Salma Amjath Khan

Romance

4.0  

Salma Amjath Khan

Romance

நீயே என் ஜீவனடி 21

நீயே என் ஜீவனடி 21

7 mins
606


தன் வாழ்க்கையை புரட்டிப்போட்ட திருமணம் அரவிந்த் ஏற்படுத்தியது அல்ல. தன் தந்தை ஏற்படுத்தியது என்பதை தன் மனதிற்கு புரிய வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள், ஆனந்தி.

தன் சந்தோஷத்தை விட அரவிந்த் அவருக்கு முக்கியமானது ஏன்? என்ற கேள்விக்கு மட்டும் விடை தேடி தேடி தோல்வியடைந்தாள்.

அனைவரும் தன்னிடம் எதையோ மறைக்க முயற்சிப்பது ஏன்? யாரும் இதைப்பற்றி என்னிடம் பேச யோசிப்பது ஏன்? என மனதிற்குள் எண்ணியவளின் தலை பாரமாக இருந்தது.

ஆனந்தியின் நிலையை உணர்ந்தவன் அவளை இயல்பு நிலைக்கு மாற்ற முயற்சி செய்ய எல்லாமே வீணாக முடிந்தது.

" இப்படி இருக்காத ஆனந்தி மா... வாய திறந்து ஒரு வார்த்தை யாவது பேசு மா உன்ன இப்டி பாக்க ரொம்ப கஷ்டமா இருக்கு." என ஆறடி ஆண் மகன் அவளிடம் கெஞ்ச, அவனை பார்த்தாள்.

அவள் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை.

" அண்ணி நீங்க இப்படியும் சைலண்டா இருக்கிறத பார்த்து அண்ணா கஷ்டமா இருக்குன்னு சொல்லல. இப்படி உங்கள பார்க்க ரொம்ப கேவலமா இருக்கு. அதான்..." என்று மணி சொல்ல ஆனந்தி முகபாவம் மாறி அவள் பார்வையால் மணியையும் அரவிந்தையும் எரித்துவிட நினைக்க, அரவிந்தோ ஆனந்தியிடம் சரணடைந்தான்‌.

" ஆனந்தி மா நான் உன்னை அப்டி நினப்பேனா... இவன் உனக்கும் எனக்கும் சண்டை மூட்டி விட பாக்குறான். இவனை நம்பாதே. ..." என பாவமாக பார்க்க,

" எனக்கு தெரியும் ஆரு. நீ அப்படி நினைக்க மாட்டன்னு. இவ தான் கரடி வேலை எல்லாம் பார்ப்பான்."

" எனன்து கரடியா...."

" என்னடா கரடியான்னு இழுக்கிற கரடி மட்டுமில்ல எரும மாடு தடிமாடு கெடா மாடு எல்லாமே நீ தான் டா." என அவன் தலையில் கொட்ட, 'ஆ' வென கத்தியவன் தலையை தேய்த்துக்கொண்டு,

" அண்ணி, வெளிய என்னை பாத்தா ரவுடி னு எல்லாரும் பயந்து நடுங்குவாங்க தெரியுமா...?"

" யாரு நீ ரவுடியா???? உடம்ப எருமமாடு மாதிரியும், மீசையையும் தாடியையும் குரங்கு மாதிரி வச்சிருந்தா ரவுடியா...?

ஒன்னு பண்ணு நானும் ரவுடிதான் நானும் ரவுடி தான்னு போஸ்டர் அடிச்சு ஒட்டு. அப்பயாவது நம்ப முடியுதான்னு பார்க்கலாம்." என கூற அரவிந்த் சிரித்தான்.

" அண்ணா நீங்களும் சிரிக்கிறீங்க. அண்ணி என்னை ரொம்ப டேமேஜ் பண்றாங்க நீங்க பாத்துட்டு இருக்கிறீங்க..."

" ஓய் நான் பேசும்போது அங்க என்னடா சின்ன புள்ள அம்மா கிட்ட கம்ப்ளைன்ட் பண்ற மாதிரி. போ போய் வேறு யாரயாவது கூட்டிட்டு வா. என் புருஷன எனக்கு எதிரா திருப்பி விடாத."

