Sathiya Rajesh Gnana Prakasam

Comedy Drama

4.1  

Sathiya Rajesh Gnana Prakasam

Comedy Drama

ஒரு பர்கர் கதை

ஒரு பர்கர் கதை

4 mins
12.7K


நுங்கம்பாக்கம் தாண்டனாலே Google Map இல்லாம வாழ தெரியாத நேரத்துல...கட்டிப் புரண்டு ஒரு On-Site வாங்கிட்டு UK போயி ஒரு பத்து பதனஞ்சி நாள் ஆச்சி..

அம்மா செஞ்சி குடுத்த புளித்தொக்கு,வத்த கொழம்பு ,பொடி எல்லாம் இருக்கவே ஓட்டல் போய் சாப்டனும்னு தோனல..

இன்னொரு முக்கியமான பிரச்சனை, அங்க ஓட்டல்ல எல்லாரும் பிரிட்ஷ் இங்கிலிஷ் பேசுவாங்க..அப்புறம் எப்புடி!!!!

அங்க இருக்க நம் மக்கள் எல்லாம் வெள்ளிக்கிழமை லஞ்சிக்கு வெளிய போறது வழக்கம்..

பொதுவா 'பொரிட்டோ பவல்'னு ஒரு கடயிருக்கு அங்க ஒரு பவுல் லஞ்ச் சாப்டா சனிக்கிழமை காலைல தான் பசிக்கும், வெள்ளிக்கிழமை போறதே தெரியாது...

ஆன அந்த வெள்ளிக்கிழமை ஒரு உயரதிகாரி வந்து என்ன லஞ்சிக்கு கூப்டாரு ..நான் என் நண்பன் அவர் மூணுபேர் மட்டும் தான் போனும்..

அந்த பையன், எனக்கு ஒருமாசம் முன்னாடி தான் அங்க போயிருந்தான். அவனுக்கும் கடைங்களாம் பெருசா தெரியாது.. அந்த அதிகாரிய நான் அங்க தான் பஸ்டு மீட் பன்றன்..

முன்னாடி பழக்கமில்ல,நாங்க மூனுபேரு

ம் வேற வேற மொழி பேசரவங்க ஆனா 'இந்தியன்ஸ்' ...

அவர் கூட்டிட்டு நடக்க ஆரமிச்சாரு.. எங்க சாப்ட போறோம், என்ன சாப்ட போறோம்னு கூட கேக்கல, சாமி ஊர்வலத்துல கூட போர ஜெனரேட்டர் மாதிரி வளஞ்சி வளஞ்சி பேயிட்டே இருந்தோம் அவர் பின்னால .. 

அவர் போயி நின்ன கட பேரு 'பர்கர் கிங்'.. ஆஹா! எனக்கு பர்கர் சாப்ட தெரியுமானு எனக்கே தெரியலயே ."பாஸ் இந்த கடையில இவளோ கூட்டமா இருக்கே இங்கயா சாப்ட போரோம்"னு கேட்டன்.."ஆமா"னு சொல்லிட்டு உள்ள போயிட்டாரு பின்னாடியே போய் பாத்தா ... 

ஒவ்வொரு கவுண்டர்ளயும் 30 பேர் நிக்கராங்க.. 

