Salma Amjath Khan

Romance

4.5  

Salma Amjath Khan

Romance

நீயே என் ஜீவனடி 23

நீயே என் ஜீவனடி 23

8 mins
455


காதலை அரவிந்திடம் கூறினால் தான் நிம்மதியாக தூங்க முடியும் என எண்ணியவள் அரவிந்தை சந்திக்க கிளம்பும் நேரம் அறை கதவு தட்டும் சத்தம் கேட்டு நின்றாள்.

" யாரு..??"

" நான்தான் தாயி."

அரவிந்த் ஆக இருக்குமோ என்று எண்ணியவளின் மனமோ ஏமாற்றம் அடைந்தது.

" தாயி, நீ சரியா சாப்பிடக் கூட இல்லை. பாலும் குடிக்காம வந்துட்டியேமா...."

" இல்ல மயிலம்மா எனக்கு பால் வேணாம். எனக்குள்ள ஏகப்பட்ட மாற்றம் சொன்னா யாரும் நம்ப மாட்டேங்கிறாங்க. நீங்களாவது நம்புங்க, மயிலம்மா."

" எந்த மாற்றம் இருந்தாலும் பாலை குடிச்சிடு தாயி. இல்லாட்டி அரவிந்த் தம்பி கவலைப்படும்.

அதுதான் நீ சரியா சாப்பிடலை ன்னு சொல்லி நீ பால் குடிச்சி‌ முடிச்சதும் தான் என்னை வெளிய போக சொல்லுச்சு."

" ஆருவா....... ஆரு இன்னும் தூங்கலையா."

" இல்லை கண்ணு. தம்பி ஹால்ல உட்கார்ந்து இருக்கு. இப்பதான் பால் கொடுத்துட்டு வர்றேன்."

" அப்போ நான் போய் பாத்துட்டு வரேன் மயிலம்மா."

" பால் குடிச்சிட்டு......."

" ஐயோ அம்மா ஏன் இப்படி தடுக்கறீங்க. நான் எதுக்கு போறேன்னு தெரியுமா....."

" எதுக்கு தாயி......"

" அது.... அது..... உங்களுக்கு இப்ப என்ன பிரச்சனை. நான் இந்தப் பாலை குடிக்கணும் அவ்வளவுதானே. கொடுங்க." என்றவள் ஒரே கல்பில் பாலை குடித்தாள்.

" சூடா இருக்கும் தாயி பால்......."

அதைக் கேட்கும் மனநிலையிலோ உணரும் மனநிலையிலோ ஆனந்தி இருந்தால்தானே.

மூச்சு விடாது குடித்து முடித்தவள். "சூடாவா இருந்தது......." என கேட்டுக்கொண்டே 'நாம இப்ப இருக்கிற காதல்ல கல்லயே கடிச்சு திங்கலாம் போல' என நினைத்தவள் அங்கே நிற்காமல் அரவிந்தை தேடிப் புறப்பட்டாள்.

மேலிருந்து பார்க்க அவன் சோபாவில் அமர்ந்து பால் குடித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

ஹாலில் வேறு யாரும் இருப்பது போல் தெரியவில்லை.

' கடவுளே ஆரு மட்டும் என் லவ்வ ஒத்துகிட்டா உன் பேர சொல்லி ஆருக்கு மொட்டை போடறேம்பா....

ஐயோ இல்லை இல்லை நான் சொன்னதை மறந்துரு கடவுளே.

பாவம் ஆரு அவனுக்கு மொட்டை போட்டா நல்லா இருக்காது. இந்த மணி தான் என் லைன்ல அடிக்கடி அடிக்கடி கிராஸ் ஆகுறான். அதனால அவனுக்கு மொட்டை போட்டு விடுறேன். ஆருவ எப்படியாவது ஓகே சொல்ல வைச்சுரு... ப்ளீஸ் ஹெல்ப் மீ......' என கண்ணை மூடி வேண்டியவள், கண்ணில் காதலுடனும் அந்த காதல் தந்த போதையில் ஆரு வின் பெயரை ஏலம் விட்ட வாரே வேகவேகமாக படிகளில் இருந்து இறங்கினாள்.

