Arul Prakash

Thriller

5  

Arul Prakash

Thriller

மர்ம சம்பவம்

மர்ம சம்பவம்

7 mins
519


ராஜன் , வயசு 60. அவர் இருக்கறது ஒரு கிராமம். அங்க ஒரு 50 குடும்பம் இருக்குற சின்ன ஊரு.

ராஜன் , ஒரு சாமியார் கிட்ட பேசிட்டு இருக்காரு.

ராஜன் : அய்யா.

சாமியார் : சொல்லுங்க, உங்க பிரச்சனை என்ன.

ராஜன் : நான் ஒரு பெரிய பணக்காரன் ஆனா எனக்கு குடும்பம் இல்ல, ஒரு accidentல என் பொண்டாட்டி பிள்ளை லாம் இரந்துடுச்சி

சாமியார் : இப்ப என்ன பிரச்சனை

ராஜன் : எனக்கு நிம்மதி இல்ல,ரொம்ப தனிமைய உணர்றேன்.

சாமியார் : யாரையாவது தத்து எடுத்துக்க வேண்டியது தான.

ராஜன் : எடுத்து இருக்கேன், ஆனா அவன் பெங்களூருல படிச்சிட்டு இருக்கான்

சாமியார் : சரி சரி. நீ யாருக்காவது கெடுதல் செஞ்சு இருக்கியா, இல்ல கெட்டது நினைச்சு இருக்கியா.

ராஜன் : இல்லையே.

சாமியார் : கெட்டது நினைக்காத மனுஷனே இல்ல, நீ பொய் சொல்ற

ராஜன் : ஹ்ம்ம் ஒருத்தனுக்கு செஞ்சிருக்கேன்.

சாமியார் : சொல்லு.

ராஜன் : ஒருத்தன் என் நண்பனா இருந்தான், அவன் பேரு ரங்கன். ஒரு 15 வயசு இருக்கும் போது அவன் கூட பழகினேன், அப்பறம் ஒரு நாள் ரெண்டு பேருக்கும் இடையே சண்டை வந்துடுச்சி.ரெண்டு பேரும் பேசல. அப்பறம் அவன் வேற பசங்க கூட பழிகினான். நான் அவன் கூட பழுகுற பசங்கள எல்லாம் என் நண்பனா ஆக்கிட்டேன், ரங்கன் கூட அவங்கள பேசவிடாம பாத்துக்கிட்டேன். என் கூட பேசலனா, அவன் கூட யாரும் பேச கூடாதுனு நினைச்சேன். அவன் கூட பழகுறவங்களுக்கு தண்ணி வாங்கி தரது, சாப்பாடு வாங்கி தரதுனு என் கிட்ட இருந்து காசு வச்சு அவங்கள என் பக்கம் வர வச்சேன். காசு இருந்த திமிர் என்ன அப்படி நடக்க வச்சது. அப்டி இப்படினு ஒரு 5 வருஷம் அவன் கிட்ட என் ஊருல எவனும் பேசாத மாதிரி பாத்துக்கிட்டேன். ஒரு நாள் அவனுக்கு கல்யாணம் ஆச்சி, என் கிட்ட வந்து, இனிமே நண்பர்கள் இல்லனா பரவா இல்ல எனக்கு என் பொண்டாட்டி இருக்கானு திமிரா என்கிட்டே வந்து சொன்னான், எனக்கு அது கோபத்த வரவச்சது. அடுத்த அவன் பொண்டாட்டி கிட்ட போய் ரங்கன்க்கு வேற ஒரு பொம்பளையோட கல்யாணத்துக்கு முன்னாடி தொடர்பு இருந்த விஷயத்தை சொன்னேன், அவன விட்டுட்டு அவன் பொண்டாட்டி போய்ட்டா, அப்போ ரொம்ப சந்தோஷ பட்டேன். இப்ப வருத்த படுறேன் நான் பண்ணது நினைச்சு.

சாமியார் : வேற என்ன கெட்டது செஞ்சி இருக்க.

