STORYMIRROR

Salma Amjath Khan

Romance

4  

Salma Amjath Khan

Romance

நீயே என் ஜீவனடி 20

நீயே என் ஜீவனடி 20

6 mins
449


ஆனந்தியின் மனம் கனத்தது.


' எவ்வளவு தைரியம் இருந்தா பொண்டாட்டி நான் இருக்கும் போது நீ இன்னொரு பொண்ண கட்டிகிட்டு இருப்ப. இன்னைக்கு இருக்குடா மவனே உனக்கு.


நம்ம வாழ்க்கைக்கு ஒரு சான்ஸ் கேட்டுட்டு என்னை ஏமாத்த பாக்குறியா' என நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவளது கண்ணின் ஓரத்தில் இருந்து அவளின் அனுமதி இன்றி நீர் துளி கசிய ஆரம்பித்தது.


அதை உணரும் மனநிலையில் ஏனோ அவள் இல்லை. அந்த பெண்ணின் மீது ஏன் பொறாமை உணர்வு வருகிறது என்று அவளால் அறிய முடியவில்லை.


நகர மனம் இன்றி இதயம் வலிக்க வலிக்க சிலை என நின்றவளை மணியன் குரல் பின்னிருந்து கேட்க வழிந்த கண்ணீரை வேகமாக துடைத்தாள்.


" என்ன அண்ணி, பதுங்கி பதுங்கி எங்கேயோ போகப்போறீங்க நெனச்சா, ஜவுளிக்கடை பொம்மை மாதிரி இங்கேயே நிக்கிறீங்க."


அப்போது தான் வந்த நோக்கம் மூளையில் ஏற கண் முன் வந்த அந்தப் பெண்ணின் நினைவை வலுக்கட்டாயமாக ஒதுக்கிவிட்டு மணியை முறைத்தாள்.


" என்னை பார்த்தா ஜவுளிக்கடை பொம்மை மாதிரியாடா இருக்கு. நான் எதுக்குடா பதுங்கி பதுங்கி போகணும். இங்க இருந்து தப்பிக்கவா போறேன்."


" இல்லையா பின்ன" என நக்கலாக கேட்டவன் வயிற்றில் குத்த வேண்டும் என்ற உணர்வு தோன்ற அதை மறைத்து, அங்கு ஒரு பெண் ரெஸ்ட் ரூம் நோக்கி செல்லவதை பார்த்தவள்,' ரெஸ்ட் ரூம் போக வந்தேன்."


" ரெஸ்ட் எடுக்கலா தனியா ரூம் தர மாட்டாங்க, அண்ணி. ரெஸ்ட் எடுக்கணும்னா வாங்க நம்ம வீட்டுக்கு போலாம்."


அவனை முறைத்தவள் தலையில் நங்கென்று ஒரு கொட்டு வைத்துவிட்டு " போடா மண்டூ" என திட்டி விட்டு ரெஸ்ட் ரூம் நோக்கி நடக்கலானாள்.


சுவற்றில் பதிந்திருந்த அந்த பெரிய கண்ணாடி முன் ஒரு பெண் தன் அலங்காரத்தை புதுப்பித்துக் கொண்டும், இன்னொருவன் அவள் அலைபேசியை ஆராய்ந்தும் கொண்டிருந்தாள்.


அவர்களை நோக்கி, " உங்க மொபைல் கிடைக்குமா. ஒரே ஒரு கால் மட்டும் பண்ணிட்டு தரேன்" எனக் கேட்க , அவர்கள் ஆனந்தியை மேலிருந்து கீழாக எடை போட , அதை உணர்ந்தவள் "என்னோட மொபைல்ல சார்ஜ் இல்ல." என சமாளித்தாள்.


பின் அவள் அலைபேசியை நீட்ட ஒரு மெல்லிய புன்னகையை அவர்களுக்கு பரிசளித்துவிட்டு, தன் தந்தையின் எண்ணிற்கு அழைத்தாள்.


'you are trying to reach the number is currently not available' என வர மீண்டும் முயற்சித்தாள்.


மீண்டும் அதே பதில் வர கடைசியாக ஒருமுறை முயற்சிக்கலாம் என முயற்சிக்க, 


"யாருக்கு ஆனந்தி போன் பண்ணுற" என அரவிந்தின் குரல் வர திடுக்கிட்டு திரும்பியவள் அரவிந்த் அங்கு நிற்பதை கண்டு சிலையென சமைந்தாள்.


