட்டு போகவா .

 

தாத்தா : ஆமா டா .

 

அஜய் : இடமா தரீங்களா ,பணமாவா .

 

தாத்தா : பணம் தான் டா , நிலம் தந்தா ,ரமேஷ் இங்க இடத்தை பாக்க வரும் பொது எல்லாம் உங்க சித்தப்பா பிரச்னை பண்ணுவான் . பணமா கொடுக்கறது தான் சரி .

 

அஜய் : சரி . சகுந்தலா வரலையா உங்கள பார்க்க .

 

தாத்தா : அவளுக்கு கொஞ்சம் உடம்பு முடியல . ரமேஷ அவங்க ஊருக்கு போய் நீயும் உங்க சித்தப்பாவும் நம்ம கார்ல கூட்டிட்டு வந்துடுங்க . அப்படியே சகுந்தலாவை பாத்துட்டு வாங்க . எனக்கு உடம்பு நல்லா இருந்தாலும் நான் அவளை பாத்துட்டு வருவேன்

 

அஜய் : சரி தாத்தா .

 

                                                               அடுத்த நாள்

 

அஜய் , ரமேஷ கூட்டிட்டு வந்துடுரான் .

 

தாத்தா to ரமேஷ் : என்ன பா எப்படி இருக்க .

 

ரமேஷ் : நல்லா இருக்கேன்

 

தாத்தா : உங்க அம்மா .

 

ரமேஷ் : நல்ல இருக்காங்க .

 

தாத்தா : நான் உங்க சின்ன வயசுல ,அப்படி விட்டு இருக்க கூடாது .

 

ரமேஷ் : அது நினைச்சு எப்போவும் எனக்கு கோபம் வரும் .

 

தாத்தா : என்ன மன்னிச்சுடு பா .

 

ரமேஷ் : சரி வா ,நம்ம தோட்டத்தை சுத்தி பாத்துட்டு வரலாம் .

 

அஜய் : நானும் வரட்டுமா தாத்தா .

 

தாத்தா : வேணாம் பா ,நாங்க ரெண்டு பெரும் மட்டும் போயிட்டு வரும் .

 

ரொம்ப நேரம் ரமேஷும் தாத்தாவும் பேசிட்டு வீட்டுக்கு வராங்க . நைட் லேட்டா ஆவுது, பணத்தை ஒரு bagல கொடுத்துடுராறு .

 

ரமேஷ் to தாத்தா : சரி பா , நான் கிளம்புறேன் ,என் நண்பன் ஒருத்தன் வந்து என்ன கூப்பிட்டு போறேனு சொல்லி இருக்கான் .

 

அஜய் : இருங்க நாங்க கூட்டிட்டு போய் விடுறது தானே பிளான் .

 

ரமேஷ் : பரவா இல்ல , நானே பாத்துக்கிறேன் .

 

அஜயும் , அஜய் சித்தப்பாவும் ,ரமேஷ் பணத்த எடுத்துட்டு ஓடிடுவானு பயப்படுறாங்க .

 

ரமேஷ் கிளம்பிடுறான் .

 

நைட் அஜய் சித்தப்பா அஜய்க்கு கால் பன்றாரு .

 

அஜய் : சொல்லு சித்தப்பா .

 

அஜய் சித்தப்பா : ரமேஷ் வேஷம் போட்டு ஒருத்தன் வந்தானே , அவன் போன் எடுக்க மாற்றான் டா .

 

அஜய் : என்ன சொல்றிங்க , எனக்கு வயித்த கலக்குது .

 

அஜய் சித்தப்பா : நம்மள ஏமாத்திட்டான் டா அவன் .

 

அஜய் : இப்ப என்ன பண்ணலாம் .

 

அஜய் சித்தப்பா : நீ கவலபடாத ,ரெண்டு நாள்ல நான் கண்டுபிடிக்குறன் அவன .

 

அஜய் : சரி .

 

 

                          அடுத்த நாள்

 

 தாத்தா எங்கயோ கிளம்பிட்டு இருக்காரு .

 

அஜய் : தாத்தா எங்க கிளம்புறீங்க .

 

தாத்தா : காசிக்கு கிளம்பிட்டு இருக்கேன் டா .

 

அஜய் : என்ன திடீர்னு .

 

தாத்தா : நேத்து ரமேஷ்க்கு காசு கொடுத்தது , பெரிய பாரம் கொறஞ்சது போல இருக்கு டா . போய் கடவுளுக்கு நன்றி சொல்லிட்டு வந்துடுறேன்

 

அஜய் : சரி பாத்து போயிட்டு வா .

