Salma Amjath Khan

Romance

4.5  

Salma Amjath Khan

Romance

நீயே என் ஜீவனடி 25

நீயே என் ஜீவனடி 25

11 mins
723



💖💖💖💖💖


காதல் பிணி ஆனந்தியையும் வாட்டி வதைக்கத்தான் செய்தது.


ஏன் என்றே தெரியவில்லை அந்த நோய் எல்லாரையும் தாக்க வேண்டும் என்றும், அதன் சுகமான வழியை அனைவரும் சுவைக்கவே விரும்புகின்றனர்.


ஆனந்தியின் நிலையோ மிகவும் மோசமாகிக் கொண்டே இருந்தது.

இப்பொழுதெல்லாம் அரவிந்த் மிக அழகாகவே ஆனந்தியின் கண்களுக்கு தெரிகின்றான்.


அவன் மீதிருந்து பார்வையை விலக்க கஷ்டமாக இருந்தது.


ஆனால் அவன் பார்வை அவள் மீது பட்டால் எங்கிருந்துதான் வருமோ அந்த வெட்கம், வந்து அவளை ஒட்டிக்கொண்டு தலையை குனிய வைத்து விடுகிறது.


அவனுடைய அகன்ற மார்பு, வலிமையான புஜங்கள், கம்பீரமான நடை, ஆளைக் கொல்லும் பார்வை ,அதட்டுகின்ற பேச்சு, முறுக்கிய மீசை, கையில் ஏற்றிவிடும் காப்பு, அவளை மயக்கும் புன்னகை என அரவிந்தின் ஒவ்வொரு செய்கைக்கும் கவிதையை அருவியாகக் கொட்டிக் கொண்டிருந்தாள்.


சோபாவின் ஒரு ஓரத்தில் அரவிந்த் யாருடனோ போனில் பேசிக் கொண்டிருக்க கைகள் ஃபைலை புரட்டிக் கொண்டிருந்தது.


மறுமுனையில் அமர்ந்திருந்த ஆனந்தியின் கண்கள் அரவிந்தை விழுங்கிக் கொண்டிருந்தது.


ஆனால் அரவிந்தோ இதை கண்டும் காணாதவனாய் தன்னுடைய வேலையில் கண்ணும் கருத்துமாய் அமர்ந்திருந்தான்.


' ஏண்டா என்ன இப்படி கொல்ற. பக்கத்துல அழகான பொண்டாட்டிய வச்சுட்டு போன்ல யாருகூடடா கடலை போடுற. பாவம் இல்லையா நான். லவ்வ உள்ளுக்குள்ளேயே வச்சா எப்படி தெரியும்.


இரண்டு ரொமாண்டிக் லுக், ஒரு ஒரு கிஸ், கிஸ் கூட வேணாம் ஒரு டச்சிங் கிச்சிங்..‌ ஒன்னும் இல்ல... எந்த உணர்ச்சி யாவது உன் மூஞ்சியில தெரியுதா... சுத்தம்... உன்ன வச்சு எப்படிதான் ஊறுகாய் போடப் போறேனோ...' என மனதினுள் புலம்பிக் கொண்டிருந்தாள்.


" போதும் ஆனந்தி. ஏன் அப்பத இருந்து என்னையே பாத்துட்டு இருக்க." என்றான். போனை துண்டித்தபடி.


' சொன்னா மட்டும் உனக்கு புரிஞ்சிறவா போது.'


" நான் எங்க பார்த்தேன். நான் ஒன்னும் பார்க்கலையே."


அவளை நிமிர்ந்து பார்க்க அவள் பார்வையை தாழ்த்திக் கொண்டாள்.


" நிஜமா நீ என்னை பார்க்கல." எனக்கேட்டான் கண்களை அகல விரித்து.


அதில் மயக்கம் கொண்டவள் ஆம் என தலையை ஆட்டி பின் அதை உணர்ந்து இல்லை என தலையை ஆட்ட, அவளின் கலவையான முக பாவத்தில் சிரித்தான், அரவிந்த்.


' ஐயோ சிரிச்சு மயக்குறானே' என மனதில் நினைத்தவள்,


" நீ மட்டும் ஏன்டா இவ்வளவு அழகா இருக்க" என வாய்விட்டு சொன்னதை பாவம் அவள் அறியவில்லை.


ஆனால் அரவிந்த்க்கு தான் கேட்டு விட்டதே‌.


"நான் அழகா இருக்கேனா" என அவளது விழிகளில் கலந்து ஒற்றை புருவத்தை உயர்த்திக் கேட்க, அப்போது தான், தான் உளறியதை உணர்ந்து திருதிருவென கண்களை உருட்டி முளிக்க, அங்கே மணி ஆஜரானான்.


