STORYMIRROR

Jaga Maha

Fantasy

4  

Jaga Maha

Fantasy

மனமே நீ நலமா?

மனமே நீ நலமா?

1 min
176

மனமே நீ நலமா?

கண் முன்னே நிகழும் சமூக அவலங்களை கண்டு வெகுண்டெழுந்தாலும் சூழ்நிலை கைதியாய் மௌனம் காத்திட்ட மனமே நீ நலமா!!!

குடும்பத்திற்குள்ளும் அரசியல் செய்யும் உறவுகளை கண்டு வெதும்பும் மனமே நீ நலமா!!!

கல்வியும், மருத்துவமும், காசாகி கடைதெருவிற்கு வந்ததை நினைத்து வியந்த மனமே நீ நலமா!!!

விவசாயிகளின் துயர் கண்டு துடித்தாலும்

அவர்களுக்கு உதவும் வழியறியா மனமே நீ நலமா!!!

கடைத்தெரு சென்று பேரம் பேசியே பொருள் வாங்கும் மனிதன் நிழற்படம் பார்த்து பதிலேதும் பேசாது பதிந்து பொருள் வாங்க பொறுக்காத மனமே நீ நலமா!!!

இயலாத வயதில் தள்ளாத பெற்றோரை

பாதுகாத்திடா பிள்ளைகள் கண்டு வெகுண்ட மனமே நீ நலமா!!!

சிறு பிள்ளை என்றும் பாராது கலவாடும் கனவான்களை கன்டதுன்டமாய் வெட்ட துடிக்கும் மனமே நீ நலமா!!!

இன்னுமின்னும் எத்தனையோ அதை சொல்ல சொல்ல எனக்கும் பெயர் மன நலமில்லாதவள் என்று மனமே நீ நலமா!!!



Rate this content
Log in

Similar tamil poem from Fantasy