Salma Amjath Khan

Romance

3.3  

Salma Amjath Khan

Romance

நீயே என் ஜீவனடி 17

நீயே என் ஜீவனடி 17

4 mins
236


தன்னவள் தனக்கு ஊட்டிவிட்ட அந்தத் தருணத்தை தன் மனதுக்குள் பதிவேற்றம் செய்து கொண்டான்.

" ஃபுல்லா ஊட்டி விட முடியாது. எனக்கு பசிக்குது. நான் சாப்பிடணும்." என திரும்பியவளுக்கு தன்னை யாரோ வெறுப்பது போல் தோன்ற நிமிர்ந்து பார்த்தாள்.

டைனிங் டேபிளில் இருந்த யாரும் சாப்பிடாமல் இருவரையும் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து அரவிந்திடம் திரும்பினாள்.

அவனும் அவர்களைப் பார்த்துவிட்டு ஆனந்தியை காதலுடன் பார்க்க வெட்கப்பட்டு தலை குனிந்து அவன் சாப்பிட ஆரம்பித்தான்.

(( வெட்கமா இதெல்லாம் ஹீரோயினுக்குல வரணும். எங்க ஹீரோயினியை கொஞ்சம் பார்ப்போம்.))

" என்னடா எல்லாரும் சாப்பிடாம என்னை பார்க்கிறீங்க. எல்லாருக்கும் நான் ஊட்டி விடனும்மா.... எதுவும் கலக்கல ஒழுங்கா சாப்பிடுங்கடா ..." எனக் கடுகடுக்க ,

"அதான் எனக்கு தெரியுமே. அதுக்குத்தானே கூடவே இருந்தேன்." என மணி கூற,

" அடப்பாவி... கிச்சன்லே எனக்கு ஹெல்ப் பண்ண வந்தன்னு பார்த்தா எனக்கு ஸ்பை வேலையா பாக்குற...." என டேபிளில் இருந்த ஸ்பூன் எடுத்து மணியை நோக்கி வீச, குறி தப்பியது.

"அண்ணி வர வர நீங்க வன்முறையை கையாளுறீங்கன்னு நினைக்கிறேன்." என சிணுங்கலோடு கூற அவனை ஏறிட்டாள்.

" என்னடா பண்றது ரவுடிக்கு வாக்கப்பட்டா வன்முறையை கையில எடுத்து தானே ஆகணும்." என கூற, அரவிந்த் சிறு புன்னகையை உதிர்க்க, அனைவரும் சிரித்துக் கொண்டே ஆனந்தியின் கைவண்ணத்தை ருசித்தனர்.

"செம்ம அண்ணி உங்களுக்கு சமைக்கத் தெரியும்னு சொல்லவே இல்ல."

" எப்படி அண்ணி இவ்வளவு சூப்பரா சமைக்கிறீங்க."

"ம்ம்ம்.... அதுவா.... காலேஜ் முடிச்சுட்டு மெரினா ஹோட்டல்ல பார்ட் டைம் ஜாப்க்கு போனேன். அதான்...." என்றாள், நக்கலாக.

" யார்கிட்ட விடுறீங்க. நீங்க மெரினா ஹோட்டல் வாசல்ல இருக்குற பாணி பூரி சாப்பிட தானே டெய்லி மெரினா ஹோட்டல் பக்கமே போவீங்க" என நக்கலாக கூற அனைவரும் சிரித்தனர்.

அவனை முறைத்தவாறு அரவிந்தின் உதட்டில் பூத்த மெல்லிய புன்னகையில் தன்னிலை மறந்தாள்.

இதுவரை சிரித்து பார்த்திராத உதடுகளில் இன்று முழுவதும் மென்னகையை படரவிட்டவனின் வசீகரத்தில் மயங்கியவள், பின் ஞாபகம் வந்தவளாக சேகரின் புறம் திரும்பினாள்.

"ஆமாம் நான் டெய்லி அங்க panipuri சாப்பிடுவேன்னு உனக்கு எப்படி தெரியும்." எனக் கேட்க இப்போது முறைப்பது அரவிந்தின் முறையானது.

' ஐயோ .... உளறிட்டோமே...' என்று ஆனந்தியை பார்க்க, அவன் பதிலுக்காக அவள் ஆவலாக காத்து இருந்தாள்.

அரவிந்தை பார்க்க அவன் முறைப்பதை அறிந்து கண்களாலேயே மன்னிப்பு கேட்க, 'உளறுனேல சமாளி' என கண்களால் சைகை செய்ய, அதைப் புரிந்து கொண்டவன்,

" அது ... வந்து ... அண்ணி ஒரு தடவை உங்க காலேஜ் பக்கம் வந்தேனா.... அப்போ நீங்க பானிபூரி சாப்பிட்டுட்டு இருந்தீங்களா... அதை வச்சு கெஸ் பன்னுனேன்."

