Salma Amjath Khan

Romance

4.5  

Salma Amjath Khan

Romance

நீயே என் ஜீவனடி 24

நீயே என் ஜீவனடி 24

6 mins
772


அந்த நள்ளிரவு 5 மணி அலாரம் அடிக்க கண்களை தேய்தவாறே புன்னகையுடன் அலாரத்தை அணைத்துவிட்டு உடலை முறுக்கினாள், ஆனந்தி.


அவள் வாழ்வை வண்ணமயமாக்க, அவள் வாழ்வை அரவிந்த் உடன் சேர்த்து மேலும் ஒளிபெறச் செய்யும் தீப ஒளி திருநாளை இனிமையாக வரவேற்றாள்.


' ஃபைனலி இன்னைக்கு தீபாவளி அதுவும் என் செல்லகுட்டி ஆருவோட கொண்டாடுற முதல் தீபாவளி.


இன்னைக்கு முழுநேரமும் ஆரு கூட ஸ்பெண்ட் பண்ணி இந்த நாள்ல ரொம்ப மெமரபிளா மாத்த போறேன்.ஆரு எந்திருச்சுட்டான்னு தெரியலையே. அவருக்கு முன்னாடி நாம ரெடி ஆகணும்.' என எண்ணியவள் சமையலறையை எட்டிப் பார்த்தாள்.


அங்கு மயிலம்மா முறுக்கு சுட்டு கொண்டே, அருகில் வடைக்கான கலவையையும் ரெடி செய்து கொண்டிருந்தார்.


சேலை கட்டி விட மயிலம்மா ரெடி என எண்ணியவள் மயிலம்மாவிடம் கூறிவிட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.


அரைமணிநேரத்தில் கண்ணாடியில் தெரிந்த உருவத்தை நம்பமுடியாமல் பார்த்தாள். அழகு ஓவியமாய் தெரிந்தாள். தயாரானதும் நேராக அவள் சென்றது அரவிந்தின் அறைக்குள் தான்.


வாசலில் நின்றவள் தட்டலாமா வேண்டாமா என யோசிக்க, அவன் அன்று கூறியது ஞாபகம் வர, வெட்கத்தில் கன்னங்கள் சிவக்க, எனக்கு ஓகே தான் என கதவை தட்ட, கதவில் கை வைக்க, அது தானாக திறந்து கொண்டது.


அந்த நவீன வீட்டில் அந்த ஒரு அறை மட்டும் வித்தியாசமாக இருந்தது.


இங்கே ஏன் என்னை அரவிந்த் அனுமதிக்கவில்லை என யோசித்தவளை மேலும் யோசிக்க விடாமல் தடுத்தது அமைதியாய் தூங்கிக்கொண்டிருக்கும் அரவிந்த் தான்.


அவன் அருகில் சென்று அவன் தலை கோத அதில் முழித்து கொண்டான், அரவிந்த்.


வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தவன் "ஆனந்தி நீ எங்க இங்க...?"


" ஏன்..?? என் புருஷன் ரூமுக்குள்ள நான் வரக்கூடாதா..?"


" நான் அன்னைக்கு சொன்னது ஞாபகம் இருக்கா இல்லையா....நீ எல்லா உரிமையோடும் வரணும்னு நான் நெனச்சேன்."


" இப்ப மட்டும் என்ன...??? எல்லா உரிமையோடும் தான் வந்து இருக்கேன்." என கூறியவளை அதிர்ந்துப் பார்த்தான்.


" நிஜமாவா...."


" ஆமா ஆரு. இந்த ஒளி மிகுந்த நல்ல நாள்ல நாம நம்ம புது வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்ன்னு நினைச்சேன்."


மகிழ்ச்சியில் திக்குமிக்காடியவன் "அப்போ நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கலாமா" எனஅவள் அருகில் வர அவனை தடுத்தவள் 


"இன்னில இருந்துன்னு தான் சொன்னேன். இப்ப இருந்துன்னு சொல்லல" என பழிப்பு காட்டிவிட்டு நகர… அவளை இழுத்து தன் மேல் போட்டுக்கொண்டான் அரவிந்த்.


" ஆரு என்ன பண்ற...."


" நான் பெருசா என்ன பண்ண போறேன். என்ன ஒரு மாசமா ஏங்க விட்ட பொண்டாட்டிக்கு ஏதாவது பனிஷ்மென்ட் குடுப்பேன்."


