கொன்றவனை தேடி
கொன்றவனை தேடி
சிவா வயசு 20, இவர் ஒரு hacker.ரேகா,வயசு 30 இவங்க ஒரு private detective
சிவா to ரேகா : ஹாய் மேடம், என் பேரு சிவா . நீங்க தான private detective ரேகா.
ரேகா : நான் தான் சார் ரேகா, உங்களக்கு நான் என்ன பண்ணனும்.
சிவா : நீங்க என்னோட அண்ணனை யாரு கொன்னானு கண்டு பிடிக்கணும்.
ரேகா : நீங்க ஏன் போலீஸ் கிட்ட போகல
சிவா : இல்ல மேடம், போலீஸ் 2 மாசமா தேடுறன் சொல்ராங்க, ஆனா எந்த ஒரு பிரயோஜனமும் இல்ல.
ரேகா : நீங்க ஏன் இதை கொலைனு நினைக்கிறீங்க.
சிவா : தலையை வெட்டி ஒரு இடுத்துல போட்டு இருந்தாங்க, ஆனா யாரு அதை பண்ணதுனு தெரியல.
ரேகா : உங்களக்கு யாரு மேலனா சந்தேகம் இருக்கா.
சிவா : அது வந்து.
ரேகா : மறைக்காம சும்மா தைரியமா சொல்லுங்க.
சிவா : என் அண்ணனோட மனைவி மேல சந்தேகம் இருக்கு.
ரேகா : ஏன் அந்த சந்தேகம்.
சிவா : நான் வெளிஊர்ல ethical hacker ah வேல செய்யுறேன். அண்ணன் சாவுக்காக இந்த ஊருக்கு வந்தேன். இங்க ஊருக்காரங்க எல்லாம், எங்க அண்ணிக்கும், எங்க அண்ணனோட நண்பனுக்கும் தொடர்பு அதுனால தான் என் அண்ணனை அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து கொன்னுட்டாட்டங்கனு பேசிக்கிறாங்க.அதுனால தான் சந்தேகம் படுறேன். எங்க அம்மாவும் என் அண்ணிக்கூட தான் இருக்காங்க, அவங்க கிட்ட இத பத்தி தைரியமா கேட்க முடியல.
ரேகா : சரி இந்த case ah நான் எடுத்துக்குறேன். ரெண்டு நாள்ல இந்த வேலைய ஆரமிச்சிடுவோம்.
----------------- ரெண்டு நாள் கழிச்சி -----------------
ரேகா to சிவா : இப்ப உங்க அண்ணிக்கு, உங்க அண்ணன் நண்பர்க்கும் தொடர்பு இருக்கானு கண்டுபுடிக்கணும்.
சிவா : எப்படி மேடம் கண்டுபுடிக்க போறீங்க.
ரேகா : நான் இல்ல, நீங்க தான் கண்டு பிடிக்க போறீங்க.
சிவா : நான் எப்புடி மேடம்.
ரேகா : நீ hacker தான, அவங்க போன் messagesல என்ன பேசுக்கிறாங்கனு, check பண்ணு.
சிவா : ஓகே மேடம் ஒரு நாள் டைம் கொடுங்க.
ரேகா : ஓகே.
----------------ஒரு நாள் கழிச்சி ------------
ரேகா to சிவா : என்ன சிவா கண்டுபுடிச்சீங்க.
சிவா : கதையில ஒரு ட்விஸ்ட்.
ரேகா : என்ன அது.
சிவா : அவங்க messagesலாம் வாசிச்சு பாத்தேன், அவங்க ரெண்டு பேரும் அண்ணன் தங்கச்சியா பேசிக்குறாங்க.
ரேகா : இது என்ன புது கதை, ஒரு வேல யாருக்கும் அவங்க மேல சந்தேகம் வந்துட கூடாதுனு அப்படி மெசேஜ் பண்ணிக்கிறாங்களா.