 

தாத்தா செருப்பு மாட்டிட்டு வெளிய கிளம்புறாரு .

 

அஜய் : தாத்தா .

 

தாத்தா : என்ன டா .

 

அஜய் : என் டேபிள் மேல , எனக்கு ஒரு கிப்ட் இருக்கு .

 

தாத்தா : நான் தான் டா உனக்கு ஒரு மோதிரம் வாங்கி வச்சேன் .

 

அஜய் : எதுக்கு .

 

தாத்தா : நீ தானே , சகுந்தலாவ கண்டுபிடிக்க உதுவுன அதுனால தான் .

 

அஜய் : சரி தாத்தா .

 

 

                         அடுத்த நாள்

 

நிஜமான சகுந்தலா பையன் ரமேஷ் வந்துடுறான் .

 

ரமேஷ் to அஜய் : ஏன் பா பெரியசாமி இல்ல .

 

அஜய் : அவர் இல்ல காசிக்கு போய் இருக்காரு .நீங்க

 

ரமேஷ் : நான் சகுந்தலா பையன் , ரமேஷ் .

 

அஜய் ஷாக் ஆகிடுரான் .

 

அஜய் : ஓ சொல்லுங்க , என்ன விஷயமா வந்தீங்க .

 

ரமேஷ் : ஒன்னும் இல்ல , என்னையும் எங்க அம்மாவையும் இந்த ஊர்ல இருந்து தொரத்திட்டாங்க .அந்த ஊர் மக்களுக்கும் , என் அப்பாவுக்கும் ,நாங்க இப்ப நல்ல இருக்கோம்னு காட்டத்தான் வந்தேன் .

 

அஜய் என்ன சொல்றதுனு தெரியாம இருக்கான் .

 

ரமேஷ் : சரி பா . இது மாதிரி நான் வந்து இது சொல்லிட்டு போனேன்னு உங்க தாத்தாகிட்ட சொல்லிடு .நான் கிளம்புறேன் .

 

அஜய் : சரி.

 

 

அஜய் முழி பிதுங்கி நிக்குறான் .

 

ரம்யா to அஜய் : நல்ல வேல டா இந்த ஆளு நேத்து வந்து இருந்தான் , நம்ம தாத்தா கிட்ட கையும் காலுமா மாட்டி இருப்போம் .

 

அஜய் : ஆமா ரம்யா .

 

 

 

                         அடுத்த நாள்

 

தாத்தாவோட நண்பன் to அஜய் : என்ன பா உங்க தாத்தாவ நேத்து மதுரை பஸ் ஸ்டாண்ட்ல பாத்தேன் , கூப்பிட்டா கூட பாக்காம போறான் .

 

அஜய் : நீங்க வேற யாராவது பாத்து இருப்பிங்க .அவர் காசிக்கு போய் இருக்காரு .

 

தாத்தாவோட நண்பன் : சரி பா .

 

        வீட்டுக்கு அஜய் வரான் .

 

 

ரம்யா to அஜய் : டேய் தாத்தா ரூம இப்ப தான் கிளீன் பண்ணேன் .

 

அஜய் : வெரி குட் .

 

ரம்யா : அங்க ஒரு courier பாத்தேன் .

 

அஜய் : சரி

 

ரம்யா : டேய் மதுரைல இருந்து யாரோ அனுப்பி இருக்காங்க .

 

அஜய் : அட்ரஸ் காட்டு .

 

அஜய் : தாத்தாவோட டைரி எங்க இருக்கு .

 

ரம்யா : அவர் டேபிள் மேல இருக்கும் போய் பாரு .

 

அஜய் அந்த டைரி எடுத்து பாக்குறான் ,அதுலயும் அதே மதுரை அட்ரஸ் இருக்கு .

 

அஜய் to ரம்யா : நான் நாளைக்கு மதுரைக்கு போய் இந்த அட்ரஸ பாத்துட்டு வரேன் .

 

 

                        அடுத்த நாள்

அஜய் மதுரைக்கு போறான் ,அந்த அட்ரஸ கண்டுபிடிச்சு பாக்குறான் , அந்த வீடு வெளிய தாத்தா உக்காந்துட்டு இருக்காரு ,பாத்து அதிர்ச்சி ஆகுறான் . இன்னொரு அதிர்ச்சி என்னனா ஒரு 15 வயசு பையன் தாத்தா கிட்ட வந்து , அப்பானு கூப்பிடுறான் . அஜய் ஷாக்ல இருந்து மீளவே இல்ல . அஜய் சித்தப்பா கிட்ட இருந்து போன் வருது .

