சந்திர மோகினி
சந்திர மோகினி
ஒரு கம்பீரமான மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் நரகாபுரி என்ற கிராமத்தில், மரணம் காற்றோடு கலந்து நிற்கும். இந்தக் கிராமம் அதன் கொடூரமான தண்டனைகளுக்குப் பெயர் பெற்றது. இங்கு தவறு செய்தால், அதற்கான தண்டனை மரணத்தை விடவும் பயங்கரமாக இருக்கும். இந்தக் கிராமத்திற்கு ‘நரகாபுரி’ என்ற பெயர் வந்ததும் அதனால்தான்.
அந்தக் கிராமத்தின் மையத்தில், மரணக் கோவில் என்று அழைக்கப்படும் ஒரு கோவில் உண்டு. அங்கு, ருத்ர காளி தேவி (அம்மன்) தங்கள் குலதெய்வமாக வழிபடப்படுகிறாள். காளி தேவியின் இந்தக் கோவில் ஒரு பூக்கும் தாமரை மலரின் வடிவத்தில் அமைந்திருக்கிறது. கோவிலின் சுவர்களில் வரையப்பட்டிருக்கும் சிற்பங்கள், இந்தக் கிராமம் கடைப்பிடிக்கும் கொடூரமான தண்டனைகளைப் பற்றி விவரிக்கின்றன. கோவிலின் மேல் கோபுரம் நிமிர்ந்து நிற்க, அதன் நிழல் கிராமம் முழுவதும் படர்ந்திருக்கும்.
ருத்ர காளி தேவி கடுமையான, சக்திவாய்ந்த தெய்வமாகச் சித்தரிக்கப்படுகிறாள். அவளது நான்கு கைகளில், துண்டிக்கப்பட்ட தலை, வாள், மண்டை ஓட்டுக் கிண்ணம், திரிசூலம் ஆகியவை இருக்கின்றன. அவளது கழுத்தில் மண்டை ஓடுகளின் மாலை தொங்குகிறது. அவளது கண்கள் கோபத்தில் சிவந்து, சக்தி வெளிப்படுகிறது. அவள் அரக்கனின் சடலத்தின் மீது நிற்பதாகச் சித்தரிக்கப்படுவது, தீமையின் மீதான அவளது வெற்றியைக் குறிக்கிறது. கிராமத்து முன்னோர்கள் இந்தக் கோவிலின் சுவர்களில் செதுக்கி வைத்த தண்டனைகளை இன்றும் பின்பற்றி வருகின்றனர்.
நீங்கள் என்ன தண்டனை என்று யோசிப்பது புரிகிறது. சொல்கிறேன் கேளுங்கள்…
திருடினால் கைகள் வெட்டப்படும். பெண்களைத் தவறான கண்ணோட்டத்தில் பார்த்தால் இரு கண்களும் பெல்லடோனா சாறு விட்டு குருடாக்கப்படும். ஆனால், பெண்களைக் கற்பழித்தல், தவறான உறவு போன்ற குற்றங்களுக்கு, தண்டனை இதையும் விடப் பல மடங்கு கொடூரமானது. முதலில் குற்றவாளியின் உடலுறுப்பு துண்டிக்கப்படும். பின்னர், பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும், அவர்களை வைத்தே கொதிக்கும் எண்ணெய் அல்லது தண்ணீர்க் கொப்பரையில் குற்றவாளி மூழ்கடிக்கப்படுவான். அவன் உடல் வெந்து கொப்புளங்கள் ஏற்படும். வலியில் துடிப்பான். எவ்வளவு துடித்தாலும், கிராம மக்கள் இரக்கம் காட்டாமல், உயிர் போகும் வரை அந்தக் கொதிக்கும் நீரில் சித்திரவதை செய்வார்கள். கடுமையான வெப்பத்தால் தோல் உரிக்கப்பட்டு, மரணம் ஏற்படும்.
அவனது பிணம் அந்தக் கோவிலின் புனிதமான காளி குளத்தின் நீரால் சுத்தம் செய்யப்பட்டு, காளியின் முன் எரியும் புனித நெருப்பில் எரிக்கப்படும். ஆனால், அதே தவறைப் பெண்கள் செய்தால், அவர்களுக்குக் கொடுக்கப்படும் தண்டனை இதைவிடப் பல மடங்கு கொடூரமாக இருக்கும் என்பதுதான் இந்தக் கதையின் திகில் நிறைந்த திருப்பம்!
அந்தக் காளி சிலையின் முன் எரியும் நெருப்பு என்றும் அணையாதது. அது காளி தேவியின் கோபத்தைக் காட்டுகிறது என கிராம மக்கள் நம்புகிறார்கள். தீப்பிழம்புகள் அதிகமாக எரியும்போது, தேவி அதிருப்தியில் இருப்பதாகவும், கடுமையான தண்டனை வரப்போகிறது என்றும் கிராம மக்கள் அறிவர். அந்த நெருப்பில் இதுவரை நூற்றுக்கணக்கான துஷ்டர்கள் இறந்திருக்கிறார்கள்.
இந்தக் கிராமத்து வழக்கத்தை அறிந்த எவரும் இங்கு கால் வைக்கத் தயங்குவார்கள். பக்கத்து கிராமங்களும்கூட நரகாபுரியைக் கண்டால் அஞ்சும். இங்கு சட்டம் என்பது கிடையாது. இந்தக் கிராமத்து மக்களே காவலர்கள். காளியின் மரணக் கோவிலின் விதிகள் தான் சட்டம்.
இப்படிப்பட்ட இந்தக் கிராமத்தில் ஒரு அழகிய பெண் பிறந்தாள். அவளின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அவளின் பெயர் சந்திரா.
சந்திராவின் அழகு, தெய்வங்களால் உருவாக்கப்பட்ட ஒரு தலைசிறந்த படைப்பு.
வீரான் சந்திராவை ஏமாற்றி அவளைக் கெடுத்துவிட்டான். அவளின் உண்மையான காதலை அழித்தான். இந்த விஷயம் ஊருக்குத் தெரிந்தால் அவளுடைய ஒரே தங்கையான தியாவை (வயது 10) கொன்றுவிடுவதாக மிரட்டினான். தியாவை அவன் கடத்தி வைத்திருப்பது சந்திராவுக்கு மட்டுமே தெரியும். இது தெரியாத கிராம மக்கள் அவளைக் கொடுமைப்படுத்தினார்கள். எவ்வளவு கேட்டும் அவள் உண்மையைச் சொல்லாததால், நரக குரு ராஜசேகர் அவள்தான் குற்றவாளி என்று முடிவு செய்தார். அவளை இழுத்துச் சென்று பெண்கள் அனைவரும் முட்கள் நிறைந்த தண்ணீரில் குளிக்க வைத்தார்கள். வலியால் துடித்த சந்திராவுக்கு கருப்பு நிறப் புடவையை அணிவித்து, தண்டனை கொடுக்கும் மரணக் கோவிலுக்கு இழுத்து வந்தார்கள். சர்ப்ப விஷம் என்ற கொடூர விஷத்தைக் கொண்டு அவளது அழகிய நிலா போன்ற முகத்தைச் சிதைத்தார்கள். அவள் தவறு செய்யவில்லை என்று கெஞ்சியும், இரக்கமில்லாமல் நடந்துகொண்டார்கள்.
கடைசியில், மிகக் கொடூரமான தண்டனை அறிவிக்கப்பட்டது: ஒட்டுமொத்த கிராமத்தின் முன்னால் அவளின் உடையை அகற்ற வேண்டும்! இந்தத் தண்டனையைக் கேட்ட சந்திரா அதிர்ச்சியடைந்தாள். அவள் எவ்வளவு கெஞ்சியும், ஊர் மக்கள் கல் நெஞ்சுடன் இருந்தார்கள். ஒருவன் அவள் புடவையின் முந்தானையை இழுத்தான். தன் மானத்தைக் காத்துக்கொள்ள, பக்கத்தில் எரிந்த காளியின் சக்திவாய்ந்த நெருப்பில் குதித்தாள். அப்போது அவள் தீவிரமாகக் கத்தியபடி கிராம மக்களுக்குச் சாபம் விட்டாள்: "இந்த ஊர்ல இருக்குற ஒரு ஆம்பளைகூட நல்லவன் இல்ல... நான் எவ்ளோ சொல்லியும் நீங்க யாரும் என்ன நம்பல... இப்ப சொல்றத கேட்டுகோங்க நான் மறுபடியும் வருவேன்... உங்க ஊர சுடுகாடா மாத்தாம விடமாட்டேன்..." என்று சாபம் கொடுத்துவிட்டு அந்த நெருப்பில் இறந்தாள் சந்திரா.
ஆனால், இது முடிவல்ல. அவள் மீண்டும் வந்தாள்… கொடூர கோபத்துடன் மோகினியாக. இரத்தத்தைக் குடிக்கக் காத்துக்கொண்டிருக்கிறாள் சந்திர மோகினி.
சந்திராவின் சாபம் நரகாபுரியில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியது. கிராமம் முழுவதும் சந்திராவின் சாபத்தின் நிழல் படர, ஒருவித நடுக்கம் சூழ்ந்தது. ஒவ்வொரு சூரிய கிரகணத்தின் போதும், சந்திராவின் ஆவி, ஒரு மோகினியாக உருவெடுத்து கிராமத்தில் தோன்றும். அவளது கணல்கள் இரத்த சிவப்பாக ஒளிர, அவளது குரல் ஒரு பயங்கரமான சபதமாக ஒலிக்கும்.
சந்திர மோகினி, தவறு செய்யும் ஆண்களைத் தேர்ந்தெடுத்து வேட்டையாடினாள். அவர்களுக்கு, தனக்கு நடந்த அதே கொடுமைகளைச் செய்தாள். கிராம மக்களின் தூக்கத்தைக் கலைத்து, அவர்களின் மனதில் பயத்தை விதைத்தாள். கிராமம் முழுவதும் ஒரு பீதி சூழ்ந்தது. மோகினியின் அச்சுறுத்தல், இரவுநேர சத்தம், மறைந்துபோகும் ஆண்கள் - இவை அனைத்தும் கிராமத்தை ஒரு பிணக்காடாக மாற்றின.
ஒரு நாள், கார்த்திக் என்ற அழகிய இளைஞன் வெளிநாட்டிலிருந்து இந்தக் கிராமத்திற்கு வந்தான். அவனுக்கு மோகினியைப் பற்றித் தெரியாது. வீரான் போன்ற வெளிநாட்டிலிருந்து வந்தவர்களால்தான் தனக்கு இந்த நிலை என்று நினைத்த மோகினி, கார்த்திக்கையும் கொல்ல முடிவு செய்தாள்.
ஒரு நாள் இரவு, ஒரு சிறிய பெண் குழந்தைக்கு விஷப் பாம்பு கடித்துவிட்டது. அந்தக் குழந்தையின் தாய் வைத்தியரிடம் சென்று, "தயவுசெஞ்சு என் குழந்தையைக் காப்பாத்துங்க!" என்று கதறினாள். வைத்தியர் கையறு நிலையில், "அது அசாத்தியம்மா... உன் குழந்தையை ரொம்ப விஷம் வாய்ந்த மலைப்பாம்பு கடிச்சிருக்கு. இந்த விஷத்தை மலையோட உச்சியில இருக்குற சர்ப்ப மூலிகையால மட்டும்தான் காப்பாத்த முடியும். அங்க ஆம்பளங்க மட்டும்தான் போக முடியும். ஆனா ஆம்பளங்க அங்க போனா என்ன நடக்கும்னு உனக்கே தெரியும்..." என்றார்.
தாயின் அழுகையைக் கேட்ட கார்த்திக், "என்ன நடந்தது?" என்று கேட்டான். வைத்தியர் நடந்ததை விளக்கினார். கார்த்திக் துளியும் யோசிக்காமல், "என்ன நடந்தாலும் சரி, நான் அந்த மூலிகையோடதான் வருவேன்!" என்று கூறிவிட்டு, மோகினியின் மலைக்காட்டிற்குள் சென்றான். அவனைக் கொல்லக் காத்திருந்த மோகினி, கார்த்திக் காட்டினுள் வந்ததும் தன் ஆட்டத்தை ஆரம்பித்தாள். அவன் நடக்கும் பாதையில் அவளது பயங்கரமான சிரிப்புச் சத்தம் கேட்டது. "ஹாஹாஹாஹா..."
கார்த்திக், "நீ... நீ யாரு?" என்று கேட்டான்.
மோகினி பயங்கரமான குரலில், "ஹாஹாஹாஹா நான் யாரா!... நான் தான் மோகினி சந்திர மோகினி... உன் மரணம்..." என்றாள்.
அவளின் பெயரைக் கேட்டதும், கிராம மக்கள் அவளிடம் சந்திராவைப் பற்றி எச்சரித்தது கார்த்திக்கின் ஞாபகத்திற்கு வந்தது. மோகினி அவனைப் பயங்கரமாகப் பயமுறுத்தினாள். எவ்வளவு தடைகள் வந்தாலும், அந்தக் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று உறுதியாக இருந்தான். அப்பொழுது மோகினி பயங்கரமான தோற்றத்துடன் அவன் முன் நின்றாள். அவளின் நீண்ட முடிகளும், சிவந்த கண்களும், சிதைந்த முகமும் பார்க்கவே கோரமாக இருந்தன. அவள் அவனைப் பார்த்து எச்சரித்தாள்.
கார்த்திக், "தயவுசெஞ்சு அந்த மூலிகையை என்னை எடுத்துச் செல்ல விடு. அங்க ஒரு சின்ன குழந்தை உயிருக்கு போராடிட்டு இருக்கு. இந்த மூலிகையை எடுத்துட்டுப் போனாதான் அந்தக் குழந்தையைக் காப்பாத்த முடியும். தயவுசெஞ்சு அந்த மூலிகை மட்டும் என்னை எடுத்துப் போக விடு. நான் நாளை இரவு உன் நிறையாக நான் இங்கே கண்டிப்பா வருவேன்..." என்று கெஞ்சினான்.
அவன் கூறியதைக் கேட்டதும், மோகினிக்குத் தன் தங்கை தியா ஞாபகம் வந்தது. இவன் உண்மை கூறுகிறானா என்று சோதித்துப்பார்க்க, கண்களை மூடி தன் சக்திகளை உபயோகித்தாள். அப்போது அவள் கண்களில் ஒரு பெண் குழந்தை உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதைப் பார்த்தாள். மோகினியின் கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் வெளிப்பட்டன. அவளது சக்திகளைக் கொண்டு மூலிகையைத் தன் கைக்குள் கொண்டு வந்து, கார்த்திக்கிடம் கொடுத்து அந்தக் குழந்தையைக் காப்பாற்றச் சொன்னாள். அப்போது கார்த்திக்கிற்குப் புரிந்தது, இவள் கெட்ட ஆத்மா இல்லை என்று. அவளுக்குள் இருக்கும் வலியை அவளின் கண்களில் இவனால் பார்க்க முடிந்தது. கொடூரமாக இருக்கும் கண்களில் கூட அவன் உண்மையைப் பார்த்தான். ஏனெனில், அவனது இதயம் மிகவும் தூய்மையானது. தூய்மையான இதயம் கொண்டவன் எத்தகைய உண்மையையும் கண்களைப் பார்த்து அறிந்துகொள்ள முடியும்.
சந்திராவிற்கும், ஆண் என்றாலே கெட்டவன் என்று நம்பிக் கொண்டிருந்த அவளுக்கும், ஆண்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள் என்று புரிந்தது. கார்த்திக் மூலிகையை எடுத்துக்கொண்டு மருத்துவரிடம் வருகிறான். அங்கிருக்கும் மக்கள் அனைவரும் அவனை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். ஏனெனில், இரவில் அந்தக் காட்டிற்குள் சென்ற எந்த ஆணும் திரும்பி வந்ததாகச் சரித்திரமே இல்லை. அவன் அந்தக் குழந்தையையும் காப்பாற்றினான். அந்தக் குழந்தை உயிர் பெற, கார்த்திக்கைப் பார்த்ததும் கட்டி அணைத்துக்கொண்டது. அவனும் அந்தக் குழந்தைக்கு முத்தமிட்டு கட்டி அணைத்தான். இதையெல்லாம் ஒரு ஓரமாக நின்று பார்த்த மோகினியின் ஆத்மா, கார்த்திக்கின் நற்குணங்களில் ஈர்க்கப்பட்டாள். அவன் வாக்களித்ததுபோல் மறுநாள் இரவு அந்தக் காட்டிற்குள் அந்த மோகினிக்குத் தன்னையே இரையாக்கச் சென்றான்.
ஒரு நாள், கிராமத்தின் இளம் வீரன், கார்த்திக், சந்திராவின் ஆவியைப் பார்த்தான். அவன் அவளை மோகினியாக அடையாளம் கண்டான். சந்திராவின் கதையை அறிந்த அவன், அவளது ஆத்மா சாபத்திலிருந்து விடுபட உதவ வேண்டும் என்று முடிவு செய்தான்.
கார்த்திக், ருத்ர காளி கோவிலுக்குச் சென்று, தேவியிடம் பிரார்த்தனை செய்தான். அவன், சந்திராவின் ஆத்மாவை விடுவிக்க வேண்டுமென்று கேட்டான். காளி தேவி, கார்த்திக்கின் பக்தியைக் கண்டு மகிழ்ந்தாள். அவள் கார்த்திக்கிற்கு ஒரு சவாலை விடுத்தாள்.
"இந்தக் கிராமத்துல இருக்குற எல்லாத் தீமைகளையும் நீக்கி, நியாயத்தை நிலைநாட்டினா, சந்திராவின் ஆத்மாவை விடுவிப்பேன்" என்றாள் காளி தேவி.
கார்த்திக், காளியின் சவாலை ஏற்றுக்கொண்டான். அவன் கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, மக்களின் மனதை மாற்ற முயற்சித்தான். சந்திராவின் மரணம் எவ்வளவு கொடூரமானது என்பதை அவர்களுக்கு உணர்த்தினான்.
கார்த்திக், கிராம மக்களை ஒன்று திரட்டி, ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கினான். அவர்கள், சந்திராவின் ஆத்மாவுக்கு மன்னிப்பு கேட்டார்கள். அவர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து, புதிய வாழ்க்கையைத் தொடங்க முடிவு செய்தார்கள்.
சந்திராவின் ஆத்மா, கார்த்திக்கின் செயல்களால் மகிழ்ந்தது. அவள், காளி தேவியிடம் மன்னிப்பு கேட்டாள். காளி தேவி, சந்திராவின் ஆத்மாவை விடுவித்தாள்.
சந்திராவின் ஆவி வானில் மறைந்தது. கிராமம் மீண்டும் அமைதியாக இருந்தது. கார்த்திக், தனது சவாலில் வெற்றி பெற்றான். அவன், ஒரு வீரன் மட்டுமல்ல, ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு மனிதனாகவும் ஆனான்.