" அண்ணா... கூட்டிட்டு வந்தாச்சு.."


" எங்க வச்சிருக்கீங்க..?


" தோட்டத்து வீட்டுல .."


"சரி நீ போ. நாங்க வரோம்." கையிலிருந்த ஃபைலை மூடியவன் ஆனந்தியின் புறம் திரும்பி,


" நான் இப்ப வந்துர்றேன்." என அரவிந்தன் திரும்ப,


" நாம எங்கேயாவது போறோமா...யார கூட்டிட்டு வந்திருக்க" 


மெலிதாக அவளைப் பார்த்து சிரித்தவன் "பார்க்க தானே போற" என அவன் அறைக்குச் செல்ல,


' யாராய் இருக்கும்...?' என யோசிக்க தொடங்கினாள்.


' கோவில்ல அம்மா அப்பாவை கூட்டிட்டு வந்து சர்ப்ரைஸ் கொடுத்த மாதிரி, வீட்டுக்கும் கூட்டிட்டு வந்து சர்ப்ரைஸ் குடுக்குறானோ... இவனையும் ஆள காணோம். சரி நாமலே போய் பார்க்கலாம்.' என்று எண்ணியவள் அரவிந்தை விடுத்து தோட்டத்தின் ஓரத்தில் இருக்கும் சிறிய வீட்டினுள் நுழைந்தாள்.


அந்த வீடு அரவிந்தின் கைவரிசை காட்டும் வேலைகளுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்வர்.


ஆனந்தி அந்த வீட்டிற்குள் நுழைய அந்த இடத்தில் இருள் படர்ந்த வீடு அவளை வரவேற்றது. தட்டி தடுமாறி மின்விளக்கு உயிர்கொடுக்க, வெறுமையாய் இருந்தது, அந்த கூடம்.


' என்ன யாரையும் காணோம்..' என எண்ணியவள் 'அப்பா' என குரல் கொடுக்க, பதில் வரவில்லை.


கொஞ்சம் தள்ளி இருந்த அறையில் இருந்து காலடி சத்தம் வர அந்த அறையின் அருகே சென்றாள்.


அந்த அறையின் கதவு வெளியே தாளிடப்பட்டு இருக்க, அதை திறக்க முயற்சிக்கும் போது உள்ளே இருந்து சத்தம் வந்தது.


" dammit don't know who the hell is"என யாரோ முனுமுனுக்கும் வார்த்தை கேட்க அது தன் பெற்றோர் இல்லை என அறிந்தவள்... யார் என்று அறியும் ஆர்வத்தில் கதவை திறந்தாள்.


கதவை திறந்த சத்தத்தில் உள்ளே இருந்தவன் திரும்பிப் பார்க்க ஆனந்தியும் அவனைப் பார்க்க தடுமாறிப் போனாள்.


இருவரின் முகத்திலும் அதிர்ச்சி தோன்றி மறைய, 'இவனா' என ஆனந்தியின் மனம் பின்னோக்கி சென்றது.


அரவிந்த் எல்லா சுடிதாரயும் மாற்றி மாற்றி போட்டு காட்ட சொல்லி கடைசியில் சேலை செக்ஷனுக்குள் நுழைய சோர்வுடன் ட்ரையல் ரூம் புகுந்து அவளின் பழைய உடைக்கு மாறி திரும்பினாள், ஆனந்தி. 


வெளியே வந்தவள் அரவிந்தை தேடிக் கொண்டிருக்க அவள் கண்ணில் பட்டதோ சாதனா தான்.


முகம் பிரகாசிக்க அவளை நோக்கி செல்ல அவள் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தாள். அவள் பின்னே கீழ் தளம் வரை சென்றவள் இன்னும் சிறிது நேரத்தில் அவள் கடையை விட்டு வெளியேறி விடுவாள் என அறிந்து அவளைப் பெயர் சொல்லி கூப்பிட, அவள் நின்றாள்.


" ஹலோ சாதனா.. என் பெயர் ஆனந்தி . "


"எனக்கு தெரியும்."


'பார்ரா. இந்த ஊர் உலகம் நம்மளயும் பேமஸ் ஆகிடுச்சு.'


அவளுக்கு புன்னகையை பரிசாக அளித்து , "அப்புறம் எப்படி இருக்க. காலேஜ் எல்லாம் எப்படி போகுது."


" நல்லா போகுது அண்ணி." என அவள் பேசத் தயங்கும் தயங்குவதை உணர்ந்தாள், ஆனந்தி‌.


அதனால் அவளே பேச்சை மீண்டும் தொடங்கினாள். "ஷாப்பிங் முடிஞ்சதா"


" முடிஞ்சது அண்ணி."