சிவா : மேடம் இல்ல, அவங்க ரெண்டு பேரும் பேசுறத ஒளிஞ்சு இருந்து கேட்டன், அவங்க அண்ணன் தங்கச்சியா தான் பேசுகிறாங்க.
ரேகா : அப்போ இவங்க ரெண்டு பேரும் கொலை பண்ணி இருக்க வாய்ப்பு இல்ல. இவங்கள விசாரிச்சா ஏதாச்சும் துப்பு கிடைக்கும்.
சிவா : சரி மேடம், இன்னைக்கு மாலை 6 மணி போலவே அவங்க ரெண்டு பேரையும் பாத்து விசாரிச்சிடலாம்.
ரேகா :உங்க அம்மாவையும் விசாரிக்கணும், அவங்களையும் இருக்க சொல்லுங்க.
சிவா : சரி மேடம்.
மாலை விசாரணைக்காக ரேகா, சிவா வீட்டுக்கு போறாங்க. அங்க சிவாவின் அண்ணி ரம்யா, சிவாவின் அண்ணன் நன்பர் ரவி, சிவாவின் அம்மா இருக்காங்க.
ரேகா to சிவாவின் அண்ணி : உங்களையும் ரவியும் வச்சு ஏன் இந்த ஊரு தப்பா பேசுது.
சிவாவின் அண்ணி : அதற்க்கு காரணம் என் புருஷன் முருகன் பைத்தியம் ஆனது தான்
சிவா : என்ன அண்ணன் பைத்தியம் ஆனாரா. எப்படி
ரவி : அதுக்கு நீ தான் காரணம்.
சிவா : நானா,எப்படி.
ரவி : நான் உங்க அண்ணனோட நண்பன் சின்ன வயசுல இருந்து, உன் அண்ணனுக்கு உன் மேல சின்ன வயசுல இருந்தே பொறாமை.
சிவா : என் கிட்ட பொறாமை பட என்ன இருக்கு.
ரவி : நீ எப்போவுமே உங்க அண்ணன் பண்ற எல்லாம் விஷயத்தையும், பாத்து பாத்து நீ பண்ணுவ, அவன பார்த்து கிரிக்கெட் விளையாடுவ, ஆனா உங்க அண்ணன விட நீ கிரிக்கெட் நல்லா விளையாடுவ, உங்க அண்ணன பார்த்து படிக்க ஆராமிச்ச, ஆனா அவனை விட நீ நல்லா படிப்ப. அவன் எது பண்ணாலும் நீ அத அவனை விட சிறப்பா பண்ணுவ.
சிவா : ஆனா இப்ப அவன் பைத்தியம் ஆனதுக்கு நான் எப்படி காரணம்.
ரவி: நீ உங்க அண்ணன பாத்து தான் எல்லாமே பண்ணுவ, அதனால உன்ன தப்பான வழிக்கு கொண்டுபோக அவன் முடிவெடுத்தான். அவன் உன் முன்னாடி சிகெரட் புடிக்க ஆரம்பிச்சான், நீ அவன் பிடிக்குறானு 15 வயசுல சிகெரட் பிடிச்ச. நீ சிகரெட் பிடிச்சதை பார்த்து உங்க அப்பா உன்ன ஸ்கூல் hostelல செத்துட்டாரு. காலேஜும் ஹாஸ்டல்ல தான் படிச்ச. காலேஜ் படிக்கும் போது பாதியிலே நீ hacker ஆயிட்ட. நல்லா சம்பாதிக்க ஆராமிச்ச. உங்க வீட்ல உன்ன பத்தி ரொம்ப பெருமையா பேசுவாங்க, உடனே அது அவனக்கு பொறாமைய வரவச்சுது. அதுல, நான் பண்ணறது தானே அவன் பண்ணுவான் எப்படி நல்லா சம்பாரிக்க ஆராமிச்சான்னு சொல்லிட்டே பைத்தியம் ஆகிட்டான்.
சிவா : இத ஏன் என் கிட்ட மறச்சிங்க.
