Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Chidambranathan N

Classics Fantasy Inspirational

4  

Chidambranathan N

Classics Fantasy Inspirational

வாழ்க்கைப் பயணம்

வாழ்க்கைப் பயணம்

1 min
152


வாழ்க்கையின் இனிமையான பயணம் குழந்தைகளின் வாழ்க்கைப் பயணம்!

மகிழ்ச்சியாக வாழ வேண்டியது இளமைக்கால வாழ்க்கைப் பயணம்!

குடும்பத்தில் உள்ள மூத்தோர்ச் சொல் கேட்டு அவர்களின் ஆலோசனைப்படி நடப்பது பாதுகாப்பன வாழ்க்கைப் பயணம்!

வாழ்க்கையின் ஒவ்வொரு சோதனைகளிலும் நமக்குக் கிடைப்பது அனுபவத்திற்கான வாழ்க்கைப் பயணம்!

வாழ்க்கையின் இன்பங்களுக்கும் துன்பங்களுக்கும் காரணமாக அமைவது தனி மனித எண்ணங்களுக்கான வாழ்க்கைப் பயணம்!

நமது நலனிற்காக மட்டுமின்றி மற்றவர்களின் நலனிற்காகவும் உதவி செய்து வாழுவது பொது நலனிற்கான வாழ்க்கைப் பயணம்!

உழைத்து மட்டுமே பொருள் ஈட்டுவது உண்மைக்கான வாழ்க்கைப் பயணம்!

எல்லாக் காலங்களிலும் தவிர்க்க வேண்டியது சோம்பலான வாழ்க்கைப் பயணம்!

காலம் தவறிக் கிடைக்கும் அன்பானது பயனற்ற வாழ்க்கைப் பயணம்!

நாம் காயப்படுத்திய மனிதர்களிடம் மன்னிப்புக் கேட்கும் பண்புதான் வாழ்க்கையினை முழுவதும் அறிந்த மனிதனின் வாழ்க்கைப் பயணம்!

வாழ்க்கையின் கடினமான பயணம் வயது முதிர்ந்த வாழ்க்கைப் பயணம்!

வாழ்க்கையின் இறுதியில் ஒவ்வொரு மனிதனும் நாடுவது நிம்மதியான வாழ்க்கைப் பயணம்!

நாம் இறந்த பிறகும் நாம் செய்த நல்ல செயல்களை இந்த உலகம் நினைவு கூறுவதாக இருந்தால் அதுவே ஒரு தலைசிறந்த வாழ்க்கைப் பயணம்!

சுய நலம், தன்னம்பிக்கையின்மை, திமிர், விட்டுக் கொடுக்காத தன்மை, துரோகச் செயலின் மூலம் கிடைப்பது துயரமான வாழ்க்கைப் பயணம்!

மகிழ்ச்சியான காலகட்டத்திலும் துயரமான கால கட்டத்திலும் மனச் சலனமின்றி வாழ்வியலை எதிர்கொள்வது மனப் பக்குவமான வாழ்க்கைப் பயணம்!

வாழ்க்கையினை நாமே அழகாக மாற்றிக் கொள்ளுவதே அழகான வாழ்க்கைப் பயணம்!


Rate this content
Log in

Similar tamil poem from Classics