இளம் வயதில் நான்
இளம் வயதில் நான்
இளம் வயதில் நான்
எனக்கு இளம் வயதில் நிறைய ஆசைகள் இருந்தது.இளம் வயதில் எனக்கு எந்த வசதியும் இல்லை.சாப்பாடு கிடைத்தது.மற்றும் அத்தியாவசிய தேவைகள், உடுப்பு, ஒரு கடிகாரம்,காலணிகள் ஆகியவை எதுவும் இல்லை.
ஒரு நண்பர் செய்த உதவியால் இந்த தேவைகள் கொஞ்சம் பூர்த்தி ஆனது.
சினிமா,பாட்டு பார்த்து,கேட்டு அனுபவிக்க வசதி இல்லை.படிப்பு முடிக்க மட்டும் அப்பாவால் செலவு செய்ய முடிந்தது.
பொழுது போக்கு அம்சங்களும் நண்பர் உதவியால் நடந்து முடிந்தது.
இளமை பருவத்தில் ஆடம்பர கார்கள் என்றால், பிளை மவுத்து,சேவர்லட், ஸ்டுடிபக்கேர்,போன்ற கார்களை பார்க்கும் போது இந்த கார்களில் சவாரி செய்ய முடியுமா என்று
ஏங்கியது உண்டு.
இதில் எல்லாம் மாறு பட்டது பென்ஸ் கார்.பார்க்கவே அழகாக இருக்கும்,அதுவும் டீசலில் ஒடும் கார்.அப்போது சொந்தமாக ஒரு சைக்கிள் கூட கிடையாது.
இதுவெல்லாம் கனவாக போய் விடுமா என்று ஆதங்க பட்டேன்.
ஆனால் கடவுளின் சித்தம் வேறு விதமாக இருந்தது.வேலை கிடைத்து
படிப்படியாக முன்னேறி,கனவுகள்
நனவாகும் நாளும் வந்தது.
பென்ஸ் காரில் பிரயாணம்.ஆடம்பர கார்களை ஒட்டி பார்க்கும் சந்தர்ப்பம்.
விதவிதமான ஆடைகள்,காலணிகள், போன்,இப்படி எத்தனையோ.கனவில் கண்ட அத்தனையும் கிடைத்தது.சொந்த வீடு,பணம் கையிருப்பு,அனுபவம்,புகழ்,என்று,
நினைத்து பார்க்காத அனுபவங்கள்.விமான பயணம்,
குளிர்சாதன பெட்டிகள்.தொலைகாட்சி பெட்டி,இணைய தொடர்பு, கம்யூட்டர்,
என்று எதுவும் வாங்க முடியும் என்ற நிலை வந்த போது,நான் அந்த நாளை மறக்கவில்லை.
உண்மையும், நேர்மையும் கடுமையான உழைப்பும் இருந்தால் எந்த கனவும் நனவாக ஏதும் தடை இருக்காது என்று புரிந்து கொண்டேன்.
என்ன சாதிக்க முடியும் என்று நினைத்த,இந்த எழுத்துலகில்
சாதனை படைத்து பல பரிசுகள்.
உண்மையான முயற்சி இருந்தால் சாதிப்பது ஒரு பிரச்சினை அல்ல.
வெறி கூட தேவையில்லை.உண்மையாக எதையும் செய்ய வேண்டும்.இந்த உலகம் தன்னுடைய காலடிக்கு கொண்டு வர முடியும்.