ரவி : உன் மேல பொறாமை பட்டு தான் பைத்தியம் ஆனானு உனக்கு தெரிஞ்சா நீ வறுத்த படுவண்ணு உன்கிட்ட சொல்லல.
ரேகா to ரவி : சரி. எதுனால உங்களையும் ரம்யாவையும் சேத்து வச்சி ஊர்ல இருக்கவங்க எல்லாம் பேசுறாங்க.
ரவி : முருகனுக்கு பைத்தியம் பிடிச்சு, அது ஊர்ல இருக்கவங்களுக்கு தெரியாம hospitalக்கு கூட்டிட்டு போவோம். நானும் ரம்யாவும் hospitalக்கு போற வரத பாத்து, எங்க ரெண்டு பேர்க்கும் தொடர்புனு நினைச்சிட்டாங்க. முருகன் அம்மாக்கு அடிக்கடி உடம்பு முடியாம போறதால. நானும் ரம்யாவும் முருகனை ஹாஸ்பிடல்க்கு கூட்டிட்டு போவோம்.
ரேகா : வேற யாருக்கு முருகன் பைத்தியம்னு இந்த ஊர்ல இருக்குறவங்களுக்கு தெரியும்.
சிவாவின் அம்மா : இந்த ஊரு சாமியார்க்கு தெரியும்.
ரேகா : நீங்க வேற யாரு மேலனா சந்தேக படுறீங்களா.
ரவி : முருகன் செத்த அன்னைக்கு, செத்த இடத்துல,ஜாதி பிரச்சனையில ரகுனு ஒருத்தன் நாலு பேர வெட்டுறதுக்கு கத்தியோட ஓடுனதா ஊருக்குள்ள பேசிக்கிறாங்க. அவன் ஆள மாத்தி முருகன வெட்டி இருக்க வாய்ப்பு இருக்கு.
ரேகா : அந்த ரகு வீடு எங்க இருக்கு.
ரேகாவும் சிவாவும் ரகு வீட்டுக்கு போறாங்க.
ரேகா to ரகு : என் பேரு ரேகா, நான் ஒரு detective.
ரகு : சொல்லுங்க மேடம்.
ரேகா : நீங்க ஒரு ஜாதி பிரச்சனையில ஒருத்தன ஆளு மாத்தி கொன்னுட்டீங்க, அப்படி தான. நீ கொன்னவர் பேரு முருகன்.
ரகு : மேடம் நான் யாரையும் கொள்ளல, அன்னைக்கு என்ன ஆச்சினா, நான், என் நண்பர்கள் எல்லாம் பேசிட்டு இருக்கும்போது, திடிர்னு ஜாதி பத்தி பேசி, சண்டை ஆகிடுச்சு, அப்ப கத்தி தூக்கிட்டு என் நண்பர்கள வெட்ட ஓடினே, யாரையும் வெட்டல, எல்லாரும் ஓடிட்டாங்க. அப்பறம் என் நண்பர்கள் கிட்ட பேசிட்டேன், மன்னிப்பும் கேட்டுட்டேன்.
ரேகா : நீங்க அன்னைக்கு அதே இடத்துல , முருகன கொலை பண்ணத பாத்திங்களா.
ரகு : இல்ல மேடம், நான் பாக்குல.ஆனா
ரேகா : என்ன ஆனா
ரகு : நம்ம ஊரு சாமியார பாத்தேன் அங்க
ரேகா : சாமியாரா, அவரோட போட்டோ இருக்கா.
ரகு : திருவிழால எடுத்த போட்டோ இருக்கு, பாருங்க.
ரேகா : அந்த போட்டோவை என் போன்க்கு அனுப்புக்குங்க.
ரகு : சரி மேடம்.
ரேகா சிவா வீட்டுல இருக்காங்க, அவங்க வீட்ல இருக்கவங்க எல்லாம் இருக்காங்க.
சிவாவின் அம்மா to ரேகா : என்ன மா, யாரு கொலபண்ணாங்க கண்டுபுடிச்சியா.
