Arul Prakash

Thriller

5  

Arul Prakash

Thriller

கஞ்சன் இப்ப வள்ளல்

கஞ்சன் இப்ப வள்ளல்

3 mins
35.8K


ஒரு ஊர்ல ஒரு பணக்காரர், இவர் பெயர் பாலாஜி. இவர் ஒரு மிக பெரிய கஞ்சன், ஒரு ரூபா கூட யாருக்கும் தர மாட்டாரு. இவர் நம்புற ஒரே ஆளு அவரோட P.A. கனகராஜ் தான். பாலாஜிக்கு ஒரே வீக்னஸ் தான் அது கடவுள், இவர் 5 லட்சம் மேல சம்பாதிச்சா, அதுல ஒரு பங்கு பணத்தை சாமி உண்டியல்ல போற்றுவார். அது அவர் வழக்கம். 


ஆனா பாலாஜியோட மனைவி நிர்மலாக்கு, அவரோட P.A கனகராஜ் பார்த்தா பிடிக்காது. ஏன்னா அவன் ஒரு fraudனு அவங்க நம்புறாங்க. அவங்க நம்புற மாதிரி கனகராஜ் ஒரு பிராடு தான், ஏன்னா பாலாஜி லட்சக்கணக்குல காசு கொடுத்து இந்த கோவில் உண்டியல்ல போட்ருனு கொடுத்தா தன்னோட accountல அந்த பணத்தை போட்டுப்பான். அது மட்டும் இல்லாம, ரெண்டு மூணு சொந்த கோவில் வச்சிருக்கான், அந்த கோவில்ல வேண்டிகிட்டா, அப்படியே நடுக்கும்னு பாலாஜியை நம்ப வச்சி, அந்த கோவில் உண்டியல்ல லட்சக்கணக்கான பணத்தை போட வச்சிடுவான். அது கனகராஜ் கோவில்தான்னு பாலாஜிக்கு தெரியாம பாத்துப்பான். பாலாஜி மனைவி, கனகராஜ் பிராடுனு எவளோ சொன்னாலும் பாலாஜி நம்பமாட்டார். அவளோ நம்பிக்கை கனகராஜ் மேல. 


ஒரு நாள் பாலாஜியோட, வீட்டு வேலைக்காரன் ராம் , பாலாஜி கிட்ட அவனோட மகனுக்கு உடம்பு சரியில்லை, ஒரு ஆபரேஷன் பண்ணனும் சொல்லி ஒரு 10 லட்சம் பணம் கேட்கிறார். பாலாஜி அதெல்லாம் தர முடியாது, உனக்கு சம்பளம் தர்றது பெருசுனு சொல்லிடுறாரு. 20 வருஷமா உங்க உங்க வீட்ல வேல செய்யுறன், கொஞ்சம் உதவி பண்ணுங்கன்னு கேட்டும், பாலாஜி முடியாதுனு சொல்லிடுறாரு. 


அடுத்த நாள், பாலாஜியோட வீட்டு வாசல்ல ஒரு கருப்பு பை.அதை தொறந்து பாக்குறாரு, 6 லட்சம் பணம் இருக்கு, உடனே யாரும் பாக்குறதுக்ககுள்ள வீட்டுக்குள்ள எடுத்துட்டு போய் வச்சிடுறாரு. அந்த பணத்துல பாதி, சாமி உண்டியல்ல போட சொல்லி கனகராஜ் கிட்ட கொடுக்குறாரு. அந்த பணத்துல இருந்து ரெண்டாயிரம் எடுத்துக்கிட்டு காருக்கு டீசல் போட பெட்ரோல் பங்க்குக்கு போறாரு, டீசல் போட்டுட்டு, ரெண்டாயிரத்தை கொடுக்கறாரு. அந்த பணத்தை பாத்த பெட்ரோல் பங்க்குல, வேல செய்யுறவங்க ஷாக் ஆகுறாங்க ஏன்னா அது கள்ள நோட்டு. போலீஸ் வருது, பாலாஜி மேல கேஸ் பதிவாகி கோர்ட் வரைக்கும் போகுது, இவர் வீட்டு வாசல்ல பணம் கிடிச்சத்தனு சொல்லறாரு ஆனா யாரும் நம்பள. கொஞ்சம் நேரத்துல கனகராஜையும் போலீஸ் அர்ரெஸ்ட் செய்யுது, கள்ள நோட்டு வச்சினு இருந்ததற்காக. எப்பவும் போல கனகராஜ், பாலாஜி உண்டியல்ல போட சொன்ன காச, தன்னோட accountல போடும் போது, போலீஸ் பிடிச்சிடிச்சி. கனகராஜ் அது என்னோட காசு இல்ல, என்னோட பாஸ் தான் கொடுத்தாருன்னு சொல்லிட்டான். இன்னும் பாலாஜி மேல கேஸ் ஸ்டராங் ஆகிடிச்சி. பாலாஜி எப்படியோ ஜாமீன்ல வெளிய வராரு. ஒரு வழியா கனகராஜ் ஒரு fraudனு பாலாஜிக்கு தெரிய வருது. 