" எப்போ பார்த்த...?"

" அது ஒரு நாலஞ்சு மாசத்துக்கு முன்னாடி இருக்கும் அண்ணி."

' எப்படியோ சமாளிச்சோம்...' என சேகர் பெருமூச்சுவிட, அவளின் அடுத்த கேள்வியில் அதிர்ந்தான்.

" அது எப்படி சேகர் எப்பயோ பார்த்தது இன்னும் ஞாபகம் இருக்கு. அதுவும் நான் யாருனே தெரியாத போது. இப்படித்தான் பாதையில் போற வர்றவங்க எல்லாரையும் ஞாபகம் வச்சிருக்கியா...."

சேகர் விழிபிதுங்கி பார்க்க மணி வந்தான், அவனை காப்பாற்ற.

(( பாவம் அவனுக்கு தெரியல தானே வந்து சிக்குறது.))

" அது ஒண்ணும் இல்ல அண்ணி. நீங்க பாக்க தேவதை மாதிரி இருக்கீங்களா. அதான் அவன் உங்கள மறக்கல போல...."

" தேவதை மாதிரி...." என நக்கலாக இழுத்தவள்,

அரவிந்தின் புறம் திரும்பி,

" நீ கேட்டியா அரவிந்த் கண்ணா, உன் கூடயே சுத்திட்டு, எல்லாரும் உன் பொண்டாட்டிய சைட் அடிச்சு இருக்காங்க. நீ என்னன்னு கேளு." என அரவிந்தை கொம்பு சீவி விட, அரவிந்த் அவர்களை பார்க்க , அவர்கள் 'இல்லை' என்பது போல் பாவமாக தலை அசைக்க, அதற்கு அவன் புன்னகையை சிந்த, அந்த புன்னகையின் அர்த்தத்தை உணர்ந்தவளாய். அவர்கள் புறம் திரும்பினாள்.

" இந்த ஒரு தடவ உங்க எல்லாரையும் சும்மா விடுறேன். இன்னொரு தடவை யாராவது என்னை சைட் அடிச்சீங்க. ஆரு பேபி கிட்ட சொல்லி உங்க கண்ணு எல்லாம் நோண்டி எடுத்துடுவேன். ஞாபகம் வச்சிக்கோங்க." என கையை ஆட்டி மிரட்ட, மணி தன் தீவிர சந்தேகத்தைக் கேட்டான்.

" அது யாரு அண்ணி. ஆரு பேபி...?"

" என் அரவிந்த் தான். " என பெரிய சிரிப்போடு அரவிந்தை பார்த்து கண்ணடித்தாள்.

தன்னவள் தனக்கு வைத்த செல்லப் பெயரை எண்ணி பூரிப்பில் இருந்தான்.

தன் அண்ணி அண்ணனை முழுமையாக ஏற்றுக் கொண்டார் என்ற சந்தோசத்தில் அனைவரும் சாப்பிட, ஆனந்தியின் மனது நிறைவடைந்ததை உணர்ந்தாள்.

'நான் எப்படி இவ்வளவு கேஷுவலா பேசுறேன். யாருன்னே தெரியாத இவங்க கிட்ட. அதுவும் இத்தனை அடியாளுங்க கிட்ட உரிமையா மிரட்டுறேன்.

உண்மையிலேயே இவங்க எல்லாரும் என்னை ரொம்ப மதிக்கிறாங்க. கேர் பண்றாங்க. நான் இவங்கள எவ்வளவு ஹர்ட் பண்ணுனாலும்.

அவங்க என்கிட்ட எப்பவும் போல தான் இருக்காங்க.

என் குடும்பத்தோடு உட்கார்ந்து சாப்பிடற மாதிரி ஃபீல் ஆகுது.

இது எல்லாத்துக்கும் காரணம் ஆரு தான்.

எனக்கு தெரியும் இவங்க எல்லாரும் என்கிட்ட எதையோ மறைக்கிறாங்கன்னு. நான் எவ்ளோ தான் போட்டு வாங்க நினைச்சாலும் இவங்க சொல்ல மாட்டேங்கறீங்க.

நான் இதை எப்படியாவது கண்டு பிடிப்பேன். எனக்கு இந்த வீடு மட்டும் இல்ல உங்க எல்லாரையும் புடிச்சிருக்கு. ஆரு வ ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.

ஆனா இது காதல் இல்லை.