 

அஜய் to அஜய் சித்தப்பா : சொல்லுங்க .

 

அஜய் சித்தப்பா : அந்த ரமேஷ் வேஷம் போட்டவன் கண்டு பிடிச்சிட்டேன் டா .

 

அஜய் : சூப்பர் அவன் கிட்ட காச வாங்குனியா .

 

அஜய் சித்தப்பா : டேய் நம்ம ஒரு லட்சம் தந்து அவன நடிக்க சொல்லி கூட்டிட்டு வந்தா , தோட்டத்துல வச்சி கிழவன் 2 லட்சம் தந்து நம்ம கண்ணுலே படாம இருக்க சொல்லி இருக்கு டா .கிழவனுக்கு நம்ம பிளான் முன்னாடியே தெரிஞ்சி இருக்கு டா .

 

அஜய் : உனக்கு இன்னொரு அதிர்ச்சி சொல்லட்டா

 

அஜய் சித்தப்பா : சொல்லு டா.

 

அஜய் : கிழவனை இங்க ஒரு 15 வயசு பையன் அப்பான்னு கூப்பிடுறான் .

 

அஜய் சித்தப்பா : அப்படினா .

 

அஜய் : அப்படினா கிழவனுக்கு நம்ம பாட்டி சாவரத்துக்கு முன்னாடியே, ஒரு குடும்பம் இருந்து இருக்கு , அவங்களுக்கு சொத்துல எதாவது கொடுக்கணும்னு இருக்கும் போது.நம்ம பண்ண பிளான்ன எப்படியோ கண்டுபிடிச்சு ,அந்த குடும்பத்துக்கு சாதகமா பண்ணிடுச்சு .

 

அஜய் சித்தப்பா : ஓ சகுந்தலா குடும்பத்துக்கு குடுக்கறதா சொல்லி , இப்ப வச்சிட்டு இருக்க குடும்பத்துக்கு கிழவன் பணத்தை கொடுத்துடுச்சி .

 

அஜய் : ஆமா .

 

அஜய் சித்தப்பா : வந்து கிழவன என்ன பண்றேன் பாரு .

 

அஜய் : விடு சித்தப்பா , அது அவரு சம்பாதிச்ச காசு , அவரு இஷ்டம் அவரோட வாழ்க்கை , இதெல்லாம் நம்ம கேட்க கூடாது .

 

 

ரெண்டு வருஷம் கழிச்சு , ரம்யாக்கு கல்யாணம் பண்ணிட்டு .ஒரு நாள் தாத்தாவும் அஜயும் பேசிக்குறாங்க  

 

அஜய் : தாத்தா உனக்கு இன்னொரு குடும்பம் , மதுரைல இருக்கறது எங்களுக்கு தெரியும் .

 

தாத்தா அதிர்ச்சி ஆகுறாரு

 

தாத்தா : எப்படி தெரியும் .

 

அஜய் : கண்டு பிடிச்சிட்டோம் . ஆமா நாங்க தான் ரமேஷ்னு ஒருத்தன நடிக்க கூட்டிட்டு வந்தோம்னு எப்படி கண்டு பிடிச்சீங்க .

 

தாத்தா : அதுவா சகுந்தலாவுக்கு எழுத படிக்க தெரியாது , நீ தான் இந்த facebookல என் கிட்டு பேசிட்டு இருந்தனு எனக்கு தெரியும் , அதை வச்சு தான் கண்டுபிடிச்சேன் .

 

அஜய் : எப்படியோ அந்த குடும்பத்துக்கு அந்த சொத்தை கொண்டு போய் சேத்துட்ட .

 

தாத்தா : ஆமா டா . டேய் நீ என்ன தப்ப நினைச்சுக்கலையே .

 

அஜய் : இல்ல தாத்தா , உன் வாழ்க்கை ,நீ யாருக்கு வேணாம் கொடுக்கலாம் .

 

தாத்தா : நன்றி டா , எனக்கே ஒரு குற்ற உணர்ச்சியா இருந்தது .இப்ப தான் நிம்மதியா இருக்கு .

.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

.

 

 

 



Rate this content
Log in

Similar tamil story from Thriller