ராஜன் : நான் கொஞ்சம் ஜாதி பாப்பேன், வேற ஏதும் இல்லை யா

சாமியார் : சரி விடு உன் பாரம் குறையும்னு தான் இந்த கேள்விய கேட்டேன். நீ நிம்மதி இல்லனு தானே சொன்ன

ராஜன் : ஆமா ஐயா.

சாமியார் : உன்கிட்ட பணம் நிறைய இருக்குனு சொன்னல.

ராஜன் : ஆமா சாமி.

சாமியார் : நீ என்ன பண்ணு, உன் கிட்ட இருக்க பணத்தை வச்சு இல்லாதவனுக்கு உதவி பண்ணு, உனக்கு நிம்மதி வரும்.

ராஜன் : அப்படியே செஞ்சிடுறேன் சாமி.

ராஜன் அவனோட வக்கீல் நண்பன் ராம கூப்பிட்டான்.

ராஜன் to ராம் : டேய் என்னோட ஒரு வீடு, கொஞ்சம் விவசாய நிலம், ரொம்பவே கஷ்டத்துல இருக்க ஒரு ஆளுக்கு குடுக்கலாம்னு இருக்கேன்.

ராம் : டேய் நானே கஷ்டத்துல தான் இருக்கேன், எனக்கு கொடுத்துடு.

ராஜன் : விளையாடாத டா. எங்க ஊருல இருக்க ஒருத்தர்க்கு தான் கொடுப்பேன், நீ வேற ஊரு காரன்.

ராம் : சரி அது கொஞ்சம் பணமா எல்லாருக்கும் கொடுத்துடலாம்ல.

ராஜன் : கஷ்ட்டத்துல இருக்குற ஒருத்தன வாழக்கையை செட்டில் பண்ணா அவன் பரம்பரையே நம்மள வாழ்த்தும்ல.

ராம் : உன் பணம் உன் முடிவு.

ராஜன் இது மாதிரி கஷ்ட படுற ஒருத்தர்க்கு உதவி பண்ணலாம்னு இருக்கேனு அந்த கிராமத்துல அறிவிக்கிறான். அந்த ஊர்ல யாருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்னு ஒரே ஆவலா இருக்காங்க ஊர் மக்கள்.

ராஜன் கிட்ட சில பேரு , தனியா வந்து பேசுறாங்க.

மங்களம் to ராஜன் : ஐயா வணக்கம்.

ராஜன் : வாங்க மா

மங்களம் : என் பரம்பரையே உங்க நிலத்துல தான் வேல செஞ்சி இருக்கோம்.

ராஜன் : தெரியும் மா, உன் புருஷன் கூட நம்ம நிலத்துல் தானே வேல செய்யுறான்.

மங்களம் : ஆமா நீங்க வீடும் நிலமும் இல்லாதவங்களுக்கு கொடுக்கலாம்னு இருக்கீங்கல, அது எனக்கு கொடுத்தீங்கனா நல்லா இருக்கும்.

ராஜன் : ஹா ஹா அதுவா, அது பத்தி அறிவுக்கும் போது தெரியும்.

மங்களம் : எங்கள கொஞ்சம் ஞாபகம் வச்சி கொங்க.

ராஜன் : சரி சரி.

அடுத்து ரவினு ஒருத்தர், ராஜன பாக்க வராரு.

ராஜன் : வா பா. என்ன இந்த பக்கம்.

ரவி : உங்களை பாத்துட்டு போலாம்னு தான்.

ராஜன் : சொல்லு.

ரவி : நீங்க சொன்னது அப்பறம், நான் திருடரத விட்டுட்டேன்.

ராஜன் : இல்லையே உன்ன போலீஸ் போட்ட அடில தான் விட்டுட்டேன்னு சொன்னாங்க.

ரவி : கலாட்டா பண்ணாதீங்க ஐயா.

ராஜன் : என்ன விஷயமா வந்த.

ரவி : திருட்டு தொழிலையும் விட்டுட்டேன், இப்ப கஷ்டத்துல இருக்கேன். அந்த வீடும் நிலமும் எனக்கு தந்தா நல்லா இருக்கும்.