"ஆரு.... ஆரு......." நட்ட நடு நிசியில் தன்னவளின் அழைப்பு செவியில் வந்து பாய திரும்பிப்பார்த்தான், அரவிந்த்.

முகத்தில் புன்னகையுடன் காதல் மின்னும் கண்களுடன் புள்ளி மான் போல் துள்ளி வரும் அவளின் உற்சாகம் அவனையும் தொற்றி விட மனம் நிறைந்த புன்னகையுடன் எழுந்து அவளை நோக்கி நடந்து வர, தன்னைக் காண ஓடி வந்தவளின் வேகம் மட்டுப் படாமல் அரவிந்தை இடித்து விழப் போக தன்மேல் கொட்டிய பாலையும் அலட்சியம் செய்தவன் தன் அவளின் இடையில் அவன் விரல்களால் வேர் ஊன்றி தாங்கிப் பிடித்துக் கொண்டான்.

புதிதாக காதல்கொண்ட மனமோ கணவனின் பிடியில் உலகம் மறந்து நிற்க அவள் கண்கள் சொல்லும் காதலை ரசித்தவன், குறும்பு சிரிப்புடன், "ஆனந்தி, தள்ளிவிட்ட சூடான பால் என் நெஞ்சு முடில பட்டு பொசுங்கிட்டு இருக்கு. நீ சீக்கிரம் நேரா நின்னா முடி எல்லாம் கருகுறதுக்குள்ள நான் போய் சுத்தம் பண்ணிருவேன்."

அப்பொழுதுதான் அவன் மேல் சூடான பாலை கொட்டியதை உணர்ந்தாள்.

" சாரி... சாரி... நான் நிஜமா கவனிக்கல.... நான் ஏதோ சொல்ல‌ வந்த அவசரத்துல...." என பால் கொட்டிய அவன் சட்டையின் பட்டன்களை கழட்ட முயன்றாள்.

" என்ன பன்ற ஆனந்தி. நட்ட நடு ராத்திரியில அதுவும் ஹால்ல வச்சு என் சட்டையை கழற்ற.... யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க. என் மானமே போயிரும்."

" ஐயோ யார் பார்த்தா நமக்கு என்ன.... நான் உன் பொண்டாட்டி தானே. நான் க்ளீன் பண்றேன். கொஞ்சம் வெயிட் பண்ணு." என தடுக்க வந்த அவன் கைகளை தட்டி விட்டு அவள் வேலைகளை தொடர்ந்தாள்.

அந்நேரம் பார்த்து ஆனந்தியின் அறையிலிருந்து மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்த மயிலம்மா அவர்கள் இருக்கும் கோலத்தை பார்த்து , ' இதுக்கு தான் ஆனந்தி யம்மா இப்படி அடுச்சுபிடுச்சு வந்துச்சா...நான் ஒரு கிறுக்கி சின்ன சிருசுங்க இப்படி இருக்குன்னு தெரியாம இந்த ராவுல அதுங்களுக்கு இடஞ்சலா இருக்கேன். யாரும் பாக்குறதுக்குள்ள நாம போய்டுவோம்.' என வெட்கப்பட்டு அவர்களை கண்டும் காணாமல் வேகமாக படிகளில் இறங்க, அவரை பார்த்து விட்ட அரவிந்தோ சங்கடத்தில் நெளிந்து கொண்டிருந்தான்.

ஆனந்தியோ யாரையும் கண்டு கொள்ளும் எண்ணத்தில் இல்லை. மயிலம்மா நேராக சமையல் அறையில் நுழைந்த போது தான் தன் நெஞ்சின் மஞ்சத்தில் தன் அவளின் விரல்களின் ஸ்பரிசத்தை உணர்ந்தான்.

அவளின் கண்களைப் பார்க்க அந்த கண்களில் நீர் திரையிட பட்டிருந்தது. குனிந்து பார்த்தவன், தன்னவளுடைய பெயரை தாங்கி இருந்த நெஞ்சில் அவளுடைய பெயரை வருடியவாறு இருந்தாள்.