((எங்க ஆனந்தி பாத்ரூம் ஜன்னல் வழியா தப்பிச்சுருவாலோன்னு உள்ள வரலப்பா.... அந்த பொண்ணோட பார்த்து ஃபீல் பன்னுவான்னு தான் பா வந்தான்.... ஸாரி அவ செல்லக்குட்டி ய பார்க்க இடம் பொருள் ஏவல் பார்க்காமா நுழைஞ்சுட்டான்.))


"ஹலோ ... மேனர்ஸ் இல்ல.... லேடிஸ்...." என ஒருவள் ஆரம்பிக்க, 


"ஏய் அது அரவிந்த் அண்ணாடி" என மற்றவர் அடக்க, அவளும் ஒரு சிரிப்புடன் அடங்கினாள்.


" சாரி அண்ணா நான் இதுவரைக்கும் உங்களை பார்த்தது இல்ல. அதான்." என்றவளிடம் மெலிதாக ஒரு புன்சிரிப்பை அவளிடம் உதிர்த்துவிட்டு, ஆனந்தியின் புறம் திரும்பியவன், அவள் கையில் இருந்த அலைபேசியை பறித்து யாருக்கு அழைத்தால் என்பதை பார்த்து விட்டு அந்தப் பெண்ணிடம் நீட்ட, அதை வாங்கியவள் அவள் தோழியுடன் வெளியேறினாள்.


" என்ன ஆனந்தி இது" என்றவனின் குரலில் கோபம் இல்லை. அதை உணர்ந்ததால்,


" அது.... வந்து.... இன்னைக்கு அப்பா அம்மா கல்யாண நாள். அதான் அவங்க கிட்ட பேசலாம்னு...." என திக்கி திணறி பேச,


" நீ என்னை எப்ப தான் ஆனந்தி புரிஞ்சுக்கப் போற. நான் தான் சொல்லி இருக்கேன்ல உனக்கு என்ன வேணும்னாலும் என் கிட்ட கேளுன்னு. அப்புறம் ஏன் இப்படி திருட்டுத்தனமா...." என ஏக்கமாக கேட்டவன்,


" சரி விடு..." என தன் அலைபேசியில் மருத முத்துவை அழைத்து அவளிடம் நீட்டினான்.


" சிதம்பரத்தால பிரச்சனை வரும்னு உன் அப்பா நம்பர மாத்திட்டாரு. இந்தா பேசிட்டு வா. நா வெளியே இருக்கேன்." என அங்கிருந்து நகர்ந்தான்.


அரவிந்த் வெளியேறுவதை வியப்புடன் பார்த்தவள், அலைபேசி அழைப்பு ஏற்கப்பட்டதை உணர்ந்து, அதை காதில் வைக்க "ஹலோ.... சொல்லுங்க மாப்பிள்ளை..." என மருத முத்துவின் குரல் ஒலிக்க "அப்பா " என்றால் முற்றிலும் உடைந்த குரலில்.


" ஆனந்தி.... ஆனந்தி தங்கம்... உனக்கு நூறு ஆயுசு டா. இப்ப கூட உன்ன பத்தி தான் உன் அம்மா கிட்ட பேசிட்டு இருந்தேன்.


நீ இந்நேரம் பக்கத்துல இருந்திருந்தா என்னென்ன எல்லாம் பண்ணி இருப்பேன்னு."


" பொய் சொல்லாதிங்கப்பா. எனக்கு தெரிஞ்சு போச்சு. உங்களுக்கோ அம்மாக்கோ என்னை பத்தி  கொஞ்சம்கூட கவல இல்ல‌.


அப்படி இருந்திருந்தால் நீங்க என்ன தேடி வந்து இருப்பீங்க. நான் எங்க இருக்கேன்...? என்ன பண்றேன்....? எப்படி இருக்கேன்....? இதுல ஏதாவது கவலை இருந்ததா அப்பா உங்களுக்கு." என அழுத குரலில் கேட்ட, ஆனந்திக்கு மருதமுத்துவின் சிரிப்பையே பதிலாக வந்தது.