ராஜன் : சரி பார்ப்போம்.

ஒரு வாரம் கழிச்சு ராஜன்,அந்த ஒருத்தர தேர்ந்துடுத்துட்டாரு. லட்சுமினு ஒரு லேடி தான் அந்த ஊர்லயே ரொம்ப கஷ்டப்படுறா புருஷன் செத்துட்டான் ஒரு பொண் குழந்தை இருக்குனு , அவளுக்கு தான் வீடும் நிலமும்னு அறிவிச்சுடுறாரு. ஊர்ல பல பேரு அந்த பெண்ணுக்காக சந்தோஷ பட்டாங்க , சில பேரு வயிறு எரிஞ்சாங்க.

அந்த சில பேருல மங்கலமும், ரவியும் இருந்தாங்க.

மங்களம் தனக்கு வீடு கிடைக்காத காரணத்தால, ராஜன் மேல மன்ன வாரி எரிஞ்சு சாபம் விட்டுட்டு போனா. இனிமே உன் நிலத்துல வேல செய்யமாட்டேன், வேற வேல பாத்துக்கிறேன்னு, கோபமா போய்ட்டா.

ரவி தண்ணி போட்டுட்டு, அவன் நண்பன் மனோஜ் கிட்ட பேசிட்டு இருக்கான்.

ரவி போதையில பேசுறத மனோஜ் போன்ல விளையாட்டுக்கு வீடியோ எடுக்குறான்.

ரவி to மனோஜ் : டேய் அந்த ராஜன பாத்தியா டா, நான் போய் வீடு என் மேல எழுதி வைக்க சொல்லியும்,அந்த லட்சுமி மேல எழுதிட்டான். ஒரு பொண்ணா இருந்தா எனக்கும் அந்த வீடு கிடைச்சு இருக்கும்ல. இல்ல டா என் மனசு கேட்கல, அவன கொள்ளலாம்னு முடிவு பண்ணிட்டேன். டேய் வீடியோ எடுக்காத டா.

மனோஜ் : காமெடியா இருக்கு, விடு. நாளைக்கு இந்த வீடியோ பாத்தா நீயே சிரிப்ப

ரெண்டு நாள் கழிச்சு.

ராஜன் வீட்டுக்கு, ஒவ்வொரு வேலையும் ஜனானு ஒருத்தர் சாப்பாடு வச்சிட்டு போவாரு, அன்னைக்கு காலையில வச்சிட்டு போன சாப்பாடு சாப்பிடாம இருக்கு, அதுனால ராஜன போய் அவர் ரூம்ல பாக்க போன, ஜனாவுக்கு அதிர்ச்சி, ராஜன கத்தியால கழுத்தை அறுத்து கொலை பண்ணி இருக்காங்க

போலீஸ் தெரிஞ்சி,விசாரணைக்கு வந்திடுறாங்க. S.I, சில constables வந்து இருகாங்க. ராஜனோட வளர்ப்பு பையன் சிவா வந்து இருக்கான்.

S.I to constable : யாரு யா அவன்.

constable : அவன் ராஜனோட வளர்ப்பு பையன்.

S.I : அவன விசாரி, கொலை நடக்கும் போது எங்க இருந்தானு செக் பண்ணு.

constable : அவனையும் சந்தேக படுறீங்களா சார்.

S.I : யோவ் இந்த காலத்துல காசுக்காக என்ன வேணா பண்ணுவாங்க. சரி மங்களம் வர சொல்லு

S.I to மங்களம் : நீ தான் மங்களமா.

மங்களம் : ஆமா சார்.

S.I : நீ தான ரெண்டு நாள் முன்னாடி ராஜன் மேல மன்ன தூவி சாபம் விட்டது.

மங்களம் : மண்ணு நிறைய மேடா இருந்தது, எடுத்து தூக்கி போடும் போது அவர் குறுக்குல வந்துட்டாரு.

S.I : ஓ அப்படியா, நக்கல் பேச்சு, போலீஸ் ஸ்டேஷன்ல விசாரிச்சா, உண்மைய சொல்லுவ.