ஆனந்தியை எப்படி சமாளிப்பது என தெரியாமல் அவளிடமிருந்து அவசரமாக விளங்கியவன், வேகவேகமாக சட்டையை பூட்டிக் கொண்டே, " அது ... அது.... வக்கீல் போன் பண்றேன்னு சொல்லி இருந்தார். நான் போறேன்." என தடுமாறி சொல்லிச் சென்ற அரவிந்தை ஆனந்தக் கண்ணீரோடு பார்த்துக்கொண்டிருந்தாள், ஆனந்தி.

' அட என் திருட்டு பூனையே.... நீ பெரிய ரவுடி னு நினைச்சா நீ இவ்வளவு பெரிய திருடனா இருக்கியே.

அட என் செல்ல குட்டி நீயும் என்ன லவ் பண்றியா. இது எனக்கு தெரியாம போச்சே. எப்ப இருந்து லவ் பண்ணி இருப்பான்....' என எண்ணியவாறே ஹாலின் சோபாவில் அமர்ந்தாள்.

' பார்த்தா இப்ப குத்துன மாதிரி இல்லையே. பயபுள்ள எப்போ இருந்து குத்தி இருக்கும்.

சிதம்பரத்துட்ட இருந்து காப்பாத்தவும் அப்பா சொன்னதால யும் என்ன கல்யாணம் பண்ணிக்கிட்ட வல்லவன்னுல தப்பா நெனச்சிட்டேன்.

இந்த வல்லவன் என்னன்னா பெரிய திருட்டு பூனை யால இருக்கு.

எது எப்படியோ ஆரு மனசுல நான் தான் இருக்கேன்னு தெரிஞ்சு போச்சு. இவ்வளவு நாளா காதலிச்ச ஆருவே இன்னும் லவ்வ சொல்லல...

பத்து நிமிஷத்துக்கு முன்னாடி லவ் பண்ண ஆரம்பிச்ச நாம ஏன் சொல்லணும்.

நெவர்......

இனி உன்னை எப்படி சுத்தல்ல விடுவேன்னு மட்டும் பாரு ஆரு.....'

((யாரு நீ ....... காட்டாறு வெள்ளம் மாதிரி உணர்ச்சிகள் பொங்குனாலே அசால்டா அடக்குவான் என்னோட ஆரு.... ஐயையோ மன்னிச்சிடு மா..... உன்னோட ஆரு..... யாரு யார சுத்தல்ல விடுறான்னு பார்ப்போம்))

' சீக்கிரம் என்கிட்ட உன் லவ்வ சொல்ல வக்கிறேன் பாரு.' என்றவள் அரவிந்துக்கு எப்படி எல்லாம் லவ் டார்ச்சர் கொடுக்கலாம் என யோசித்துக்கொண்டே கண் அயர்ந்தாள்.

தன் அவளின் கண்கள் கூறிய காதலில் தூக்கத்தை தொலைத்தவன் அவள் முகம் காண ஏங்கி வெளியே வர, அவளோ ஹாலிலேயே தரிசித்து விட்டாள்.

ஹாலில் சோபாவில் எந்தவித கவலையுமின்றி தூக்கத்தில் புன்னகையுடன் இருப்பவளை கண் இமையாமல் ரசித்தவன், அவளை கைகளில் ஏந்தி அவள் அறையை நோக்கி படிகளில் ஏறினான்.

தூக்கத்திலும் தன்னவனின் வெப்பம் உணர்ந்து "ஆரு செல்லம்...." என அவன் சட்டையை கொத்தாக பிடித்து அவன் நெஞ்சில் புதைந்து கொண்டாள்.

மனதில் நிறைந்த திருப்தியுடன் தன் அவளை கட்டிலில் கிடத்தி அவள் தன் சட்டையை கொத்தாக பிடித்த தன் அவளின் கைகளை பார்த்ததும், அன்று கல்லூரியில் அழகு பதுமையாய் தன்னை கோபத்தில் முறைத்த ஆனந்தி நினைவு வர, அவளின் கோபம் காதலாய் கசிந்துருகி விட்டதை எண்ணி மென்மையுடன் அவள் விரல்களை தன் சட்டையில் இருந்து பிரித்தெடுத்தான்.

