DEENADAYALAN N

Inspirational

5.0  

DEENADAYALAN N

Inspirational

குறைகளே நிறைகளாகலாம்

குறைகளே நிறைகளாகலாம்

1 min
153




டிசம்பர் 5, 2019




கோவையில்தான் என் படிப்பு முழுவதும். அப்பொழுதெல்லாம் SSLC (பதினோராம் வகுப்பு); பின் PUC; அதன் பின் தான் B.A. B.Sc., போன்ற பட்டப்படிப்புகள். அப்போதெல்லாம் பெரும்பாலான குடும்பங்களில் கல்லூரிப் படிப்பு என்பதே கானல் நீர்தான்! அதிலும் – நம்பினால் நம்புங்கள் – B.E. போன்ற படிப்பு பற்றி நானெல்லாம் அப்போது எதுவுமே அறிந்திருக்கவில்லை.


அந்த சமயத்தில் திடீரென்று B.Com. படிப்பிற்கு ஒரு மவுசு கூடியது. கல்லூரியில் சேர விரும்பிய பலர் B.Com படிப்பில் சேரவே விரும்பினார்கள். அதில் இடம் கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாகி விட்டது. PUC முடித்திருந்த நான் எப்படியாவது B.Com.-இல் சேர என்னாலான எல்லா முயற்சிகளையும் எடுத்தேன். PUC யில் commerce இல்லை என்கிற பெரும் குறையால், நெருங்க முடியவில்லை. 


கடைசியில் வேறு வழியின்றி B.Sc., கணிதம் சேர்ந்தேன். ஓரிரு மாதங்கள் படிப்பில் மனது ஒட்டவே இல்லை. போகப் போக என் B.Com ஆசையை ஒரு கெட்ட கனவாக கருதி கணிதப் படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.


இவ்வளவு சொன்ன நான் ஒரு உண்மையை சொல்லியாக வேண்டும். B.Com படித்திருந்தால் நான் அதிக பட்சம் ஒரு வங்கியில் கிளை மேலாளர் பதவியை அடைந்திருக்கலாம். ஆனால் B.Sc., கணிதம் படிப்பில் எனக்கு கணினியும் ஒரு பாடப் பிரிவாக இருந்ததால் ஒரு விஞ்ஞான இலாகாவில் அப்போதே கணினித் துறையில் பணி புரியும் நல்வாய்ப்பைப் பெற்றேன்.

 





రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్

Similar tamil story from Inspirational