Salma Amjath Khan

Romance

4.7  

Salma Amjath Khan

Romance

நீயே என் ஜீவனடி 6

நீயே என் ஜீவனடி 6

5 mins
469


ஆதவன் நான் வந்துவிட்டேன் என ஆனந்தியை எழுப்பி விட, அழகான புன்னகையுடன் அந்த காலை பொழுதை வரவேற்றாள்.


எழுந்து நடந்து கொண்டே உடலை முறித்தவள், தோட்டத்தில் உட்கார்ந்து செய்தித்தாளை புரட்டிக்கொண்டிருந்த தன் தந்தையை பார்த்தாள்.


அவரிடம் பிரகாஷ் பற்றி பேசலாம் என நினைத்து அவர் அருகில் சென்றாள்.


" குட் மார்னிங்ப்பா..."


"குட் மார்னிங் ஆனந்திமா. இன்னைக்கு சண்டே. என்ன பிளான்."


" ப்ளான் லா ஒன்னும் இல்லப்பா. இன்னைக்கு ஃபுல்லா உங்க கூட தான்." என கூறி முடிக்கையில் பர்வதம் டீயுடன் வந்தார்.


" அப்பா உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்."


" சொல்லுமா."


ஆனந்தி எதையும் அவள் அப்பா அம்மாவிடம் மறைத்தது இல்லை. எல்லா விஷயங்களையும் அவர்களிடம் பகிர்ந்து விடுவாள். பிரகாஷ் பற்றியும் அவரிடம் கூறி இருக்கிறாள்.


நேற்று பிரகாஷ் கூறிய அனைத்தையும் அவரிடம் சொல்லி விடலாம் என எல்லாவற்றையும் அவரிடம் சொல்லி விட்டாள்.


அவர் யோசனையாக ஆனந்தியை பார்த்தார்.


" நீ அந்த பையன லவ் பண்றியாமா?"


" ப்பா... லவ் எல்லாம் ஒன்னும் இல்லப்பா. என் க்லாஸ்ல மத்த பசங்க மாதிரி தான் அவனையும் எனக்கு பிடிக்கும். அவ்வளவுதான்.


மத்தபடி எதுவுமில்லை. எனக்கு எப்பவும் உங்க முடிவு மட்டும் தான் முக்கியம்."


" சரிம்மா அவங்க வரட்டும் பாத்துக்கலாம்." என அவள் தலையை வருடிவிட்டார்.


காரின் ஹாரன் சத்தத்துடன் வரிசையாக மூன்று கார்கள் போர்டிகோவில் வந்து நிற்க, தோட்டத்தில் அமர்ந்திருந்த மருதமுத்து, பர்வதம், ஆனந்தி எழுந்து யாரென்று பார்த்தனர்.


முதலில் வந்து நின்ற காரின் பின் கதவு திறக்க, பிரகாசமான புன்னகையுடன் பிரகாஷ் இறங்கினான்.


பிரகாஷை பார்த்ததும், "அப்பா அதுதான் பிரகாஷ்." என அவள் தந்தையை பார்க்க அவர் ஏதோ யோசனையோடு பிரகாஷை பார்த்தார்.


அடுத்தடுத்த கார்களில் இருந்து ஆட்கள் இறங்க, அவர்கள் கிராமத்துவாசிகள் என அவர்களின் நடையும் உடையுமே காட்டிக்கொடுத்தது.


 முதலில் வந்த வண்டியின் முன் சீட்டின் கதவு திறக்க, மருதமுத்து யாராக இருக்கும் என பார்த்தார்.


வண்டியில் இருந்து இறங்கி வந்தார்,பிரகாஷின் அப்பா.


" அவர் தான் பிரகாஷ் அப்பா. நான் காலேஜ்ல பார்த்தேன்னு சொன்னேன்ல."


"ம்ம்... " என தலையசைத்தவாறே ஆனந்தியை பார்த்தார்.


"வணக்கம்." என பிரகாஷின் அப்பா கைகூப்பி விட்டு மருதமுத்துவை மேலிருந்து கீழ் வரை அளந்தார்.


மருதமுத்துவும் 'வணக்கம்' என கைகூப்பி தோட்டத்தில் இருந்த நாற்காலியை காட்டி அமரச்சொன்னார்.


" வீட்டுக்கு வந்தவங்களை வாசல்ல உட்கார வைச்சு பேசுற வழக்கம் உங்களுக்கு இருக்கும்னு நான் நெனச்சு பாக்கலை." அவர் கூற ஆனந்த்க்கு ஒரு மாதிரி இருந்தது.


மருதமுத்து ஆனந்தி ஒரு பார்வை பார்த்துவிட்டு அவர்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.


