Salma Amjath Khan

Romance

4.5  

Salma Amjath Khan

Romance

நீயே என் ஜீவனடி 4

நீயே என் ஜீவனடி 4

6 mins
513


"ஆனந்தி மா... ஆனந்தி மா.... எழுந்திரிடா..."


" அப்பா... ப்ளீஸ்பா.... பத்து நிமிஷம்..."


" இன்னைக்கியாவது சீக்கிரமா எழுந்துரிடா. இங்க பாரு காலைல இருந்து இந்த ராம் எத்தனை தடவை போன் பண்ணிட்டான்னு. நீ ஏன்மா அவன் போன எடுக்கல. நேத்து பேசிட்டு இருக்கும் போதே கட் பண்ணிட்டியாமே..."


' ராம்' என்ற பெயரைக் கேட்டதும் எழுந்து அமர்ந்தவள்,


"அப்பா அவனை பத்தி மட்டும் என்கிட்ட பேசாதீங்க. அவன் மட்டும் என் கைல கிடைச்சான் அவன அப்படியே ஜூஸ் பிழிஞ்சிடுவேன்.


" அப்டி என்னம்ம்மா அவன் மேல கோவம்..."


"பின்ன என்னப்பா என் பிறந்தநாளுக்கு வரேன்னு ப்ராமிஸ் பண்ணிட்டு, நேத்து கால் பண்ணி சாரி project இருக்கு.


அதை முடிக்காமல் வர முடியாதுன்னு சொல்லிட்டான். அவனுக்கு இந்த தங்கச்சியை விட அவனோட வேலைதான் முக்கியம்."


" அப்படியா....?" என அப்பாவியாய் மருதமுத்து கேட்டார்.


"அப்படிதான்..." என்றாள் அதை ஆமோதித்த படி.


" அப்ப ஏன்மா இத உன்கிட்ட கொடுக்க சொல்லி கொடுத்தான்."

என அருகிலிருந்த கிப்ட் பாக்ஸை காட்ட அதை ஓரக்கண்ணால் பார்த்த அவளின் இதழ்கள் விரிய அதை அவரிடம் இருந்து பிடுங்கினாள். 


உள்ளிருக்கும் ஆர்வத்தை அடக்க முடியாமல் வேகவேகமாக பிடித்தவளை பார்த்தவன் சிறுவயதில் அவள் மிட்டாயை பிரிக்கும்போது இருக்கும் ஆர்வத்தை கண்டான்.


பிரித்தவள் கண்கள் இரண்டும் வெளியில் விழாத குறைதான்.


மருதமுத்துவை அதிர்ச்சியோடு பார்க்க, அவர் பால்கனியை கண்காட்ட ஓடிச் சென்று பால்கனியில் இருந்து எட்டிப் பார்த்தாள்.


தோட்டத்தின் நடுவே மஞ்சள் நிற பூவாய் நின்றிருந்தது, அவளின் புது ஸ்கூட்டி.


அங்கிருந்து ஓடியவள் சாவியை வண்டியில் புகுத்தியவள் தோட்டத்தை சுற்றி இரண்டு சுற்றுகள் சுற்றினாள்.


மருதமுத்துவும் அவரது மனைவியும் தன் மகளின் சிறுபிள்ளைத்தனத்தை ரசிக்க மருதமுத்துவை அழைத்தாள், ஆனந்தி.


" அப்பா நீங்க கவலைப்படாதீங்க. இன்னிலிருந்து நான் உங்கள ட்ராப் பண்றேன்."


" யாரு நீயா?" என்றவரை,


" நான்தான்" என பெரிய புன்னகையுடன் கண் சிமிட்டி விட்டு தன் அண்ணனை வீடியோ காலில் அழைத்தாள்.


"ராம்.... ராம்... ராம்..."


" ஓய்..... என்னாச்சு உனக்கு..."


" தேங்க்ஸ்டா அண்ணா. நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்."


"ஹப்பா... உன்னை சமாதானப்படுத்துறதுக்கு என்னலாம் பண்ண வேண்டியது இருக்கு." என அலுத்துக் கொண்டான் ராம்.


"என்னது சமாதானப்படுத்தவா? அப்போ என் பர்த்டேக்கு வாங்கித்தரலயா...?"