" அடி பைத்தியம்....நீ அரவிந்த் தம்பி கூட இருக்கிற வரைக்கும் நான் ஏன் கவலைப் பட போறேன். எனக்கு தெரியும் ஆனந்தி அரவிந்த் தம்பி உன்னை என்னை விட 100 மடங்கு சந்தோசமா பத்திரமா வச்சிருப்பாங்கன்னு."


"நீங்க எப்படிப்பா இப்படி நினைக்கலாம். உங்கள அவமரியாதை செஞ்சவங்க கூட நான் எப்படி சந்தோஷமா இருப்பேன்."


" என்னம்மா சொல்ற.... யாரு யார என்ன அவமரியாதை செஞ்சா...."


" நான்தான் அன்னிக்கே பார்த்தேனே, அப்பா. என்னை அரவிந்த் கிட்டே இருந்து காப்பாத்த அவர் கால்ல நீங்க விழுந்தீங்களே. அதை கொஞ்சம் கூட நினைக்காம இரக்கமே இல்லாம அந்த ரவுடி எனக்கு கட்டாய தாலி கட்டிட்டான்..." என பேசிக் கொண்டிருக்கும் போதே,


" நிறுத்து" என்று வந்த மருதமுத்துவின் அனல் பறந்த வார்த்தைகளில் தடுமாறி நின்றாள்.


இன்று வரை யாரிடமும் குரலுயர்த்தி பேசிராத அவள் தந்தையின் கோபம் ஆச்சரிய படுத்தினாலும் அது அந்த அரவிந்த்க்காக என தெரிந்ததும் வெறுப்பாக இருந்தது.


" யாரைப் பத்தி என்ன பேசுற இன்னொரு தடவை அந்த தம்பியை பத்தி பேசின...." என எச்சரித்து அவர் தொடர்ந்தார்,


" என்ன தெரியும் உனக்கு அவரைப் பற்றி. என்ன சொன்ன.... என் பொண்ண விட்டுறுன்னு அவர் கால்ல விழுந்தேனா நான்....


நல்லா கேட்டுக்கோ என் பொண்ண கல்யாணம் பண்ணிக்கோங்க னு தான் அன்னைக்கு அவர் கால்ல விழுந்தேன். 


"அப்பா...." என்று ஆனந்தியின் அதிர்ச்சி குரல் அலைபேசியை தாண்டி மருத முத்துவை அடைந்திருக்கும் என்பது சந்தேகம்தான்.


.

.

.

.

.


அன்று சாப்பிட்டு முடித்துவிட்டு சோபாவில் அமர்ந்திருந்த அரவிந்திடம், "தம்பி உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்." என தயங்கி நின்றார், மருதமுத்து.


" சொல்லுங்க."


" இங்க வேணாம். தோட்டத்து பக்கம் போய் பேசுவோம்." என்றார் மாடியிலிருந்த ஆனந்தியின் அறையை நோட்டம் இட்டவாறே.


" சரி" என்றவன் மருதமுத்துடன் தோட்டத்திற்கு செல்ல, மருதமுத்து மெல்ல ஆரம்பித்தார்.


" தம்பி உங்களுக்கு தெரியாதது எதுவும் இல்ல. அந்த சிதம்பரம் எவ்வளவு மோசமானவன்னு. அவனுடைய பார்வை இப்போ ஆனந்தி மேல இருக்கு.


அவன் பணத்துக்காக உயிர கொல்லுற பிசாசு. பிரகாச ஆனந்திக்கு கட்டி வைக்கணும்னு நினைக்கிறான். ஆனந்தியை கல்யாணம் கட்டி வைக்கலேனா அவள கொல்லக் கூட தயங்க மாட்டான்.


அவன் கிட்ட இருந்து ஆனந்தியை காப்பாத்தணும்னா ஒரே ஒரு வழி தான் இருக்கு...."


" என்ன" வென்றான் உருவங்களை புருவங்களை உயர்த்தி, 


" நீங்க ஆனந்திய கல்யாணம் பண்ணிக்கணும்."


" நீங்க புரிஞ்சுதான் பேசுறீங்களா." என கேட்டான் அடக்கப்பட்ட ஆவேசத்துடனும்.


" ஆமாம் தம்பி நான் நல்லா யோசிச்சு தான் முடிவு எடுத்து இருக்கேன். ஆனந்திய பாதுகாக்க உங்களால மட்டும் தான் முடியும்.


