STORYMIRROR

Arivazhagan Subbarayan

Abstract Classics Inspirational

3  

Arivazhagan Subbarayan

Abstract Classics Inspirational

உள் அமைதி

உள் அமைதி

1 min
183


என் காதுகளோரம்

தென்றலின் இசை!

கண்கள் மூடி

பயம் தெளிகிறேன்!


பாறைகளில் மோதும்

அலைகளின் ஒலியில்

என்னை மறக்கிறேன்!


இயற்கையின் அமைதியில்

அயர்ச்சிகள் அகலும்!

ஆன்மா மிளிரும்!

வாழ்வின் பாதை புலப்படும்!


கடலலைகளின் பாதை

நோக்குகிறேன்!

பொன்னிறச் சூரியனின்

கிரணங்கள்

மயக்கும் மாலை நேரத்து எழிலில்

மனம் மயங்குகிறேன்!


இரவின் இனிமை

அருகே தெரிய

இதயத்தில் சிலிர்ப்பு!


ஏதோ இனிமை!

எதிலும் அழகு!

உலகின் இதயம் உரைக்கும்

அன்பு!


அமர்ந்து

அழகை இரசிக்க

அகந்தை அகலும்!

அன்பே ஓங்கும்!


மனம் தெளியும்!

மாசு ஒழியும்!

செருக்கு கழியும்!

புலப்படும் வழியும்!



Rate this content
Log in

Similar tamil poem from Abstract