"போடி லூசு... நீ பிறந்ததே ஒரு வேஸ்ட் ...அதை செலிப்ரேட் பண்ண உனக்கு கிப்ட் வேற வாங்கி தரணுமாக்கும். "


"அப்படியா சார். அப்போ போன தடவை கலிபோர்னியாவிலிருந்து வாட்ச் வாங்கிட்டு வந்து யார் கிப்ட் பண்ணுனாங்கலாம்.


" அடி லூசு.... லூசு... அதை நான் வாங்கிட்டு வந்தேன்னா நினைக்கிற..."


"ஏன்டா...?"


" அட கிறுக்கு பய புள்ள... இங்க ஊர் சுத்திட்டு இருக்கும்போது ரோட்ல ஒரு வாட்ச் பிஞ்சு கிடந்தது. பிராண்ட் நல்லா இருக்கேன்னு பார்த்தால் அது லேடீஸ் வாட்ச். சரி எதுக்கு விடுவானேன்னு என் ரூம்ல இருந்து கம்ம ஒட்டி உன் கிட்ட குடுத்தேன். நீ என்னமோ அத உனக்காக கடை கடையா தேடி அலைஞ்சு வாங்குன மாதிரி ஃபீல் பண்ற. ஹய்யோ ... ஹய்யோ..."என அவளை சீண்ட அவளுக்கு கொலைவெறியே வந்தது.


"என்ன முறைக்கிறியா... அதான் உன் மூஞ்சிக்கு செட் ஆகலேல. அப்புறம் என்ன. இங்க பாரு."


என ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அனுப்ப அது அவளுக்கே கொஞ்சம் கன்ட்ராவியாக தான் இருந்தது.


" நமக்கு மட்டும் ஏன் கோவமே வரமாட்டேங்குது. ஒருவேளை நாம சொரணை கெட்ட ஜென்மமா இருப்போமோ..."


" ஏய் என்னடி ரொம்ப யோசிக்கிற."


" சரி. அதல்லாம் விடு. நீ எப்ப வருவ"


" project முடிச்சுட்டு டூ வீக்ஸ்ல வந்துருவேன்."


" நிஜமாவா?"


" ப்ராமிஸ்."


"பக்கா...?"


" பக்கா ப்ராமிஸ்."


" அப்ப நீ டு வீக்ல வராத."


"ஏன்?"


" அப்பதான என்னை சமாதானப்படுத்த எனக்கு இன்னொரு கிப்ட் வாங்கி தருவ."


" அடிப்பாவி... கிப்ட் வேணும்னா கேளு. ஒரு கிப்ட்காக என்ன இந்தியா வரவிடாமல் USA வச்சு புதச்சுருவ போல."


"உன்னை எல்லாம் யாருடா இங்க தேடப் போறா...?"


" அடியே இரு. உனக்கு வந்து இருக்கு. அது சரி உன் ஆசை அம்மாவும் அப்பாவும் என்ன கிப்ட் கொடுத்தாங்க."


" அதை ஏன் கேக்குற. நேத்து நைட்டு 12 மணிக்கு விஸ் பண்ணி கேக் கொடுத்ததோட சரி. மறந்துட்டாங்க போல.நாமலே வெட்கத்தை விட்டு கேட்கணும்னு நினைக்கிறேன்." என வருத்தப்பட,


" அது வெட்கம் னு ஒன்னு இருக்கிறவங்க பீல் பண்ணனும்.நீ ஏன் ஃபீல் பண்ற... கொஞ்சம் அக்கடி சூடு..." என கூற திரும்பியவள்,


தன் பெற்றோர் பரிசுகளுடன் நிற்க, " உன்கிட்ட பேச டைம் இல்ல. நீயா போன் வச்சுரு." என கட் செய்தாள்.


மருதமுத்து தங்க ஜிமிக்கியை தர, அவர் மனைவி பர்வதம் ' ஏ ' போட்ட தங்க செயினையும், மஞ்சள் நிற சல்வாரையும் தர, அவள் அதற்கு கைமாறாக கன்னத்தில் இதழ் பதித்து தன் அறைக்குச் சென்று குளித்து தன் தாய் தந்தை தந்த சல்வாரையும் செயினையும் ஜிமிக்கியும் அணிந்து கொண்டு அழகு பார்த்தாள்.