" சொல்லுங்க என்ன விஷயமா வந்திருக்கீங்க." என மருத முத்து தெரியாததை போல் கேட்டார்.


மருதமுத்துவை வெற்றுப் பார்வை பார்த்து பின்தொடர்ந்தார்.


" என் பேரு சிதம்பரம். என்னோட கிராமம் மடிசேனை. கிராமம் சொன்னவுடனே இளக்காரமா நினைக்க வேண்டாம். உங்க சொத்து எல்லாம் என் கால் தூசி." என பேச ஆனந்தி பிரகாஷை முறைத்தாள்.


அவள் முறைப்பில் பதறியவன் "அப்பா என்ன பேச வந்தோம். நீங்க என்ன பேசிட்டு இருக்கீங்க."


என பயந்து அடிக்குரலில் கேட்க, சிதம்பரம் ஆனந்தியை ஒரு பார்வை பார்த்துவிட்டு தொடர்ந்தார்.


"என்னை மன்னிச்சிடுங்க.நான் ஏன் இப்படி சொன்ன்னா. கிராமம்னு சொன்னதும் நீங்க தப்பா நினைக்க கூடாதுன்னு தான்."


அவரை அர்த்தமாக ஒரு பார்வை பார்த்தார், மருதமுத்து.


"நான் ஏன் இங்க வந்தேன்னா உங்க பொண்ணு ஆனந்திய என் பையனுக்கு ரொம்ப புடிச்சிருக்கு. அவ என் வீட்டு மருமவளா வரணும் தான் உங்ககிட்ட சொல்ல வந்தேன்."


சிதம்பரம் தான் வந்த காரியத்தை கூறி முடித்தார்.


" நீங்க நினைக்கிறதுல தப்பு இல்ல. ஆனா என் பொண்ணு படிச்சிட்டு இருக்கா."


" பொட்டபுள்ள படிச்சு என்ன பண்ணப் போவுதுங்க." என்றார் சிறிதும் தாமதிக்காமல்.


" மன்னிக்கணும். அது உங்க கிராம வழக்கமா இருக்கலாம். ஆனா இங்கே அப்படி இல்ல. பசங்களுக்கு படிப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவு பொண்ணுங்களுக்கும் முக்கியம். அது தான் என் பொண்ணும் விரும்புவா." என மருதமுத்து கூறி ஆனந்தியை பெருமிதத்துடன் பார்த்தார்.


சிதம்பரம் ஆனந்தியை பார்க்க, அவள் மருதமுத்துவை பார்த்து புன்னகைத்தாள்.


சிதம்பரம் கோபத்தை அடக்கிக் கொண்டார்‌.


"சரி அவ ஆசைப்பட்டா படிச்சுட்டு போறா. பிரகாசும் அவ கூட தானே படிக்கிறான். அவனே கூட்டி போய் கூட்டியாந்துருவான்.


நாம அதுக்கு முன்ன கல்யாணம் வச்சுகலாம்." என்கிறார் சிதம்பரம்.


" கல்யாணமா?" வெற்றுப்பார்வை பார்த்த மருதமுத்து தொடர்ந்தார்.


"என் பொண்ணுக்கு உங்க பையனை கட்டி வைக்க எனக்கு சம்மதமில்லை. என் பொண்ணுக்கும் உங்க குடும்பத்துக்கும் ஒத்துவராது.


அதனால நீங்க இப்போ கிளம்பலாம்." என கையெடுத்துக் கும்பிட சிதம்பரத்தின் கோபம் எல்லை மீறியது.


அதைக் கண்டும் காணாதவராய் மருதமுத்து ஆனந்தியை நெருங்கி, அவள் தலையை வாஞ்சையாய் வருடினார். 


"என் முடிவு உனக்கு வருத்தம் இல்லயேம்மா." என கலக்கத்துடன் கேட்டார்.


" என்னப்பா நீங்க. நீங்க எந்த முடிவெடுத்தாலும் அது எனக்காக நீங்க யோசிச்சு எடுத்ததாக இருக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு பா." என அவரை அணைத்துக் கொண்டாள்.


அதை பார்த்த சிதம்பரம் அவருடன் வந்திருந்த பெண்ணுக்கு கைகாட்ட மேஜையிலிருந்த தாம்பூலத் தட்டை எடுத்து பர்வதத்திடம் கொடுக்க , அவர் அதிர்ச்சியுடன் அதை உற்று பார்த்தாள்.


" என்ன இது ." என மருதமுத்து கோபமாக சிதம்பரத்தை கேட்க, சிதம்பரம் அந்தப் பெண்ணிற்கு ஜாடை செய்தான். அதை புரிந்து கொண்ட அவள் தட்டை பர்வதத்தின் கையில் திணித்தார்.


