Arul Prakash

Thriller

4  

Arul Prakash

Thriller

பொண்டாட்டியா, பேய்யா

பொண்டாட்டியா, பேய்யா

6 mins
627



சிவாவும் ராமும் ஒரு ஏரியால வசிக்கும் நண்பர்கள்.சிவாவும், அவன் நண்பர் ராமும் ஒரு சாமியார பார்க்க போறாங்க. அந்த சாமியார் பெயர் கீர்த்தியானந்தா, அவர் அவர பார்க்க வந்த சீடர்களுக்கு ஒரு அறிவுரை சொல்றது வழக்கம். இன்னைக்கு என்ன அறிவுரை சொல்றாருன்னு பாப்போம்.


சாமியார் : இன்னைக்கு உங்களுக்கு எத பத்தி சொல்ல போறேன்னா, வாழ்க்கை.இந்த உலகத்துல நீ என்ன ஆசை படுறியோ, அதை இந்த பிரபஞ்சம் நடத்தி கொடுக்கும், இது தான் இந்த உலக நியதி. அதனால நல்லதே யோசிப்போம் நல்லதே நடக்கும். நாலு பேரு நீ நல்ல இருக்கணும்னு நினைச்சாலும் உனக்கு நல்லது நடக்கும். அதனால நாலு பேரு நமக்கு நல்லது நினைக்கிற மாதிரி, நம்ம அன்பு காட்டி வாழனும்.


சிவா to சாமியார் : அப்போ நாலு பேரு நமக்கு நல்லது நினைச்சா நம்ம நல்லா வாழுவோமா.


சாமியார் : ஆமா.


சிவா : நாலு பேரு நமக்கு நல்லது நினைக்க, நம்ம என்ன வேணா செய்யலாமா.


சாமியார் : என்ன வேணாம் செய்யலாமா, நீ கேட்கறதே சரி இல்லையே. சரி என்ன வேனாலும் செய்யலாம்.


-------------ரெண்டு நாள் கழிச்சு ------------


ராம் to சிவா : டேய் என்ன உங்க வீட்ல ரூகி பேய் உன் பொண்டாட்டிய பிடிச்சு இருக்கா.


சிவா : பேய்யா, இல்லையே. அது என்ன ரூகி பேய்.


ராம் : நம்ம தெருல ஒரு பொண்ணு ரூகினு தூக்கு போட்டு செத்துடிச்சு. இப்ப அவ பேய் நம்ம தெருல இருக்க பொம்பளைங்க மேலலாம் வருது, அதான் கேட்டேன். இது வரைக்கும் நம்ம தெருல மூணு பொம்பளைங்க மேல,அந்த பேய் வந்துடுச்சு 


சிவா : எங்க வீட்ல பேய்லாம், இல்ல பா.


ராம் : அப்பறம் ஏன் டா உன் வீட்ல ரெண்டு நாளா நைட்ல சத்தம்.


சிவா : அதுவா, நான் தான் என் பொண்டாட்டி புள்ளைங்கள அடிச்சேன்.


ராம் : ஏன் டா.


சிவா : அதான் நம்ம சாமியார் சொன்னாருல.


ராம் : என்ன சொன்னாரு.


சிவா : நாலு பேரு நமக்கு நல்லது நினைச்சா, நம்ம நல்ல இருப்போம்னு.


ராம்: புரியல.


சிவா : இப்ப என்னை என் மேனேஜர் திட்டுறான், அதுனால வீட்டுக்கு போய் என் பொண்டாட்டி, என் மூணு பசங்களையும் அடிப்பேன், அவங்க என்னை மேனேஜர் திட்ட கூடாதுனு நினைப்பாங்க. இப்ப நாலு பேரு எனக்கு நல்லது நினைச்சா மாதிரியும் ஆகிடிச்சு, என்னை மேனேஜரும் திட்ட மாட்டான்ல.


