Vadamalaisamy Lokanathan

Crime

5  

Vadamalaisamy Lokanathan

Crime

கால்கள்

கால்கள்

3 mins
11


கால்கள்

அவன் எப்போதும் மாற்று திறனாளி பயன்படுத்தும் மூன்று சக்கர

வாகனத்தில்தான்பயணிதுக்

கொண்டு இருந்தான்.அவன் பெயர் இனியன்.

அவன் சொந்தமாக ஒரு பல்பொருள் அங்காடி வைத்து நடத்திக்கொண்டு இருந்தான்.

மாற்று திறனாளி என்பதால் அவனுக்கு திருமணம் செய்ய யாரும் பெண் கொடுக்கவில்லை.அவனும் அதில் தீவிரம் காட்டவில்லை.

ஒரு நாள்,அவனுடைய அங்காடிக்கு,ஒரு இளம் பெண் வர,அவளை பார்த்த மாத்திரத்தில் அவள் மீது அவனுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது.

ஆனால் தனக்குள் தன் ஆசை எங்கே நிறைவேற போகிறது என்று நினைத்து அவளை அத்துடன் மறந்து விட்டான்.

ஒரு நாள்,அங்காடியில் இருந்து வீட்டிற்கு சாப்பிட செல்லும் போது,அவனுடைய வண்டியில், ஏதைச்சையாக பெட்ரோல் தீர்ந்து போக,நடுவழியில் நிற்க வேண்டியது ஆயிற்று.

தன்னுடைய வீட்டிற்கு செய்தி அனுப்பி பெட்ரோல் வாங்கி வர சொல்லி விட்டு,அந்த வேகாத வெயிலில் வண்டியில் அமர்ந்து இருந்தான்.

அப்போது பக்கத்து வீட்டில் இருந்து ஒரு பெண் எட்டிப்பார்த்துஅவனை அடையாளம் கண்டுபிடித்து வீட்டிற்குள் வந்து உட்காரும் படி சொல்ல,உள்ளே போக அவனுக்கு,தயக்கம்,ஆனால் அந்த பெண் அவனுடைய அங்காடி க்கு வந்து அவனை கவர்ந்த பெண்,

அதனால் அவன் மனதில் ஒரு சபலம்.

சற்று தயங்கிய படி,ஊன்றுகோல் உதவியுடன் உள்ளே சென்றான்.

உள்ளே அவனைபோல ஒருவன் ஊன்று கோல் உதவியுடன் நடந்து கொண்டு இருந்தான்.அவனை தன் கணவன் என்று அறிமுகப்படுத்தி வைத்தாள்.

குடிக்க அவள் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க,அதை வாங்கி குடித்து விட்டு அங்கு உள்ள சோஃபாவில் அமர்ந்தான்.அவளை பார்த்தால் திருமணம் ஆனவள் போல தெரியவில்லை.சுவற்றில் மாட்டி இருந்த,போட்டோவில் கணவன்,குழந்தையுடன்

அவளும் இருந்தாள்.இப்போது அவளுக்கு திருமணம் ஆனதை நம்பித்தான் ஆக வேண்டும்.

அவன் உள்ளே சென்றதும் அவளுடைய கணவன் படுக்கை அறைக்குள் நுழைந்து விட்டான்.

பத்து நிமிடத்தில் அங்கு இருந்து இனியன் கிளம்பி விட்டான்.

இரண்டு நாள் கழித்து தொலைகாட்சியில் பரபரப்பான செய்தி ஒலிபரப்பு ஆகி கொண்டு இருந்தது.அன்று அவன் பார்த்த இளம்பெண் கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும்,கொலையாளி ஒரு மாற்று திறனாளி என்றும் சந்தேக படுவதாக செய்தி வந்து கொண்டு இருந்தது.

கொலையாளி ஒரு மாற்று திறனாளி வாகனத்தில் தப்பி செல்வது அங்குள்ள கேமராவில் பதிவாகி இருந்தது.

அந்த வாகனமும் இனியன் பயன்படுத்தும் வாகனமும் ஒரே மாதிரி இருந்தது. அதை பார்த்த போலீஸ் அவனை தேடி வந்து விசாரித்தது.அந்த பெண் கொலையுண்ட நேரமும்,அவன் அந்த வீட்டில் இருந்த நேரமும் ஒத்துப்

போனதால்,சந்தேகத்தின் அடிப்படையில் அவ்னை விசாரிக்க போலீஸ் வந்தது.

சந்தர்ப்ப சூழ்நிலை காரணம் போலீஸ் அவன் மீது சந்தேக பட்டு,அவனை கைது செய்தது.