அவளைக் காப்பாற்ற உங்க கல்யாணம் தான் ஒரே வழி."


" என்ன பேசுறீங்க நீங்க. ஆனந்தி சின்ன பொண்ணு. எனக்கும் அவளுக்கும் பத்து வயசு வித்தியாசம் இருக்கும். அதுவுமில்லாம அவளுக்கும் சும்மாவே என்னை பிடிக்காம முறைச்சிட்டு சுத்துறா. அவ பேசுவதே அதிசயம். இதுல நீங்க கல்யாணம் அது இதுன்னு..." 


" அவள விடுங்க தம்பி. உங்களுக்கு ஆனந்திய கட்டிக்கிறதுக்கு சம்மதம் தானே."


" நான் என்ன சொல்றேன் நீங்க என்ன கேட்கிறீங்க. இதெல்லாம் சரிபட்டு வராது."


" சரி பட்டு வராதுன்னு சொல்றீங்களே தவிர சம்மதம் இல்லன்னு சொல்ல மாட்டேங்கறீங்கலே. நல்லா யோசிச்சு சொல்லுங்க தம்பி, உங்க கழுத்துல தொங்குற தாலிக்கு யாரு சொந்தக்காரியான்னு."


" போதும் நிறுத்துங்கள். இந்த தாலி வேணா ஆனந்திக்கு சொந்தமானதா இருக்கலாம். ஆனால் எங்க கல்யாணம்...." என்றவன் ஒரு வினாடி கண் மூடி பெருமூச்சு விட, அதற்குள் அவன் காலில் விழுந்தார் , மருதமுத்து.


" என் பொண்ண காப்பாத்த எனக்கு வேற வழி தெரியல தம்பி. தயவு செய்து என் பொண்ண கல்யாணம் பண்ணிக்கோங்க தம்பி.... " என அவன் காலை பிடித்து கதற....


" என்ன பண்றீங்க நீங்க... நான் உங்கள என்னை காக்க வந்தவரா நினைச்சுட்டு இருக்கேன். ஆனா நீங்க... " என்றவன் அவரை தூக்கிவிட்டான்.


" ஆனந்தி என் பொறுப்பு. அவளுக்கு எதுவும் ஆகாம பார்த்துக்குறது என் கடமை. அவன் என் ஆனந்தி.


" அவ அவளுக்கு புடிச்ச யார வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா நிம்மதியா இருக்கணும். எப்பவுமே சந்தோசமா இருக்கிற ஆனந்தி மட்டும் தான் எனக்கு வேணும். அதுக்கு நான் என்ன வேணும்னாலும் செய்வேன்...." அப்பொழுது ஆனந்தி வர அவர்களின் பேச்சு தடைபெற்றது.

.

.

.

.

.


தன் தந்தைக்கு கூறியதை கேட்ட ஆனந்தியின் கண்களில் கண்ணீர் வந்தது. 'ஏன்' என்ற கேள்வி மட்டும் அவள் மனதில் எழுந்துகொண்டே இருந்தது.


" ஆனா ஏம்பா...."


" ஏன்னா.... என்ன அர்த்தம்...."


" நீங்க எப்படிப்பா எனக்கு படிக்காத ஒருத்தர அதுவும் ஒரு ரவுடியை கல்யாணம் பண்ணி பாக்கணும்னு நினைச்சீங்க. என்னால நம்ப முடியல."


" ஆனந்தி மா .... நான் யாரை கல்யாணம் பண்ணிக்க சொன்னாலும் அவன் நல்லவனாக இருப்பான். அதனால யாரா இருந்தாலும் கல்யாணம் பண்ணிப்பேன்னு அந்த சிதம்பரத்துக்கிட்ட சொன்னியே அது சும்மாவாம்மா."


" என்னப்பா இப்படி கேட்டுட்டீங்க. அதை என் உள் மனசுல இருந்து சொன்னேன்பா. என்னை விட உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு பா."


" அப்போ ஏன் மா அரவிந்த் விஷயத்தில் மட்டும் சந்தேகப்படுற. நான் அரவிந்த் தம்பிய உனக்காக தேர்தெடுத்து இருக்கேன்னா அதுக்கு காரணம் இருக்கும்மா.


இந்த உலகத்துல அரவிந்த் தம்பியால மட்டும்தான் உனக்கான மொத்த சந்தோஷத்தையும் கொடுக்க முடியும்." 