" தீபாவளிக்கு வீட்டுக்கு வாயேன்.சேர்ந்து செலிபரேட் பண்ணலாம்." அவள் தயங்கியவாறே,


" இல்ல பரவாயில்ல அண்ணி."


" ஏன் நான் கூப்பிட்டா வரமாட்டியா ‌...." என ஆனந்தி மிரட்டும் தோரணையில் கேட்க,


" ஐயோ அப்படி எல்லாம் இல்ல, அண்ணி. தீபாவளிக்கு பாட்டி வீட்டுக்கு போறேன். இன்னொரு நாள் வரேன்."


" சரி கண்டிப்பா வரணும்." என அவளுக்கு ஆணையிட்டு அவளை அனுப்பி வைத்தாள்.


அவள் அவளது பார்வையிலிருந்து மறையும் வேளை,


" வாவ்... வாட் அ structure..." என அவள் காதோரம் கேட்ட சத்தத்தில், பயந்து திரும்ப, அங்கு இருபதில் ஆரம்பத்தில் ஒரு இளைஞன் நின்றிருந்தான்.


பால் நிறத்தில் இந்தி பட நாயகனை போல இருந்தவன் அவளைப் பார்த்த பார்வையில் அருவருப்பு உண்டானது.


தன் பார்வையை அவன் மேல் படுவதைக் கூட விரும்பாதவள் பார்வையைத் திருப்பிக்கொண்டாள்.


" வாட்ஸ் யுவர் நேம் பேப்ஸ்"


" தெரிஞ்சு நீ என்ன பண்ண போற..."


" என்கிட்டயே ஆட்டிட்யூட் ஆ...பட் ஐ லவ் இட்.... tonight 9 o clock at hotel tower. I will be waiting for you. so come fast." 


அவன் பேசியதில் கோவம் வந்தாலும் அதை அடக்கியவாறு, "வாட்" என்றாள்.


"I know you are not dump and you are not kiddo. just one night. I will give you whatever you want. I promise you I won't disturb you thereafter because I never touch a thing twice" என கூற வந்த ஆத்திரத்தில் அவனை அறைய கையை ஓங்க அவன் அதை பிடித்துக்கொண்டு, ஒரு மெத்தன சிரிப்பை உதிர்த்தவன்,


" don't dare to slap me. You don't know who my father is.. if you do that you won't survive..."


அவளும் அதே மெத்தன சிரிப்பை உதிர்த்தவள்,


"don't dare you look at me here after .... you don't know who my husband is... If you do that you don't survive...."


சத்தம்போட்டு சிரித்தவன் "இன்ட்ரஸ்ட்டிங்..." 


அவன் சிரிப்பு சத்தத்தில் திரும்பிய கடை முதலாளி அரவிந்தின் மனைவியிடம் யாரோ வாலாட்டுவதை உணர்ந்து அவர்கள் அருகில் வந்தான்.


" you don't know how Adamkant I am. I like you very much with this attitude. so I give you two days think about it. if you were ready we will enjoy. if you weren't that's your fate. I will enjoy.


I catch you on Friday whether you are agreed or not"என்றவன் அதற்கு மேல் நிற்காமல் சென்று விட்டான்.


அவள் முதலாளியிடம் ஒன்றும் இல்லை என்று சமாளித்து கொண்டிருக்க அங்கு அரவிந்த் வந்தான்.


அவள் கண்முன் தோன்றிய நினைவுகளை அவனுடைய பார்வை தோற்கடித்தது. 'இவன் எப்படி இங்கே' என அருவருப்பாக திரும்பி செல்ல நினைக்க,


" oh hotty.... what are you doing here... ok.... ok.... finally ... you agree to stand for tonight with me." என ஆனந்தியின் அருகில் நெருங்கினான்.


அவள் சிலையென நிற்க, " why this hesitation babes. I am so gentle in bed. I teach you everything inch by inch. come..." என அவளின் தோளை தொட வந்தவன், அவன் கைகளுக்கும் ஆனந்தியின் தோளுக்கும் நூலளவு இடைவெளி இருக்க அவன் கையை அசைக்க முடியவில்லை.


ஆனந்தியை தள்ளி நிறுத்தி விட்டு அவன் முன் வெறி கொண்ட வேங்கையாய் வந்து நின்றான், அரவிந்த்.


அரவிந்தின் ஆட்கள் அவர்களை சூழ்ந்து கொள்ள ஆனந்தியின் முகம் வெற்றிவாகை சூடி கொண்டன.


" you bloody f****** idiot. how dare you try to touch my spouse. I won't spare you..." என அவன் கைகளை முறுக்கி அவன் மூக்கில் ஒரு குத்து விட சில்லி மூக்கு சிதறி ரத்தம் வெளியேறியது.