" ஆமாம் பெரிய புருஷன். போங்க அண்ணி. இந்த தம்பிய காப்பாத்த கூட வர மாட்டேங்குறாரு. நீங்களே உங்க புருஷன கட்டிட்டு அழுங்க."

"நான் கட்டிக்காம வேற யாருடா கட்டிட்டு அழுவாங்க... அந்த உரிமை எனக்கு மட்டும் தான் இருக்கு"

((சொல்லவே இல்ல.))

அதன் பொருள் உணர்ந்த அரவிந்த் ஆனந்தியை பார்த்தான்.

மணியும் அரவிந்தும் தன்னை வினோதமாக பார்ப்பதை உணர்ந்த அவளுக்கு அப்போதுதான் தான் என்ன கூறினோம் என யோசித்து தான் பேசியதின் பொருளை அறிந்து அவளுக்கு என்ன பாவனை காட்ட என்பது தெரியாமல் மீண்டும் அமைதியானாள்.

எப்படி அதை கூறினோம். என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தாள்.

" திரும்ப அமைதி ஆயிட்டீங்களா.. சுத்தம்... ப்ளீஸ் அண்ணி.. எப்பவும் போல இருங்க.. அப்போதான் நல்லா இருக்கும்."

அப்பொழுதுதான் அரவிந்தை பற்றி அறிய ஒரு யோசனை தோன்ற அந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக்க நினைத்தாள்.

" நான் எப்பவும் போல இருக்கனும்னா நான் முதல்ல ரிலாக்ஸ் ஆகணும்."

" நீங்க ரிலாக்ஸ் ஆக நாங்க என்ன பண்ணட்டும், அண்ணி."

" நீங்க எல்லோரும் என் கூட விளையாட வரணும்."

" என்ன விளையாடவா. அண்ணி, எங்கள பாத்தா எப்படி தெரியுது சிலேட்டையும் குச்சியையும் கிட்டயும் தூக்கிட்டு படிக்க போற ஸ்கூல் பசங்கன்னு நினைச்சிங்களா.... கத்தியையும் அரிவாளயும் புடுச்சுக்கிட்டு சண்டைக்குப் போற ரவுடி பசங்க அண்ணி.

சண்டைக்கு கூப்பிடாமல் விளையாட கூப்பிடுறீங்க."

" டேய் உன்னையெல்லாம் நான் விளையாட்டுக்கு சேர்த்துக்கறதே பெருசு. வேற எங்கேயும் உன்ன ஒப்புக்கு சப்பாணியாக கூட சேர்க்க மாட்டாங்க டா."

" என்ன ரொம்ப டேமேஜ் பண்றிங்க அண்ணி."

" போடா உங்கள போய் விளையாட கூப்பிட்டேன் பாரு என்ன சொல்லணும்." என உதட்டை சுழித்து முகத்தை திருப்பிக் கொள்ள, அந்த சுழிப்பின் அழகில் சிக்கிய அரவிந்த்,

" சரி சொல்லு என்ன விளையாடலாம்."

"ஆரு... நெஜமாவே என்கூட விளையாட வருவியா."

" ஆமாம் சொல்லு. என்ன விளையாட்டு..."

தோட்டத்தில் புல்வெளியில் வட்டமாக அமர்ந்து ஆரம்பிக்கப்பட்டது truth and truth.

truth and dare விளையாட்டு தான் எல்லோரும் டேர் பண்ணிட்டா யாரு ஆரு கிட்ட இருந்து யாரு உண்மையை வரவைக்கிறது. அதான் ஆனந்தி பேர மாத்திட்டா.

அரவிந்த்க்கு ஆனந்தியின் நோக்கம் புரிந்தாலும் இன்று ஆனந்திடம் உண்மையை கூறி விடலாம் என்ற நோக்கத்தில் விளையாட உட்கார்ந்தான்.

பாட்டிலை சுழற்றி விட அது வஞ்சம் செய்து வந்து நின்றது, ஆனந்தியிடம்.