அவர் எங்ககிட்ட என்ன வேனும் கூட கேக்காம கியுல போய் நின்னுட்டாரு ... தெரியாம சிக்கிட்டமானு யோஸ்சிட்டே... உட்காரதா நிக்கற்தானு முழிச்சிட்டு நின்னுட்டு இருந்தா ஒரு பத்து நிமிஷம் கழிச்சி ஒரு பில்லோட வந்து நின்னாரு..கைல பர்கர் இல்ல, சரி ஆடர் பன்னி இருப்பார் போலனு நெனச்சா!! பாக்கட்'ல இருந்து போன் எடுத்து என்னவோ பன்னாரு, அப்புறம் பேனா எடுத்து பில் பின்னாடி நம்பர் ஒன்ன எழுதனாரு, என்ன கூப்டு போய் கியுல நில்லு, ஒரு 'வெஹ் பர்கர் காம்போ' சொல்லிட்டு இந்த பில்லும் காசு 2.40£ குடு'னு சொன்னாரு, நான் போய் கியுல நின்னுட்டு பில்ல பாத்தா அது 'சீஸ் பால்ஸ்' 0.60£ வாங்கன பில், நான் பத்து நிமிஷம் நின்னு பர்கர் பில்ல வாங்கிட்டு வந்தா சீஸ் பால்ஸ் டேபில்ல இருந்துச்சி .. குட்டி குட்டியா நாளு போண்டா சய்ஸ்ல ... கூட வந்த ப்ரண்டு மூஞ்சி கோவமா இருக்கு அதுக்குள்ள அவர் நான் கொண்டு வந்த பில்ல வாங்கிட்டு போய் கியுல நின்னுட்டு பில் பின்னாடி ஏதோ எழுதனாறு...

பக்கத்துல இருந்த ப்ரண்டு" மச்சான் உனக்கு ஒன்னு தெரியுமா.? இங்க ஒரு பர்கர்+கோக்+ப்ரஞ்சி ப்ரஸ் காம்போ 6.00£. நீ அந்த காம்போ'வ 2.40£ க்கு வாங்கன எப்பிடி தெரியுமா"னு கேட்டதும் அங்க இருந்த போர்ட்ல ரேட் பாத்தா 6.00£ இருக்கு, அந்த போர்ட நான் முன்னாடியே பாத்தன் ஆன ரேட்ட பாக்கல .

அவன் சொல்ல ஆரமிச்சான்.... இங்க ஏதாச்சும் பர்சேஸ் பன்னிட்டு ,அவங்க வெப்சைட்ல போய் ரிவிவ் எழுதனா, ஒரு ரீவியுவ் ரெபரன்ஸ் நம்பர் வரும், அத பில் பின்னாடி எழுதி குடுத்தா அடுத்து வங்கர ஒரு வெஹ் பர்கர் ப்ரீ, நாம தர 2.40£ கோக் & ப்ரன்ஹ் ப்ரஷ்'கு மட்டும் , இப்ப அவர் சீஸ் பால் பில்லுல நீ பர்கர் வாங்குன, உன் பர்கர் பில்லுல அவர் ஒரு பர்கர் வாங்குவாராம் ,அப்புறம் அவர் பில்லுல நான் போய் பர்கர் வாங்கனுமாம் .சொல்லி முடிக்கும் போது எனக்கு தல சுத்த ஆரமிச்சிடுச்சி....

டேய் ஓட்டல, நான் எக்ஸ்ரா சட்னி கூட கேட்டது கிடையாதேடா, இப்பிடிலாம் எப்படிடா யோசிக்கராங்க ... இதலாம் நடக்கும் போதுதான் ஒன்னு கவனிச்சன் அங்க நாங்க மட்டும் தான் 'இந்தியன்ஸ்' ...ஈசியா எல்லா ஸ்டாஃப்மும் கவனிக்கர எடத்துல தான் நாங்க இருந்தோம், இந்த அலப்பரைலாம் நடந்துட்டு இருக்கும் போது ஏறத்தாழ 40 நிமிஷம் ஆயிடுச்சி அந்த சீஸ் பால் டேபில்'கு வந்து,நான் வாங்குன பர்கரும் 20 நிமிஷமா வெய்டிங்,அப்ப தான் அவர் வந்தாரு ...இதுலாம் என்னங்க ஐடியா கடகாரன் கண்டு புடிச்சா என்ன நினைப்பான் இந்தியா'வ பத்தி? இதுக்கு எதுக்கு எங்கள கூட்டி வந்தீங்க? நீங்க பர்கர் வாங்க போனப்ப ரிவிவ் எழுதன மாதிரியே தெரியலயே? னு நான் கொதிச்சி கேள்வி மேல கேள்வி கேக்க... எந்தப் பதட்டமும் இல்லாம நீங்க ரெண்டு பேர் தான் அங்க வெஹ்டேரியன் ,இந்த ஆபர் வெஹ் பர்கர்கு மட்டும் தான் அதான் உங்கள கூட்டி வந்தன்,ரிவிவ் ரெபரன்ஸ்லாம் அவங்க செக் பன்னமாட்டாங்க மொதல்ல வந்த நம்பர் மாதிரியே இன்னொரு நம்பர் எழுதி குடுத்துட்டன்... சோ ..னோ...பிராப்லம் .. இப்ப நீ போய் ஒரு பர்கர் வாங்கிட்டா நாம சாப்டு கெளம்பலாம்'னு ப்ரண்டு கிட்ட சொல்ல, அவன் என்ன விட கோவக்காரன் .. நாம பன்றது நாட்டுக்கே அசிங்கம்னு சொல்லிட்டு நான் போய் 6£ குடுத்து வாங்கிட்டு வரனு போய் கியுல நின்னுட்டான்...