அதில் சினமுற்ற அவன் அரவிந்தை தாக்க முயல அவன் தாக்குதலை லாவகமாக தடுத்தான், அரவிந்த்.


" even I won't spare your wife...." என அவன் பார்வை ஆனந்தியின் புறம் திரும்ப, அரவிந்தின் கைகள் முரட்டுத்தனமாக அவன் கழுத்தை நெருக்கி அவனை பின்னே தள்ளி கொண்டு சென்று சுவற்றில் மோத வைத்து மேலே தூக்க அவன் மூச்சுவிடத் திணறினான்.


" this Earth doesn't need a burden like you anymore... just get out of this world..." என அவன் குரல்வளையை மேலும் இறுக்க அவன் கண்கள் மேலே சொருகின


அரவிந்தின் ஆங்கிலத்தில் தன்னை மறந்தவள் அவன் திணறலில் வெளிவந்தாள்.


" போதும்"என ஆனந்தியின் குரல் அரவிந்தின் காதில் விழ தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்து அவனை இறக்கிவிட்டான்.


அரவிந்தின் அருகில் ஓடி வந்தவள், " நான் மட்டும் நிப்பாட்ட சொல்லலைன்னா அவன் செத்து இருப்பான்" என கோபமாக பேசியவள் உடனே முகத்தை பாவமாக மாற்றிக்கொண்டு, " நீ எத்தனையோ பேரை அடித்துக் கொலை கூட பண்ணி இருக்க. இதெல்லாம் உனக்கு சாதாரணம் தான். எனக்கு இதெல்லாம் புதுசு. நான் இது வரைக்கும் யாரையும் அடிச்சது இல்ல தெரியுமா....


இவனை கூட அன்னைக்கு அடிக்க ட்ரை பண்ணினேன் ஆனா மிஸ் ஆயிடுச்சு... எப்படியும் இவனை கொல்ல தானே போற அதுக்கு முன்னாடி நான் அவன ரெண்டு அடி அடிச்சுகவா... ப்ளீஸ்..." என கண்களை சுருக்கி கேட்க, அதில் தன்னை தொலைத்தவன் புன்னகைத்துக்கொண்டே அவளுக்கு அனுமதி கொடுக்க,


பளார் பளார் என இரண்டு அறை விட்டு திரும்பியவள், " ஆரு செமையா இருக்கு. இன்னும் ரெண்டே ரெண்டு" என இரண்டு விரலை மட்டும் நீட்டிக் கொண்டு மிட்டாய் கேட்பது போல் நிற்க, சிரித்துக்கொண்டே "எவ்வளவு வேணா அடிச்சுக்கோ" என அனுமதி கொடுக்க, மீண்டும் இரண்டு அடிகளை கொடுத்து,


" அன்னைக்கே சொன்னேன் கேட்டியா. ஏன்டா இப்படி தேடி வந்து என் ஆரு கிட்ட மாட்டுற. அன்னைக்கு என்னமோ என் அப்பா யாருன்னு தெரியாதே உனக்குன்னு பில்டப் எல்லாம் கொடுத்த. இப்ப எங்க போனான் உன் அப்பா. வரச்சொல்லு அவன."


என்றவள் அரவிந்தின் அனுமதி இன்றி அவன் சட்டைப் பையில் இருந்து போனை எடுத்து அவனிடம் நீட்டினாள்.


அதை சாதகமாக பயன்படுத்தி அவன் தன் தந்தைக்கு அலைபேசியில் அழைப்பு விடுத்தான்.


அரவிந்த் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தவள், "சும்மா சும்மா அப்பான்னு பாவ்லா காட்டினான். அதான் அவன் அப்பா என்ன கிழிக்கிறார் பார்க்கலாம்... நீ என் பயப்படும். அவர் அப்பா பெரிய சிஎம் பாரு. உன்னை எண்கவுன்டர் பண்ண சொல்ல. நீ பயப்படாத ஆரு நான் இருக்கிறேன்." என அரவிந்த்திற்க்கே தைரியம் ஊட்ட, 


அவள் காதருகில் குனிந்தவன், "அவன் அப்பா சிஎம் இல்ல. ஆனா பிஎம்." ஆனந்தி அதிர்ச்சியின் உச்சத்துக்கே போக, கைகாலெல்லாம் உதறலெடுக்க, அரவிந்தை பயந்த முகத்துடன் பார்த்து, உண்மையா என தலையசைப்பால் கேட்க, அவன் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு ஆமாம் என தலையசைக்க ஆனந்தி எச்சிலை விழுங்கிக் கொண்டாள்.