' ஐயோ நம்ம ஆப்பு நம்மளுக்கே வந்துருச்சே. நாம்ம நடிக்கிறோங்குறத கேட்டிருவாங்களோ' என உள்ளுக்குள் நடுங்க வெளியே ஜான்சி ராணியை கொண்டு வந்திருந்தாள்.

கேள்வி கேட்க அரவிந்தின் ஆட்கள் போட்டிபோட அரவிந்த் அமைதியாக அமர்ந்திருந்தான்.

ஒருவழியாக போட்டி முடிந்து சேகர் கேள்வி கேட்க தயாராகினான்.

"அண்ணி அண்ணனை முதல் தடவை பார்த்ததில் இருந்து இப்ப வரைக்கும் எப்படி உணர்ரீங்க."

அரவிந்த் சேகரை நினைத்து பெருமைப்பட ஆனந்தியை நோக்கினான்.

' அவனை வெறுக்கிறேன். என்று எப்படி கூற' என்று எண்ணியவள், அரவிந்தின் கண்களை காண, அதில் கட்டுண்டவள்,

' நான் உங்களை முதல் முறையா என் காலேஜ்ல தான் பார்த்தேன். பார்க்கவே செம மாசா இருந்தீங்க.

நான் கூட என் பிரண்டு கூட சேர்ந்து உங்களை சைட் எல்லாம் அடிச்சு இருக்கேன். ஆனா நீங்க பிரகாச அடிச்சதால தான் எனக்கு உங்க மேல கோபம்.

உங்க ரவுடி கெத்த காட்டுறீங்கன்னு நினைச்சேன். அதனால அடுத்து உங்கள பார்க்கும்போதெல்லாம் கோவமா பேசினேன்.

அதுக்கப்புறம் நம்ம கல்யாணம். நான் எதிர்பார்க்காத ஒன்னு. நீங்க என் விருப்பம் இல்லாம என் கழுத்துல தாலி கட்டுனீங்கன்னு நெனச்சேன்.

அதனால உங்க மேல செம கோவமா இருந்தேன்.

ஆனா இன்னைக்கு தான் தெரிஞ்சது நீங்களே விருப்பம் இல்லாம தான் என் கழுத்துல தாலி கட்டுனீங்கன்னு.

நம்ம ரெண்டு பேருக்கும் விருப்பம் இல்லாம ஒரு பந்ததுல்ல என் அப்பா நம்மள நிப்பாட்டிட்டாங்க.

இன்னைக்கு காலையில வர இந்த உறவை ஏத்துக்கவே முடியாதுன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஏத்துக்க முடியுமான்னு தெரியல.

ஆனா இனி இந்த உறவை ஏத்துக்க முயற்சி பண்ணுவேன்.

ஏதோ ஒன்னு இப்பவும் என்னை தடுக்குது. அது என்னன்னு எனக்கே தெரியல. இதெல்லாம் உன்கிட்ட சொல்லனும்னு தான் தோணுது ஆரு. ஆனால் அதையும் ஏதோ தடுக்குது.' என மனதில் நினைத்தவள்,

" முதல்ல கோவமா இருந்தேன் ஆனா இப்போ இல்ல" என கூறினாள்.

" வேற எந்த பீலிங் சும் இல்லையா அண்ணி."

" எனக்கும் ஆமா இல்ல ன்னு சொல்லணும் தாண்டா சேகர் ஆசை. ஆனா என்ன பண்றது ஒரு சுத்துக்கு ஒரு கேள்வி தான் கேட்கணும் . சரியா..?" என தலையாட்ட அவளுடைய பதிலுக்காக காத்திருந்த அனைவருக்கும் சப்பென்று ஆகிவிட்டது.

அரவிந்தின் கண்கள் மட்டும் ஆனந்தியின் மேல் பதிந்திருக்க, மனதில் நினைத்ததை அவள் கண்கள் காட்டிக் கொடுக்க, அரவிந்தின் உதடுகள் தானாக மலர்ந்தன.

அவன் பார்வை வீச்சை தாங்க முடியாமல் "ஏன் எல்லோரும் என்னையே பாத்துட்டு இருக்கீங்க. பாட்டிலை சுத்துங்க" என கட்டளை பிறப்பிக்க, அந்த பாட்டில் வந்து நின்றது மணியிடம்.

