கற்றபடி நட!
கற்றபடி நட!


கடனை வாங்கி வீடு வாங்கக்கூடாது என நினைக்கிறவன் நான். என்னைப்போய் கடன் வாங்கி வீடு வாங்கச் சொல்றீங்களே! என ராஜா அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்ததை அண்ணன் ரகு கேட்டுக்கொண்டிருந்தான்.
சன்னலை ஒட்டி பக்கத்து இடத்தைப் பார்த்தபடி நின்றிருந்த அண்ணன் ரகுவைப் பார்த்து என்ன அண்ணா? பக்கத்து இடம் விலைக்கு வருதா? அம்மா தொந்தரவு செய்றாங்களா?
ஆமாம்பா! படுக்க,போர்த்திக்க போர்வை வாங்கித் தர்ற அளவுதான் வசதி இருக்கு...
அந்த இடம் நம்ம படிக்க வைக்கிறதுக்காக வித்தாங்களாம். இப்ப நீங்க நல்லாத்தானே சம்பாதிக்கறீங்க.........வாங்குன்னா எப்படி முடியும்?
இலஞ்சம் வாங்குன்னு சொல்றாங்களா?
அதை நினைவு வச்சுக்கற நிலையில் அவங்க இல்லை. பக்கத்து இடம்னு மட்டும் நம்மளோடதுன்னு நல்லா ஞாபகம் இருக்கு.....அதை வாங்கினவங்க இப்ப வெளிநாட்டில் செட்டில் ஆயிட்டாங்க....திரும்ப அது நம்ம இடம்னு அம்மாட்ட பேசியிருக்காங்க...அதான்.....
சரி! அந்த பக்கத்து வீட்டுஇடத்துக்காரன் மொபைல் நம்பர் தாருங்கள். நான் பேசிப்பார்க்கிறேன். ஆனால் இலஞ்சம் வாங்கமாட்டேன். மாதாமாதம் சீட்டு போட்டு வைத்திருக்கிறேன். அதில் முடியுதான்னு பார்ப்போம் எனக் கூறிய தம்பியை அண்ணன் ரகு நிமிர்ந்து பார்த்தான்.
ரொம்ப கஷ்டப்படுத்தறமாதிரி தோணுதா?
இல்லையண்ணா! வாழ்க்கையில் எல்லாத்துக்குமே பணம் எடுத்து வைக்கணும்னு சொல்றப்ப நீதிக்காக நிறைய தியாகங்கள் செய்யவேண்டி இருக்கு..இலஞ்சம் என் ஆபிசில் ஒத்துக்கிட்டா கொட்ட தயாராய் இருக்கானுங்க....அப்ப படிச்ச பாடங்களுக்கு அர்த்தம் இல்லாமல் போய்டும் இல்லையா! என்றபடி வெளியே சென்ற ராஜாவை ரகு மௌனமாகப் பார்த்தபடி இருந்தான்.