அவள் பயத்தை பார்த்து நகைத்தவன் அவள் கையை தன் கைக்குள் வைத்துக்கொண்டு‌, "பயப்படாத என்கவுண்டர் எல்லாம் நடக்காது" என கூறி ஆறுதல் படுத்தினான்.


அதற்குள் அங்கு அலைபேசியின் அழைப்பு ஏற்கப்பட,


" ஹலோ"


" ஹலோ டாடி. இங்க சில பேர் என்ன கடத்திட்டு வந்து கொல்லப் பார்க்கிறாங்க."


" என் பையன் மேல கைய வைக்க எந்த நாய்க்குடா தைரியம் இருக்கு. என அவர் உறும, அந்த அலைபேசியில் கைகளில் இருந்து பிடுங்கி,


" இந்த அரவிந்த் நாய்க்கு அந்த தைரியம் இருக்கு..." என கூற, எதிர்ப்பக்கத்தில் நடுக்கத்துடன் பதில் வந்தது.


" தம்பி நீங்களா... நீங்க னு தெரியாம... மன்னிச்சிடுங்க தம்பி...அவன் சின்ன பையன் இப்ப தான் வெளிநாட்டிலிருந்து வந்து இருக்கான்... ஏதாவது தெரியாம சீண்டிப் இருப்பான்..."


" அவன் சீண்டுனது என் பொண்டாட்டி கிட்ட. மத்த பொண்ணுங்க கிட்ட வால் ஆட்டினாலே அதை ஒட்ட நடக்கிறவன் நான். அவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் பொண்டாட்டிகிட்டயே சீண்டியிருப்பான்."


" ஐயோ தம்பி ...தம்பி... எதுவும் பண்ணிராத. எனக்காக மன்னிச்சிடு பா."


" உனக்காகவா யாருடா நீ. நீ ஒரு கேப்மாரி. உன் பையன் ஒரு மொள்ளமாரி. நீ சொன்னா நான் ஏன்டா விடனும். உன் பையன பொட்டலமா வருவான் எடுத்து வச்சுக்கோ."


" ப்ளீஸ்பா. அவன் அம்மாவுக்கு அவனைப் பத்தி எதுவும் தெரியாது. அவ தெரிஞ்சா தாங்கமாட்டப்பா. எங்களுக்கு கொல்லி வைக்கக் கூட அவனை தவிர வேற யாரும் இல்லப்பா... அதான் கொஞ்சம் செல்லமா வளர்த்துட்டேன்.இனிமே இந்த மாதிரி பண்ணாம பாத்துக்குறேன் பா." என கெஞ்ச... அவன் கொல்லிவைக்க என்றதும் கண்கள் கலங்க அதன் வலியை உணர்ந்தவன்,


" சரி உனக்காக இல்ல. அவன் அம்மாக்காக விடறேன்."


"நன்றிப்பா... நான் இதை மறக்க மாட்டேன் பா... எங்க எனக்கு கொள்ளி வைக்கக்கூட யாரும் இல்லாம போய்டு வாங்கலாம்னு பயந்துட்டேன்."


" உனக்கு கொல்லி வைக்க ஆள் இருக்கு. ஆனா உன் பையனுக்கு தான் யாரும் வரப் போவதில்லை." என அவன் பதிலை எதிர்பார்க்காத அரவிந்த் அழைப்பை துண்டித்து விட்டு,


அவன் மார் தட்டும் ஆண்மையை நீக்கிவிட ஆணையிட்டு ஆனந்தியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.


சோபாவில் அரவிந்தும் ஆனந்தியும் அமர்ந்திருக்க மணி அங்கு வந்தான்.


" ஆனந்தி என்ன ஆச்சு உனக்கு... ஏன் என்னை வேற்று கிரக வாசிய பார்க்குற மாதிரியே பாக்குற..."


" அது ஒன்னும் இல்லை அண்ணா... உங்களுக்கு எப்படி அவன பத்தி தெரிஞ்சுக்கும்னு யோசிப்பாங்களா இருக்கும்."


' அப்படியா' என அரவிந்த் ஆனந்திடம் தலையசைப்பில் கேட்க,


" எனக்கு தெரியும். நீ எப்படியும் அவனை கண்டுபிடித்து விடுவேன்னு. ஆனால் இந்த விஷயம் தான் இடிக்குது."


" எந்த விஷயம்.."


" உனக்கு இங்கிலீஷ் பேச தெரியுமா ஆரு."


அவளை புரியாமல் பார்த்தவன்... 'தெரியும்' என்றான்.


" எப்படி..."