மணி இடத்தில் வந்து நிற்க ஆனந்தி உற்சாகம் அடைந்தாள்.

" மணி உனக்கு நான் கேள்வி கேட்கவா"

" தாராளமா அண்ணி உங்களுக்கு இல்லாத உரிமையா.."

" கேட்டதுக்கு அப்புறம் ஃபீல் பண்ண கூடாது. பீல் பண்ண என்ன இருக்கு. கேளுங்க அண்ணி."

ஆனந்திடம் தெரிந்த உற்சாகத்தில் அனைவரும் ஆனந்தியை நோக்க, அவளோ ஒரு நமட்டுச் சிரிப்புடன்,

" அப்புறம் உன் தலையெழுத்து. சரி நான் கேட்கிறேன். நீ அந்த பொண்ணை லவ் பண்றியா....?"

அனந்தியின் கேள்வியில் 'லவ்வா' என அனைவரும் அதிர்ச்சியாகி மணியைப் பார்க்க, அவனோ திருதிருவென முழித்துக் கொண்டிருந்தான்.

" நா... நா.... நா... நானா... நான்... லவ்..வா... ஏ.. எந்த ... எனக்கு எந்த பொண்ணையும் தெ... தெரி..யாது... "என தந்தியடிக்க, அரவிந்த் அவனை குறுகுறுவென சந்தேகப் பார்வை பார்க்க, அவன் தலை குனிந்து கொண்டான்.

" நீ யாருக்கும் பயப்படாதே. உண்மைய சொல்லு. உன் அண்ணன் எதுவும் சொல்ல மாட்டாங்க."

" அண்ணி அப்படி எல்லாம் எதுவும் இல்ல."

" அப்போ உனக்கு எந்த பெண்ணையும் தெரியாது."

" எனக்கு யாரையும் தெரியாது."

" அவன் தான் யாரையும் தெரியாதுன்னு சொல்றான்ல. நீ ஏதாவது தப்பா புரிஞ்சு இருப்ப."

" நீங்க சொல்றதும் சரிதான் ஆரு. சரி விடு மணி. நான் கூட நீ அந்த பொண்ண லவ் பண்றியோன்னு நெனச்சு பயந்துட்டேன்.

ஏன்னா அந்த பொண்ணு பாக்க ரொம்ப மொக்கையா இருந்தா.

என்ன ஒன்னு கொஞ்சோண்டு கலர் இருக்கு. அவ்வளவுதான்.

மூக்கு பார்க்க ஜப்பான் மூக்கு மாதிரி இருந்தா. கூர்கா ஓட மகளா இருப்பாளோ என்னமோ...."

" அண்ணி அப்படி எல்லாம் இல்ல. உங்க அளவுக்கு இல்லைன்னாலும் அவளும் அழகாகத்தான் இருப்பா.

தூரத்திலிருந்து பார்த்து இருப்பீங்கன்னு நினைக்கிறேன். அவ மூக்கு நல்லா எடுப்பா இருக்கும்.

அப்புறம் கூர்காவோட மக எல்லாம் இல்ல. அவ அப்பா ஸ்டேட் பேங்க்ல கேஷியரா இருக்காரு."

" எந்த பொண்ணோட அப்பா மணி..."

" அதுதான் அண்ணி . நீங்க லவ் பண்றியா கேட்டீங்கள அந்த பொண்ணோட அப்...." என்றவன் அப்பொழுதுதான் தான் உளறிக்கொட்டியதை உணர்ந்து ஒரு உச்சு கொட்டலுடன் கண்களை இறுக்கி மூடி திறந்தான்.

ஆனந்தி மணியையும் அரவிந்தையும் பார்த்து ஒரு வெற்றிப் புன்னகையை சிந்த, அரவிந்தின் பார்வை ஆனந்திடம் தஞ்சமடைந்தது.

அரவிந்தின் பார்வையை திசைதிருப்ப ,"இப்போ நீங்க கேளுங்க ஆரு... யாரு அந்த பொண்ணுன்னு..."

அரவிந்த் மணியை நோக்க, அந்த பார்வையின் அர்த்தம் உணர்ந்தவன்,

"அண்ணா அவ பேரு சாதனா. அண்ணி படிக்கிற அதே காலேஜ்ல தான் அவளும் படிக்கிறா. அண்ணியோட பாதுகாப்புக்காக காலேஜ்க்கு போகும்போது ரெண்டு மூணு தடவை அவளை பார்த்து இருக்கிறேன் அப்போதான் ஒரு நாள் அண்ணி பானிபூரி சாப்பிடுற கடைக்கு பக்கத்து கடைல நின்னு டீ குடிச்சிட்டு இருக்கும்போது அவளை நாலஞ்சு பேரு சுத்தி வளச்சு ஒரு ஆம்னில இழுத்து போட்டு வண்டியை எடுத்துட்டு போயிட்டாங்க.

ஏதோ தப்பா இருக்குன்னு நான் அவளை தொடர்ந்து போனேன்.

ஆள் இல்லாத இடத்துல வண்டிய நிறுத்தி அவ கிட்ட தப்பா நடந்துக்க பார்த்தாங்க.

அவ ரொம்ப பயந்து போயிருந்தா. நான் அவங்கள நெருங்கி போகும்போது என்னை அவ பார்த்தா.

ஏதோ ஒரு நம்பிக்கைல, நான் அவளை காப்பாத்துவேன்னு நினைச்சு அவ ஓடி வந்து என் சட்டையைப் பிடிச்சுட்டு என் பின்னாடி ஒளிஞ்சிகிட்டா.

அவளோட பயம் எனக்கு புரிஞ்சுது. அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னு புரியல.

அவங்க எல்லாரையும் அடிச்சு அங்கேயே கட்டிப் போட்டுட்டு சேகருக்கு போன் பண்ணி அவங்கள நம்ம இடத்துக்கு கூட்டிட்டு போக சொல்லிட்டேன்.

அப்புறம் நான் சாதனாவ பத்திரமா அவ காலேஜ்ல விட்டுட்டேன்.

அப்புறம் டெய்லி அவளை பார்ப்பேன் அவ என்னை பார்த்து சிரிச்சிட்டே போவா.

அவளை காப்பாத்துனதால சிரிக்கிறான்னு நானும் கண்டுக்கல.

 மூணு நாள் கழிச்சு அவ என்கிட்ட வந்தா. வந்து அவ என்னை லவ் பண்றதா சொன்னா.

' நானே ஒரு ரவுடி என்கிட்ட வந்து லவ் பண்றேன் னு சொல்ற. லூசாடி நீ. படிக்கிற புள்ள படிக்கிற வேலைய மட்டும் பாரு. லவ்வு அது இதுன்னு சொல்லிக்கிட்டு திரிஞ்ச மூஞ்சிய பேத்துருவேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.

அதற்கு அடுத்த நாள் தான் உங்களுக்கும் அண்ணிக்கும் கல்யாணம் ஆச்சு.

அதுக்கப்புறம் அந்த காலேஜ் பக்கம் நான் போகவே இல்ல. அவளையும் நான் மறந்துட்டேன்.

ஆனா அவள பத்தி அன்னிக்கு எப்படி தெரிஞ்சுச்சு ன்னு தான் எனக்கு தெரியல."

" பொய் சொல்லாத இன்னைக்கு பார்லருக்கு வெளியே கார்ல வெயிட் பண்ணும் போது நீ அந்த பொண்ண ஏக்கத்தோட பார்த்தத நான் பார்த்தேன்.

ஆனா அவள மறந்துட்டேன்னு என்கிட்டயே பீலா விடுறியா."

அரவிந்தை ஒரு நிமிடம் பார்த்தவன், ஆனந்திடம் திரும்பி,

" அது வந்து அண்ணி. நெஜமாவே நான் அவளை மறந்துட்டேன்.

ரொம்ப நாள் கழிச்சு ரெண்டு நாளைக்கு முன்னாடி அவளை நம்ம ஏரியால பார்த்தேன்.

நான் பார்த்தும் பார்க்காத மாதிரி தான் போனேன்.

அவ என்னை பார்த்துட்டு ஓடி வந்து என்னை கட்டி புடிச்சிகிட்டா.

