Salma Amjath Khan

Romance

4.2  

Salma Amjath Khan

Romance

நீயே என் ஜீவனடி 1

நீயே என் ஜீவனடி 1

3 mins
1.3K


'நான் என்ன பண்றேன். நான் ஏன் இவங்க கூட போறேன். ஓ மை காட் . ஏன் என்னால எதுவும் பண்ண முடியல. ஒரு கயிற காரணம் காட்டி இவங்களால எப்படி என்னை இவங்க கூட கூட்டிட்டு வர முடியும்.' என நினைத்தவளாய் சுற்றும் பார்த்தாள்.


' டிரைவர் சீட்டில ஒரு எருமை மாடு. அதுக்கு பக்கத்துல ஒரு எருமை மாடு. எனக்கு பின்னாடி ரெண்டு கெடா மாடு. இதெல்லாம் பத்தாதுன்னு எந்த உரிமையில என்னை உரசிட்டு உட்கார்ந்து இருக்கான்னு தெரியல. பார்க்க காட்டு பண்ணி மாதிரி இருக்கான்.' என ஓரக்கண்ணால் தன் அருகில் இருப்பவனை முறைத்துக் கொண்டு இருந்தாள்.


தன் விதியை நொந்தவள் தன் பார்வையை வெளியில் செலுத்தினாள்.


தென்றல் வந்து ஆறுதல் அளிப்பதாக அவளை அணைத்து உறவாடியது.


' இவ்வளவு அழகா இயற்க்கைய படைச்சியே, என் மேல அக்கறை இருந்திருந்தா என் வாழ்க்கையையும் கொஞ்சம் அழகா படிச்சிருக்கலாம்ல." என கடவுளை அர்ச்சனை செய்து கொண்டிருக்க,


" வண்டிய ஓரமா நிறுத்து" என அருகில் இருப்பவன் கட்டளையிட திடுக்கிட்டு திரும்பினாள்.


' இங்க எதுக்கு நிறுத்த சொல்றான். ஒருவேளை நம்மள இறக்கி விட போறானோ? இறக்கிவிடுறதா இருந்தா ஒரு பஸ் ஸ்டாப்ல இறங்கி விட வேண்டியதுதானே. இங்க இறக்கிவிட்டா நான் என்ன பண்ணுவேன்.'


அவளை ஒரு நொடி பார்த்தவன் அவளை சட்டை செய்யாமல் கதவை திறந்து வெளியே சென்று உடலை முறித்தான்.


அவன் இறங்கியதும் வண்டியில் இருந்த அத்தனை மாடுகளும் ஒவ்வொன்றாக இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தனர்.


" நீ என்ன சாப்பிடுற?" என்ற குரல் கேட்க தன் பார்வையை ஒருநிலைப்படுத்தி பார்க்க சற்று முன் தன் அருகில் இருந்தவன் வெளியில் நின்று தன்னை வெறிப்பதை பார்த்தாள்.


அதை கண்டும் காணாதது போல் பார்வையை வேறு புறம் திருப்பிக்கொண்டாள்.


' திங்கிறதுக்கு தான் வண்டிய நிறுத்துனியா நான் கூட என்னமோ நினைச்சேன்.' என எண்ண அவளை அவன் குரல் கலைத்தது.


" ஆனந்தி உன்னை தான் கேட்கிறேன். என்ன சாப்பிடுற?" என்றவனை முறைத்தவள்,


" ஆனந்தியா? எந்த உரிமையில என் பெயரை சொல்லி கூப்பிடுறீங்க. இந்த பேர் சொல்லி கூப்பிடுற வேலையெல்லாம் என்கிட்ட வெச்சுக்காதீங்க." என கை நீட்டி எச்சரித்தாள்.


'என்னை தவிர வேற எவனுக்கு அந்த உரிமை இருக்குன்னு நீ நினைக்கிற' என மனதிற்குள் நொந்தவன் அதை சொல்ல வாயால் ஆகாதவனாய் தன் பார்வையை இடது புறம் செலுத்தினான்.


அவன் கண்களில் இருந்த வலியை அவள் அறிய வாய்ப்பில்லை.


அதற்குமேல் அங்கும் நிற்க முடியாதவனாய் அருகில் இருந்தவனிடம் கண் காட்டி விட்டு நகர்ந்து சென்றான், அரவிந்த்.


