என்னைப் பற்றி
என்னைப் பற்றி
என் பெயர் K. ஆனந்த ஜோதி
இதுவரை 20 நாவல்கள், 8 குறுநாவல், 10 சிறுகதையும், ஒரு சில கட்டுரையும் எழுதி இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே வாசிப்பில் ஆர்வம் காட்டும் நான், திருமணத்திற்கு பிறகு வெளிமாநிலங்களில் வசித்து வந்ததால் வாசிப்பு குறைந்து விட்டது. இப்போது ஐந்து வருடங்களாக வாசிப்பும், எழுத்தும் என் கைவசம் ஆகியது.
பெரிய பெரிய எழுத்தாளர்கள் பலர் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தும் இடத்தில், நானும் ஒருவராய் அவர்களுடன் கரம் கோர்க்க ஆசைப்படுகிறேன்.
இதுவரை நான் காதல், குடும்பம், நகைச்சுவை, போலீஸ், திகில் என பல வகையான கழங்களை கையாண்டு விட்டேன். இனி வரும் நாட்களில் வரலாறு, ஆன்மீகம், போலீஸ் விசாரணை (இன்வெஸ்டிகேஷன்) போன்ற அனைத்து துறைகளிலும் கால் தடம் பதிக்க ஆசைப்படுகிறேன். இறைவன் என்னோடு இருந்து என் ஆசைகள் அனைத்தும் ஈடேற அருள் பாலிக்கட்டும்.
என் படைப்புகளை வாசித்துப் பாருங்கள்; நிறை குறைகளை தயங்காமல் கூறுங்கள். என் நாவல் வாசிப்பு உங்கள் மனதில் மகிழ்ச்சியையும், முகத்தில் மலர்ச்சியையும், உதட்டில் புன்னகையையும் வரச் செய்தால் மிகுந்த பாக்கியம் பெற்றவள் ஆவேன்.