ராம் : இது என்னை டா பைத்தியக்காரதனம்.


சிவா :என் குடும்பத்தை நான் அடிச்ச உனக்கென்ன டா.


ராம் : எப்படியோ போ.


ரெண்டு மூணு நாளா சிவா அவன் குடும்பத்தை அடிக்கறான், அவன் மேனேஜர் அவன திட்டுறதுக்காக.


சிவாவின் வீட்ல, சிவாவின் மனைவி ரேகா சோபால படுத்துட்டு இருக்காங்க.ரேகாவின் தோழி சுபா வீட்டுக்கு வராங்க.


சுபா : ரேகா ரேகா.


ரேகா : ஹே வா டி, எப்படி இருக்க.


சுபா : நல்லா இருக்கேன்.உனக்கு என்னை ஆச்சு ஏன் மூஞ்சுல அடிபட்டு இருக்கு


ரேகா : ஒன்னும் இல்ல சின்ன accident 


சுபா : accident மாதிரி தெரியலையே.


ரேகாவின் குழந்தை : இல்ல ஆண்ட்டி அப்பா எங்க எல்லாரையும் அடிக்கிறாரு.


சுபா : என்னடி குழந்தை சொல்றது உண்மையா.


ரேகா : ஆமா.


சுபா : உனக்கு தான் கராத்தே தெரியும்ல, திருப்பி அடிக்க வேண்டியது தானே.


ரேகா : அடிச்சிட்டு, நான் 3 குழந்தைகள வச்சிக்கிட்டு எங்க போய் வாழ்ரது. உன்ன மாதிரி படிச்சு இருந்தாலும் பருவா இல்ல, நான் 12வது ஓட படிக்கல, எவன் வேல கொடுப்பான்.


சுபா : என்னமோ, சரி உடம்ப பாத்துக்கோ. நான் கிளம்புறேன்.


சிவா ரேகாவுக்கு கால் பன்றான்.


சிவா to ரேகா : என்னடி பண்ற, இன்னைக்கும் ஆபீஸ்ல என் மேனேஜர் என்ன திட்டிட்டான், உங்க நாலு பேருக்கும் உதை இருக்கு.


ரேகா : என்னை வேணும்னா அடிங்க, குழந்தைகள ஒன்னும் பண்ணாதீங்க.


சிவா : என் குடும்பம், நான் என்ன வேணா பண்ணுவேன்.


போன் கட் பண்ணிடுறேன் சிவா.


ரேகாவ பக்கத்து வீட்டு பொண்ணு வந்து கூப்பிடற.


பக்கத்து வீட்டு பொண்ணு : ரேகா அக்கா, விஷயம் தெரியுமா அந்த ரூகி பேய் அனிதா உடம்ப விட்டு போய்டிச்சாம்.


ரேகா : போனா நல்லது தான, அதுக்கு ஏன் நீ பத்தட்டமா இருக்க.


பக்கத்து வீட்டு பொண்ணு : இல்ல, அந்த ரூகி பேய் பொம்பளைங்கள மட்டும் தான பிடிக்குது, அடுத்து எந்த பொண்ண பிடிக்கும்னு பயப்புடுறன்.


ரேகா : அதெல்லாம் யாரையும் பிடிக்காது, பாத்துக்கலாம்.


கொஞ்சம் நேரம் கழிச்சு சிவா வேலை முடிச்சு வீட்டுக்கு வந்துடுறான். நைட் 10 மணி 


சிவா to ரேகா : ஹே என்னடி தலையை விரிச்சு போட்டுட்டு பேய் மாதிரி உட்கார்ந்து பேய் படம் பாக்குற.


சிவாவின் குழந்தை : அம்மா இப்படி தான் தலையை விரிச்சு போட்டுட்டு, மூச்சு இழுத்து விட்டுட்டு இருக்காங்க அரை மணி நேரமா.


