Salma Amjath Khan

Romance

4.1  

Salma Amjath Khan

Romance

நீயே என் ஜீவனடி 12

நீயே என் ஜீவனடி 12

4 mins
493


அரவிந்தின் தாலி ஆனந்தியிடம் அடைக்கலமாகி இரண்டு வாரங்கள் ஓடிவிட்டன.

அவனிடமிருந்து தப்பித்து செல்ல முடியாது என்பதை அறிந்ததாலோ என்னவோ அதற்குப்பின் அவள் தப்பிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

அரவிந்திடம் போராட முடியாமல் வாழ்க்கையை விதியிடம் ஒப்படைத்துவிட்டு விதி காட்டும் வழியில் பயணித்தாள்.

சுவாரசியமான பக்கங்களாக இருந்த தன் வாழ்க்கையின் புத்தகத்தில் இந்த இரண்டு வாரமும் வெற்று பக்கங்களாகவே இருந்தது.

யாரிடமும் பேசவில்லை. சண்டையிடவில்லை. முடிந்தவரை தன் அறையை அவள் உலகம் என அதற்குள்ளே அடைந்துகொண்டாள்.

தன் தேவைகளை தானே நிறைவேற்றிக் கொண்டாள். யாரிடமும் எதுவும் தேவை என்று கேட்டு நிற்கவில்லை. அதற்கு காரணம் அரவிந்த் அவளுக்கு தேவையான அனைத்தையும் அவள் கூறும் முன் அவள் அறையில் வைத்துவிட்டு சென்றதால் கூட இருக்கலாம்.

தன் தாய் தந்தை நினைவுகள் தன்னை வருத்தினாலும் அவள் நிலையை புரிந்து கொள்ள யாருமில்லை என மனதிற்குள் அழுது கொண்டாள்.

தோல் சாய்ந்து அழவும், மடி சாய்ந்து ஆறுதல் பெறவும் அருகில் யாருமில்லாத அனாதையாய் உணர்ந்தாள்.

அவள் சாய்ந்து அழ தோள்கொடுக்க முடியாமல், அவள் மடி சாய்ந்து அயர மடி நீட்ட முடியாமல், தன் சுயத்தை இழந்து நிற்கும் ஆனந்தியை பார்க்க கஷ்டமாகத்தான் இருந்தது, அரவிந்திற்கு.

எப்போதும் கல கலவென பேசிக்கொண்டிருக்கும் ஆனந்தி சில நாட்களாக எதுவும் பேசவில்லை. ஆனந்தி தன் கண்முன் வராமல் இருப்பதை அவனால் தாங்க முடியவில்லை.

அவன் இல்லாத நேரம் இறங்கி வந்து சாப்பிடுவதும், அவன் இருக்கும் நேரங்களில் அவனை தவிர்ப்பதற்காகவே அவள் அறையிலேயே இருந்தாள்.

அவளுக்கு தெரியாமல் அவள் அறைக்கு வெளியே இருந்து திருட்டுத்தனமாக பார்த்துக் கொண்டும், அவள் உறங்கும் போது அவள் அருகில் அமர்ந்து அவளை ரசிப்பதுமாக நாட்களை கடத்தினாலும் அவளின் நிலைமை அவனை பைத்தியமாக்கியது.

"அண்ணே ..... என்னாச்சு.... "

"ஹஹ..... ஒன்னுமில்ல."

" அண்ணியைப் பத்தி யோசிக்கிறீங்களா....? புரியுதுண்ணே..... அண்ணிய இப்படி பார்க்கிறது எங்களுக்கே கஷ்டமா தான் இருக்கு."

" நான் ஆனந்தி கழுத்துல தாலி கட்டி அவசரப்பட்டுட்டேன்னு தோணுது, மணி."

" ஏன்னே அப்படியெல்லாம் நினைக்கிறீங்க. அதெல்லாம் ஒன்னுமில்ல.

