Salma Amjath Khan

Romance

5.0  

Salma Amjath Khan

Romance

நீயே என் ஜீவனடி 22

நீயே என் ஜீவனடி 22

4 mins
674


அரவிந்தை கேள்வி கேட்கும் உரிமை ஆனந்தியிடம் வந்தது.

தங்களுக்கு இடையே இருந்த உறவை கேட்பாள். அப்படி கேட்டால் எல்லா உண்மையையும் சொல்லி விடலாம் என்ற தீர்மானத்துடன் தான் விளையாட உட்கார்ந்திருந்தான், அரவிந்த்.

அவளின் கேள்விக்காக புன்னகையுடன் காத்திருக்க, தன் குரலை சரி செய்த ஆனந்தி,

" யார் அந்த பொண்ணு..???"

அவளின் கேள்வியில் அனைவரும் அதிர்ச்சியாய் நிற்க, இந்த கேள்வியை கேட்பாள் என எதிர்பாராத அரவிந்த் முதலில் அதிர்ந்து பின் குறுஞ்சிரிப்புடன் கேட்டான்,

" எந்த பொண்ணு" அவன் கண்களில் குறும்பு மின்ன, ஆனந்தி அவனை முறைத்தாள்.

" அதான் இன்னைக்கு பார்லர்ல ஒரு பொண்ணு உங்கள கட்டி பிடிக்க நீங்க முத்தம் கொடுத்தீங்களே அந்த பொண்ணு." என்று சிணுங்க, அவள் குரலில் தெரிந்த பொறாமையில் அகம் மகிழ்ந்தான்.

" அந்த பொண்ணு பேரு தேன்மொழி. என்னோட அக்கா."

அவனுடைய அக்கா என்றதும் மனநிம்மதி அடைந்தாலும் அவள் குழப்பமாகவே இருந்தாள்.

" உங்களுக்கு அக்கா இருக்காங்களா...???" என கேட்க இருக்கையிலிருந்து எழுந்து அவள் அருகில் வந்தவன், அவள் இருக்கையில் கையை ஊன்றி, அவள் முகத்தருகே தன் முகத்தை கொண்டு சென்று "எனக்கும் ஆமாம் இல்லன்னு சொல்லனும்னு தான் செல்லம் ஆசை. ஆனா ஒரு சுத்துக்கு ஒரு கேள்வி தான் கேட்கணும். சரியா..." என்றவாறு அவள் முகம் சுருங்குவதை ரசித்துவிட்டு,

"போதும் ரொம்ப நேரம் ஆச்சு. மீதிய நாளைக்கு விளையாடலாம். போய் பால் குடிச்சிட்டு படுத்துக்கோ..." என்று அவள் கன்னம் தட்டிவிட்டு உள்ளே சென்றான்.

' இந்த நிமிஷம் நான் எவ்வளவு சந்தோசமா இருக்கேன்னு என்னால வார்த்தையால சொல்ல முடியல ஆனந்தி. அவ்வளவு சந்தோசமா இருக்கேன்.

அன்னைக்கு தெரிஞ்ச அதே பொறாமையே இன்னைக்கு உன் கண்ணுல பார்த்தேன்.

என்னோட, எனக்கு மட்டுமே சொந்தமான, என்னோட பொண்டாட்டி நீ.

நான் உன்னை எப்படி விட்டுட்டு போனேனோ அப்படியே இன்னும் இருக்க. அப்ப நீ வைச்சிருந்த அதே காதல் இப்பவும் உன் கண்ணுல தெரியுது.

அதை நீ இன்னும் உணரலன்னு எனக்கு நல்லா புரியுது.

நீ சீக்கிரம் உணர்வனும் எனக்கு தெரியும்.

என்னமா பொறாம படுற.

அன்னைக்கும் இன்னைக்கும் என்னைக்கும் நீதாண்டி என் அழகு பொண்டாட்டி.

நம்ம காதலுக்கும் உறவுக்கும் சாட்சியே உன் கழுத்துல தொங்குற அந்த தாலி கொடி தான்.

சீக்கிரம் இந்த மாமன ஏத்துக்கோமா. நீ என்கூட இருந்தா அந்த சிதம்பரத்தை எதிர்க்க எனக்கு சுலபமா இருக்கும்.

அவனுக்கு நல்ல ஒரு பாடம் கத்து தரணும் ரொம்ப நாள் காக்க வைக்காம சீக்கிரமா உன் மனசுல உள்ளத வெளிய கொட்டிடு' என தனக்குள் சிரித்துக் கொண்டான், அரவிந்த்.

அனைவரும் கலைந்து செல்ல ஆனந்தி குழப்பமான மனநிலையில் இருந்தாள்.

' நான் என்ன லூசா.... அவன் கிட்ட இருந்து உண்மைய வாங்குவதற்கு பதிலா அந்த பொண்ண பத்தி கேட்டுட்டு இருக்கேன். அந்த பொண்ணு அவனை கட்டிப் பிடிச்சா எனக்கு என்ன.... முத்தம் கொடுத்தால் எனக்கு என்ன....