சிவா : நான் வந்து இருக்கேன், சோறு போடாம என்னடி உட்கார்ந்துட்டு இருக்க.


சொல்லிட்டு சிவா ரேகாவ எட்டி உதைக்கிறான். கோபமா ரேகா பேய் மாதிரி எந்துருச்சி, சிவாவ நாய் அடி பேய் அடி அடிக்குறா. சிவா வீட்டு விட்டு வெளிய ஓடி வந்துடுறான். சிவா அவன் நண்பன் ராம கூட்டிட்டு ரேகாவ பார்க்க வீட்டுக்கு வரான்.


ராம் : என்ன டா உன் பொண்டாட்டி, தலையை விரிச்சு போட்டுட்டு உட்கார்ந்து இருக்கா.


சிவா : திடிர்னு பேய் மாதிரி என்ன அடிச்சா டா.


ராம் : டேய் இது ரூகி பேய் டா, உன் பொண்டாட்டி மேல வந்து இருக்கா.


சிவா :ஐயோ.


ராம் : பார்த்து டா சுதானமா நடந்துக்கோ.


---------- அடுத்த நாள் காலை ----------


ரேகா to சிவா : என்ன மன்னிச்சிடுங்க, நேத்து நைட் ரூகி பேய் பிடிச்சி, உங்கள அடிச்சிட்டேன் சொன்னாங்க. என்ன மன்னிச்சிடுங்க, என் சுயக் நினைவு இல்லாம நடந்துடுச்சு.


சிவா : அடிச்சது எல்லாம் அடிச்சு போட்டு, இப்ப மன்னிப்பு. சரி உங்க அம்மாவை கிளம்பி இன்னைக்கே வர சொல்லு, உன்ன பாத்துக்க.


ரேகா : எனக்கு என்ன, என்ன ஏன் அவங்க பாத்துக்கணும்.


சிவா : உன்ன பாத்துக்க மட்டும் இல்ல, உன் அடில இருந்து என்ன காப்பாத்தவும் தான்.இன்னைக்கு ஒரு பேய் ஒற்றவன கூட்டிட்டு வந்து பேய் ஒட்டிட வேண்டியது தான்.


ரேகாவோட அம்மா ரேகா வீட்டுக்கு வந்துடுறாங்க.


பேய் ஒற்றவனும்,night 9 மணிக்கு வந்து , பேய்ய பார்த்து, சமாளிக்க முடியாம, பேய் கிட்ட அடி வாங்கிட்டு ஓடி போயிடுறான்.


சில நாட்கள் கழிச்சு,சிவா அவனோட நண்பன் ராமும் பேசிக்குறாங்க.


ராம் : என்னடா அந்த ரூகி பேய், உங்க வீட்ல என்னலாம் பண்ணுது, பேய் ஓட்டுனியா.


சிவா : பேய் ஓட்ட ஆள் கூட்டிட்டு வந்தேன், அவனையும் என் பொண்டாட்டி அடிச்சு ஓட விட்டுட்டா.


ராம் : உன் பொண்டாட்டி அடிக்கல டா, அந்த பேய் தான் அடிச்சுது.


சிவா : அதுல தான் எனக்கு சந்தேகமே.


ராம் : என்ன சந்தேகம்.


சிவா : நிஜமாவே அவளுக்கு பேய் பிடிச்சு இருக்கா இல்லையானு.


ராம் : என்ன டா சொல்ற.


சிவா : ஒரு நாள் காலைல, நைட் தான் பேய் பிடிச்சு இருக்கு, நம்ம அடிச்சா திரும்ப அடிச்சுடுவானு, காலைல ஏண்டி இட்லி வேகலனு அடிச்சன்.


ராம் : அப்பறம்.


சிவா : நைட் பேய்யா வந்து வழக்கமா அடிக்கறத விட அதிகமா அடிச்சா. பாரு இடுப்புல காயம். அவ கண்டிப்பா பேய் கிடையாது, என் பொண்டாட்டி பேய்னு சொல்லிட்டு அடிச்சிட்டு இருக்கா.