'நாமலும் கீழே இறங்கலாம்' என கதவை திறப்பதற்குள் தன் கதவின் அருகில் வந்த ஒரு மாடு 


"நீங்க வண்டிய விட்டு இறங்க வேண்டாம்னு அண்ணே சொல்ல சொன்னாங்க."


' என்னை இறங்க வேண்டாம்ன்னு சொல்றதுக்கு நீ யாரு? உன் நொன்னே யாரு?' என மனதில் வசைபாடியவள் பாதி கதவு திறந்திருந்ததால் கதவை அடைத்தாள்.


அவளிடம் சொன்னவன் நகராமல் அதே இடத்தில் இருக்க அவனை எரித்து விடுவது போல் பார்க்க, அவன் திரும்பி நின்று கொண்டான்.


'எந்த இடத்தில் மாட்டிக் கொண்டோம்' என மனதிற்குள் புலம்பிக் கொண்டாள்.


' நான் என்னடானா இங்க உட்கார்ந்து புலம்பி கிட்டு இருக்கேன்.அவன் என்னனா எனக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத மாதிரி ஹாயா உக்காந்து டீ குடிக்கிறான். என்னை ஒரு மனுஷியா கூட மதிக்காம.' என புலம்ப,


" அண்ணே இந்த டீயை உங்க கிட்ட கொடுக்க சொன்னாங்க." என இதற்கு முன் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தவன் நீட்ட,


' பரவாயில்ல. எனக்கு வாங்கி கொடுக்கணும்ன்னாச்சு தோணுச்சே.' என யோசித்து கைநீட்ட, பின் எதை நினைத்தோ கையை உள்ளிழுத்து கொண்டாள்.


' என்ன பண்ற ஆனந்தி நீ. என்னமோ லவ் பண்ணி கல்யாணம் முடிஞ்சு ஹனிமூன் போற மாதிரில பிகேவ் பண்ற. அவன் உன்னை கிட்டத்தட்ட கடத்திட்டுப் போறான். அவன்கிட்ட பொறுமையா சூழ்நிலையைச் சொல்லி புரிய வைக்கிற வரை நீ எதுவும் சாப்பிடாம இருக்கிறதுதான் நல்லது.அப்பதான் சிம்பதி கிரியேட் பண்ண முடியும்.'


"என்னாச்சு அண்ணி .டீ குடிக்க மாட்டீங்களா? நான் வேணா காபி, இல்ல பால் வாங்கிட்டு வரவா?"


" என்ன அண்ணியா? போடா பன்னி ? " மனதில் நினைத்தவள் வாயை திறந்தே சொல்ல,


" வார்த்தையை அளந்து பேசு.பேசுறதுக்கு முன்னாடி எங்க இருக்கோம் யார்கிட்ட பேசுறோம்னு புரிஞ்சு பேசினா உனக்கு நல்லது." என அரவிந்த் முறைப்பாக வந்து நிற்க, கண்ணீர் முட்டிக் கொண்டு வந்து நின்றது ஆனந்திக்கு.


" பரவாயில்ல விடுங்க அண்ணே. அண்ணி என்னை தானே சொன்னாங்க."


" சரி டீயை அவ கிட்ட குடுத்துட்டு போ." என அரவிந்த் சொல்ல,


"எனக்கு ஒன்னும் வேணாம்" கோபமாக சொல்ல,


" நல்லதா போச்சு. வச்சிட்டு வந்து வண்டிய எடு குணா‌. மயிலம்மா நேரத்துக்கு வீட்டுக்கு வர சொன்னாங்க." என யாரையும் கண்டுகொள்ளாமல் சற்று திமிருடன் மீண்டும் அவள் அருகே வந்து உட்கார்ந்தவனை பார்க்க எரிச்சலாக வந்தது.


" நல்லதா போச்சாம்ல. எனக்கு என்னவோ இவன் என்னை புரிஞ்சு என்னை அனுப்பி வைப்பான்னு தோணல. மனசு கல்லாகி கோ டி. 


எப்படியாவது நைஸா பேசி அவனுக்கு புரிய வச்சுரு. 


அவன பன்னினு சொன்னதுக்கே இவ்ளோ கோவப்படுறான். இதுல நான் இவன காட்டு பன்னின்னு திட்டுனது தெரிஞ்சா .... " என நினைக்கும் போதே வியர்வை தொற்றிக் கொள்ள, குணா வண்டியை அரவிந்த் வீடு நோக்கி செலுத்தினான்.



Rate this content
Log in

Similar tamil story from Romance