பாலாஜி எப்படி அந்த காசு நம்ம வீட்டு வாசல்ல வந்துதுனு யோசிக்கிறாரு. பாலாஜி வீட்ல கேமரா இல்லாததுனால, கண்டுபுடிக்க முடியல. ஆனா எதிர் வீட்ல கேமரா இருக்கு, அவங்க கிட்ட கேட்டு பாக்குறாங்க, அதுலயும் பணத்தை வச்சவன் மூஞ்சி தெரியல, ஏன்னா அவங்க ஹெல்மெட் போட்ருக்காங்க. வந்த வண்டில number plate இல்லை. அதுனால எந்த ஆதாரமும் கிடைக்கல. 


பாலாஜி கிட்ட பாலாஜியோட மனைவி நிர்மலா தயங்கி தயங்கி பேச வராங்க. 


நிர்மலா to பாலாஜி : நான் உங்க கிட்ட பேசணும். 


பாலாஜி : சொல்லு. 


நிர்மலா : அந்த கள்ள நோட்ட, நம்ம வீட்டு வாசல்ல வைக்க சொன்னதே நான் தான். 


பாலாஜி : அடி பாவி, நான் இப்ப கேஸ் வாங்குனதுக்கு நீ தான் காரணமா. 


நிர்மலா : நீங்க மாட்டணும்னு, இத பண்ணல. உங்க P.A கனகராஜ் மாட்டணும்னு தான் இத பண்ணன். நீங்க 5 லட்சம் மேல பணம் வந்தா, அதுல ஒரு பங்கு கனகராஜ் கிட்ட கொடுத்து, சாமி உண்டியல்ல போட சொல்லுவீங்க, அவன் அந்த கள்ள நோட்ட அவன் accountல போடும் போது அவன் போலீஸ் கிட்ட மாட்டிப்பான். அப்பயாச்சும் அவன் fraudனு உங்களுக்கு தெரிய வரும்னு தான் அப்படி பண்ணன். அவன் fraudனு இப்ப உங்களுக்கு தெரிஞ்சிடிச்சு ஆனா நீங்க செலவு பண்ணி நீங்களும் கேஸ்ல மாட்டிகிட்டீங்க. எப்பவும் எந்த காசு வந்தாலும் ஏன் கிட்ட கொடுத்துட்டு, அப்பறம் என் கிட்ட காச கேட்டு தான வாங்குவிங்க? 


பாலாஜி : நல்லா பண்ணி இருக்கடி. எப்பவுமே உன்கிட்ட காச கொடுத்துட்டு, உன்கிட்ட தான் காசு வாங்குவேன், ஆனா நீ அன்னைக்கு தூங்கிட்டு இருந்த அதுனால தான் உன்கிட்ட கொடுக்க முடியல . பையில அவ்ளோ பணம் இருக்கேன் கொஞ்சம் எடுத்துட்டு போனேன், எல்லா சிக்கல் ஆயிடிச்சு 


பாலாஜி வீட்டு வேலைக்காரன் ராம் உள்ள வரான். 


வேலைக்காரன் ராம் : ஐயா உங்க மேல இருக்க கேஸ் நான் எடுத்துக்கறன் யா. 


பாலாஜி : எப்படி. 


வேலைக்காரன் ராம் : நான் தான், நீங்க என் பையன் ஆபரேஷன்க்கு காசு தரலைனு கோபத்துல , அந்த கள்ள நோட்ட உங்க வீட்டு வாசல்ல வச்சன்னு கோர்ட்ல சொல்றன். 


பாலாஜி : அப்போ கூட நான் அந்த காச போலீஸ் கிட்டல கொடுத்து இருக்கணும், நான் செலவு பண்ணல பாத்தேன். 


வேலைக்காரன் ராம் : அந்த வாசல்ல கிடைச்ச காச போலீஸ் கொடுக்க தான் கிளம்பினேன், வீட்ல ரெண்டு கருப்பு பை இருக்கு, என் காச எடுக்க பதிலா, அந்த பையுள்ள இருந்த கள்ள நோட்ட எடுத்துட்டேன்னு கோர்ட்ல சொல்லுங்க. அந்த பைய வச்ச பழியை நான் ஏத்துக்கறன். 


பாலாஜி : சரி. 


வேலைக்காரன் ராம் : பதிலா நீங்க என் பையனோட ஆபரேஷன் செலவ நீங்க ஏத்துக்கணம். 


பாலாஜி : சரி ஏத்துக்கிறேன். 



பாலாஜி இந்த கேஸ்ல இருந்து தப்பிச்சிடுறான். வேலைக்காரன் ராமும், பாலாஜியோட பணமும், கேஸ்ல இருந்து தப்பிக்க வச்சது. 



வேலைக்காரன் ராம் தக்க சமயத்துல வந்து உதவி பண்ணதால, பாலாஜியும், அவரோட மனைவியும் கேஸ்ல இருந்து தப்பிச்சாங்க. 


முதல் வேலையா, பாலாஜி தன்னோட P.A கனகராஜை வேலைல இருந்து தூக்குறான். 


எத்தனை சாமி உண்டியல்ல காசு போட்டோம், ஆனா மனுஷன் தான் கடைசில உதவிக்கு வந்தான். அதுனால உண்டியல்ல காச போடாம, அந்த காச மனிதர்களுக்கு செலவு பண்ண ஆரமிச்சாரு பாலாஜி 


கஞ்சன் மக்களிடத்துல வள்ளலா மாறினான். 



Rate this content
Log in

Similar tamil story from Thriller