" எப்படி நா என்ன அர்த்தம். இங்கிலீஷ் லாங்குவேஜ் தான். நாலேஜ் இல்ல. எல்கேஜி பிள்ளைங்க பேசும்போது, நான் பேச என்ன...."


" சரி நீ எத்தனாவது வரை படிச்சிருக்க", அவளை கூர்ந்து பார்த்தவன்,


" எம்பிஏ... கோல்டு மேடலிஸ்ட்.." என்றான்.


" என்ன..." என அதிர்ந்தவள் எச்சிலை விழுங்கினாள். அவளின் அதிர்ச்சியை கண்டு "ஏன் இவ்வளவு ஷாக்."


" இல்ல. நீ பதினாலு வயசுல கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போனன்னு என்று கேள்விப்பட்டேன். அப்புறம் எப்படி எம்பிஏ..." கேள்வியுடன் பார்த்தாள்.


அதற்கு சிரித்தவன் "நான் என்ன படிச்சிருப்பேன்னு நெனச்ச"


"8 இல்ல 10th.... அப்புறம் ஜெயிலுக்கு போய் இருப்பேன்னு நினைச்சேன்."


" அதை ஜெயில்ன்னு சொல்ல மாட்டாங்க. அப்போ நான் மைனர். சிறுவர் சீர்திருத்த பள்ளி னு சொல்லுவாங்க.


சின்ன வயசுல அறியாமல் செய்த தவறுகளை திருத்த வாய்ப்பு கொடுக்கிற இடம். அங்க இருந்த ஜெயில் என்னோட படிப்பறிவு பார்த்து அங்க இருந்தே படிக்க ஏற்பாடு பண்ணி தந்தாங்க.


என்னோட 10, 12 பப்ளிக் எக்ஸாம் ஐயும் அங்கு இருந்து தான் எழுதினேன். அதுக்கப்புறம் காலேஜ் முதல் வருசமும் படிச்சேன்.


அப்பதான் எனக்கு பதினெட்டு வயசு முடிந்தது. என்னை அனுப்பிட்டாங்க. அப்புறம் யூஜி முடிச்சுட்டு எம்பிஏ பண்ணினேன்."


" இவ்வளவு படிச்சுட்டு ஏன் ஆரு ரவுடி ஆயிட்ட... ஏதாவது ஒரு நல்ல கம்பெனில ஒர்க் பண்ணலாமே..."


" அண்ணன் ஏன் அண்ணி வொர்க் பண்ணனும்." என மணி குறுக்கிட்டான்.


' இந்த கரடியை ஒருநாள் போட்டுத் தள்ளாமல் விடமாட்டேன். புருஷன் பொண்டாட்டி பேசும்போது குறுக்க குறுக்க வந்துட்டு. இருடி உனக்கு ஆப்பு ஆண்தி வேல இருக்கு.' என மனதில் நினைத்தவள் வெளியே இளித்தாள்.


அதை புரிந்து கொண்ட ரவி அவளை திசை திருப்பினான்.


" நான் பிசினஸ் பண்றேன். அதுபோக பெண்களோட மானத்துக்கு ஆபத்து வராமல் பாத்துக்குறேன்.


தப்பு பண்ணணுணா தட்டி கேட்பேன். கேட்கலேனா உயிரையும் எடுப்பேன். ஆனாஅது என்னோட தொழில் இல்லை.


நம்ம வீட்டு பொண்ண யாரும் தவறான கண்ணோட்டத்தில் பாக்கக் கூடாதுன்னு ஒரு அண்ணன் எப்படி தங்கச்சிய பாதுகாப்பானோ அவளுக்காக உயிரையும் கொடுக்கிறானோ அதே மாதிரி தான்.


இந்த தமிழ்நாடு என் வீடு. அந்தப் பொண்ணுங்கள பாதுகாக்கிற பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டேன். அவ்வளவுதான். இது என் தொழில் இல்லை.என் கடமை. அவ்வளவுதான்."


" உன்ன நெனச்சா எனக்கு பெருமையா இருக்கு. யாரும் உன்ன மாதிரி யோசிக்க மாட்டாங்க . உன்ன மாதிரியே எல்லாரும் யோசிச்சா இங்க பெண்களுக்கு எந்தவித ஆபத்தும் இருக்காது. சரி நீ என்ன பிசினஸ் பண்ற..."


"'ஹோட்டல் மெரினா' தமிழ்நாட்டில் மட்டும் 52 பிரான்ஜ் இருக்கு."


"நிஜமாவா... அப்போ என் காலேஜ் பக்கத்தில் இருக்கிற ஹோட்டல் மெரினா கூட ஒன்னோடது தானா... "


"அது மட்டும் இல்ல அண்ணி அந்த ஹோட்டல் வாசல்ல இருக்குற பானிபூரி கடை கூட அண்ணனோடது தான்."