மங்களம் : சார் உண்மைய சொல்லிடுறேன், எனக்கு வீடு கிடைக்கிலேனு, சாபம் விட்டுட்டேன், மத்தபடி நான் கொலை பண்ணல.

S.I : விசாரிக்க கூப்பிடும் போது வரணும்.

மங்களம் : சரி சார்.

வீடு வாங்குன லட்சுமியை கூப்பிட்டு போலீஸ் பேசுறாங்க.

S.I : to லட்சுமி : நீங்க எப்போ கடைசியா ராஜன பாத்திங்க.

லட்சுமி : நேத்து மதியம் சாப்பிட குழம்பு கொடுத்துட்டு வந்த போது, பாத்தேன்.

S.I : அவர் தான் உங்களுக்கு வீடு எல்லாம் கொடுத்து இருக்காரே, அப்பறம் எதுக்கு அவர கொன்னிங்க.

லட்சுமி : அது தான் எனக்கு அவரு அவளோ செஞ்சி இருக்காரு ல, நான் ஏன் அவர கொள்ளணும்.

S.I : கூப்பிடும் போது விசாரணைக்கு வரணும்.

லட்சுமி : ஓகே சார்.

constable to S.I : இவங்களையும் சந்தேக படுறீங்களா.

S.I : யோவ் போலீஸ் காரன் எல்லாரையும் சந்தேக படனும். சரி ராஜன் வீட்டுக்கு பின் வாசல் வழியா போய் பாக்கலாம்.

அங்க ஒரு கண்ணு தெரியாத பாட்டி உட்கார்ந்துட்டு, பிச்சை எடுத்துட்டு இருக்கு.

constable போய் பாட்டி கிட்ட, நீங்க யாருனா சந்தேகபடுறமாதிரி பாத்திங்களா.

S.I : யோவ் கண்ணு தெரியாதவங்க எப்படி பாப்பாங்க. நல்ல ஆளு யா நீ.

S.I to பாட்டி : ஏன் பாட்டி இங்க உட்கார்ந்து பிச்சை எடுக்குற, நல்லா ஆள் நடமாட்டம் இருக்க இடத்துல உட்கார வேண்டியது தானே.

பாட்டி : கூட்டினு போய் விட்டா உட்காருவேன்.

S.I பாட்டிய கூட்டினு போய், ஒரு மரத்தடில விட்டுடுறான்,100 ரூபா அவங்க தட்ல போடுறான்.

ராஜன் வீட்டுக்கு கிட்ட, திருடன் ரவியும், மனோஜும் இருக்காங்க.

ரவி to மனோஜ் : நமக்கு வீடு தரலைனு அந்த கடவுளே அவன போட்டு தள்ளிட்டான்.

மனோஜ் : ஆமா கடவுளுக்கு வேற வேல இல்ல பாரு.

S.I, ரவியும் மனோஜும் பாத்து, விசாரிக்குறாங்க.

S.I : டேய் நீங்க அந்த திருட்டு பசங்க தான.

ரவி : சார் நாங்க இப்போ திருந்திட்டோம்.

S.I : ஆமா யாரு போன் கைல வச்சு இருக்கிங்க.

ரவி : எங்களது தான் சார்.

S.I :காட்டுங்க.

போலீஸ் வாங்கி ரெண்டு பேர் phoneஉம் செக் பண்றங்க. மனோஜ் போன்ல ரவி ராஜன கொலை பண்ணனும்னு சொன்னதும் வீடியோவா இருந்தது. ரவி, இந்த வீடியோவ டெலீட் பண்ணலயா கேட்க. போலீஸ் இவங்கள அடிச்சு தொவைக்கு ஆரமிச்சாங்க.

constable to S.I : சார், ராஜனோட phone அவர்

bed கீழ இருந்தது. கடைசியா ஒருத்தர் ரெண்டு தடவ கால் பண்ணி இருக்காரு.

S.I : truecaller ல அவர் பேரு செக் பண்ணியா.

constable : பேரு ரங்கன்னு காட்டுது.