ரேகா : இல்ல மா. ரகுவ விசாரிக்கும் போது, ஒரு சாமியார் இருந்ததா ரகு சொன்னான்.
சிவாவின் அம்மா : யார் அந்த சாமியார், போட்டோ இருக்கா.
ரேகா : போட்டோ இருக்கு பாருங்க.
சிவா அம்மா போட்டோ பார்க்குறாங்க.
சிவாவின் அம்மா : இந்த சாமியார் கிட்ட தான் முருகன மந்திரிக்க கொண்டு போனும். அவர் தான் சொன்னாரு முருகனுக்கு பேய் புடிக்கல, பைத்தியம் புடுச்சிரிக்குன்னு.
ரேகா to சிவா : நான் உடனே அந்த சாமியார பத்தி விசாரிக்கணம். ரெண்டு நாள் கழிச்சி வந்து விசாரிக்கிறேன்.
சிவா : சரி மேடம்.
---------------------------ரெண்டு நாள் கழிச்சி ---------
சிவா to ரேகா : மேடம், சாமியார் பத்தி விசாரிச்சிங்களா, என்ன ஆச்சு.
ரேகா : விசாரிச்சேன், உங்க அண்ணன் முருகன போல மன நலம் பாதிக்க பட்டவங்க,2 பேரு இதுக்கு முன்னாடி அதே மாதிரி தல இல்லாம செத்து இருக்காங்க. செத்து போன 2 பேர் வீட்டுலயும், அந்த சாமியார் கிட்ட கூட்டிட்டு போய் இருக்காங்க.
சிவா : என்ன மேடம் நடந்து இருக்கும்.
ரேகா : நரபலி கொடுத்து இருக்க, வாய்ப்பு இருக்கு.
சிவா : என்ன மேடம் சொல்லுறீங்க
ரேகா : ஏற்கனவே ரெண்டு மன நல பாதிக்க பட்டவங்க செத்து இருக்காங்க, இதே மாதிரியே. ரகு சொன்னது போல, அந்த சாமியார, முருகன் பிணத்து பக்கத்துல நடந்து போனத பாத்து இருக்கான், இது வச்சு பாக்கும் சாமியார் தான் நரபலி கொடுத்து இருக்கணும்.
சிவா : எந்த தைரியத்துல இந்த மாதிரி கொலை பன்றான்.
ரேகா : இதுக்கு பின்னாடி யாரோ பெரிய ஆளு இருக்காங்க, அவங்களுக்காக இந்த நரபலிய பண்ணி இருக்கணும்.
சிவா : இத எப்படி கண்டு பிடிக்க போறோம்.
ரேகா : நம்ம முருகன் போட்டோவ எடுத்துட்டு போய், சாமியார் கிட்ட காட்டுவோம். அது பாத்து அவன் முகம் மாறிச்சின்னா, அவன் தான் இந்த கொலைய பண்ணி இருக்கான்.
சிவா : சரி வாங்க இப்பவே போகலாம்.
ரேகாவும் சிவாவும் சாமியார பாக்க போறாங்க
ரேகா to சாமியார் : சார் நான் ஒரு private detective.
சாமியார் : சொல்லுமா, என்ன விஷயமா வந்து இருக்கீங்க.
ரேகா : இந்த போட்டோல இருக்க ஆள பாத்து இருக்கீங்களா.
சாமியார் போட்டோவை பாத்த உடனே வேர்க்க ஆராமிச்சிடுது, ரேகா அத நோட் பண்ணிடுறா.
சாமியார் : இல்ல மா நான் பாத்தது இல்ல.
ரேகா : சரி சார். நாங்க கிளம்புறோம். உங்களுக்கு இந்த முகம் ஞாபகம் வந்துச்சுனா, எனக்கு போன் பண்ணுங்க.
ரேகாவும் சிவாவும் வெளிய கிளம்பி வந்துடுறாங்க.
ரேகா to சிவா : முருகன் போட்டோவை காட்டும் போது, சாமியார் மூஞ்ச பாத்திங்களா.
சிவா : வேர்வை கொட்டிடுச்சு முகத்துல.