எப்ப இருந்தாலும் அண்ணி இங்க தானே வரப்போறாங்க. என்ன.... இன்னும் ரெண்டு மூணு வருஷத்துக்கு அப்புறம் நடக்க வேண்டியது இப்ப நடந்துருச்சு. அவ்வளவுதான்.

இதையெல்லாம் நினைச்சு நீங்க வருத்தப்படாதீங்க அண்ணே."

" இல்ல, சேகர் . ரெண்டு மூணு வருஷம் நாளும் அவளுக்கு எல்லாத்தையும் சொல்லி புரிய வச்சு, அவளும் என்னை முழுசா ஏத்துக்கிட்டதுக்கு அப்புறம் தானே வந்திருப்பா.அவ மனசார வந்திருப்பா.

ஆனா... எங்க அந்த சிதம்பரத்தால ஆனந்தியை இழந்துருவேனோன்னு ஒரு பயம் வந்துருச்சு.

இதுவரைக்கும் சிதம்பரத்துக்கு எதுவும் தெரியாது. அதனால ஆனந்தியால சுதந்திரமா இருக்க முடிஞ்சது.

ஆனால் சிதம்பரத்துக்கு தெரிஞ்சதுக்கு அப்பறம் ஆனந்திய தனியாக விடுறது நல்லது இல்ல.

அவ கூட இருந்து என்னால அவளை பார்க்க முடியாது. எந்த உரிமையில அவ கூட இருந்து பாதுகாப்பு கொடுக்க முடியும்.

இதை எல்லாம் யோசிச்சுட்டு இருக்கும்போது தான் சிதம்பரம் பிரகாஷுக்கும் ஆனந்திக்கும் கல்யாணம் பண்ண பார்தான்.

 பிரகாஷ் நல்ல பையன் தான். ஆனால் அந்த சிதம்பரம் அவனோட அப்பா. அவன் இருக்கிற இடத்துல ஆனந்தி இருக்கக்கூடாது.

ஒருவேளை சிதம்பரம் அவனோட அப்பாவா இல்லாம இருந்திருந்து, பிரகாஷும் ஆனந்தியும் விரும்பி கல்யாணம் பண்ணி இருந்தா கூட நான் சந்தோஷப்பட்டுருப்பேன்."

" நிஜமாவே அண்ணி ஆசைப்பட்டிருந்தால் அந்த பிரகாஷ கல்யாணம் பண்ணி வச்சிருப்பீங்களா அண்ணே...."

"கண்டிப்பா மணி . என் ஆனந்தி ஆசைப்பட்டு இருந்தா கண்டிப்பா கல்யாணம் பண்ணி வச்சிருப்பேன்."

" அப்போ உங்க நிலைமை..."

" உனக்கு தெரியாதா ... எனக்கு எல்லாமே ஆனந்தி தான். அவ எங்க இருந்தாலும் சந்தோஷமா இருந்தா எனக்கு போதும். ஆனா......" என கண்ணின் ஓரம் இருந்த நீரை விரல்களில் ஒற்றி எடுத்துக் கொண்டான்.

" ஆனால் என்னண்ணே...."

"என் கண்ணு முன்னாடியே ஆனந்தி இப்படி இருக்கிறத என்னால தாங்கிக்க முடியல டா."

" என்னண்ணே... இப்படி சின்ன புள்ளை மாதிரி கண்ணை கசக்கிக் கொண்டு இருக்கீங்க. நீங்க பெரிய ரவுடின்னு அண்ணி பெருசா கற்பனைலாம் பண்ணி வச்சிருக்காங்க." என சேகர் சொல்லும் போதே ஆனந்தி அவனை 'ரவுடி.... ரவுடி....' என திட்டுவது ஞாபகம் வர இதழ்கள் மலர்ந்தது.

"நீங்க ஏன் அண்ணி கிட்ட எல்லாமே சொல்லக்கூடாது. அவங்க கிட்ட உண்மைய சொன்னா, அவங்க புரிஞ்சுபாங்கன்னு தோணுதுன்னா எனக்கு."

