DEENADAYALAN N

Inspirational

4  

DEENADAYALAN N

Inspirational

காந்தி கலாம் விவேகானந்தர்!

காந்தி கலாம் விவேகானந்தர்!

2 mins
893



எத்தனையோ மகான்கள் தோன்றி சாதனை படைத்த நாடு நம் நாடு. அவர்களுள் மகாத்மா காந்தியை யாராவது மறக்க முடியுமா? அவர் இந்தியா மட்டுமல்ல உலகமே போற்றும் உன்னத கொள்கைகளை கடைப் பிடித்து வந்தவர்.


இந்திய சுதந்திரப் போராட்டங்கள் மிகவும் தீவீரம் அடைந்து வந்த காலம். ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் ‘இப்போது இல்லையென்றால் இனி எப்போதும் இல்லை’ என்கிற ஒரு நிலை! மக்களும் போராட்டக் களத்தில் தீவீரமாக இருந்தனர். அந்த சமயத்தில் மகாத்மா காந்தி அவர்கள் ‘செய் அல்லது செத்து மடி’ என்னும் தாரக மந்திரத்தை கையில் எடுத்தார். நினைத்துப் பாருங்கள்! இதை விட ஒரு வீரமான அதே சமயம் ஒரு அஹிம்சையான சிந்தனை இருக்க முடியுமா? ‘ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தாங்கள் சுதந்திரமானவர்கள் என்று கருதிக் கொண்டு செயல் பட வேண்டும்.. பூர்ண சுதந்திரமே நோக்கம்.’ என்பதை வலியுறுத்தினார். செய்வோம் அல்லது செத்து மடிவோம்.’ என்றார். இத்தகைய மகான்கள் வாழ்ந்த நாடு நம் நாடு.



“சகோதர சகோதரிகளே!” – இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் நம் நினைவில் தோன்றும் உருவம் சுவாமி விவேகானந்தர். 1893 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ம் நாள். அமெரிக்காவில் – சிக்காகோ நகரில் ஒரு சர்வ சமய மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் “சகோதர சகோதரிகளே!” என அழைத்த போது எழுந்த ஆரவாரம் உலகப் பிரசித்து பெற்றது. ‘நூறு இளைஞர்களைக் கொடுங்கள் இந்த உலகையே மாற்றிக் காட்டுகிறேன்’ என்று நம்பிக்கைகளை விதைத்த சுவாமி விவேகானந்தர் வாழ்ந்த நாடு நம் நாடு.



நம் அன்பிற்கும் மதிப்பிற்கும் பெருமைக்கும் உரித்தான மாண்புமிகு அப்துல்கலாம் குடியரசுத் தலைவராக பதவி ஏற்பதற்கு முன், DRDOவிலும்   ISROவிலும் விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறவர்.


‘உங்களின் கண்டுபிடிப்புகளில் நீங்கள் பெருமைப் படும் கண்டுபிடிப்பு எது?’ என்று கேட்ட போது அவர் சொன்ன பதில் மனித நேயத்தின் உச்சம். ‘ஊனமுற்ற குழந்தைகளுக்கு குறைந்த எடையில் செயற்கை கால்கள் தயாரித்ததே மனதிற்கு நிம்மதியையும் திருப்தியையும் அளித்தது’ என்றார். நான்கு கிலோ எடை உள்ள செயற்கை கால்கள் அணிந்து பிஞ்சு குழந்தைகள் பட்ட துயரத்தைக் கண்டு வருந்திய அப்துல்கலாம் அவர்கள், அதற்கு பதிலாக வெறும் நானூறு கிராமில் செயற்கை கால்கள் தயாரித்துக் கொடுத்தார். இங்கேயும் மனிதம்தானே உயர்ந்து நிற்கிறது.


இப்படி பெரிய பெரிய மகான்கள் வாழ்ந்த இந்த இந்திய திருநாட்டில், நாமும் வாழ்வது எவ்வளவு பெரிய பெருமை!


                     ( நமது இந்தியாவை மேலும் காண்போம்)






Rate this content
Log in

Similar tamil story from Inspirational