அவன் பார்த்துப்பான்
அவன் பார்த்துப்பான்


தொலைக்காட்சியில் எத்தனையோ முறை இந்த ரேவதியின் முகம் மழையில் நனையும்போதெல்லாம் நாமும் நனைய மாட்டோமா! என நினைத்திருப்பேன்! ஆனால் அம்மா சளி பிடிக்கும்….நனையாதே! குடை எடுத்துட்டு போ! என சொல்லும்போது சே! இப்படி சொல்கிறார்களே! என ரேவதிக்கு மனம் கசந்த நினைவு வந்தது.
எனக்கு அந்த மண்வாசனை ரேவதியை ரொம்பப் பிடிக்கும். நீயும் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறாய்…அதனால்தான் உனக்கு அந்த பெயர் என அப்பா கையைப் பிடித்து நோட்டில் எழுதப் பழக்கியது நினைவிற்கு வந்தது. ஆனால் ப
ெற்றோர் இன்று அருகில் இல்லாமல் பெருமண்டியூரில் ஊரடங்கில் போட்டிருந்த முகமூடி மழைத்துளியில் நனைந்திருந்தது.
இந்த சிதிலமடைந்த சிவன் கோவிலைப் பார்த்துக்கொண்டிருக்கிறேனே! கடவுளே! எப்பதான் இதைக் கட்டித் தருவார்களோ! என மன அமைதியின்றி அந்த கோவிலைச் சுற்றி இருந்த கல்வெட்டுகளைப் பார்த்தபடி வந்தாள். சிவன்கோவில் மதில்மேல் ஆஞ்சநேயர் அவதாரங்கள் சாதி, மதம் எனக்கில்லை என்பதுபோல அமைதியாக வாழைப்பழம் தின்று கொண்டிருந்ததைப் பார்த்தபடி தனது வீட்டிற்குக் கிளம்பினாள்.