விருந்தாகிட.....
விருந்தாகிட.....
என் கண்களுக்குள் நீ
என் எண்ணங்களுக்குள் நீ
என் கனவுகளுக்குள் நீ
என் உணர்வுகளுக்குள் நீ
உன் இதழ்களின் இனிமையில்
தினமும் நான் மயங்கிட
என் தோள்களில் மயிலிறகின்
மென்மையாய் மெல்ல நீ
தலை சாய்த்து உறங்கிட
என் காதுகளில் ஒலிக்கும்
உன் மூச்சின் நாதத்தில்
நனவாகிய பொழுதுகளில்
யாருக்கு யார் விருந்தென்று
நிலவொளியில் சிரித்திடும்
மல்லிகை மலர்களின் வாசமாய்
நம் காதல் வாழ்வு மாறுமோ?
மண்ணின் மணத்தினில்
சட்டென கிளம்பும்
மழையின் வாசமாய் நீ
இன்று எனக்கு மாறியது
உண்மை தானா இனியவளே