செங்கல்பட்டு சந்திப்பு
செங்கல்பட்டு சந்திப்பு


சமோசா..சமோசா.. சார் பாப்கான் சார் பாப்கான்... கொஞ்சம் தள்ளி ஒக்காருங்க பிளீஸ்.... சத்தங்களுக்கிடையே வண்டி நகர்ந்து வர, ஓடி வந்தேறிய என் கால்கள் நிற்க இடம் தேடும் போது ...
கண்கள் அவளை தேடியது.
ஆம், நான் தினமும் பார்த்து செல்லும் அந்த செக்கசிவந்த முகம்,மையின்றியே கறுத்த கண்கள்,மெல்லிய தேகம்,குறும்புன்னகை...
அன்று ஏனோ அவள் அடுத்த நிலையத்தில் ஏறினாள்.
ஏறியதும் ஏறாததுமாய் எல்லோர் கண்களும் அவள்மேல் தான்.
உடன் இருந்தது அவள் தாயா?சகோதரியா? என முனுமுனுக்க ..
தன் கையில் இருந்த வலையத்தை தரையில் போட்டு பல்டி அடித்தபடி தட்டேந்தி பிச்சை எடுத்த அவளுக்கு 3-4வயது இருக்கலாம்.
தட்டு நிறைவதர்குள் அடுத்த ஷ்டேஷனில் வண்டிநிற்க.செருப்பில்லா பாதங்கள் 40டிகிரீ தரையை முத்தமிட்டபோது
உடன்வருபவள் தாயா என்ற எண்ணம் மனதில் எழுந்துநிற்க மெல்ல நகர்ந்தது தொடர்வண்டி