STORYMIRROR

Jaga Maha

Classics

3  

Jaga Maha

Classics

ஏங்கினாள் ஏந்திழையாள்

ஏங்கினாள் ஏந்திழையாள்

1 min
177

ஏங்கினாள் ஏந்திழையாள் தன்னிலை கண்டு....

கொதிக்கும் தனலென தன் தேகமும் தகிக்க

தனலனைக்கும் தலைவனைக் காணாது....

எங்கிருக்கிறாய் என் தலைவா நீ.... பருவமும் பழியாய் கிடக்க பாழாய் போன என் இளமையும் வருமை கொள்ளும்.....

உறவுகளும் வஞ்சமாய் பு(இ)கழ்ந்தே செல்லும் இந்த மகராசிக்கேத்த மகராசன் எங்கிருக்கானோ என்று....

நாளும் கிழமையும் ஆனா என் மனம் முகமறியா உன்னையே நினைக்குது

எங்கிருக்க ராசா நீ ....எப்ப வருவ....

எஞ்சோட்டு பிள்ளைகளும் காலத்தில் கட்டிகிட்டு வயிற்றிலொன்னு இடுப்பிலொன்று சுமக்க என்ன பெத்தவளோ

என்ன அவள் தோலில் சுமக்கா...

எங்கிருக்க ராசா நீ.. எப்ப வருவ....

கடவுளே உனக்கும் கண்ணில்லையோ...காதில்லையோ....

என் வேண்டுதலும் பாக்கலையோ நீ கேட்கலையோ....

எனக்காக வேண்டா சாமி என்னை பெத்த வங்க கடன் தீர என்னை கரை சேர்க்க வரம் தா.....

பெற்றவங்களுக்கு பெண்ணாகவே கடைசிவரை இருந்திடுவேன் இந்த ஊர் வாய மூடத்தான் தாலி வரமும் நான் கேட்டேன்....

நான் பிறந்த பிறப்பிற்கும் ஒரு அர்த்தம் வேண்டாமா...கன்னியாவே என் காலம் தள்ள எனக்கு ஏன் இந்த பொறப்பு...

படிப்பிருக்கு... பண்பிருக்கு .....

என்னை ஏத்துக்க எது தடையாயிருக்கு....



Rate this content
Log in

Similar tamil poem from Classics