மஞ்சள் நிற சல்வார் உடன் இறங்கி வந்த மகளை வாஞ்சையோடு கொஞ்சி உணவை ஊட்டி விட்ட பெற்றோரை நினைத்து சிலாகித்துக் கொண்டிருந்தாள், ஆனந்தி.


" என்னடி பகல் கனவா...?" என அருகில் வந்த ஜோதியையும் திவ்யாவையும் பார்த்து லேசா புன்னகைத்தாள்.


" இந்த வருஷமாவது உன்னோட ராஜகுமாரன பார்ப்போமான்னு கனவா...?"


" போதும்டி.. நிறுத்து." என ஜோதியை நிறுத்த,


"ஏய்... அங்க பாருடி... செம்ம மாஸா இல்ல." என திவ்யாவின் பார்வை விரிய,


ஆனந்தியும் ஜோதியும் அவள் பார்வையின் புறம் தங்கள் பார்வையை செலுத்தினர்.


பார்வையில் கூர்மை, முறுக்கிய மீசை, சிரிக்கத் தெரியாத உதடுகள், அகன்ற உடல், உருக்கிய தேகம், கையில் காப்பு, வேட்டி சட்டை அணிந்து விறப்பான நடை.


அவன் காப்பு அணிந்த கையினால் அவன் மீசையை முறுக்கிக்கொண்டு கூர்மையான பார்வையுடன் நடப்பதை பார்த்த திவ்யா,


" Awesome...." என பல் இளிக்க அப்போதுதான் தன் வாய் பிளந்து இருப்பதை உணர்ந்தாள், ஆனந்தி.


" யாருடி இவன். சரியான நாட்டுக்கட்டையா இருக்கான். இன்னைக்கு நம்ம காலேஜ்ல fancy dress competition ஏதாவது நடக்குதா. இவனை இந்த காலேஜ்ல பார்த்த மாதிரியே இல்ல...." ஆனந்தி அவனை பற்றி விசாரித்தாள்.


" அவர தெரியாதா உனக்கு?"


" ஏன்? அப்படி என்ன பெரிய பருப்பா?" என திவ்யா கேட்க,


" நிஜமாவே உங்களுக்கு தெரியாதா..?"


" இந்தா நிறுத்து. அதான் தெரியாது ன்னு சொல்றோம்ல.


அப்புறம் என்ன ஓவரா சீன் போடுற. சொல்லு."


" அவர் பேரு அரவிந்த் ."


"அரவிந்த் ... நல்ல பெயர்தான். மேல சொல்லு." என ஆர்வமானாள் , ஆனந்தி.


" குறுக்க பேசாம முழுசா கேளு.

அவன் பேரு அரவிந்த். பெரிய ரவுடி. 14 வயசுலேயே கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போனவர்."


" என்னது ஜெயிலா...? அதுவும் 14 வயசுலயா....?" வியர்த்து இருந்த நெற்றியை துடைத்துக்கொண்டு கேட்டனர் திவ்யாவும் ஆனந்தியும்‌.


"நம்ம காலேஜ்க்கு கூட நிறைய தடவை வந்திருக்காங்க. அதுவும் நம்ம காலேஜ் பசங்கல அடிக்க. ஒரு தடவை காலேஜ் professorர கூட அடிச்சுருக்காரு."


"எவ்ளோ தைரியம் இருக்கனும் நம்ம காலேஜ்க்கு வந்து நம்ம காலேஜ் பசங்கலயே அடிச்சிருக்காங்க. இவனல்லாம் சும்மா விட கூடாது." என கோபத்தில் ஆனந்தி கூற,


" போதும் நமக்கு ஏன் இந்த வெட்டி சீனு." என ஜோதி கேட்க,


" அதுவும் கரெக்டுதான்." என அடங்கினாள்.


" ஏய் அவன் கழுத்தை பாரேன்."

என திவ்யா கத்த, 


" ஏன்?" என கோரஸ் பாட,


" பாருங்கடி..." என கத்தினாள்.