அவர் எங்கிட்ட நாம சட்டபடி எந்த தப்பும் பன்ல அப்புறம் ஏன் இவளோ ட்ராமா போடரீங்க... வொஸ்டு கேஸ்ல அவன் வெளிய போனு சொல்வான் அவளோ தானே ஆனா நமக்கு 3.60£ மிச்சம் ஒவ்வொரு பர்கர்க்கும், இங்க இப்புடி தான் வாழனும்'னு சொல்லி அட்வைஸ் பன்னிட்டு இருக்கும் போது எதிர் பார்த்த அவமானம் அரங்கேரிடுச்சி... கவண்டர்ல இருந்த லேடி, ப்ரண்ட பாத்ததும் வெஹ் பர்கரா'னு கேட்டாங்க ,அவன் ஆமானு சொல்லிட்டு கார்டு நீட்ட ,அவங்க ஓல்டு பில் எங்கனு கேட்டாங்க ,அவன் னோ..ப்ராப்லம் யூ ப்ரோசீட்'னு சொன்னான், அதுக்கு ஆர் யூ ஸோர்(Sure) 6£ ஆகும்னு சொன்னாங்க ... அவன் ஓகே சொல்லிட்டு வாங்கிட்டு வந்துட்டான் .. எறக்குறைய ஒரு மணி நேரமாயிடுச்சி ,அந்த ஆரிப்போன சீஸ் பாலயும், பர்கரையும் விருப்மில்லாம சாப்டு அமைதியா வெளிய வந்துட்டோம் ஒருத்தர் ஒருத்தர் ஒன்னுமே பேசிக்கல ..

நைட் முழுக்க தூக்கம் வரல இந்தியாவ பெரிய அவமானத்துக்கு ஆளாகிட்டோம்.. அந்த கம்பனிய ஏமாத்திடோம்'னு யோசிச்சி யோசிச்சி இராத்திரி ரெண்டு மணிக்கு 'பர்கர் கிங்' வெப்சைட் போய் ஒரு சஜசன் குடுத்தன்.. 'இன்னைக்கு வாங்குற பில் யூஸ் பன்னி நாளைல இருந்து தான் ப்ரீ பர்கர் வாங்க முடியும்னு ஒரு ரூல் கொண்டு வாங்க ரிபீட்டட் கஷ்டமர் வருவாங்க ,ஆனா ப்ராடு பன்ன மாட்டாங்க' அவன் அத படிச்சானாலாம் தெரியாது,ஆனா இவ்வளவு பயங்கரமா யோசிச்சி வாழ்ந்து காசு சேக்கர பல ஜீவன்கள் இந்த பூமில இருக்கு ...வெளிய தான் ஃபாரீன் மாப்பிள்ளை'னு சொல்லிக்கிறதுலாம் .


Rate this content
Log in

Similar tamil story from Comedy