புத்தகம்
புத்தகம்
புத்தகம்.
அந்த கல்லூரியில் நடந்த ஆண்டு விழாவிற்கு தலைமை தாங்க சமூக சேவகர் ராஜாவை அழைத்து இருந்தார்கள்.அவன் தான் அந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்.
கூட்டம் தொடங்கியது.நிறைய பேர் கல்லூரியை பற்றி புகழ்ந்து பேசினார்கள். இவர் பேசும் போது இவருக்கு ஒரு தலைப்பை கொடுத்து பேச சொன்னார்கள்.கொடுத்த தலைப்பு "புத்தகம்"
புத்தகம் என்பது ஒரு உயிர்.அது பேசும்,அது நடக்கும்,அது ஒடும்,அது பாடும்.
ஆமாம் கற்பனையில் எழுதும் கதை அல்ல.ஒவ்வொரு புத்தகமும் கதை வடிவில் வரும் போது அது வாழ்ந்த உயிர்,வாழ்ந்து கொண்டு இருக்கும் உயிர்,அது வாழ போகும் உயிர்.
கற்பனை செய்து எழுதினாலும் அதை எழுதும் ஆசிரியரின் அடி மனதில் உள்ள எண்ணங்கள் தான் புத்தகம்.
அது வாழ்கையில் நேற்று நடந்த சம்பவம்,இன்று நடந்து கொண்டு இருக்கும் சம்பவம்,இதில் கிடைத்த அனுபவத்தை கொண்டு நாளை எப்படி வாழ வேண்டும் என்று சிந்திக்க வைக்கும் எண்ணங்கள் தான் புத்தக வடிவில் எழுத்துக்களுக்கு அலங்காரம் செய்து கதையாக வருகிறது.ஒரு புத்தகம் எழுத படுவது இல்லை.அது தாயின் வயிற்றில் இருக்கும் கரு.அது பிறந்து வளர்ந்து கல்வி கற்று,செல்வம் சேர்த்து,வாழ போகும் உயிர் தான் புத்தகம்.எப்படி வாழ வேண்டும் எப்படி வாழ கூடாது,யார் நல்லவன்,யார் கெட்டவன்.அவன் ஏன் நல்லவன்,இவன் ஏன் கெட்டவன் என்று படிக்கும் பாமரனும் புரிந்து கொள்ள எழுத படுவது தான் புத்தகம்.
உணர்ச்சியை தூண்டும் எழுத்துக்கள்,சிற்றின்பத்தை மிகை படுத்தும் வர்ணனைகள்,காமத்தை காவியம் ஆக்கும் எழுத்துக்கள் புத்தகம் என்ற பெயரை அடை மொழியாக போட்டு கொள்ள முடியாது.ஒரு புத்தகத்தை படித்தால் அவன் மனிதனாக மாற வேண்டும்.அந்த எழுத்து கூட்டலை தான் புத்தகம் என்று சொல்ல முடியும்.எந்த வாசகம் உன் வாழ்வை மாற்றி அமைக்கிறது,அது தான் சிறந்த புத்தகம் என்று சொல்லி முடித்தார். கரவோசை கேட்கவே இல்லை.காரணம் மெய் மறந்து அத்தனை பெரும் சிலை ஆகி விட்டார்கள்
ராஜா மௌனமாக அங்கு இருந்து விடை பெற்று சென்றார்.
முற்றும்.
