யாருக்கும் அச்சமின்றி
யாருக்கும் அச்சமின்றி
யாருக்கும் அச்சமின்றி
துடிக்கிறது ஓர் உயிர்.
இலகுவாக எட்டி உதைக்கிறது
எதிர்வந்த காற்றடைத்த பந்தை.
ஓய்வு பெற்று
ஓடு என்று அவளிடத்தில்
யாரும் கூறவில்லை.
ஓடினால்
ஒடுங்கி போவாய் என்றுதான் கூறினார்கள்.
கசிந்த இரத்தத்தோடு
கண்ணீர் மறைத்தவாறே
ஓர் ஓட்டம்.
அவள் நினைத்த அத்தடத்தில்
அவள் ஆற்றல் வெளிப்பட
ஓர் ஓட்டம்.
நின்று திரும்பி
கைத்தட்டு வாங்க
அவள் காத்திருக்கவே இல்லை,
கையில் ஓர் கோப்பையுடன்
பாலூட்ட ஓர் குழந்தையும் இருந்தது.
