STORYMIRROR

Chidambranathan N

Abstract Fantasy Inspirational

4  

Chidambranathan N

Abstract Fantasy Inspirational

வாழ்க்கையில் நண்பர்கள்

வாழ்க்கையில் நண்பர்கள்

1 min
223

முகமறியும் செழிப்பில் நாம் இருந்தாலும்!

முகவரியுடன் நாம் கடந்துவந்த பாதையை நாம் நினைக்கிறோம்!


முகமலர்ச்சியுடன் நமக்குப் பிடித்தவர்களாகக் காணாமல் இருந்தாலும்!

முகக் கிளாச்சி கண்ணீருடன் நாம் உணர்கிறோம்! 


முகமறிந்த நண்பர்களுடன் பிரிவின்றி இருந்தாலும்!

முகப்பொலிவுடன் நீண்ட நாள் வாழ்வில் பயணிக்க இயலாமல் தவிக்கிறோம்!


முகமலர்ச்சியான தோழர்கள் தொடர் வாழ்விலே பயணித்தாலும்!

முட்டுக் கொடுக்கும் புகைவண்டித் தண்டவாளங்களாக இணையவும் பிரியவும் இயலாமல் திளைக்கிறோம்!


முன்னேறிய வாழ்விலே நாம் தொடர்ந்தாலும்!

முன்னுரிமைப் பட்டியலில் தோழர்கள் இல்லை என்பதை உண்மையாக்குகிறோம்!


முடிவில்லாத நண்பர்கள் நமக்கு இருந்தாலும்!

முதன்மையாகக் காதலிகளைத் தொடர்ந்து சென்று நேசிக்கிறோம்! 


முக்கியமான நண்பர்கள் நமது அமைதியை அகங்காரமாக நினைத்தாலும்!

முதிர்ச்சியான நமது அறிவை நமது நண்பர்கள் உணரவில்லையென வருந்துகிறோம்!


முதன்மை ஆசானாகிய நண்பர்கள் இல்லாததை நினைத்து வாடி நின்றாலும்!

முகத்தின் விழிகளில் வழியும் கண்ணீராகக் கண்டு கலங்குகிறோம்!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract