Harini Ganga Ashok

Drama Classics

4.7  

Harini Ganga Ashok

Drama Classics

சந்திரமுகி

சந்திரமுகி

2 mins
212


சந்திரமுகி 2005 -ல் வெளியான திரைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஜோதிகாவின் மாறுபட்ட நடிப்பில் ரசிகர்களை தன் வசமாக்கியது சந்திரமுகி கதாபாத்திரம்.


சந்திரமுகியை வேறு சில குணங்களுடன் உங்கள் முன் கொண்டு வந்துள்ளேன்.


வேட்டையபுரத்தில் வசித்து வருபவர் தான் நம் வேட்டைய மகாராஜா. மக்களுக்கு சொல்லிக்கொள்ளும் அளவில் நல்லதும் செய்ததில்லை தீயதும் செய்ததில்லை. ஆனால் மக்கள் அனைவரும் தனக்கு கீழ் தன்

இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்.


ஒரு முறை ஆந்திராவிற்கு தன் மந்திரிகளுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்க அங்கு சந்திரமுகி பற்றி தெரிந்து கொள்கிறார். பெயருக்கேற்றாற்போல் மதியின் ஒளி பொருந்திய முகம் உடையவள் சந்திரமுகி. கல்வி, அழகு, பேச்சு, இசை, நடனம், ஓவியம், சிற்பம் என்று அனைத்திலும் சிறந்தவள்.


சிவசங்கரய்யாவின் வைத்தியத்திற்கு குணமாகாத நோய்களே இல்லை. அவரின் ஒரே வாரிசு தான் சந்திரமுகி. வைத்தியத்திலும் கைதேர்ந்தவள். கடவுள் பக்தியிலும் சிறந்தவள்.

சந்திரமுகியின் அன்பே மக்களின் நோய் நொடிகளை தீர்த்துவிடும் வலிமை வாய்ந்தது.


வேட்டைய மகாராஜாவின் கவனம் சந்திரமுகியின் மேல் திரும்பியது அவளை தன்னுடன் அழைத்து செல்ல முடிவெடுத்தார். அன்று விஜயநகர அரசவையில் சிவகாமியை சந்தித்த பொழுது அவளை தன்னுடன் அழைத்து போவதாக கூறினார். சிவகாமி அனைவர் முன்னிலையிலும் அவளின் மறுப்பைத் தெரிவித்தாள்.


அங்கிருந்த அனைவரும் வேட்டய மஹாராஜாவை கேலி செய்து சிரித்தனர். அதில் கோபமுற்ற மகாராஜா சந்திரமுகியை கடத்தி செல்ல எண்ணினார். அதனை அன்று இரவே செயலும் படுத்தினார்.


விடியகற்காலையில் மகளை காணாமல் சிவசங்கரய்யா மிகவும் துடிதுடித்து போனார். மகளை ஒவ்வொரு இடமாக தேட தொடங்கினார். வேட்டையபுரத்திற்கு அவர் வந்தபொழுது சந்திரமுகியின் முன்னே அவரை முதலை இருக்கும் அகழியில் தள்ளிவிட்டார் வேட்டைய மகாராஜா.


இதனை நேரில் கண்ட சந்திரமுகியின் மனம் பித்துபிடித்ததுபோல் ஆனது. அவளையும் சிறையில் அடைத்தார் வேட்டையன். விஜயநகரத்தில் விஷக் காய்ச்சல் ஒன்று பரவ தொடங்கியது இதில் பெரும்பாலும் சிறு குழந்தைகளைப் பாதித்தது. சிவசங்கரய்யா, சந்திரமுகி இருவரும் இல்லாததால் குழந்தைகள் மடிய தொடங்கினர்.


இச்செய்தி சிறையில் இருந்த சந்திரமுகிக்கும் தெரிய வந்தது. வேட்டையனிடம் தன்னை அங்கே அனுப்பிவைக்குமாறு அனைத்து முறைகளிலும் கேட்டு பார்த்துவிட்டாள். ஆனால் வேட்டையன் அவளை விடவே இல்லை. நாளுக்கு நாள் குழந்தைகள் அதிகமாக நோய்வாய்ப்பட்டனர். ஏதும் செய்யவியலாமல் இருக்கும் தன்னையே நொந்து கொண்டாள்.

மனவுளைச்சல் காரணமாக சிறையில் சந்திரமுகியின் உயிர் பிரிந்தது.

காலமும் உருண்டோடியது...


தன் வினை தன்னை சுடும் என்பது ஆன்றோரின் வாக்கல்லவா. மஹாராஜாவையும் அது ஒரு கை பார்த்தது. வேட்டையனும் விஷக்காய்ச்சலால் தாக்கப்பட்டு எந்த விதமான சிகிச்சையும் பலன் அளிக்காமல் உயிர் விட்டார்.


இதனை பொம்மியின் கையில் இருந்த சந்திரமுகியின் ஓவியம் அவளுக்கு எடுத்துரைத்தது.


செய்யும் செயல்கள் எது நன்மை பயக்கும் எது தீமையை விளைவிக்கும் என்று பகுத்தறியும் அறிவினை கடவுள் நமக்கு வழங்கியுள்ளார். அதனை நல் முறையில் உபயோகிக்க வேண்டும்.

உலகத்தில் நாம் வெறும் அனுபவிப்பாளர்கள் மட்டுமே எதன் மேலும் நம்மால் உரிமை கொண்டாட முடியாது.


Rate this content
Log in

Similar tamil story from Drama