என்னடா இவன் இப்படி பண்றாருனு நான் அவளை விலக்கி விட முயற்சி பண்ணினேன்.

ஆனா அவ என்னை இன்னும் இறுக்கி புடிச்சிட்டு அழ ஆரம்பிச்சுட்டா.

' எங்க போனீங்க மணி. நான் ரொம்ப பயந்திட்டேன் தெரியுமா... நீங்க ரவுடியா இருந்தாலும் பரவாயில்லை.

நீங்க கண்டிப்பா நல்லவர்னு எனக்கு தெரியும். ஏன்னா நீங்க அரவிந்த் அண்ணா கூட இருக்கீங்க.

அண்ணா கூட இருக்கிற யாரும் கண்டிப்பா கெட்டவங்களா இருக்க முடியாது. என்னை விட்டு மட்டும் போய்டாதீங்க'ன்னு தேம்பி தேம்பி அழுதா.

எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு.அவ எனக்காக அழுவதை பார்த்ததும் என் கண்ணுல இருந்து தண்ணி வந்துடுச்சு.

அவளை அணைத்து நான் உன்னை விட்டு போக மாட்டேன்னு சொல்லனும்னு தோணுச்சு. ஆனா என்னால முடியல அண்ணி.

அவ ரொம்ப நல்ல பொண்ணு. அவளுக்கு ஏத்த மாதிரி பையன் தான் அவ அப்பா அவளுக்கு கல்யாணம் பண்ணி வப்பாங்க.

 எனக்கு இந்த கல்யாணம் எல்லாம் செட் ஆகாது அண்ணி.

அதான் அவளை அசிங்கமா திட்டிட்டு வந்துட்டேன்."

ஆனந்தியிடம் பதிலேதும் இல்லை. ஏனெனில் அவள் இந்த உலகத்திலேயே இல்லை.

அவ்வளவு நேரம் தந்தை சொன்னதை நினைத்து இருந்தவள், சாதனா மணியை கட்டி அணைப்பதை கேட்டதும், இன்று பார்லரில் அரவிந்தை கட்டியணைத்தது யாராக இருக்கும் என யோசித்துக் கொண்டிருந்தாள்.

அரவிந்த் மணியை பற்றி சிந்தித்து கொண்டிருக்க, ஆனந்தியின் மாற்றத்தை கவனிக்க தவறினான்.

அரவிந்த் மணியை கூர்மையாக நோக்கியவாறு, " என்னன்னு திட்டுன" என கேட்க ,

அவனின் மிரட்டும் தோணியில் வந்த கேள்வியில் மணி தடுமாறினான்.

" அது... அது..."

" சொல்லு..." என அதட்ட… அந்த குரலில் வெளிவந்த ஆனந்தி,

" விடுங்க ஆரு. ஏன் சின்ன பையனை போட்டு மெரட்டுறீங்க."

" என்னது சின்ன பையனா..." என அதிர்ச்சி காட்ட அதை கண்டும் காணாதவள்,

" மணி நீ பாட்டிலே சுத்தி விடுடா" என, மானசீகமாக ஆனந்திக்கு நன்றி கூறியவன், அண்ணியிடம் பார்வையை செலுத்திய அரவிந்தை ஓரக்கண்ணால் பார்த்து விட்டு பாட்டிலை சுழற்றினான்.

விளையாட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டாலும் ஆனந்தி மனம் பார்லரின் வெளியில் நடந்தவற்றையே சுற்றியிருந்தது.

ஒரு சில சுற்றுகளுக்கு பிறகு பாட்டில் அரவிந்த் புறம் நின்றது.

அரவிந்த்தை கேள்வி கேட்க யாரும் போட்டி போடவில்லை.

ஏனெனில் கேள்வி கேட்கும் உரிமை அவர்களின் அண்ணிக்கு மட்டுமே உள்ளது என நம்பினர்.

அரவிந்த் அவளின் கேள்விக்கு புன்னகையுடன் காத்திருந்தான்.

கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த எண்ணியவள் கேட்ட கேள்வியில் அனைவரும் சிலை ஆயினர்.

💖💖💖💖💖



Rate this content
Log in

Similar tamil story from Romance