" அது தாலி மாதிரி தெரியல." என சந்தேகம் கேட்க,


" மாதிரி இல்ல. தாலியே தான். அதுசரி இவன் எதுக்குடி கழுத்தில தாலி கட்டிருக்கான்" என ஜோதி கேட்க, 


" இவன எல்லாம் யாரு கல்யாணம் பண்ணிப்பா. ஏதாவது இளிச்சவாச்சி கிடைச்சா அவன் தாலி தேடுறதுக்குள்ள காணாம போய்விடுவான்னு. 


அவ ஓடுறதுக்குள்ள டக்குன்னு கட்டிரலாம்னு நெனச்சு கழுத்துல மாட்டி இருப்பான்."என ஆனந்தி கேலியாக சொல்ல மூவரும் சிரித்துகொண்டனர். ( பாவம் அந்த இளிச்சவாச்சி இவ தான்னு தெரிஞ்சுருந்தா ஏதாவது டீசன்டா கலாய்ச்சிருப்பா.)


" ஆனந்தி.... ஆனந்தி..." மூச்சிரைக்க ஓடிவந்த தன் தோழியை பார்த்து மூவரும் முளிக்க,


"ஏன்டி பேய பார்த்த மாதிரி ஓடி வர்ற." என வாட்டர் பாட்டிலை நீட்ட, அதை ஒரு கையால் ஒரு ஒரு புறந்தள்ளி விட்டு ,


" ஒரு....." என மூச்சு வாங்க,


" நீ முதல்ல ரிலாக்ஸாகு. உன்னை யார் இப்படி ஓடி வர சொன்னது."


" இல்லடி. library வாசல்ல ஒரு ரவுடி உன் பேட்ஜ்மேட் பிரகாஷ அடி அடின்னு அடிக்கிறான்." எனக் கூற, 


மூவரின் கண்களிலிருந்து அகல விரிந்து, ஒருவரை ஒருவர் பார்த்து திரும்பி பால்கனியிலிருந்து தேட அங்கு அரவிந்த் இல்லை.


" ஒருவேளை அந்த ரவுடி அரவிந்தா இருக்குமோ...? " என திவ்யா சொல்ல, மூவரும் லைப்ரேரி நோக்கி ஓடினார்கள்.


பிரகாஷ் ஆனந்தியின் வகுப்பில் தான் படித்துக் கொண்டிருந்தாலும் அவ்வளவாக பேசிக் கொண்டதில்லை.


இரண்டு வாரத்திற்கு முன்பு ப்ராஜெக்ட் விடயமாக பேட்ஜ் பிரிக்கும் போது இருவரும் ஒரே பேட்ஜில் இணைந்தார்கள்.


அன்று முதல் இருவரும் நட்புடன் அதிக நேரம் பேசுவதும் கேண்டினில் நேரத்தை செலவிடுவதுமாக இருந்தனர்.


ஆனந்தி, ஜோதி, திவ்யா லைப்ரேரி வாயிலை அடைந்தபோது, பிரகாஷ் தரையில் விழுந்து கிடந்தான்.


சுற்றி அடியாட்கள் நிற்க அவர்களுக்கு நடுவில் அரவிந்த் பிரகாஷின் வயித்தில் மிதித்துக் கொண்டிருந்தான்.


சுற்றி அடியாட்கள் நின்று கொண்டிருந்ததால் பயந்து யாரும் அவனை காப்பாற்ற முயற்சிக்கவில்லை.


பிரகாஷ் வாயிலிருந்து ரத்தம் வர அரவிந்தின் காலை எடுக்க முயற்சி செய்து கொண்டே வலியில் கத்தினான்.


தன் நண்பனை அந்த நிலைமையில் காணமுடியாமல் அடியாட்களை தாண்டி உள்ளே நுழைந்தாள், ஆனந்தி.


அடியாட்கள் ஒரு நிமிடம் தடுமாறினாலும் அவளை தடுக்கவில்லை.


அரவிந்தின் சட்டையை கொத்தாகப் பிடித்து அவனை இழுக்க, நிலை தடுமாறியவன் பிரகாஷ் வயிற்றில் இருந்த காலை நிலத்தில் ஊன்றினான்‌.


தன்னை இழுத்தவரின் மேல் வெறி கொண்டு கையை ஓங்கினான்.


