அன்புள்ள நாளேடு - நாள் 2
அன்புள்ள நாளேடு - நாள் 2


அன்புள்ள நாளேடே,
நலமா? அனைவரது நலனையும் கருத்தில் கொண்டு, மேற்கொள்ளப்படும், 21 நாள் ஊரடங்கின் இரண்டாம் நாள் இன்று.
இன்றைய பொழுது சிறிய கைவினை வேலை செய்து மகிழ்வதில் கழிந்தது.
பிஸ்தா பருப்பின் ஓடுகளைக் கொண்டு, அழகிய மரம் செய்ய வாய்ப்பு கிட்டியது. பிஸ்தா ஓடுகளுக்கு, பச்சை வர்ணம் பூசி காய வைத்து, காய்ந்ததும், பசையின் உதவி கொண்டு, அழகிய மரம் போல் ஒட்டி உருவாக்கப்பட்ட கைவினை.
பொழுதை நல்விதமாக கழித்த மகிழ்ச்சி, அத்துடன், நம் கைவண்ணத்தில் உருவான கைவினை, கூடுதல் பரிசு.