அதை வெற்றி சிரிப்போடு பார்த்த சிதம்பரம் , மருதமுத்துவிடம் திரும்பி "ஆனந்திய என் பையனுக்கு கட்டி தருவியான்னு நான் வந்து நிற்கல. அவதான் என் மருமவன்னு உன் கிட்ட சொல்லிட்டு போவ தான் வந்தேன்.


அவ என் பையனுக்கு தான். அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.


கல்யாணம் எப்பன்னு சொல்றேன். பத்திரமா கூட்டிட்டு வந்துரு." என தன் தந்தையை ஒருமையில் பேசியவரை பார்த்து, 


" அங்கிள் , எனக்கு உங்க பையனை கட்டிக்க விருப்பம் இல்லை.


அதனால உங்க பையனே நீங்க வேறு யாருக்காவது கட்டிக்கொடுத்துருங்க. இப்போ இங்க இருந்து கிளம்புங்க." என்றவள் பிரகாஷின் பக்கம் திரும்பி, " நீ என்னை புரிஞ்சுப்பன்னு நினைக்கிறேன்." என கூற அவன் தலையசைத்தான்.


"என்னல அவர் சொல்லுதான்னு மாடுகளை கணக்கா தலையை ஆட்டுத. இங்க பாருத்தா. நீதான் என் மருமவ.அதை யாராலயும் மாத்த முடியாது. கல்யாண பொண்ணு அங்கே இங்கே அலையாம இந்த வீட்டிலயே கிட.


உனக்கு சீக்கிரம் கூட்டிட்டு போறேன். உன் வீட்டுக்கு..." யாரின் பதிலையும் எதிர்பார்க்காமல் வெளியே சென்றுவிட, எல்லோரும் அவன் பின்சென்றனர்.


அவர்கள் அங்கிருந்து கிளம்பியதும், என்ன செய்வதென்று அறியாமல் சோபாவில் அமர்ந்த மருதமுத்துவையும் பர்வதத்தையும் பார்க்க கவலையாக இருந்தது, ஆனந்த்க்கு.


"ப்பா.‌‌.. நீங்க எதுவும் பீல் பண்ணாதீங்க.அவர் சும்மா மிரட்டிட்டு போறாரு. எல்லாம் என் தப்புதான்." என வருத்தப்பட்டவளை தன் தோளில் சாய்த்து,


" தப்பு நீ பண்ணலாமா. நாங்க தான் பண்ணுனோம்."


" ஏன் இப்படில்லாம் பேசுறீங்கப்பா‌."


" நீ எதையும் யோசிக்காம போய் படு. நான் வெளியே போயிட்டு வரேன்." என்றவர் பர்வதத்தை அர்த்தமாய் பார்க்க அவரது பார்வையை புரிந்தவள் கண் ஜாடை செய்ய அங்கிருந்து கிளம்பினார் ,மருதமுத்து.


💖💖💖💖


காலிங் பெல் சத்தம் ஒலிக்க, அதை கண்டுகொள்ளாமல் அலைபேசியை ஆராய்ந்து கொண்டிருந்தாள், ஆனந்தி.


தொடர்ந்து காலிங் பெல் சத்தம் ஒலித்துக் கொண்டிருக்க, 'யாரும் வீட்ல இல்லையா?' என எண்ணியவாறே கீழே இறங்கினாள்.


" இருங்க வரேன்." என குரல் கொடுத்துக் கொண்டே கதவை திறந்தாள்.


" நீயா ...! "என அதிர்ந்து சிலையானாள்.


அவனும் சிலையாக நின்றான் அவள் அழகில்.


( வேற யாரும் இல்லைங்க. நம்ம அரவிந்த் தான்.)


பின் சுதாரித்தவள், 


" நீ எதுக்கு இங்க வந்த..? ஓஓ... அன்னைக்கி நான் உன்னை மிரட்டுனதுக்கு இப்போ இங்க பழிவாங்க வந்தியா...? இங்க பாரு. உன் வேலையெல்லாம் இங்கே நடக்காது." என கைகளை ஆட்டிக் கொண்டிருக்க அவன் அவளை தவிர வேறு எதையும் கவனிக்கவில்லை.


" ஏய் என்னடி பண்ணிட்டு இருக்க. தம்பி ... நீங்க.... உள்ள வாங்க."

என்று அழைத்தாள்,பர்வதம்.


" அம்மா… யாரு என்னன்னு தெரியாம கண்டவங்களெல்லாம் உள்ள விடுறீங்க." 