S.I : அந்த நம்பர்க்கு கால் பண்ணுங்க.

S.I ரங்கன விசாரிக்கிறாரு.

ரங்கன் : அவன் சின்ன வயசுல என் friend, அதுனால ரொம்பவே கழிச்சு பாக்க போனேன்.

S.I : நீ ராஜன பாத்ததா சொல்ற டைம்மும், ராஜன் செத்த டைம்மும் ஒரு டைம் னு சொல்லிட்டு ரங்கன

போலீஸ் அடி வெளுக்குறாங்க.

ரங்கன் ஒரு டைம்க்கு மேல அடி தாங்க முடியாம

ரங்கன் : நான் தான் சார் கொன்னேன், என் வாழ்க்கையே அழிச்சிட்டான் சார். என்னை யாரு கூடவும் பழக விடல, என் பொண்டாட்டியும் என் கிட்ட இருந்து பிரிச்சான், நான் படிக்கலனாலும் ஒரு நல்ல வேலைல இருந்தேன், அந்த வேலையும் புடிங்கிட்டான். அதுக்கு அப்பறம் எனக்கு நல்ல வேலையும் கிடைக்கல, என் பொண்டாட்டி வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிக்கிட்டா. மொத்தத்துல என் வாழ்க்கையே நாசமா போச்சு. அவன கொள்ளணும் திடிர்னு தோணுச்சு. ஊர்க்கு திரும்ப வந்தேன் அவன் போன் நம்பர் ஒருத்தன் கிட்ட கிடைச்சது, அவனுக்கு போன் பண்ணேன் அவன் எடுக்கல, நேரா அவன் வீட்டுக்கு போய் பேச்சு கொடுத்தேன், திடிர்னு கத்தி எடுத்தேன் அவன கொன்னுட்டேன். அவன் நம்பர போன் பண்ணது டெலீட் பண்ணனும் மறந்துட்டேன், மாட்டிக்கிட்டேன்.

போலீஸ் கேஸ முடிச்சிகிச்சு.

ஒரு நாள் நைட் அந்த ஊர்ல கண்ணு தெரியாத பாட்டி ஒன்னு இருந்ததே, அது, அந்த வீடும் நிலமும் வாங்குன லட்சுமி வீட்டுக்கு சாப்பாடு கேட்டு வருது.

லட்சுமி சாப்பாடு போட ஒரு தட்டுல சாப்பாடு எடுத்துக்கிட்டு வரா, போன் பேசிட்டே, திடிர்னு குக்கர் விசில் அடிச்சுது, சாப்பாட வெளிய ஒரு டேபிள் மேல வச்சிட்டு போயிடுறா. kitchen ல இருந்து வெளியே வந்த உடனே, அந்த பாட்டிக்கு சாப்பாடு போடல, தட்ட டேபிள் மேல வச்சிட்டோம் ஞாபகம் வந்துது உடனே வெளிய எட்டி பாக்குறா. அந்த பாட்டி சுத்தி மத்தி பாத்துட்டு, அந்த டேபிள் மேல இருந்த சாப்பாட தானே நடந்து வந்து எடுத்து சாப்பிடுறா. லட்சுமி அதிர்ச்சி ஆகுறா.

லட்சுமி to பாட்டி : ஹே இரு உனக்கு கண்ணு தெரியுமா.

பாட்டி ஷாக் ஆகிடுது.

லட்சுமி : இரு ஊரையே ஏமாத்திறியா, உன்ன பத்தி ஊர்ல சொல்றேன்.

பக்கத்து வீடு எதிர் வீடு னு எல்லாரையும் கூப்பிடரா.

பாட்டி : சாப்பாட்டுக்கு தானே மா நான் பண்ணேன், நான் என்னை இந்த வயசுல உழைக்கவா முடியும்.

லட்சுமி ஊற கூப்பிட்டே இருக்கா.

பாட்டி : நீ தான் ராஜன கொன்னேன்னு எனக்கு தெரியும்.

லட்சுமி : என்ன.