" பார்ரா ... இந்த ஆனந்திக்கு பனிஷ்மென்ட் குடுக்க யாரும் இன்னும் பிறக்கல பாஸ்..."என கூறியவளின் கழுத்தோரம் குறுகுறுத்த அவன் மீசையில் நெளிந்தாள்.


"சரி விடு பனிஷ்மென்ட் வேணாம்.அழகு தேவதையா இருக்கிற பொண்டாட்டிய எப்படி வெறும் கையோடு அனுப்புறது" என அவள் கன்னங்களில் இதழ் கோலமிட,


" ஐயோ விடுங்க... எனக்கு எந்த பரிசும் வேணாம்" என சிணுங்க,


" உனக்கு வேணாம்னா... ஓகே..எனக்கு வேணுமே...இந்த புருஷனுக்கு தீபாவளி போனஸ் எதுவும் இல்லையா..." என அவள் இதழ்களை நெருங்கிய போது,


" ஆரு போதும் விடு...."


" நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே...."


" டைமாச்சு நீங்க போய் பிரஸ் பண்ணுங்க. நான் உங்களுக்கு எண்ணெய் எடுத்துட்டு வரேன்.இனனைக்கி எண்ணை தேச்சு குளிக்கனும்."


" எனக்கு எண்ணை தேய்க்க தெரியாது. எப்பவும் அம்மாதான் தேச்சு விடுவாங்க. ஆனா இப்போ அம்மா இல்லேல அதனால...."என அவன் இழுக்க,


" அதனால..." என கேள்வியாக ஆனந்தி பார்க்க,


" நீ தேய்ச்சு விடேன்." என பாவமாக கேட்க… அதற்காக காத்திருந்தவள் போல், 


" சரி நீ போ. நான் எண்ணெய் எடுத்துட்டு வரேன்." என நகர்ந்தவளை பிடித்து இழுத்து கன்னத்தில் இதழ் பதித்து விடுவித்தான்.


அவன் அதிர்ச்சியில் அவனை பார்க்க,அவனோ குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.


அவள் அவன் தலையில் எண்ணெய் விட்டுக் கொண்டிருக்க, அவள் சேலையின் ஊடே தெரியும் அவள் இடையை ரசித்தவன், அதை சீண்டிப்பார்க்க எண்ணி அவன் இடையில் விரல்களை கோர்த்தான்.


"ஆரு என்ன பண்ற...." என அவள் நெளிய,


" நான் ஒண்ணும் பண்ணலையே" என விரல்களால் அவள் இடையில் நாட்டியமாட, "ஆரு கைய வெச்சிகிட்டு சமத்தா இருந்தா தான் எண்ணெய் தேய்ச்சு குளிப்பாட்டி விடுவேன்." என மிரட்டியவள், அவன் கைகளை அவள் இடையில் இருந்து பிரித்து விட்டாள்.


"அப்போ என் போனஸ்..". என பாவமாய் கேட்க, " நீ குளிச்சு முடிஞ்சதும் தாரேன்" என அவள் கன்னங்களை செல்லமாக கிள்ளினாள்.


அதற்கு பிறகு அமைதியாக இருந்தவன் குளித்து முடித்து வெளியே வர அப்போதும் அவள் அவனை கண்டுக்காமல் இருப்பதை கவனித்தவன் அவளை இழுத்து கட்டிலில் சரித்து அவள் மேல் படர்ந்தான்.


" நீ சொன்ன மாதிரி சமத்தா தானே இருந்தேன். அப்போ ஏன் நீ போனஸ கொடுக்க மாட்டேங்குற..." என அவள் இதழ் நோக்கி குனிய,


அவனுடைய ஈர உடலும் சோப்பின் வாசமும் அவளை மதிமயக்க செய்ய,


" ஆரு ப்ளீஸ்.... எனக்கு ஒரு மாதிரி இருக்கு... நகருங்க... டைம் ஆச்சு கிளம்பனும்..." என கண்களை மூடி முகத்தை திருப்ப,


" நானும் அதை தான் சொல்ல வந்தேன்.நீ என்னன்னா என் டயலாக்க சொல்லிட்டு இருக்க.


சீக்கிரம் எழுந்திரி ஆனந்தமா. நேரம் ஆயிடுச்சு."