அவள் தன்னவள் ஆகிவிட்டாள் என்ற நம்பிக்கையில் குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட, இதற்கு முன் அவள் நெற்றியில் முத்தமிட தருணங்கள் எல்லாம் அலை மோதிக்கொண்டன.

அவன் உணர்வுகள் பெருகி கண்ணீர் வெளியே வந்து விடவா என அனுமதி கேட்க தன் உணர்ச்சிகளை அடக்கி கண்ணீரை கட்டுக்குள் கொண்டுவந்து நகர நினைக்க,

அவன் கைகளை பிடித்துக் கொண்டாள், ஆனந்தி.

" நீ இல்லாம என்னால இருக்க முடியாது. என் கூடவே இரு ஆரு."என தூக்கத்திலும் அவள் காதல் வெளியே வர, அவளை தள்ளி படுக்க வைத்து விட்டு அவள் அருகே அமர்ந்து அவள் தூங்கும் அழகை ரசித்துக் கொண்டிருந்தான்.

தூக்கத்தில் புரண்டவள் தன்னவன் மடியை தாய் மடியாக்கி அதில் தஞ்சம் அடைந்து அவன் வயிற்றில் முகம் புதைத்து, அவன் இடுப்பை சுற்றி அணைத்து கொள்ள, அவன் மெதுவாக அவள் கேசத்தை கோதிவிட்டான்.

முன்பும் இதேபோல் அவனை கட்டியணைத்த ஆனந்தி கண்முன் வர மென் நகை அரும்பியது. அடுத்த நிமிடமே அவன் வாழ்க்கை ஒரு நிழற்படமாக ஓட தன்னையும் ஆனந்தியையும் பிரிக்க காரணமாயிருந்த சிதம்பரத்தின் மேல் கோபம் வர, அதையும் மீறி அவன் இழந்த அத்தனையும் அவன் கண்ணீராய் வெளிவந்தது.

இம்முறை எவ்வளவு முயன்றும் அந்தக் கண்ணீரை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை.

ஆனந்தியின் காதல் மீண்டும் கிடைத்ததில் தன்னை தேற்றியவன் விடிய போவதை உணர்ந்து, ஆனந்தி எழுவதற்கு முன் செல்ல நினைத்து, மெதுவாக அவள் தலையை தலையணைக்கு இடப்பெயர்த்தி அவள் நெற்றியில் இதழ் பதித்து விட்டு நகர்ந்தான்.

பல நாள் கழித்து நிம்மதியாக உறங்கிய ஆனந்தி கண் விழித்ததும் தன்னவனைக் காண வேண்டுமென்ற ஆர்வத்தில் வேகமாக எழுந்து தயாராகி கீழே வந்தாள்.

டைனிங் டேபிளில் மணி மட்டும் அமர்ந்திருக்க அரவிந்தை கண்களால் வீடு முழுவதும் ஸ்கேன் செய்தாள், ஆனந்தி.

' எங்க போனான் இந்த ஆரு. இன்னைக்கு இந்த பக்கி முஞ்சியில முளிக்க வேண்டியதா போச்சே....' என எண்ணியவாறே மணி அருகில் இருந்த சேரை இழுத்துப் போட்டு சாப்பிட அமர்ந்தாள்.

"குட் மார்னிங். எங்க உன் அண்ணன காணோம்"

" குட் மார்னிங்கா.

மணி பதினொன்னு அண்ணி. இப்ப வந்து அண்ணன தேடுனா எப்படி இருப்பாரு. எங்க அண்ணன என்ன வேலை வெட்டி இல்லாதவன்னு நினைச்சிங்களா."

" ஆமா பெரிய வேலை. நாளை கழிச்சு தீபாவளி.அதுவும் தல தீபாவளி. பொண்டாட்டிய ஷாப்பிங் கூட்டிட்டு போனும்னு தோணுச்சா உன் அண்ணனுக்கு. போன் போடுடா அவருக்கு."