" அந்த குட்டி பானிபூரி கடை கூடவா"


" என்ன நீ அண்ணி குட்டின்னு சொல்லிட்டீங்க. நீங்க ஒரு நாள் ஹோட்டல் வந்தபோது உங்க பிரெண்ட்ஸ் சேட் ஐட்டம் இதுக்கு பானி பூரி சாப்பிடலாமா ன்னு கேட்டதுக்கு, நீங்க தானே இங்கல்லாம் நல்லா இருக்காது. பிளாட்பார்மில் போடுற குட்டி கடையில அதுவும் வட நாட்டுக்காரன் கிட்ட வாங்கி சாப்பிட்டால் தான் நல்லா இருக்குமுன்னு சொன்னீங்க.


உங்களுக்காகவே வட நாட்டுக்காரன வச்சு அண்ணன் தான் அங்க அந்த கடைய வச்சாரு."


" இரு... நிஜமா வா...." கண்களில் வியப்பை காட்டி கேட்டவள்...


" ஒரு நிமிஷம் நான் அங்க 1 வருஷமா பானிபூரி சாப்பிடறேன். அப்போ உங்களுக்கு என்னை ஒன்றரை வருஷமா தெரியுமா..." எனக் கேட்க, மணி திருதிருவென முழித்தான்.


" ஐயோ உளறிடேனே... அண்ணன் வேற முறைக்கிறாரே. என்னை காப்பாற்ற யாரும் இல்லையா."


" உனக்கு என்னை எப்போ இருந்து தெரியும்..."


" அது ... அது... "


"அரவிந்த் என் மேல உனக்கு இன்னும் நம்பிக்கை வரலையா. என்கிட்ட சொல்லவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா."


" அப்படி இல்லை ஆனந்தி..."


"அப்போ ஏன் சொல்ல மாட்டேங்கறீங்க..."


" ஆனந்தி சொல்லுறேன்."


"எப்போ.."


" ஒரு சின்ன வேலை முடிக்க வேண்டியது இருக்கு. அது முடிஞ்சதும் சீக்கிரம் உன் கிட்ட சொல்றேன்."


" நிஜமா..."


" நிஜமா சொல்வேன்..."


சரி என தலையை ஆட்டியவள் அதற்கு மேல் பேசவில்லை.


மூவரும் அமைதியாக இருக்க அவர்களை களைத்தது சாதனாவின் குரல்.


" உள்ள வரலாமா" என அழைக்க,


ஆனந்தி மணியை பார்க்க, அவன் சாதனையே பார்த்துக் கொண்டிருந்தான்.


யார் என புரியாமல் அரவிந்த் பார்க்க,


ஆனந்தி அவளை அறிமுகப்படுத்தினாள்.


" இது சாதனா. என்னோட காலேஜ்ல தான் படிக்கிறா." என அறிமுகப்படுத்த அவனின் பார்வையும் மணியை நாடிச்செல்ல அவனோ கண்கொட்டாமல் சாதனாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.


ஆனால் சாதனா வந்ததிலிருந்து மணியை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.


இதையும் அரவிந்த் கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.


ஆனந்தியும் சாதனாவும் ஆனந்தியின் அறையில் தஞ்சம் புகுந்தனர்.


சாதனா முதலில் தயக்கம் காட்டினாலும் ஆனந்தியின் பேச்சில் அவளது தயக்கம் தளர்ந்து சகஜமாக பேச ஆரம்பித்திருந்தாள்.


இரண்டு மணி நேரமாக நீடித்த அரட்டை இன்னும் முடியாமல் இருக்க, மணியின் கண்கள் ஆனந்தியின் வாயிலிலே நிலைத்திருந்தது.


" போதும்டா. அதான் அவங்க மாட்டாங்கன்னு தெரியுதுல. அப்புறம் ஏன் வாசலையே வெறிக்கிற. போ போய் நான் கொடுத்த வேலையை பாரு..." என அரவிந்த் அவனை விரட்ட,


" அதெல்லாம் ஒன்னும் இல்லை அண்ணா. நான் சும்மாதான் பார்த்தேன்." மழுப்பி விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.


மேலும் இரண்டரை மணி நேரம் அரட்டை முடிய கிளம்பி சென்ற சாதனாவை தெருவோரத்தில் மடக்கினான்,மணி.


அவன் முகம் சிவந்து இருக்க, அவனுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் முகம் சிவக்க நின்றிருந்தாள், சாதனா.


" எதுக்கு இப்போ வழி ய மறைக்கிறீங்க"


" நீ எதுக்கு இங்க வந்த..."