அவன் பேச்சில் குழம்பிவள், "என்னமோ நான் லேட் பண்ண மாதிரி பேசுறீங்க. எல்லாம் உங்களால தான் லேட் ஆகுது."


" நான் என்ன பண்ணினேன். இப்ப நீ எந்திருப்பியா இல்லையா."


" நீ எழுந்தா தானே நான் எந்திரிக்க முடியும்."


" நான் எந்திரிச்சு ரொம்ப நேரம் ஆகுது. மணி 8 ஆச்சு. இன்னக்கியும் பத்து மணிக்கு எந்திரிக்கணும் நினைக்காத. நிறைய வேலை இருக்கு. கோயிலுக்கு வேற போகணும். ப்ளீஸ், இன்னைக்கு ஒரு நாள் சீக்கிரம் எந்திரியேன்."


" என்னது..." என கண்களை திறக்க,


வெள்ளை வேஷ்டி சட்டை நெற்றியில் திருநீறு என நின்றுகொண்டிருந்த அரவிந்தை பார்த்து,


" எப்படி ஆரு ஒரு செகண்ட்ல..." என்றவள் அப்பொழுதுதான் சுற்றுப்புறத்தை உணர்ந்தாள்‌.


" நாம எப்போ ஆரு இந்த ரூமுக்கு வந்தோம். அந்த ரூம்ல தானே இருந்தோம்."


" என்னாச்சு உனக்கு. உடம்புக்கு ஏதும் பண்ணுதா... கனவு கண்டியா .... "என தலையில் கைவைத்து பார்த்தான்.


அதை தட்டி விட்டவள் ஒரு உச்சு கொண்டவுடன்,


" கனவா.... நான் என்ன என்னமோ நெனச்சு பார்த்தேன். நீ என்னனா கிளம்பி ரெடியா இருக்க...." என சோகமாக கூற…


அவள் கனவை ஓரளவு யூகித்தவன்,குறுஞ்சிரிப்புடன் அவள் கன்னங்களை கைகளில் ஏந்தி,


" ஒன்னும் பிரச்சனை இல்ல. இன்னும் தீபாவளி முடியல. நீ குளிக்க ஹீட்டர் போட்டு இருக்கேன். எண்ணெயும் எடுத்து வச்சிருக்கேன். சீக்கிரம் குளிச்சிட்டு வா." என அவன் அங்கிருந்து நகர்ந்தான்.


அவன் எண்ணெய் எனக் கூறியபோது தான் நினைந்து நினைவு வந்தவளாக,


" எனக்கு எண்ண தேச்சி குளிக்க தெரியாது. எப்பவும் என் அம்மாதான் தீபாவளிக்கு எண்ணெய் தேய்ச்சு குளிப்பாட்டி விடுவாங்க. இப்ப என்ன பண்ணட்டும்..." என அவள் கேள்வியாய் அதே நேரம் காதலாய் அவனைப் பார்க்க…


அவள் கேள்வியில் நின்றவன், அவள் புறம் திரும்பாமலே,


" ஒன்னும் பிரச்சனை இல்ல.மயிலம்மாவ அனுப்பி வைக்கிறேன். அவங்க தேய்ச்சு விடுவாங்க." என்றவன் அதற்கு மேல் அங்கு நிற்காமல் சென்றான்.


'மயில் அம்மாவா?????...சேலை கட்ட மயிலம்மா.... எண்ணெய் தேய்க்க மயிலம்மா... அப்போ நீ ஏன்டா இருக்க... விட்டா மயிலம்மா கூடயே குடும்பம் நடத்தி குழந்தை பெத்துக்க சொல்லுவான் போல.


ஐயோ ஆனந்தி உன் நிலைமை இப்படி ஆயிடுச்சே.


இவனெல்லாம் நம்புறது வேஸ்ட். நாம இனி கனவுல தான் ரொமான்ஸ் பண்ணனும் போல.' என புலம்பியவாறே குளியல் அறைக்குள் நுழைந்தாள்.


இளமஞ்சள் நிற பட்டுச்சேலையில், முன்னிரவு அரவிந்த் கொடுத்த தங்க ஜிமிக்கி செயின் வளையல்களை அணிந்து, தலை நிறைய மல்லிகைப் பூச்சூடி, முகத்தில் லேசான ஒப்பனையுடன் ஓவியமாய் தெரிந்தாலும், ஏதோ ஒன்று குறைவது போன்று தோன்ற, மீண்டும் ஆராய்ந்தாள்.