ரேகா : இவன் கண்டிப்பா இந்த கொலைய பண்ணி இருப்பான், யாருக்காக இந்த நரபலினு தான் கேள்வி.
சிவா : யாருக்காக நரபலி கொடுத்தான்னு கண்டுபிடிக்க ஏதாச்சும் வழி இருக்கா.
ரேகா : சாமியார் இப்ப அந்த போட்டோ பாத்த உடனே பயம் வந்து இருக்கும், யாருக்காக இந்த கொலைய பண்ணனோ அவனக்கு போன் பண்ணி இது மாதிரி ஒருத்தர் போட்டோ காட்டி கேட்டாங்கனு சொல்லுவான். இப்ப யாருக்கு சாமியார் போன் பன்றானோ அவனுக்காக தான் இந்த சாமியார் கொலை பண்ணி இருக்கான்.
சிவா : இதாங்க சாமியாரோட visiting card, இதுல அவர் போன் நம்பர் இருக்கும். அது வச்சி யாருக்கு போன் பண்ணி இருக்கானு கண்டு பிடிக்க முடியுமா.
ரேகா : எனக்கு தெரிஞ்ச நண்பர் ஒருத்தர் ஏர்டெல்ல வேல செய்யுறாரு, அத வச்சி அவன் யார்கிட்ட பேசுறான்னு கண்டுபிடிச்சுடலாம்.
------------- ஒரு நாள் கழிச்சி ------------
சிவா : என்ன மேடம், சாமியார் யார் கூட பேசுனான் கண்டுபிடிச்சீங்கலா.
ரேகா : கண்டிபிடிச்சாச்சு.
சிவா : யாரு.
ரேகா : இந்த ஊரு MLA.
சிவா : ஓ, இவங்க தான் கொன்னங்கனு ஆதாரம் கிடைக்கணுமே.
ரேகா : அது நான் பாத்துக்குறேன்.
-----------அடுத்த நாள் இரவு ----------
சாமியார ஆஷிராமத்துல நாலு பேரு கத்தியோட வராங்க.
சாமியாரோட வேலை ஆள் : சாமி, சாமி.
சாமியார் : என்ன யா.
சாமியாரோட வேலை ஆள் : நாலு பேரு கத்தியோட வெட்ட வரறது போல வராங்க. MLA ஆளுங்கனு நினைக்கிறேன்.
சாமியார் பின் வாசல் வழியா தப்பிச்சு, ஓடிடுறாரு. ஒரு எடுத்துல நின்னு சாமியார் ரேகாக்கு போன் பன்றாரு.
சாமியார் to ரேகா : நான் தான் சாமியார் பேசுறன், சொல்லுங்க சார்.
ரேகா : என்ன இந்த நேரத்துல,
சாமியார் : MLA என்ன கொல்ல வராரு, என்ன காப்பாத்துங்க.
ரேகா : MLA ஏன் உங்கள கொல்ல வரணும்.
சாமியார் : என்ன முதல, நான் இருக்க இடுத்துல இருந்து காப்பாத்துங்க.
ரேகா : எங்க இருக்கீங்க
சாமியார் : இந்த ஊரு HP பெட்ரோல் பங்க் கிட்ட
ரேகா : இதோ வரேன்.
ரேகா சாமியார அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுறாங்க.
ரேகா to சாமியார் : இப்ப சொல்லுங்க MLA ஆளுங்க உங்கள ஏன் கொல்ல வரணும்.
சாமியார் முன்பு நடந்த எல்லாம் கதையும் சொல்றாரு.
---------------பிளாஷ் பேக் (சில நாட்களுக்கு முன்பு )
MLA to சாமியார் : சாமி எனக்கு, கொஞ்ச நாட்களா நான் கொலை பண்ணவங்க எல்லாம், என் கனவுல வராங்க அதுனால என் தூக்கம் போகுது. சரியா தூக்கம் வரல.
சாமியார் : சரி ஒரு பூஜா பண்ண, எல்லாம் சரி ஆகிடும்.
