அறம் வளர்ப்போம்
அறம் வளர்ப்போம்


ஆஹா.ஆஹா.. என்ன மணம் என்ன மணம் இது வாழைக்காய் பஹ்ஹி தானே அம்மா?
"அட சப்பமூக்கு மக்குபையா அது அதிரசத்தின் வாசணை வா ஒரு கட்டுகட்டலாம்" என்று தன் ஒருமாத குட்டியை மடியில் ஏற்றிகொண்டு வாசணை வந்த வீட்டைநோக்கி நடக்களானது தாய் குரங்கு•••
வீட்டருகில் அடுக்கி இருந்த வறகின்மேல் ஏறி சறுக்கி மீண்டும் ஏறி புகை கூண்டை அடைந்த குரங்குகள் மனதில் கொள்ளை ஆனந்தம் ,காரணம் அங்கிருந்து வரும் வாசணை.,•••
எட்டிப்பார்த்த குட்டி ,
"அம்மா ..அம்மா உள்ளே முறுக்கு,சீடை,அப்பம், வாழைக்காய் பஹ்ஹி நிறைய இருக்கு சமவேட்டை நமக்கு"...,என்று சொல்லிக்கொண்டே புகைகூட்டுக்குள் புகுந்து உள்ளே தாவியது.
பெருத்திருந்த தாயோ உள்ளே நுழைய முயல..எதை பற்றியும் கவலையில்லா குட்டி வாய்நிறைய அப்பம், கைநிறைய முறுக்கெடுத்து அடுக்க முற்பட்டது
அடேய் சப்பமூக்கா என்னால உள்ளவும் வர முடியல வெளியவும் போவ முடியல காப்பாத்துட காப்பாத்துடா, என்ற தாயின் குரல் அந்த குட்டியின் குட்டி காதினுல் எட்டி பார்த்ததாய் தெரியவில்லை ...
குட்டியோ ஆனந்தமாய் அனைத்தையும் தூக்கி போட்டு உருட்டி உடைத்து உண்டு உதிர்த்து விளையாடியது.
தாய் குரங்கு தான் சிறுவயதில் வனத்தில் ஆடிய ஆட்டத்தை அசை போட்டபடி அமைதியாய் இருக்க,அதிரச குண்டான் சத்தம் கேட்டு ஓடி வந்தான் 5 வயது பொடியன்...
அவன் கையில் இருந்த பிஷ்கட்டை தாவி பிடித்த குட்டியின் நகம் பையனின் கன்னத்தை பதம் பார்க்க.
பறந்து வந்த கத்தி ஒன்று குட்டிகுரங்கின் கழுத்தை அதிரச குண்டானுல் சேர்த்துவிட்டு கீழே விழுந்தது.
கண்கள் இரண்டு மட்டும் செயலுற்ற நிலையில் கண்ணீர் குளத்துடன் கத்தியை உற்று பார்த்த குரங்கால் படிக்க முடிந்தது "மாரி மர வியா ரி"