ராம் : காயத்தை பாத்த சண்டை கத்துகிட்டவங்க அடிச்சது போல இருக்கு.

நீ ஒன்னும் கவலை படாத, அந்த ரூகி பேய், ஒருத்தர பிடிச்சா ஒரு வாரத்து குள்ள, விட்டு போயிடும், வேற ஒரு பொம்பளைய புடிச்சிடும்.


ரெண்டு நாள் கழிச்சு திரும்பவும் சிவாவும் ராமும் பேசிக்குறாங்க.


ராம் : என்ன டா, உன் பொண்டாட்டி மேல இருந்த ருகி பேய் போய்டிச்சாமே, வெளிய அப்படி பேசிக்கறாங்க.


சிவா : ஆமா டா.


ராம் : அப்போ சந்தோசமா இருக்கணு சொல்லு, உனக்கு போர் அடிக்கும் போது உன் பொண்டாட்டியா அடிச்சுட்டு ஜாலியா இருப்ப.


சிவா : அதெல்லாம் இல்லை டா.


ராம் : ஓ என்ன திருந்திட்டியா.


சிவா : சொல்றேன். ஒரு நாள் என் பையனக்கு காய்ச்சல், உடம்புக்கு முடியல, ஹாஸ்பிடல்ல ஒரு நாள் தங்கணும்னு டாக்டர் சொல்லிட்டாரு.


ராம் : அப்பறம் ஹாஸ்பிடல்ல உன் பொண்டாட்டி இருந்தாங்களா.


சிவா : இருந்தா.


ராம் : ருகி பேய் வந்துச்சா இல்லையா.


சிவா : வரல.


ராம் : அப்பறம் என்ன, ஒரு தடவ ரூகி பேய் வரலனா, இனிமே அவங்க மேல வராதுன்னு சொல்லுவாங்க.


சிவா : அப்படி தான் நம்பி, என் பொண்டாட்டி அடுத்த நாள் நைட் அடிக்க போனேன்.


ராம் : நல்ல அடிச்சிட்டியா.


சிவா : நல்லா அடி வாங்கிட்டேன்.


ராம் : என்ன டா சொல்ற.


சிவா : என் மாமியார் மேல பேய் வந்துடிச்சி.


ராம் : ஹா ஹா ஹா.


சிவா : அடி வெளுத்துடிச்சி, சிரிக்காதடா.


ராம் : இப்ப என்ன பண்ணப்போற.


சிவா : எனக்கு இவங்க பேய் தான்னு இன்னும் சந்தேகமா இருக்கு. என்ன அடிக்கறதுகாக நடிக்கறாங்களோனு தோணுது.


ராம் : சரி என்ன பண்ணலாம்னு இருக்க.


சிவா : எங்க வீட்ல அவங்களுக்கு தெரியாம ஒரு கேமரா வச்சிட்டு, என் மாமியார் நைட் பேய் ஆகுதான்னு செக் பண்ண போறேன்.


ராம் : நல்ல ஐடியா தான்.


சிவா : ரெண்டு நாள் ஊருக்கு போறேன்னு சொல்லிட்டு, இங்கயே ஒரு ஹோட்டல்ல ரூம் போட்டு தங்கிட்டு நைட் என் மாமியார் மேல பேய் வருதான்னு என் போன்ல செக் பண்ணனும்.


ராம் : செம. இப்ப கண்டிப்பா கண்டுபிடிச்சிடலாம்.


கேமரா fix பண்ணிட்டு ஊருக்கு கிளம்பிடுறான் சிவா.



பவித்ரானு ஒருத்தங்க ரேகாவ தேடி வராங்க.


பவித்ரா : நீங்க தான் ரேகாவ.


ரேகா : நான் தான் ரேகா,நீங்க.