ஆரு ஓட வீக்னஸ் நான்னும் தெரியும். ஆனால் ஆரு ஏன் என் மேல இவ்வளவு அன்பா இருக்கான்னு தான் எனக்கு தெரியல

கொஞ்ச நாள் பழக்கத்தில இவ்வளவு அன்பு வருமா...?

தெரியாமல் நடந்த ஒரு கல்யாணத்துல என்னை மனைவியா ஏத்துக்கிட்டதால இவ்ளோ பாசம் காட்டுகிறார்ன்னா என்னால நம்ப முடியல.

அவர் சொன்ன மாதிரி அவங்க ஊர்ல தாலி பெரிய விஷயமா இருக்கலாம். அதுக்காக நான் எப்படி இவர ஏத்துக்க முடியும்.

நான் இவர லவ் பண்ணல. அட் த சேம் டைம் இவர வெறுக்கவும் இல்ல.

ஒருவேளை இவர் சொல்லிட்டு என் கழுத்துல தாலி கட்டி இருந்தா, நான் இவரை ஏத்து இருப்பேனோ என்னவோ....

எனக்கு உன்ன புடிக்கும் ஆரு. உன் கண்ணுல எனக்காக தெரியுற ஏக்கம், வலி, காதல்....

' காதலா'.... அது எப்படி நான் சொல்லுவேன்... ச்சே ச்சே... காதல் இருக்காது.

அது எப்படி எதுவுமே தெரியாம காதல் வரும். அதுவும் அவனை எப்பவும் ஹர்ட் பண்ற என் மேல.

மே பி அவன் என்னை அவனோட மனைவியா நினைக்கிற தால வந்த பாசமா இருக்கும்.' என தன்னிலை மறந்து உட்கார்ந்திருந்த ஆனந்தியை பார்த்த அரவிந்த்,

" என்ன ஆச்சு, ஆனந்தி. என்னையே பார்த்துட்டு இருக்க..."

சிறு புன்னகையை சிதறியவள், "ஒன்னும் இல்ல. எல்லாரும் என் சமையல் செம்மையாக இருக்கு. நல்லா இருக்குன்னு சொன்னாங்க.

நான் ஸ்பெஷலா உங்களுக்காக சமைச்சேன். ஆனால் நீங்க எதுவும் சொல்லலையே..." எனக் கேட்க, அவள் கண்களை ஒரு நிமிடம் ஆராய்ந்தவன், எழுந்து வாஷ்பேஸினில் கைகழுவி விட்டு நகர்ந்தான்.

ஆனந்தியால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவன் தன்னை அலட்சியம் செய்கிறானோ என்ற எண்ணமே அவள் கண்கள் குளமாக காரணமாயின.

திடீரென தன்னை தீண்டிய கைகளை அவள் குளம் கொண்ட கண்களால் பார்க்க முடியவில்லை.

அவள் கண் இமைக்க கண்ணீர் துளி உருண்டு ஓட, தன்முன் அரவிந்தை கண்டாள்.

அவள் கண்ணீரை தன் பெருவிரலால் எச்சரித்து அகற்றியவன், அவள் கைகளை தன் கையில் ஏந்தினான்.

" எல்லாரும் நல்லா இருக்கு. செம்மையா இருக்கன்னு சொன்னாங்க. நானும் அதையே சொல்ல விரும்பல.

இதன் உன் பொண்டாட்டியோட புது வாழ்க்கையை ஆரம்பிக்கும் போது அவ கையில போட்டு விடுன்னு நான் பதினாலு வயசு இருக்கும் போது என் கைல கொடுத்தாங்க.

இது நம்ம பரம்பரை வளையல்.

நீ எப்போ என்னை புரிஞ்சுக்க ஆரம்பிச்சியோ அப்பவே நம்ம வாழ்க்கை ஆரம்பிச்சுருச்சு.

இனி இது உன் கையில் இருக்கிறது தான் சரி." என்று அவள் கைகளில் போட்டு விட்டவன் அவள் உள்ளங்கையில் மென்மையாக முத்தமிட்டான்.

அவள் கண்களில் எந்தவித கோபமும் இல்லை. மாறாக ஆனந்த கண்ணீர் மட்டுமே திரண்டு நின்றன.

ஒரு புன்னகையுடன் அவன் விலகிச் சென்றான்.

அவனுடைய மீசையின் குறுகுறுப்பும் முதல் முத்தமும் இன்னும் அவள் கைகளில் உணர, இதற்கு நான் தகுதியானவனா என யோசிக்க ஆரம்பித்தாள்.

💖💖💖💖


Rate this content
Log in

Similar tamil story from Romance