Harini Ganga Ashok

Drama Romance

4.4  

Harini Ganga Ashok

Drama Romance

ஜானு

ஜானு

2 mins
449


ராம் மற்றும் ஜானு அனைவராலும் மிகவும் விரும்பப்பட்ட கதாபாத்திரங்கள்.

என்னுடைய ராம் மற்றும் ஜானு வின் கதையை உங்களுடன்

பகிர்ந்துகொள்கிறேன்.

திரைக்கதையில் ஜானுவிற்கு திருமணம் நடந்ததாக காட்டி இருப்பர். நான் இதில் சற்று புது முயற்சி எடுத்துள்ளேன்.


ராம் மற்றும் ஜானு எட்டாம் வகுப்பு வரை ஒன்றாக படித்தவர்கள். அவர்களின் அந்த பருவத்தில் உருவானது அவர்களின் காதல்.

ஒரே பள்ளி ஒரே வகுப்பு என்றாலும்

அடிக்கடி பேசி கொண்டது எல்லாம் கிடையாது. அவர்களுக்குள் தோன்றும் உணர்வுகளை மிகவும் விரும்பினர்.


வாழ்க்கை எதிர்பார்க்காத நிகழ்வுகளை நடத்தி காட்ட கூடியது. வெவ்வேறு காரணங்களுக்காக இருவரும் பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டது. பள்ளிகளும் மாற்றப்பட்டது.


பிரிவு காதலை அதிகப்படுத்துமாம்.

இருவருக்குள்ளும் விதை ஆக இருந்த காதல் விருட்சமாக மாறத் தொடங்கியது.


வருடங்கள் ஓடியது...

ஜானு அவளுடைய மருத்துவப்படிப்பை முடித்தாள்.ராம் அவனுடைய பொறியியல் படிப்பை முடித்தான். இருவருக்கும் ஒருத்தர் மற்றொருவரை பார்க்க ஆசை கொண்டாலும் இருவரும் சந்திக்க முற்படவில்லை.


என்னை கூட்டி செல்ல அவன் வருவான் என்று ஜானுவும் என்னை கூட்டி செல் என்று ஜானு கூறுவாள் என்று ராமும் எதிர்பாத்திருந்தனர்.


ஜானுவின் வீட்டில் திருமண முடிவுகள் எடுக்கப்பட்ட போது மிகவும் துடித்து போனாள். இருந்தும் மனதிடம் ஆறுதல் கூறிக்கொண்டிருந்தாள் தன்னை மீட்க ராம் வருவான் என்று. எதிர்பார்ப்புகள் பெரும்பாலும் பொய்த்து தான் போகின்றன. ஜானுவின் வாழ்விலும் அதுவே நடந்தது.


தன்னவனின் வருகைக்காக காத்திருந்தாள். கடைசியில் ஏமாற்றத்தையே பரிசாக பெற்றாள். திருமணத்தை தவிர்த்து விட்டு கர்நாடக மாநிலத்தின் கூர்க் என்னும் மலைகிராமத்தில் வசிக்க தொடங்கினாள். அங்குள்ள மலைவாழ் மக்களுக்கு மருத்துவ சேவைகளை செய்வதில் அவளின் பொழுதுகளை கழித்தாள்.


உடல் செயல்களில் ஈடுபட்டாலும் மனமோ ராமையே சுற்றி வந்தது.

ஜானுவிற்கு திருமணம் முடிந்து வெளியூரில் உள்ளதாகவே அவளின் வீட்டினர் காட்டிக்கொண்டனர். ராமும் அதையே நம்பினான். இனம் புரியாத வலி ஒன்றை உணர்ந்தான்.


ஜானு தன்னவனுக்கான அன்றைய கவிதையை தான் நாட்குறிப்பில் பதித்தாள்.

விரல் கோர்த்து நடந்ததில்லை

தோள் சாய்ந்து அழுததில்லை

ஆசையாக அணைத்ததில்லை

முத்துமலையை ரசித்ததில்லை

இருந்தும் உணர்த்தினான்

அவனது ஒற்றை பார்வையினால்...


ராமின் திருமணம் ஸ்வாதி உடன் என்று முடிவெடுக்கப்பட்டது. ராம் தன்னுடைய தாயின் வற்புறுத்தலால்

திருமணத்திற்கு ஒப்புக்கொண்டான்.