" அண்ணி.... அண்ணனுக்கு இப்பல்லாம் போன் போட முடியாது. இப்ப அவரு மீட்டிங்ல இருப்பாரு."

" ஆமா பெரிய மீட்டிங்கு. எந்த முக்குல வச்சு யார மொத்திக்கிட்டு இருக்காருன்னு யாருக்கு தெரியும்."

" அண்ணி போதும். அண்ணனே ரொம்ப டேமேஜ் பண்ணாதீங்க. இன்னும் ரெண்டு மணி நேரத்துல வேலையெல்லாம் முடிச்சுட்டு வந்து சாப்பிட்டு உங்கள ஷாப்பிங் கூட்டிட்டு போனும்ன்னு சொன்னாங்க. அது தெரியாம நீங்களா எதுவும் சொல்லாதீங்க."

' இன்னும் இரண்டு மணி நேரம் ஆகுமா. நான் உன்ன லவ் டார்ச்சர் பண்ணலாம்னு நினைச்சா‌ என்னை நீ ஏங்க வச்சட்ட..... போடா..... நான் உன் கூட சண்டை..' என மனதில் அவனுடன் சண்டையிட்டு கொண்டிருந்தாள்.

மாலை 6 மணியை தாண்டி கொண்டு இருந்தது. அந்த பிரபல துணிக்கடையில் தன் அவளுக்கான ஆடைகளை தேர்ந்து எடுத்துக் கொண்டிருந்தான், அரவிந்த்.

" போதும் ஆரு. நாம இந்த கடைக்கு வந்து ரெண்டு மணி நேரம் ஆச்சு. இன்னும் எவ்வளவு தான் பார்ப்ப."

" ஆனந்தி வெயிட் பண்ணுமா. நாம சேர்ந்து கொண்டாடுற தீபாவளி.அதுவும் தல தீபாவளி.

என் பொண்டாட்டிக்கு ஏத்த மாதிரி டிரஸ் பார்க்க வேண்டாமா..."

' ஐயோ கடவுளே உனக்கே இது நியாயமா இருக்கா. நான் அவனை டார்ச்சர் பண்ணலாம்னு நெனச்சேன்.ஆனா அவன் என்னை டார்ச்சர் பண்றான்.'

" ஆரு இன்னும் எவ்வளவுதான் போட்டு பார்க்க."

" ப்ளீஸ் ஆனந்திமா இது மட்டும் போட்டு பாருங்களேன்...." என கெஞ்சியவனை முறைத்து கொண்டே அவன் கைகளில் இருந்த துணிகளை பறித்துக் கொண்டு ட்ரெயல் ரூமுக்குள் நுழைந்தாள்.

சிறிது நேரத்தில் வெளியே வந்த ஆனந்தியை பார்த்தவன் அவள் அழகில் லயித்தாலும் திருப்தி படாதவன் போல் முகத்தை சுருக்கினான்.

" ஆரு இதுவும் பிடிக்கலையா...."

" நான் உனக்கு வேற பாக்குறேன்..." அவளுக்கு பதில் கூறாமல் திரும்பி கொண்டான்.

" ஏன் ஆரு என்ன இப்படி டார்ச்சர் பண்ணுற. எனக்கு இந்த ட்ரெஸ் நல்லா தானே இருக்கு."

அவள் புறம் திரும்பி, குனிந்திருந்த தாடையை அவன் ஆட்காட்டி விரல் கொண்டு நிமிர்த்தியவன்,

"நான் என்ன பண்ணட்டும் ஆனந்தி. எல்லா துணியும் தனியா பார்க்கும்போது நல்லாதான் இருக்கு. நீ போட்டா உன் அழகுக்கு முன்னாடி அது டம்மியா தெரியுதே."

" இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல"

"கொஞ்ச நேரம் என்னை தொந்தரவு செய்யாதே. நான் வேற ட்ரெஸ் பாக்குறேன். அதை போட்டு பாரு."