" அது என் இஷ்டம். உங்ககிட்ட சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை."


" சொல்லித்தான் ஆகணும். நீ என்ன பாக்க தானே வந்த..." அவன் கேட்க ஒரு உஷ்ண பார்வையை அவன் மேல் காட்டியவள்,


" உங்களுக்கு அந்த நினைப்பு வேற இருக்கா. நான் ஏன் கண்டவங்களை பாக்க வரணும்... அண்ணி கூப்பிட்டதால் தான் வந்தேன்."


கண்டவங்க என்பதில் கோபம் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு,


" யாரு யாருக்குடி அண்ணி. அவங்க என்னோட அண்ணி. அவங்கள அப்படி கூப்பிடுற உரிமை எங்களுக்கு மட்டும்தான் இருக்கு." என சீறிப்பாய,


"அத ஆனந்தி அண்ணி சொல்லட்டும்." என அங்கிருந்து நகர, அவள் கையைப் பிடித்து நிறுத்தினான்.


அவளை நெருங்கியவன்,

" இன்னொரு முறை ஆனந்தி அண்ணிய அண்ணின்னு கூப்பிட்டா உன் பல்ல கழட்டி கைல கொடுத்திடுவேன். ஞாபகம் வச்சுக்கோ." என்றவன் அங்கிருந்து நகர, அவன் மேல் இருந்த கோபத்தில் தரையை ஓங்கி மிதித்தவள் அங்கிருந்து நகர்ந்தாள்.


டைனிங் டேபிளில் ஆனந்தியும் மணியும் அமர்ந்திருக்க.


" உண்மைய சொல்லு அன்னைக்கு என்னன்னு அவள திட்டின அவ உன்னை அந்த முறை முறைக்கிறா..." 


" அது வந்து அண்ணி ...அவ நல்லா இருக்கணும்னு தான் திட்டினேன்."


"அவ நல்லதுக்குதான் திட்டுன. ஒத்துக்குறேன். ஆனா என்னனு திட்டுன."


" அது வந்து அண்ணி.... 'ஏண்டி இப்படி ஆம்பளைங்க தோலுக்கு அலையறீங்க. இதுக்குதான் நீ அலையுறன்னு தெரிஞ்சிருந்தா அன்னைக்கு உன்ன காப்பாத்தி இருக்கவே மாட்டேன்.


நான்தான் நீ நல்ல பொண்ணுன்னு ஏமாந்து அவங்ககிட்ட இருந்து காப்பாத்திட்டேன். எல்லாம் என் நேரம்...' அப்படி நான் சொன்னதும் அவள் கண்ணில் இருந்த வலிய என்னால இப்ப கூட மறக்க முடியல அண்ணி. 


என் அம்மா சாகுறதுக்கு முன்னாடி என்ன பார்த்த அதே பார்வை." என் அனுபவிச்ச அதே வலியை அவளுக்கு கொடுத்து விட்டேன் அண்ணி..‌‌ எனக்கும் கஷ்டமா தான் இருந்தது. கொஞ்சம் பீல் பண்ணினேன்.


ஆனா அதுவும் அவ நல்லதுக்கு தானேன்னு விட்டுட்டேன், அண்ணி. இத மட்டும் அண்ணன் கிட்ட சொல்லிடாதீங்க. இல்லாட்டி அவ்வளவுதான்."


" சாரிடா மணி...." என அவள் பின்னால் பார்க்க, மணியின் பின்னால் அரவிந்த் கொலைவெறியில் நின்றிருந்தான்.


" அண்ணா என்னை மன்னி...." என கூறிக் கொண்டிருக்கும் போதே அரவிந்தன் கரம் மணியின் கண்ணங்களில் பதிந்திருந்தது.


தன் தான் தம்பியாக நினைக்கும் ஒருவன் இவ்வளவு கீழ்த்தரமாக ஒரு பெண்ணை பேசி இருப்பான் என நம்ப முடியாதவன்,


" இனிமே நீ என் மூஞ்சில கூட முழிக்க கூடாது. பொண்ணுங்களோட மனசு புரிஞ்சுக்க தெரியலனாலும், அவங்கள கஷ்டப்படுத்தாமல் இருக்கணும் அவன்தான் ஆம்பள." என்றவன் என அங்கிருந்து நகர, ஆனந்தி அரண்டு நின்றாள்.


இவ்வளவு கோபத்துடன் அவனை எப்பொழுதும் பார்த்து இல்லை.


'ஹப்பா... என்னா அடி... பார்த்த எனக்கே பொறி கலங்கிருச்சே... ஆனந்தி ஆருகிட்ட அடி வாங்குனா கூட நீ மர்கயாதான்....





Rate this content
Log in