அந்த 'கண்டவன்' என்ற வார்த்தை அவன் மனதை சுட தன் உணர்வுகளை கட்டுபடுத்தி கொண்டான்.


"ஆனந்தி..." என எச்சரிக்கும் குரலோடு தன் தந்தை வீட்டினுள்ளே நுழைய சற்றே பயந்துதான் போனாள்.


"நீ எதுவும் பேசவேண்டாம். ரூமுக்கு போ." என கூற அரவிந்தை முறைத்துவிட்டு மாடிக்கு ஏறினாள்.


அரவிந்த் ஆனந்தி மாடி ஏறுவதையே காதலுடன் பார்க்க அதை கவனித்த மருதமுத்து அவனை கலைக்க செருமினார்.


அவர் செருமலை உணர்ந்த அரவிந்த், மருதமுத்துவை நோக்க,


" நான் உங்கள எதுக்கு கூப்பிட்டேன்னா...." என ஆரம்பித்தவர், சிதம்பரம் வந்தது முதல் அவர் மிரட்டி விட்டு சென்றது வரை அனைத்தையும் ஒப்பித்துவிட்டு, ஆனந்தியை அவர்களிடமிருந்து பாதுகாக்குமாறு வேண்டினார்.


சிறிது தயங்கினாலும் பின் ஆனந்தியை அங்கிருந்தபடியே பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டான், அரவிந்த்.


இதை ஆனந்தி எப்படி எடுத்துக்கொள்வாள் என நினைத்த மருதமுத்து, அவளிடம் இது பற்றி பேசுவதே சிறந்தது என அவள் அறைக்கு சென்றார்.


கட்டிலின் ஓரத்தில் கவலையாக உட்கார்ந்து இருந்த ஆனந்தியை நெருங்கினார், மருதமுத்து. 


"என் மேல கோவமா..?"


" இல்லப்பா..." அருகில் அமர்ந்திருந்தவரின் தோளில் சாய்ந்து கொண்டாள்.


" உங்களுக்கு அவன பத்தி தெரியாதுபா. நான் சொன்னேன்ல பிரகாஷ  காலேஜ்ல ஒருத்தன் அடிச்சான்னு. அது இவன்தான்பா."


" என்னமா சொல்ற.இவரா பிரகாச அடிச்சாரு..?" என சந்தேகமாக கேட்டார்.


" ஆமாம். இவன் பெரிய ரவுடி. இப்ப கூட நம்ம கிட்ட ஏதாவது பிரச்சனை பண்ணதான்ப்பா வந்திருப்பான்."


" அவரு ரௌடின்னு எனக்கும் தெரியும். நான் தான் அவர இங்க வர சொன்னேன்." 


" அப்பா .." என கண்களை அகல விரித்து, அவர் முகம் நோக்கினாள்.


" ஆமாம்மா. அந்த பிரகாஷ் அப்பா சிதம்பரம் பேசின விதம் எதுவும் சரி இல்லை. அவனால உனக்கு எதுவும் ஆயிர கூடாதுன்னு தான் நான் அரவிந்த் தம்பிய இங்க வர சொன்னேன்."


" அதுக்காக ஒரு ரவுடிய...."


" போது ஆனந்திமா. இதுக்கு மேல எதுவும் பேசாத. நான் எது செஞ்சாலும் உன் நல்லதுக்கு தான் இருக்கும்.


அப்புறம் நான் கூப்பிட்டதால மட்டும் தான் தம்பி இங்க வந்திருக்காரு.


இப்போ அவரு நம்ம guest மாதிரி. அதனால அவர அவன் இவன்னு சொல்லாம மரியாதையா பேசு. அவர் இங்க இருக்குற வர அவரை பத்தி தப்பாவோ, அவர எதிர்த்தோ நீ ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது.


ஏன்னா அவர் என்னை நம்பி, நான் கூப்பிட்டு வந்திருக்காரு. அவர் மனசு கஷ்டப்பட்டா, நான் என்ன பண்ணுவேன்னு தெரியாது. பாத்துக்கோ." என்று அவர் அங்கிருந்து நகர்ந்தார்.


' அப்பா ,ஏன்ப்பா இப்படி இருக்கீங்க. நீங்க பச்சப்புள்ளன்னு அவன் உங்களை ஏமாத்துறான்ப்பா. என்ன பாத்தா குழந்தைகூட பயப்படாது. ஆனா இவன் நடுங்குவான்." என தனக்குள் புலம்பியவள்,


' எப்படியோ நம்ம கிட்ட தானே மாட்டி இருக்கான். பாத்துக்கலாம்.' என அவளுக்கே தைரியம் சொல்லி கொண்டாள்.



Rate this content
Log in

Similar tamil story from Romance