" ஏற்கனவே நான் அவகிட்ட கேட்காம தாலி கட்டிடேன்னு கஷ்டப்பட்டு இருக்கேன்.

இதுல உண்மைய சொல்லி என்னைய ஏத்துக்க சொல்றது அவள கட்டாய படுத்தற மாதிரி இருக்கும். அவ என்னை புரிஞ்சுப்பான்னு எனக்கு தெரியும்."

" புரிஞ்சுக்கலேனா...?"

" எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனந்தி என்னை புரிஞ்சுப்பான்னு. ஒரு வேல புருஞ்சுகலேன்னா லும் பரவாயில்லை. ஆனா அவ என்னை இப்படியே ஏத்துக்கணும். அவளுக்கு தெரிஞ்சா அரவிந்தா. ரவுடியா. இப்படியே என்னைய ஏத்துக்கணும்."

" நீங்க கவலைய விடுங்க. உங்க காதல் கண்டிப்பா அண்ணிய உங்க கூட சேர்த்து வைக்கும்."

"ம்ம்...' என தலையசைக்க,

" அண்ணா..... அண்ணி....." என குணா பதட்டப்பட, திரும்பி பார்த்த அரவிந்த், ஆனந்தி தலையில் கைவைத்தவாறு தள்ளாடி கொண்டிருப்பதை பார்த்தான்.

 அரவிந்த் யோசிக்கும் முன்னே அவனின் கால்கள் அவளை நோக்கி ஓடின.

ஆனந்தி கீழே விழும் முன் அவளை கைகளில் ஏந்தியவன் அவள் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு மருத்துவரை அழைத்தான்.

தன் அண்ணியின் நிலையை கண்டு அரவிந்தை பின் தொடர்ந்தவர்கள், அவள் அறையிலேயே கவலையாக நின்றனர்.

சிறிது நேரத்தில் மருத்துவர் அறைக்குள் நுழையவும், ஆனந்தி கண் விழிக்கவும் சரியாக இருந்தது.

உள்ளே நுழைந்த மருத்துவர் வாடிய மலராய் இருந்த ஆனந்தியையும், அவளை நினைத்து கைகளை பிசைந்த வண்ணம் நின்று இருந்த அரவிந்தையும் பார்த்துவிட்டு, அவள் அறையில் இருந்த அடியாட்களை நோக்கி,

 " பேஷன்ட் இருக்கிற இடத்துல இவ்வளவு பேர் இருந்தா எப்படி.... உங்க அண்ணிக்கு எதுவும் ஆகாது. வெளிய வெயிட் பண்ணுங்க."

'அவங்க என்னை நினைச்சு கவலைப் படலை. எங்க நான் தப்பிச்சு போயிடுவேன்னு தான் பாடிகார்ட்டா நிக்கிறாங்க.' என மனதில் நினைத்துக் கொண்டிருக்கும்போதே அடியார்கள் அனைவரும் வெளியில் சென்றனர்.

அவர்கள் சென்றபின் ஆனந்தியின் அருகில் வந்த மருத்துவர்,

" ஹலோ, மிஸ்ஸஸ். அரவிந்த். இப்ப எப்படி ஃபீல் பண்றீங்க." என அவர் வேலைகளை தொடர்ந்தார்.

'மிஸ்ஸஸ். அரவிந்த்...' மனதிற்குள் ஒரு வெற்றிப் புன்னகையுடன் , "டாக்டர் ஐ அம் பீலிங் பெட்டர்." என்றவள் தன் அருகில் கைகளை பிசைந்து கொண்டு இருந்த அரவிந்தின் முகத்தில் கவலை அப்பட்டமாக தெரிய, அவனை ஏறிட்டாள்.

அவன் கண்களில் தெரியும் வலியை என்னவென்று எடுத்துக்கொள்வது என தெரியாமல் குழம்பினாள்.

