வாழ்க்கையில் ஒரு பாடம்
வாழ்க்கையில் ஒரு பாடம்
பிறந்தேன் ஒரு செல்வந்தராய் எதை பற்றிய கவலையின்றி வாழ்ந்தேன் செழிப்பாய்,
உண்ண விடவிதமான பலகாரம் நாவில் சுவைக்க பல உண்டு தினமும் என் தட்டில்,
கவலை என்ற சொல்லுக்கு அர்த்தம்கூட தெரியாது பள்ளி படிப்பை தொடங்கினேன்.
யார் என்ன சொன்னாலும் என்னை பாதுகாக்கும் செல்வந்தர் தந்தை கிடைத்தது என் பாக்கியம்,
ஒரு நாளும் என் அன்னையின் சொல்லை செவி கொடுத்து கேட்க மறந்தேன் நானே,
அன்பு அன்னையின் அன்பையும் பண்பையும் புரிந்து கொள்ளும் வயது இல்லை என்னக்கு.
இன்னும் எத்தனை நாட்கள் இப்படி இருக்க போகிறது என்ற பரிதவிப்பு என் அன்னையை வாட்டியது,
சற்றே ஒரு சிந்தையில் ஒரு பாடம் கற்பிக்க எண்ணிய இறைவன் என் வாழ்க்கையை மாற்றினான் நிமிடத்தில்,
பாசமிகு தந்தையின் செல்வங்கள் பறிபோனது ஒரே நொடியில் செய்வது அறிய நின்றேன் நானே.
இன்று புரிந்தது உணவின் முக்கியத்துவம் பசியால் வாடிய நானோ மெல்ல சென்றேன்,
கிடைத்தது ஒரு உணவு பொட்டலம் குப்பைத்தொட்டியில் மனம் வருந்தினேன் நான்,
வேறு வழி இன்றி அதை கையில் எடுத்தேன் பார்த்தால் உள்ளே ஒன்றுமே இல்லை,
வாழ்க்கை கற்றுத்தந்த பாடம் பணக்காரனோ ஏழையோ உணவு தான் முக்கியம்!