ரெண்டு பூஜை பண்ணியும், MLAக்கு சரி ஆகல.
MLA to சாமியார் : என்ன சாமி, பூஜை பண்ணியும் எனக்கு சரி ஆகல.
சாமியார் : அப்ப ஒரு பெரிய பூஜை, பண்ணிட வேண்டியது தான்.
MLA: பெரிய பூஜை னா
சாமியார் : நரபலி.
MLA : இந்த மனுஷன பலி கொடுக்குறதா
சாமியார் :ஆமா
MLA : ஏற்கனவே நான் கொன்னவங்க எல்லாம், என்ன தூங்க விடாம தொல்லை பன்றாங்க, இன்னொரு கொலையா.
சாமியார் : உங்க பிரச்சனைக்கு இதே தீர்வு.
MLA : அப்ப விடுங்க, நம்ம ஆளுங்க கிட்ட சொல்லி ஒரு ஆள தூக்கினு வரேன்.
சாமியார் : அவங்க சம்மதத்தோட தான், அவங்கள நரபலி கொடுக்க முடியும்.
MLA : எவனா காசு கொடுத்தாலும் இதுக்கு ஒத்துக்குவானா
சாமியார் : எனக்கு தெரிஞ்ச ஒருத்தன் இருக்கான், அவன் பேரு முருகன், அவன் தம்பி மேல இருக்க பொறாமையில பைத்தியம் ஆகிட்டான். நீ செத்தா உன் தம்பியும் செத்துடுவான் சொன்னா அவன் இந்த நரபலிக்கு ஒத்துக்குவான்.
MLAவும் சாமியாரும் நினைச்சா மாதிரியே முருகன நரபலி கொடுத்துட்டாங்க.
சாமியார் எல்லாம் உண்மையும் ரேகா கிட்ட சொல்லிட்டாரு.
சாமியார் to ரேகா : நீங்க இந்த கொலைய பத்தி விசாரிக்கிறீங்கனு MLA கிட்ட சொன்னேன். அவன் நான் ஒருத்தன் தான் சாட்சினு, என்ன கொலை பண்ண ஆளு அனுப்பிச்சிட்டான். அதுனால தான் எல்லாம் உண்மையும் உங்க கிட்ட சொல்லி நிரபராதி ஆகிட்டேன்.
ரேகா : நீங்க ஏன் போலீஸ் கிட்ட போகல.
சாமியார் :MLA ஆளுங்க தான் போலீஸ். உங்க கிட்ட சொன்னா ஆதாரம் இருக்கும், நான் சொன்னது எல்லாம் பதிவு பண்ணிப்பீங்கள. அது தான்.
ரேகா : ஏற்கனவே ரெண்டு நரபலி கொடுத்து இருக்கல நீ.
சாமியார் : இல்ல மேடம் இதுக்கு முன்னாடி 1 தான் பண்ணி இருக்கேன், முருகன் 1,மொத்தம் 2.
அந்த ஆதாரத்தை போலீஸ் கிட்ட கொடுத்து MLA மற்றும் சாமியார் கையில விளங்க போட்டுட்டாங்க ரேகா.
கையில விளங்கோடு MLAவும் சாமியாரும் பேசிக்குறாங்க.
MLA : என்ன யா இப்படி காட்டி கொடுத்துட்ட.
சாமியார் : நீ தான் என்ன கொல்ல ஆள் அனுப்பிட்ட.
MLA: நான் எப்ப யா அனுப்புனேன்.
ரேகா குறுக்குல போய்.
ரேகா : சண்டை போடாதீங்க, நான் தான் MLA, சாமியார வெட்ட அனுப்பின மாதிரி ஆள் அனுப்பின, அப்போ தான எல்லாம் உண்மையும் இப்படி ஒன்னு விடாம சொல்லுவ அதுக்கு தான்.
MLAக்கும் சாமியாருக்கும் தண்டனை கிடைச்சிடுச்சி.
--------------------------The End----------------==