ஜாணுவிற்கு திருமணம் முடிந்துவிட்டது என்ற செய்தியை கேட்டதில் இருந்து அவளின் ஞாபகம் தன்னை தாக்காதவாறு பார்த்துக்கொண்டான்.


ஸ்வாதி கர்நாடக சங்கீத பாடகி. ஸ்வாதி ராமின் திருமணம் இனிதே முடிந்தது. திருமணம் முடிந்தாலும் ராமால் ஸ்வாதியை தன் மனைவியாக ஏற்க முடியவில்லை. ஸ்வாதியும் காலம் கனியும் என்று காத்திருந்தாள்.


ஸ்வாதியின் குணம் ராமை அவள்பால் இழுத்தது. அவர்களின் வாழ்கை இனிதாக நகர தொடங்கியத. ஜானுவின் நினைவு அவனுள் எட்டிப்பார்த்தாலும் அதிலிருந்து விடுபட ஸ்வாதியுடன் நேரம் செலவிக்க தொடங்கினான்.


ஸ்வாதி 9 மாத கருவை சுமந்து கொண்டிருந்தாள். அந்நேரம் கர்நாடக இசை கவிஞர்களை கௌரவிக்க மங்களூருவில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொள்ள ஸ்வாதிக்கும் அழைப்பு வந்திருந்தது. கூட்டிச்செல்ல ராம் மறுத்தாலும் மிகவும் கெஞ்சி கொஞ்சி அவனோடு விழாவில் கலந்து கொண்டாள்.


திரும்பும் வழியில் அவளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. செய்வதறியாது திகைத்து போனான் ராம். அக்கம் பக்கத்தினர் விவரம் அறிந்து ஜானுவிடம் கூட்டி சென்றனர். ராமை இந்த நிலையில் சந்திப்பாள் என்று ஜானுவும் எதிர்பார்க்கவில்லை அதே போல் தான் ராமும்.


அங்கிருந்த சில பெண்களின் உதவியுடன் ஜானு ஸ்வாதிக்கு பிரசவம் பார்த்தாள். ஜானுவின் கையில் அழுது தன் பிறப்பை உணர்த்தியது ராம் ஸ்வாதியின் குழந்தை. குழந்தையை ஜானு ராமின் கைகளில் கொடுத்தாள்.


ஒரு வித பரவசத்தை உணர்ந்தான் ராம். அவனின் மகிழ்ச்சியை வெளிப்படுத்த அவனிடம் வார்த்தைகள் ஏதும் இல்லாமல்போனது.


ஜானுவிடம் ராம் என்மேல் வருத்தம் ஏதும் இல்லையா என்று கேட்டபொழுது 

முகத்தில் புன்னகையுடன் பதிலளித்தாள் "உன் ரத்தத்தில் உருவான உயிரை முதலில் கையில் ஏந்தியது நான் இதை விட வேறு என்ன வேண்டும் எனக்கு? "

ராம் ஜானுவிடம் இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை அவளுக்கு திருமணம் ஆகவில்லை என்ற உண்மையும் அவனை குற்றஉணர்வில் ஆழ்த்தியது.


உன்னுடைய வாழ்க்கை பற்றி யோசிக்க மாட்டாயா என்றவனின் கேள்விக்கு உன்னுடன் எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று கண்ட என் கனவை இன்னொருவரோடு என்னால் வாழ முடியாது என்று பதிலளித்தாள்.ஜானுவின் காதலுடைய ஆழத்தை ராம் உணர்ந்துகொண்டான்.


காதல்


ஒன்று சேர்ந்து வாழ்வதில் இல்லை

நினைவில் எப்பொழுதும் ஒன்றி

இருப்பதில் உள்ளது.


சிறிது நாட்களுக்கு பின் ராம் ஜானுவிடம் இருந்து விடைபெற்றான் அவனின் ஸ்வாதி மற்றும் அவனின் குட்டி ஜானுவுடன். ஆம் ஸ்வாதி கூறியதால் குழந்தைக்கு ஜானு என்றே பெயர் வைத்து அழைத்தான்.



காதலித்தவரோடு வாழ முடியாவிட்டால்

காதலோடு வாழுங்கள்

என்றும் சுகமான

நினைவுகளை

பரிசளிக்கும்...


Rate this content
Log in

Similar tamil story from Drama