அவன் கண்களால் அவள் கண்ணை பார்த்ததும் அவன் கைகள் காற்றிலே நின்றன.


ஆனந்தியை பார்த்ததும் அரவிந்தின் கண்களில் இருந்த கோபம் குறைய ஆரம்பிக்க, ஆனந்திக்கு அரவிந்தை பார்த்து கோபம் தலைக்கேறியது.


காற்றில் அசைந்தாடும் முடிக்கற்றை, 


கோபத்தில் சுருங்கிய நெற்றி,


புருவங்கள் முடிச்சிட நடுவில் பொட்டு, 


தன்னையே எரித்துவிடும் அவள் கண்கள்,


கிள்ளி பார்க்க தூண்டும் கன்னம்,


அந்தக் கன்னத்தை உரசிக்கொண்டு காதிலாடும் ஜிமிக்கி, 


கோபத்தில் சிவந்த மூக்கு, 


ரோஜா இதழை விட மென்மையான உதடு, 


கழுத்தில் இருந்து கொண்டு அவள் நெஞ்சில் உராயும் செயின்,


இளமஞ்சள் சல்வார், 


அவள் கைகள் கொத்தாக அரவிந்தின் சட்டையை பிடித்து இருக்க, 


அவன் அந்த உலகத்திலேயே இல்லை.


' என்ன இவன் இப்படி பார்க்கிறான். இவன் நிஜமாகவே ரவுடி தானா?


நாம வேற தைரியமா ஆர்வ கோளாறுல சட்டையெல்லாம் பிடிச்சுட்டோம்.' 


அவன் கையை பார்க்க அது அந்தரத்தில் நின்று கொண்டிருந்தது.


'இவன் அடிக்க கை ஓங்கிட்டு அடிக்கவேயில்லை. ஒருவேளை நம்மள பார்த்து பயந்து இருப்பானோ‌. ச்சே .. ச்சே.. பொம்பளைங்க மேல கை வைக்க கூடாதுன்னு குறிக்கோள் ஏதாவது இருக்குமோ... ஏதோ ஒன்னு ஏதோ எமோஷன் இந்த பிரகாஷ் பக்கிய காப்பாத்துறதா நினைச்சு உள்ள நுழைஞ்சுட்டோம்.


சுத்தி இருக்கிற பக்கிங்க வேற ஜான்சி ராணிய பாக்குற மாதிரி பீல் பண்ணி பாக்குறாங்க. காலேஜ்ல நம்ம மானம் போக போகுது.


நாம கொஞ்சம் இப்படியே maintain பண்ணுவோம்.'


என அரவிந்தை பார்க்க அவன் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் இருக்க,


'நின்னுட்டே தூங்குகிற வியாதி இருக்குமோ....'என யோசித்து,


அவன் முகத்தின் முன் சொடக்கு போட,


" என்ன உங்களுக்கு பெரிய ரவுடின்னு நினைப்பா? இப்படி காலேஜ்ல வந்து student மேலயே கை வக்கிறீங்க.


இன்னும் இரண்டு நிமிசத்தில இங்கிருந்து போகல. ஸ்டூடன்ட் மேல கை வச்சேங்கன்னு போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ண வேண்டியிருக்கும்."


" என்னங்க.... உங்..." என அடியாள் ஒருவன் குரல்கொடுக்க,


" மணி , போகலாம்." என்றவன் தன் சட்டையை பிடித்திருந்த அவள் கையை பிடித்து இழுக்க,


அப்போது நான் இன்னும் அவன் சட்டையில் இருந்து அவள் கையை எடுக்கவில்லை என தெரிந்ததும் அதை விடுவித்தவன்,


கீழ் பார்வையில் பிரகாஷை முறைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.


' நான் என்ன அவ்வளவு டெர்ரராவா இருக்கேன். நம்ம சொன்னதும் பயந்து போய்ட்டான்.இவனயா பெரிய பருப்புன்னு இந்த ஜோதி வேற சீன போட்டா...' என யோசித்தவள் பிரகாஷின் முனங்கள் சத்தம் கேட்டு, அவனை பாவமாக பார்த்தாள்.



Rate this content
Log in

Similar tamil story from Romance