STORYMIRROR

anuradha nazeer

Comedy Classics Inspirational

4  

anuradha nazeer

Comedy Classics Inspirational

பரம பக்தன்

பரம பக்தன்

1 min
181

ஆஞ்சநேயரின் பரம பக்தன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஒரு வினோத ஆசை இருந்தது. அதாவது, ஆஞ்சநேயருடன் சொக்காட்டம் ஆட வேண்டும் என்பது தான் அவரின் ஆசை.


இதனால் தினமும் ஆஞ்சநேயா நீ என்னுடன் சொக்காட்டம் ஆட வர வேண்டும் என பிரார்த்திக் கொண்டிருந்தான். பக்தனின் இந்த வேண்டுகோளை ஏற்று அவர் முன் ஆஞ்சநேயர் தோன்றினார். அவனுடன் சொக்காட்டம் ஆடவும் ஒப்புக் கொண்டான்.


ஆனால் பக்தனிடம் மாருதி ஒரு நிபந்தனை விதித்தார்.

“பக்தனிடம், பக்தா நான் விளையாட்டில் விட்டுக் கொடுக்க மாட்டேன். தீவிரமாக விளையாடுவேன். பின்னர் நீ தோற்றுவிட்டால் அதற்காக வருந்தக் கூடாது.” என்றார். பக்தனும் சம்மதித்தான்.


இருவரும் விளையாட துவங்கினார். ஆஞ்சநேயர் ஒவ்வொரு முறையும் ஆடும் போது, ‘ஜெய் ஸ்ரீராம்’ என கூறியபடியே காய்களை உருட்டினார். அந்த பக்தனோ, ‘ஜெய் அனுமான்’ என்ற படி காய்களை உருட்டினான்.


அந்த விளையாட்டில் ஒவ்வொரு முறையும் அந்த பக்தனே வெற்றி பெற்றான். அனுமனோ சரி அடுத்தமுறையாவது ஜெய்த்துவிடலாம் என்ற முனைப்பில் மீண்டும் மீண்டும் விளையாடினார். ஆனால் வெற்றியோ பக்தன் பக்கம் மட்டுமே இருந்தது.


தற்போது பக்தனுக்குப் பதிலாக, ஆஞ்சநேயர் மனவருத்தத்தில் ஆழ்ந்தார். ராமனிடம் “சுவாமி, நான் உங்கள் திருநாமத்தை ஒவ்வொரு முறை உச்சரித்தும் எனக்கு தோல்வியா?” என புலம்பினார்.


அஞ்சனை மைந்தன் முன் தோன்றிய ராமன், “அனுமன்... நீயோ என் பக்தன். அதனால் என் சக்தி உன்னுள் இணைந்துள்ளது.


ஆனால், அவனோ உன் பக்தன், ஆதலால் அவனில் நம் இருவரின் சக்தியும் இணைந்து விடுகிறது. இது தான் அவனின் வெற்றிக்குக் காரணம்” என்றார்.


நெகிழ்ந்து போன ஆஞ்சநேயர் பக்தனுக்கு ஆசி வழங்கிவிட்டுச் சென்றார்.

ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்...



Rate this content
Log in

Similar tamil story from Comedy