பின்னர் புன் சிரிப்பை உதிர்த்தபடி நெற்றி வகிட்டிலும் தாலிக்கொடியிலும் குங்குமம் இட்டுக் கொண்டாள்‌.


' கடவுளே நான் எப்போ என்னை வேண்டுனாலும் நீ அதை கேட்காம என்னை டம்மி பன்னிருவ. நானும் எதுவும் சீரியஸா கேட்க மாட்டேன்.


ஆனா இந்த தடவ நான் ரொம்ப சீரியஸா கேக்கறேன். என் வேண்டுதலை நீ கேட்டுத்தான் ஆகணும்.


எனக்கு என் ஆரு வேணும். இந்த ஜென்மம் ஃபுல்லா... அடுத்த ஜென்மம் இருந்தா அப்பவும் எனக்கு ஆருதான் வேணும்.


எனக்கும் ஆருக்கும் நடுல எப்பவும் எந்த பிரச்சனையும் வரக்கூடாது.


ஆரு என்னை நல்லா பாத்துப்பாங்க எனக்கு தெரியும்.


அதே மாதிரி நானும் ஆருவ நல்லா பாத்துக்கணும்னு நினைக்கிறேன். நீ தான் அதுக்கு ஹெல்ப் பண்ணனும். ப்ளீஸ் கடவுளே....'


சிறிது நேரத்தில் அழகு மங்கையாய் படிகளில் இருந்து இறங்கியவளை கண்டவன் இமைக்கவும் மறந்தான்.


கணவனின் பார்வையின் வீச்சை தாங்க முடியாமல் அவள் கண்ணங்கள் சிவப்பேறி தலைகுனிய, அதையும் அவனால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.


அவளை நெருங்கியவன்,


"மயிலம் மா ஆனந்திக்கு சுத்தி போடுங்க." என்றவன் …அவள் கன்னங்களை கைகளில் ஏந்தி…


" ஆனந்தி இன்னிக்கி ரொம்ப அழகா இருக்க மா... இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..." என அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.


அதில் கண்களை மூடி வைத்து லயித்தவளின் இதழ் புன்னகையிலும் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்தது.


" இந்த வெட்கம் இன்னும் அழகா இருக்கு" என அவளை சீண்டி மேலும் சிவக்க வைத்தான்.


அவர்கள் அன்னியோன்யத்தை கலைக்கவே அங்கு வந்த மணி....


"அண்ணா... எங்களுக்கு எல்லாம் தீபாவளி வாழ்த்து இல்லையா..." எனக் கேட்க,


" ஏன் இல்லை." என்றவன் அவளை கட்டியணைத்து,


" இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்" என்றவன் திரும்பி,

" இந்த சல்மாவ நம்பி கதையை படிச்சு எங்க காதலுக்கு ஆதரவு தந்த எல்லா சகோதர சகோதரிகளுக்கும் 'இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்' என கூற, 


"நானும் தான் பா எல்லோருக்கும் ஹாப்பி தீபாவளி" என உள்ளே நுழைந்தாள், ஆனந்தி.


" ஆனந்தி எல்லாருக்கும் வாழ்த்து சொல்லி ஆச்சுன்னா சீக்கிரம் சாப்பிட்டு வா. கோயிலுக்கு போயிட்டு வரலாம்."என கூற சரி என தலை அசைத்து சென்றாள்.


என்றும் இல்லாமல் இன்று சேலை கட்டியதில் இருந்து வரும் வெட்கத்தை வினோதமாக எண்ணினாள், ஆனந்தி. 


அதிலும் அரவிந்த் அவளை ரசனையுடன் பார்ப்பதை உணர்ந்தால் வெட்கம் பிடுங்கித் தின்பதை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.


' நமக்கும் வெட்கம் ன்னு ஒன்னு இருக்குறத நம்ப முடியலயே....சேலை கட்டுனா அது தானா வந்துரும் போல....'


கோயிலுக்கு செல்ல காரில் ஏறியபோது அவளுடைய வெட்கம் மறைந்து ஒருவித இறுக்கமான உணர்வு தோன்ற அமைதியாகவே வந்தாள்.