"அப்பா..." என ஆனந்தி ஆரம்பிக்கும் போதே...


"போதுமா. உனக்கு என் மேல நம்பிக்கை இருந்தா அரவிந்த் தம்பியோட சந்தோசமா வாழ பாரு.அப்படி இல்லாட்டி என் விருப்பத்தை ஒதுக்குன மாதிரி என்னையும் ஒதிக்குறு." 


ஆனந்தி பதில் கூறும் முன் அழைப்பு துண்டிக்கப்பட்டது.


ஆனந்தியின் எண்ண அலைகள் யாவும் தன் தந்தையின் சொற்களை நம்ப முடியாமல் தவித்தன.


அன்பை பொழிந்து பாசம் ஊட்டி வளர்த்த மகளை ஒரு ரவுடி இடம் கொடுத்தது மட்டுமில்லாது அவனுக்காகத் தன்னையே ஒதுக்குவது ஆனந்தியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


 இது தன் தந்தையின் வார்த்தைகள் தானா....


என் தன் தந்தை என்னை வெறுப்பாறா....


ஏன்.... எதற்காக.... எங்கிருந்தோ திடீரென முளைத்த அவன் மேல் இவ்வளவு நம்பிக்கையா.... ஏன்.... என பல கேள்வி போராட்டங்களுக்கு பதில் புரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.


அவள் கால்கள் அவள் அறியாமலேயே அரவிந்தை நோக்கிச் சென்றன.


ஆனந்தியின் நிலையை பார்த்து பயந்தவன் அவள் கண்ணங்களை தாங்கியவாறு,


" என்ன ஆச்சு ஆனந்தி."


அரவிந்தின் குரலில் அவன் கண்களை நோக்கினாள்.


அவன் கண்களை பார்த்தவளுக்கு எழுந்த கேள்வி "இவனுக்காகவே " என்பதுதான்.


" ஆனந்திமா ஏன்மா இப்படி இருக்க .... சொல்லுமா...." அரவிந்தின் கேள்விக்கு வலது இடமாக தலையை அசைத்து அவள் தன் கையில் இருந்த போனை அரவிந்தை நோக்கி நீட்ட அவன் அதைப் பெற்றுக் கொண்டதும் ஆனந்தி அங்கிருந்து நகர்ந்து வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டாள்.


தன் அண்ணியின் நிலையை கண்ட மணியம் சேகரும் அரவிந்திடம் "எதுவும் பிரச்சனையா அண்ணா" என கேட்க , அவளின் நிலையை ஓரளவு ஊகித்தவன்,


"ஒன்னும் இல்ல. நீங்க போங்க. நான் இப்போ வந்துடுறேன்." என்று அங்கிருந்து அகன்றான்.


காரின் கண்ணாடி தன் தலையை தாங்கிக் கொண்டிருக்க சாலையை வெறித்துக்கொண்டிருந்தாள், ஆனந்தி.


அரவிந்தின் ஆட்கள் அங்கும் இங்குமாக சிதறி நிற்க அரவிந்த் வந்து வண்டியில் ஏறினான்.


உலகத்தின் மொத்த சோகத்தின் உருவாய் அமர்ந்திருக்கும் தன்னவளின் நிலையை அவள் தந்தை மூலம் அறிந்தவன் அவளுக்கு ஆறுதல் படுத்த முடியாதவனாக அவள் அருகில் அமர, வண்டி புறப்பட்டது.


தன் அருகே தன்னவன் சூட்டை உணர்ந்து அவன் முகம் நோக்க அவனும் ஆனந்தியை நோக்க அவன் முகத்தில் என்ன தெரிந்ததோ,


" ஆரு நீங்க தப்பா நினைக்கலேன்னா. நான் உங்க தோள்ல சாஞ்சுக்கவா..." என கேட்க, தன் அவளிடம் ஒருமையிலிருந்து மாறிய பன்மை நல்லதற்கா... கெட்டதற்கா என்பதை அறியாமலேயே அவள் சாய்ந்து கொள்ள அவன் தோளினை நீட்டினான்.


அவன் முழங்கையை கட்டிக்கொண்டு அவன் தோளில் சாய்ந்து, உலகத்தை மறந்தாள், ஆனந்தி.



Rate this content
Log in

Similar tamil story from Romance