வண்ணங்களோடு வாழ்வோம் !
வண்ணங்களோடு வாழ்வோம் !

1 min

23.4K
உள்ளந்தனில் படிந்து கிடக்கும்
வெறுமை தனை
மகிழ்ச்சி வண்ணங்கள் கொண்டே
நிரப்பிடுவோம் !
உள்ளந்தனில் காரிருளாய்
படிந்து கிடக்கும்
கவலை சோகம் வெறுப்பு
இவையனைத்தையும்
நம்பிக்கை வண்ணங்களால்
துடைத்தெறிந்தே
வாழ்வை வண்ணமயமாக்கி
நலமுடன் வாழ்ந்திடுவோம் !