பாட்டி : நீ தான் ராஜன கொன்னனு எனக்கு தெரியும் இப்ப கேட்டுச்சா.

லட்சுமிக்கு வேர்க்க ஆராமிச்சிடுது.

லட்சுமி : உனக்கு எப்படி தெரியும்.

பாட்டி : நீ பின் வாசல் வழியா எகிறி குதிச்சு வீட்டுக்கு போனத நான் பாத்தேன்.

லட்சுமி : வா உள்ள போய் பேசலாம்

வீட்டுக்குள்ள போய்ட்டாங்க

பாட்டி: இப்போ சொல்லு ஏன் கொன்னேன்னு.

        பிளாஷ் பேக் (முன்பு நடந்தது)

ராஜன் அன்னைக்கு என்னை திடிர்னு மதியம் கூப்பிட்டாரு. அவர் சாப்பிடறதுக்கு குழும்பு கூட எடுத்துட்டு போனேன்.

ராஜன் : வா மா.

லட்சுமி : என்ன ஐயா கூப்பிட்டு இருந்திங்க.

ராஜன் : நீ என்ன பண்ற, நான் உனக்கு கொடுத்த வீடும் நிலமும், நான் சொல்ற ஆளுக்கு எழுதி வச்சிட்டு, ஊற விட்டுட்டு ஓடி போய்டுற.

லட்சுமி : ஐயா என்னை சொல்றிங்க.

ராஜன் : ஊருல அவ்ளோ பேரு இருந்தும், உனக்கு வீடு எழுதி வச்சது எதுக்கு தெரியுமா,நீ நம்ம ஜாதிக்கார பொண்ணுனு தான்.

லட்சுமி : நான் உங்க ஜாதி தான் ஐயா.

ராஜன் : அது தெரியும், நீ கல்யாணம் பண்ணி ஒருத்தன் செத்துட்டானே, அவன் வேற ஜாதி தானே. எனக்கே இந்த மேட்டர் இப்ப தான் தெரியும். நீ என்ன பண்ற சொத்தை நான் சொல்ற ஆளு மேல எழுதி வச்சிட்டு சொல்லிக்காம இந்த ஊற விட்டு போய்டுற.

லட்சுமி : நான் ஊர்ல எல்லார்கிட்டயும் இத சொல்லுவேன்.

ராஜன் : உன் குழந்தை உயிர் மேல ஆசை இல்லனா சொல்லு.

நான் வந்துட்டேன் வீட்டுக்கு.

அதுக்கு அப்பறம் நைட் யோசிச்சேன், அவன கொன்னுடுலாம்னு, அப்போ தான் நைட் பின் வாசல் வழியா எகுறி குதிச்சு போனேன். அவன் கொள்ளலாம்னு கத்திய எடுத்து அவன் கழுத்துல குத்த போனேன் அவன் என் கை புடிச்சிட்டான், அப்போ பார்த்து திடிர்னு ஒருத்தர் வந்தாரு, அவர் பேரு ரங்கன். அவன் சாக வேண்டியவன் தான் சொல்லி ராஜன் கைய புடிச்சிக்கிட்டாரு, நான் தான் ராஜன கொன்னேன். கொலை கேஸ்ல மாற்ற மாதிரி இருந்தா நான் பழிய எடுத்துக்கிறேன் நீ வாழ வேண்டிய வயசுனு ரங்கன் சொன்னாரு.

இன்றைய நாள்.

பாட்டி : ஓ இது தான் நடந்ததா.

லட்சுமி : வெளிய சொல்லிட மாட்டியே.

பாட்டி : சொல்ற மாதிரி இருந்தா எப்பவோ சொல்லி இருப்பேன்.

லட்சுமி : நன்றி.

பாட்டி : அந்த சாப்பாட கொஞ்சம் குடுத்தா நல்லா இருக்கும்.

லட்சுமி : கவலை படாத, இனி நீ இங்கயே தங்கிகலாம், நான் சாப்பாடு போடுறேன்.



Rate this content
Log in

Similar tamil story from Thriller