அவன் என்ன சொல்லியும் போலீஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. எதுவாக இருந்தாலும் நீதி மன்றத்தில் சொல்லிகொள்ளுங்கள் என்று கூறி விட,அவனுக்கு வக்கீல் வைத்து வாதாடுவதை தவிர வேறு ஒன்றும் புரியவில்லை.

வழக்கு நீதி மன்றத்தில் நடந்தது.

குற்றவாளி என்று நிரூபிக்க போலீஸ் பல சாட்சியங்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியது.


வாதம் செய்ய இனியனுக்கு வாய்ப்பு வந்த போது அவனுடைய வக்கீல் திறமையாக வாதாடினார்.நேரம் சாட்சிகள்,எல்லாமே அவனுக்கு எதிராக தான் இருந்தது.இருந்தாலும்

ஒரே ஒரு சாட்சி,சற்று அவனுக்கு சாதகமாக இருந்தது.

இனியன் அந்த வீட்டில் ரொம்ப நேரம் இருக்கவில்லை.வெளியில் வந்து விட்டான்.அவனுடைய வீட்டில் இருந்து வேலைக்காரன் பெட்ரோல் கொண்டு வந்ததும்,அதை ஊற்றி,அந்த வேலைக்காரன் வண்டியில் பின்னாடி அமர,இனியன் வண்டியை ஒட்டிக்கொண்டு சென்று விட்டான்.

இனியன் வெளியில் சென்ற பிறகு அந்த பெண்ணின் வீட்டில் இருந்த அந்த ஊனமுற்ற ஆள் தான் அவளை கொலை செய்து விட்டு,வேறு ஒரு மூன்று சக்கர வாகனத்தில் ஒரு மணி நேரத்திற்கு பிறகு வெளியில் தப்பித்து சென்று விட்டான்.

அதை பொலிஸார் கவனிக்க தவறி விட்டார்கள்.

உண்மையில் அந்த வீட்டு வழியாக தான் தினமும்,இனியன் வீட்டிற்கு சாப்பிட செல்வது வழக்கம்.அந்த பெண் கொலை செய்யப்பட்ட நேரமும்,இனியன் அந்த வீட்டை தினமும் கடந்து போகும் நேரமும் ஒத்துப்போக,இனியன் தான் தப்பித்து செல்கிறான் என்று போலீஸ் முடிவு செய்து விட்டார்கள்.உண்மையில் முதல் நாள் பதிவான,காட்சியை அன்று நடந்ததாக போலீஸ் சாட்சியாக சேர்த்து விட்டார்கள்.

வக்கீல் முதல் நாள் அணிந்து இருந்த சட்டை நிறமும்,கொலை நடந்த அன்று அணிந்து இருந்த சட்டை நிறமும் வேறு வேறு,என்பதை நிரூபித்தார்.

அப்படியானால் கொலையாளி யார்.

அந்த வீட்டில் இனியன் உள்ளே சென்ற போது,உள்ளே ஒரு மாற்று திறனாளி இருந்தான்,அவன் தன் கணவன் என்று அறிமுகப்படுத்திய அந்த பெண்,அவனும்,குடும்ப போட்டோவில் இருந்த நபரும் வேறு வேறு என்பதை இனியன் கவனித்து விட்டான் என்பது அவளுக்கு தெரியவில்லை.

அவன் அவளுடைய கள்ளக்காதலன்.

அவனுடன் சேர்ந்து தன் கணவனை கொல்ல திட்டம் போட்டு இருந்தாள்.

காதலனை ஒரு மாற்று திறனாளி யாக நடிக்க சொல்லி இருந்தாள்.

ஆனால் கணவன் வருவதற்கு முன்பு ஏற்பட்ட தகராறில் அவளை காதலன் கொலை செய்து விட்டுமூன்று சக்கர வாகனத்தில் தப்பி விட்டான்.

வெளியூரில் இருந்த கணவனுக்கு வீட்டிற்கு வந்த பிறகு தான் அவள் இறந்து போனது தெரிந்தது.

கேமரா வில் பதிவானது வைத்து ஒரு மாற்று திறனாளி தான் அதை செய்தார் என்பதை போலீஸ் யூகித்து கொண்டார்கள்.

கொலைக்கான ஆயுதம் கிடைக்கவில்லை,போன்ற காரணம் இனியன் விடுதலையை உறுதி செய்தது.ஆனால் அதுக்கு அவனுக்கு இரண்டு வருடம் பிடித்தது.


Rate this content
Log in

Similar tamil story from Crime