" இன்னுமா என்னால முடியாதுப்பா."

" சேலை எடுத்தா ஈசியா முடிஞ்சிடும். சுடிதார்னா கொஞ்சம் லேட்டாகத்தான் செய்யும். உனக்கு சீக்கிரம் ஷாப்பிங் முடியனும்னா சேலைதான் எடுக்கனும். எடுக்கட்டா...."என ஓரக்கண்ணால் தன் அவளை பார்த்தான்.

அவள் யோசித்துக் கொண்டிருந்தது அவனுக்கு அப்பட்டமாக தெரிந்தது.

' ஆனந்திமா உன்னை தலை தீபாவளிக்கு சேலை கட்ட வைக்கிறதுக்கு ரெண்டு மணி நேரமா கடையையே புரட்டி போட்டு இருக்கேன்.

ஏதோ கடைக்காரர் அவருடைய மகளை காப்பாத்துனதாலயும் என் மேல இருக்குற மரியாதைக்காகவும் தான் என்னை கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளாம பொறுமையாய் இருக்காரு.

அவரு பொறுமைய ரொம்ப சோதிக்காதே.

நான் டைரக்டரா கேட்டா இப்ப இருக்கற வல்ல கண்டிப்பா என்ன சுத்த விடவே நீ சேலை கட்டிக்க மாட்ட.

இப்படி சொன்னா தான் நீ என் வழிக்கு வருவ. சீக்கிரமா யோசி ... 'என அவள் பதிலுக்காக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"சரி விடு ஆனந்தி மா சேலையெல்லாம் உனக்கு செட் ஆகாது."

" ஏன் செட் ஆகாது. அதெல்லாம் செட் ஆகும்."

"அப்போ வாங்கட்டா..."

"சேலை வாங்குறது பிரச்சனை இல்லை இரு. எனக்கு சேலை கட்டத் தெரியாது." என அவனை பாவமாக பார்த்தாள்.

" அதனால என்ன. நான்தான் இருக்கேன்ல." என அவன் கூற பெண் அவள் முதல் முறையாக நாணம் கூடி கன்னங்கள் சிவந்தன.

அதை மறக்காமல் ரசித்தவன் மேலும் தொடர்ந்தான், "இதெல்லாம் ஒரு சாக்குன்னு சொல்லிட்டு. நான் மயில் அம்மாட்ட சொல்லி உனக்கு கட்டிவிட சொல்லுறேன்."

" மயிலம்மா வா..." அதிர்ச்சியில் அவன் முகம் நோக்க தன் சிரிப்பை மறைத்தவன்,

" ஆமா அவங்க நல்லா சேலை கட்டி விடுவாங்க. நான் சொல்றேன் அவங்கள்ட்ட."

கன்னங்களுடன் மூக்கும் சிவக்க அவனை முறைத்தாள்.

"சரி லேட் ஆச்சு.நீ போய் துணிய மாத்திக்கோ.நான் போய் சாரி பார்க்குறேன்." என சேலை செக்சனுக்குள் நுழைந்து கொள்ள,அவனை முறைத்துவிட்டு அவள் நகர்ந்தாள்.

தன்னவளுக்கு எடுக்கும் முதல் சேலை என்பதால் பார்த்து பார்த்து தேர்வு செய்தான்.

பத்து நிமிடங்களில் தேர்வு செய்தவன் அப்பொழுதுதான் ஆனந்தி இன்னும் வராததை உணர்ந்தான்.

மனதிற்கு ஏதோ தவறு என பிடிபட ஆனந்தியை தேடச் சொன்னான்.

சிதம்பரத்தின் ஞாபகம் வர அந்த ஏசியிலும் உடல் வியர்த்து இதயம் தாறுமாறாகத் துடித்தது.

அவன் இருந்த தளத்திற்கு கீழ்தளத்தில் தளத்தில் ஆனந்தி அந்த கடை முதலாளியிடம் ஏதோ பேசிக் கொண்டிருப்பதை பார்த்த பிறகு தான் அவனால் சீராக மூச்சு விடவே முடிந்தது.

