பருவத்தே காதல் செய்
பருவத்தே காதல் செய்
பள்ளிக்குச் செல்லும் பருவமன்றோ
பயில்வதில் புரிதல் வேண்டுமன்றோ
பள்ளியறை மோகம் தேவையன்றோ
பட்டுத்தான் போகுமே மொட்டுகளன்றோ
காதலெனும் பெயர்தான் போதுமன்றோ
காதலுக்கும் நேரங்காலம் கூடுமன்றோ
காதலித்தல் தவறென போற்றுதலன்றோ
காதல்செய்யும் காலந்தான் தவறன்றோ
பெற்றோரிடம் காதல்தான் வேண்டுமன்றோ
பெற்றவள் மகிழ்வே சுகமானதன்றோ
வாழ்க்கையை சமாளிக்க வேண்டுமன்றோ
வாழ்வதற்கு படிப்புதான் போதுமன்றோ
தேவையை அறியவும் தெரியுமன்றோ
தேயாமல் வளரனும் புரியுமன்றோ
காதலாகும் காலமும் கனியனுமன்றோ
காதலும் காய்ப்பருவத்தில் நல்லதன்றோ
படிப்பிலே காதலும் வேண்டுமன்றோ
பல்துறை வளர்ச்சியும் தோன்றுமன்றோ
பக்குவம் உங்களுக்கு போதுமன்றோ
பக்கபலம் பெற்றோரே தெரிவதுண்டோ