பவித்ரா : நான் பவித்ரா, journalist, பத்திரிக்கையாளர்.


ரேகா : சொல்லுங்க, உங்களுக்கு என்ன வேணும்.


பவித்ரா: நான் ரூகி பேய் பத்தி எழுதணும், அத பத்தி உங்க கிட்ட விசாரிக்க வந்தேன். உங்க மேல அந்த பேய் வந்துச்சுல 


ரேகா : அது வந்து.


பவித்ரா : சொல்லுங்க.


ரேகா : என் மேல பேய்லாம் வரல.


பவித்ரா : என்னங்க சொல்றிங்க.


ரேகா : என் புருஷன் என்னையும், என் புள்ளைங்களும் அடிச்சிட்டே இருக்காருனு, அது மாதிரி நடிச்சேன்.


பவித்ரா : ஐயோ, அப்பறம் உங்க அம்மா மேல வந்த பேய்.


ரேகா : அதுவும் நடிப்பு தான்.


பவித்ரா : சரி, உங்க புருஷன் ஏன் உங்கள அடிக்கிறாரு.


ரேகா : ஒரு சாமியார், நாலு பேரு உனக்கு நல்லது நினைச்சா, நீ நல்லா இருப்பேன்னு, என் புருஷன் கிட்ட சொல்லிட்டாரு. அந்த லூசும் என்னையும், என் குழந்தைக்களும் அவருக்கு நல்லது நினைக்கணும்னு சொல்லி தினம் தினம் அடிக்கிறாரு.


பவித்ரா : யாரு அந்த சாமியார்னு சொல்லுங்க, என் பத்திரிகையில கிழி கிழினு கிழுக்கிறேன்.


ரேகா : அவர் பெயர் கீர்த்தியானந்தா.


பவித்ரா : நாளைக்கு பேப்பர் வாங்கி பாருங்க.


பவித்ரா, அந்த சாமியார் பத்தி தப்பா எழுதி பத்திரிகைல போட்டுரா. நியூஸ் தீயா பத்திகிச்சு.


சிவா கேமரா மூலமா பாத்து, தெரிஞ்சிக்குனா, அவங்க மாமியார், அவன் பொண்டாட்டி ரெண்டு பேருக்கும் பேய் இல்லனு. கோபமா வந்துட்டு இருக்கான்.


சாமியார்க்கு சிவானால தான், அந்த பத்திரிகையில தப்பா எழுத்துனாங்கனு தெரிஞ்சிகிறாரு. சாமியார் அவர் ஆளுங்கள அனுப்பி சிவாவ தூக்கினு வராரு.



சாமியார் ஆளுங்க, சிவாவ வெளுக்குறாங்க.


சாமியார் to சிவா : டேய் நானா உன் குடும்பத்தை அடிக்க சொல்லி, சொல்லி கொடுத்தேன்.


சிவா : இல்ல ஐயா, நான் தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன்.


சாமியார் : உன்ன கொல்ல சொல்லிட்டேன் என் ஆளுங்க கிட்ட, சாவு.


சிவா காலுல விழுந்து அழுவுறான்.


சிவா : ஐயா நானே போய் பத்திரிகை காரங்க,கிட்ட என் மேல தான் தப்பு, உங்க மேல இல்லனு சொல்லிடுறேன். கொல்ல மட்டும் சொல்லாதீங்க.


சாமியார் : சரி போ. என் கண்ணு முன்னாடியே நீக்காத.


சிவா போய் பத்திரிகை காரங்க, கிட்ட அவன் மேல எல்லாம் தப்பும், சாமியார் மேல இல்லனு சொல்லிடுறான்.


அதுக்கு அப்பறம், சிவா அவன் குடும்பத்தை அடிக்கணும்னு கூட நினைக்கவே இல்ல.


-----------------------The End------------



Rate this content
Log in

Similar tamil story from Thriller