அவர்களின் அருகில் சென்று, "என்ன ஆச்சு..." என விசாரித்தான்.

" அது வந்து தம்பி....."

" ஒன்னுமில்லை ஆரு. கடையில எனக்கு ஏத்த மாதிரி சுடிதாரே இல்லன்னு அவரு கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிட்டு இருந்தேன். இல்ல சார்ர்ர்...." என அவனுக்கு அவள் கண் காட்ட அதை அந்த முதலாளி புரிந்து கொண்டாரோ இல்லையோ அரவிந்த் புரிந்துகொண்டான்.

ஏதோ பிரச்சனை என்று புரிந்து கொண்டவன் மேலும் ஏதும் கேள்வி கேட்காமல்,

"சரி கிளம்பலாம்." என்றான்.

" சேரி..."

" எடுத்தாச்சு."

" நான் போட்டே பாக்கலையே...."

" என் ஆனந்தி எந்த சேல கட்டினாலும் அழகா தான் இருக்கும். வா போலாம்." என அதற்கு மேல் அங்கு நிற்காமல் அவள் கையைப் பிடித்து அழைத்துச் சென்றான்.

ஆனந்தி ஒரு மாதிரி இருக்க, அரவிந்த் யோசனையில் ஆழ்ந்து இருக்க, மணி தான் அவர்களை விழித்தான்.

"அண்ணி தீபாவளிக்கு காலையில எத்தனை மணிக்கு எழுந்திருப்பீங்க."

" எப்பவும்போல 11 மணிக்கா...?"

" ஏய் ... என்னடா.... நான் எப்பவும் சீக்கிரம் பத்து மணிக்கெல்லாம் எந்திரிச்சுருவேன். நேத்துதான் ஏதோ நைட் லேட் ஆயிடுச்சு. லேட்டா படுத்ததால காலை எந்திரிக்க லேட் ஆகிடுச்சு. அதுக்காக எப்பவும் லேட்டா எந்திரிக்கிற மாதிரி கிண்டல் பண்ற...." என அவனை விரட்ட,

"சரி மத்த நாள் பத்து மணி நா. தீபாவளிக்கு....?" என கேட்க…

" தீபாவளிக்கு மட்டும் அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்துருவேன், மணி."

" மிட்நைட்டேவா அண்ணி...." என அவன் அவளை கிண்டல் செய்ய, அதை உணராதவள் பாவமாய் மூஞ்சியை வைத்துக்கொண்டு,

"ஆமாம் மணி அம்மா அஞ்சு மணிக்கெல்லாம் எழுப்பி தலைக்கு எண்ணை வச்சு விடுவாங்க. குளிச்சிட்டு புது ட்ரெஸ் போட்டு, அம்மாவுக்கு தெரியாம அம்மா செய்த பலகாரத்தை சாப்டுட்டு, வீட்ல பூஜை பண்ணி அப்புறம் அம்மாவா குடுக்குற பலகாரம் சாப்பிட்டு, எல்லாரும் சேர்ந்து கோயிலுக்குப் போவோம்.

போயிட்டு வந்து பட்டாசு வெடிச்சுட்டு அப்பா கிட்ட போய் தீபாவளி பரிசையும் வாங்கிகிட்டுன்னு ரொம்ப ஜாலியா இருக்கும்...." என அவள் அபிநயங்கள் உடன் உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தாலும் அவள் கண்களின் ஓரம் இருந்த நீர் துளியும் ஏக்கங்களும் அரவிந்துக்கு புரியாமல் இல்லை.

அவளுக்கு ஆதரவாக அவளை தோளோடு அணைத்து கொண்டான்.

ஆனந்திக்கும் அந்த அணைப்பு தேவை பட்டிருந்தது. அவன் தோளில் வாகாக சாய்ந்து கொண்டாள்.

ஒரு தந்தையின் அரவணைப்பு மட்டுமே அதில் இருந்தது.

💖💖💖💖💖


Rate this content
Log in

Similar tamil story from Romance