நான் எதுக்கு இத பத்தி எல்லாம் கவலைப் படனும்.... இதுவா நமக்கு முக்கியம்..

அவன் கிட்ட உண்மைய கேட்க நல்ல சான்ஸ் கிடைச்சும் மிஸ் பண்ணிட்டியே ஆனந்தி.

ஐயோ ஆனந்தி நீ ஏன் இதை எல்லாம் யோசிச்சு மண்டைய குழப்புற. அப்படி என்ன பெரிய சீக்ரெட்டை மறக்க போறாங்க.

மறைச்சா மறைச்சுட்டு போகட்டும். எவ்வளவு நாள் மறைக்க போறாங்க. அப்பாவும் ஆருவும் என்கிட்ட இருந்து மறைக்கிறாங்கனா அதுக்கு ஏதாவது காரணம் கண்டிப்பா இருக்கும்.

அதனால மைண்ட்ட ரிலாக்ஸா வை ஆனந்தி. ஆனால் இனி அப்பா என்கூட பேசுவாரா...?அவரும் என் மேல ரொம்ப கோவமா இருக்காரு. என்கூட பேசு வாரானே தெரியல. ஏன் பேச மாட்டாரு.

நான் ஆருவ ஏற்றுக்கலேனா தானே பேச மாட்டாரு. நான் ஆருவ என் புருஷனா ஏத்துகிட்டா....

என்னால ஆருவ அப்படி பார்க்க முடியுமா‌...? அவர புருஷனா ஏத்துக்க முடியுமான்னு தெரியலையே.....

ஆனா ஆரு ரொம்ப நல்ல பையன். என்ன கொஞ்சம் ரவுடி.

ஆனா என்னை நல்லா பாத்துக்குறான். அப்பா எனக்காக ஆருவ செலக்ட் பண்ணி இருந்தா அது கரெக்டா தான் இருக்கும்.

அதுக்கு ஏதாவது காரணமும் கண்டிப்பா இருக்ககும்.

நாமதான் அப்பா யார் சொன்னாலும் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியால தானே இருந்தோம்.

அப்பா ஆருவ செலக்ட் பன்னியிருக்காரு. அப்பறம் ஏன் என்னால ஏத்துக்க முடியாது. நான் முடிவு பண்ணிட்டேன் இனி ஆரு தான் என் ஹஸ்பெண்ட்.

வெயிட் வெயிட் வெயிட் .....

நான் என் அப்பா சொல்றாங்கன்னு ஆருவ ஏத்துகிறேன்.

ஆனா ஆரு ஏன் என்னை ஏத்துக்கணும். அவரும் சிதம்பரம் கிட்ட இருந்து காப்பாத்தவும் அப்பா கால்ல விழுந்து கேட்டதால தானே என்னைய கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.

அய்யோ இப்போ தான் எனக்கு புரியுது. ஆரு எனக்கு கட்டாய தாலி கட்டல. அப்பா கட்டாய படுத்தினாதாலையும் சிதம்பரத்தையும் தான் கட்டாயப்படுத்தப்பட்டு என் கழுத்துல தாலி கட்டி இருக்காரு.

சொல்லப்போனால் ஆருதான் என் மேல கோபப்படனும். ஆனா இவ்வளவு நாள் நான் அவரை ஹர்ட் பண்ணிட்டு இருந்திருக்கேன்.

நான் சரியான லூசு. எனக்கு ஒரு மண்ணும் தெரியல.

ஒருவேளை என்னைய மாதிரி யோசிச்சு ஆருவும் என்னை ஏத்துக்கலேனா என்ன பண்றது.

என்னால ஆருவ மிஸ் பண்ண முடியாது. எனக்கு ஆரு நா ரொம்ப பிடிக்கும்.

என்ன......!!!!!! என்னால ஆருவ மிஸ் பண்ண முடியாதா..... அப்படினா ஆரு இல்லாம என்னால இருக்க முடியாதா.....

நான் ஆருவ லவ் பண்றேன்னா.... நிஜமாவா.....!!!! ஐயோ என்னால நம்பவே முடியல.. ஆனந்தி ஆருவ லவ் பண்றா.... இதை இந்த உலகத்துக்கே கேக்குற மாதிரி கத்தி சொல்லணுமே....

என்ன பண்ணட்டும் அதுக்கு முன்னாடி என் ஆரு கிட்ட சொல்லனும். இதனாலதான் ஆரு அந்த பொண்ண ஹக் பண்ணும் போது எனக்கு பொறாமையாக இருந்தததா......

கடவுளே நான் என்ன பண்ணட்டும். நான் ஆரு கிட்ட என் லவ்வ சொல்லி அதை ஆரு ஏத்துகலேனா என்ன பண்றது.

நான் அவனை ஹர்ட் பண்ண மாதிரி அவன் என்ன ஹர்ட் பண்ணிட்டா என்ன பண்றது....