அவள் அமைதிக்கான காரணம் தெரிந்தவன் அவளுக்கு ஆறுதலாய் அவள் கையை அவன் கைகளுக்குள் பத்திரப்படுத்திக் கொண்டான்.


முதன்முதலாக தன்னவனுடன் கோயிலுக்கு வரும் போது முழு மனதுடன் உள்ளே செல்ல முடியாமல் போக கண்களை இறுக மூடி திறந்தாள்.


கண்ணை திறந்து பார்த்த காட்சியை நம்ப முடியாமல் அரவிந்தை பார்க்க அவள் முகத்தின் புன்னகையை எண்ணி மகிழ்ந்து, அவள் கண்களிலிருந்து வெளிவந்த கண்ணீரை துடைத்து விட்டு செல்லுமாறு கண் ஜாடை காட்ட ஓடிச் சென்று அவள் தந்தையை கட்டிக் கொண்டாள்.


மருதமுத்து கஷ்டப்பட்டு ஆனந்தியை சமாதானம் செய்ய, அவள் தாயைக் கட்டிக் கொண்டு அவர்களின் பிரிவின் வலியை கூறிக்கொண்டிருந்தாள்.


ஆனந்தி பேசும் அழகை ரசித்துக் கொண்டிருக்க , அரவிந்தின் அருகில் சென்ற மருதமுத்து, "தம்பி" என அழைக்க, அப்பொழுதுதான் நிகழ்விற்கு வந்தவன்,


" சொல்லுங்க சார்."


" என் மேல கோபமா இருக்கீங்களா தம்பி. என்ன உங்களால மாமாவா ஏத்துக்க முடியலையா...."


" அப்படி எல்லாம் இல்ல மாமா. உங்களால தான் என் ஆனந்தி எனக்கு திரும்ப கிடைச்சா... உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல மாமா. என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க." என காலில் விழப் போக,


"ஒரு நிமிசம் நீங்க எப்படி என் அப்பா கால்ல விழலாம்...." என கூறி மருதமுத்து வை பார்க்க, அவர் இன்னும் ஆனந்தி அரவிந்தை ஏற்று கொள்ள வில்லை என வருந்த, அவள் மேலும் தொடர்ந்தாள்.


"அதுவும் நான் இல்லாம..."


என அவர் அருகில் சென்று "எங்க ரெண்டு பேரையும் சேர்த்து ஆசீர்வாதம் பண்ணுங்க பா" எனக்கூறி இருவருமே அவரிடம் ஆசிர்வாதம் வாங்க, அவர் மனபாரம் எல்லாம் இறங்க, அவர்களை ஆசிர்வதித்தார்.


"பரவாயில்லை.... ஆனந்தியை ஒரு அக்மார்க் மனைவியா மாத்திட்டீங்களே...இனி உங்க மனைவியை பார்க்க பெர்மிஷன் வாங்கணும் போல...."


" ஏன் மாமா இப்படி எல்லாம் சொல்றீங்க. அவ உங்க பொண்ணு. அதுக்கப்புறம் தான் என் மனைவி.உங்க பொண்ணு மேல உங்களுக்கு தான் எப்பவுமே உரிமை இருக்கு" என கூற அகமகிழ்ந்த அவர் அவனை அணைத்துக் கொண்டார்.


தன் பெற்றோரிடம் சில பல கதைகளை அளந்துவிட்டு கிளம்பினாள்.


கூடத்தில் சோபாவில் அரவிந்த் அமர்ந்திருக்க அவன் அருகில் அமர்ந்தவள் "தேங்க்ஸ் ஆரு"என கண்கள் கலங்க,


" இப்போ எதுக்கு இந்த கண்ணீர்... " என தன் கைகளால் அதை அப்புறப்படுத்தி,


" அது என்னோட அத்தை, என்னோட மாமா. இது நாம்ம தம்பதியா சேர்ந்து கொண்டாட முதல் தீபாவளி. அவங்க ஆசிர்வாதம் இல்லைன்னா எப்படி." 


"இருந்தாலும் இதெல்லாம் நீ எனக்காக தான பன்னுன. நான் ரொம்ப லக்கி இரு." என்றவள் அவன் கை கோர்த்து அவன் தோளில் சாய்ந்து கண் மூடினாள்.


💖💖💖💖💖



Rate this content
Log in

Similar tamil story from Romance