' கடவுளே உனக்கு என்ன தான் வேணும்.இவன் ஏன் எனக்கு மட்டும் இப்படி ரியாக்ட் பண்றான். அதேசமயம் என்னைய புரிஞ்சுக்காம இப்படி அடைச்சு வச்சிருக்கான்.'

"மிஸ்ஸஸ்.அரவிந்த். யூ டோண்ட் நீட் டூ வொரி. யூ ஆர் ஆல்ரைட்.ஒரு இன்ஜக்ஷன் மட்டும் போட்டுர்ரேன்." என்றவர் ஊசியை போட்டு விட்டு, 'வெளியே வருமாறு' அரவிந்திடம் கண்களால் சைகை செய்ய, 'இப்போது வந்துவிடுகிறேன்.' என அவன் ஆனந்திக்கு சைகை செய்துவிட்டு மருத்துவரிடம் சென்றான்.

" டாக்டர் , ஆனந்திக்கு என்னாச்சு. ஏன் திடீர்னு மயக்கம் ஆயிட்டா."

" அரவிந்த் அவங்க ரொம்ப வீக்கா இருக்காங்க. "

"வீக்கா... ஆனா அவ கரெக்டா சாப்பிடுவாளே டாக்டர்."

அரவிந்தின் பதிலுக்கு சிரித்தவர்,

" மிஸ்டர். அரவிந்த். சாப்பிடுவதால மட்டும் ஒருத்தர் தெம்பா இருக்க முடியாது. அவங்க மனசும் அமைதியா இருக்கணும்.

கொஞ்ச நாளாகவே அவங்க மனசுல எதையோ போட்டு ரொம்ப குழப்பிக்கிட்டு இருக்காங்கன்னு நினைக்கிறேன். ரொம்ப டிப்ரஸ்ஸா இருக்காங்க.

உங்களுக்குள்ள என்ன ப்ராப்ளம் எனக்கு தெரியல. இப்பல்லாம் husband-wife எதையும் பேசுறதே இல்லை. ஒருத்தர் கூட ஒருத்தர் டைம் ஸ்பென்ட் பண்றதே இல்ல.

உங்களுக்குள்ளேயும் ஏதாவது ப்ராப்ளம் இருந்தா அத உங்களுக்குள்ள பேசி ஷாட் அவுட் பண்ணிக்க பாருங்க.

ஒருவேளை உங்களோட பிரச்சனை இப்படியே போயிட்டு இருந்தா ஐ அம் சாரி டூ சே, இதனால உங்க மனைவி ரொம்ப பாதிக்கப்படலாம். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும்" என்றவர் அரவிந்தின் கண்களில் குடியேறிய கண்ணீரை பார்த்தவர், ஆறுதலாக முதுகை தட்டி,

" எந்த ஒரு பிரச்சனைக்கும் ஒரு முடிவு இருக்கும். அதை பேசி தீர்த்துக் கிட்டா மட்டும்தான் பிரச்சினையை ஹேண்டில் பண்ண முடியும்.

உங்களை பார்க்கும் போதே தெரியுது. நீங்க உங்க வைஃப்ப எவ்வளவு லவ் பண்றீங்க. கேர் பண்றீங்கன்னு.

அத உங்களுக்குள்ளேயே வெச்சிட்டு இருந்தா எந்த யூசும் இல்ல.

உனக்காக நான் இருக்கேன்னு அவங்களுக்கு ப்ரூவ் பண்ணுங்க. என்ன பிரச்சனை இருந்தாலும் அவங்க உங்க கூட ஷேர் பண்ணிக்குவாங்க. அவங்க மைண்ட்டும் ரிலாக்ஸா இருக்கும்.

நான் சொன்னதெல்லாம் புரியும்னு நினைக்கிறேன்."

" புரியுது டாக்டர் . ரொம்ப நன்றி." என கைகூப்ப ,

"கமாண் , மிஸ்டர். அரவிந்த்." என புன்னகை சிந்தி விட்டு அங்கிருந்து கிளம்பினார்.


Rate this content
Log in

Similar tamil story from Romance