ஈஈஈஈஈ என்ன ஆனந்தி இந்த மாதிரி சில்லி தனமா யோசிச்சுகிட்டு இருக்க.....

காதலுக்கான முதல் ரூல்ஸே வெட்கம் மானம் சூடு சொரணை இதையெல்லாம் தூக்கி குப்பையில போடுறது தானே.

அப்புறம் ஏன் ஃபீல் பண்ணிட்டு. ஆரு என்ன சொன்னாலும் எவ்வளவு கேவலமாக திட்டினாலும் வழக்கம்போல ஈஈஈஈன்னு இழிச்சிட்டு வந்திடனும்.

மணி இப்போ பதினொன்றை ஆயிருச்சு. இப்ப போய் ஆருவ பார்ப்போமா..... அவன் தூங்கிகிட்டு இருந்தா என்ன பண்றது.... வேணாம் பையன் பாவம். தூங்கட்டும்.

நாம நாளைக்கு காலைல எந்திரிச்சதும் மொத வேலையா லவ்வ ப்ரொபோஸ் பண்ணலாம்.

முடியாதுன்னு சொன்னா கொஞ்சி பாப்போம். அதுவும் இல்லைனா கெஞ்சி பாப்போம்.

அதுவும் முடியலேனா கண்ண மூடிட்டு கால்ல விழுந்து விடுவோம்.

நல்ல பையன். அவ்வளவு தூரம் விட மாட்டான்னு நெனைக்கிறேன்.

இதுக்கெல்லாம் மசியலேனா மிரட்டல் கிட்னாப் ரேப்ன்னு இறங்கிட வேண்டியது தான்.

ஐயையோ ஆனந்தி இந்த ரவுடி பயபுள்ளைங்க கூட சேர்ந்து நீயும் ரவுடி ஆயிட்டேன்னு நினைக்கிறேன்.

Everything is fair in love and war ன்னு ஐயாத்த சொல்லி இருக்காரு. சான்ஸ் கிடைச்சா முயற்சி பண்ணுவோம்.

அதுக்கு முன்னாடி தூங்க முயற்சி பண்ணுவோம்.' என்று அவள் கண்களை மூடி நித்ராதேவியை அழைக்க,அவளோ வேற்றுகிரகம் சென்று விட்டாள்.

ஐயோ எனக்கும் காதலுக்கான அறிகுறிகள் எல்லாம் வந்திருச்சே....

ஈஈஈஈஈ.... என்னன்னு கேக்குறீங்களா.....

* நம்பர் ஒன் பசிக்குது. ஆனா சாப்பிட முடியல. ((எப்படி சாப்பிட வரும் விளையாட பாட்டில் வேணும்னு ரெண்டு லிட்டர் மிரண்டாவ சிங்கிளா ஒரே கல்பா அடிக்கும் போது...))

*ரெண்டு.... தூக்கம் வருது. ஆனா தூங்க முடியல. (( ஐயோ நீ டூயட்ங்குற பேர்ல கனவுல ஒரு அக்கபோர் கூட்டுவன்னு தாம்மா நித்ரா தேவியே ஓடிப்போனாள்.))

*இதை விட பெரிய விஷயம் என்னன்னா கவிதையெல்லாம் அருவி அருவியா கொட்டுது.....

(( கவிதையா..????))

நம்புங்கப்பா..... நிஜமா.... நம்புங்கப்பா .... நான் ஒரு கவிதை சொல்றேன் அப்புறம் நம்புவீங்க...

(( எங்க சொல்லு பாப்போம்..)))

என் அழகு ஆரு

என்னைக் கொஞ்சம் பாரு

நாம் செல்வோம் ஆறு

எப்படி ‌...எப்படி ...எப்படி என் கவிதை.

(( முட்டை தக்காளி எல்லாம் அக்கா ஸ்பான்சர் பண்றேன் போக்கஸ் பண்ணி ஆனந்தி ய மட்டும் அடிங்க. கவிதைக்கும் எனக்கும் (சல்மா) எந்த சம்பந்தமும் இல்ல. அவ காதல் பித்துல உளறுறாபா))

அடுத்து......

(( போதும் ஆனந்தி இத்தோட நிறுத்திக்கோ இதுக்குமேல போச்சுன்னா ஆசிட் தான் வரும். காதலிக்கிற உங்களுக்கு தோழியா மட்டுமில்லை ஆசிரியராக கூட இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன்..))

லவ்வ ஃபீல் பண்ண விட மாட்டேங்கறீங்களே....

எனக்கு தூக்கமும் வரமாட்டேங்குது. என்ன பண்ணலாம். பேசாம ஆருவையே எழுப்பி நம்ம லவ்வை சொல்லிடுவோம். அப்பதான் நாம நிம்மதியா தூங்க முடியும்.' என அறை வாயில் அருகே செல்ல, அறைக் கதவு தட்டும் சத்தம் கேட்டு நின்றாள்.


Rate this content
Log in

Similar tamil story from Romance