அடையாளம் காட்டும்
அடையாளம் காட்டும்
மனிதனை நிலைகுலையச் செய்து அவமானங்களை அவனுக்கு அடையாளம் காட்டும்!
மனிதனை மனம் உடையச் செய்து ஏமாற்றங்களை அவனுக்கு அடையாளம் காட்டும்!
மனிதனைத் துவண்டு விடச் செய்து தோல்விகளை அவனுக்கு அடையாளம் காட்டும்!
மனித வாழ்வியலைச் சூறையாடச் செய்து சரியான காலச் சூழ்நிலையினை அவனுக்கு அடையாளம் காட்டும்!
மனிதனை நம்பிக்கை அற்றவராகச் செய்து நம்பிக்கை துரோகங்களை அவனுக்கு அடையாளம் காட்டும்!
மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் சிறிய தவறுகள் பிற்கால வாழ்க்கையில் அவனுக்குச் சிறந்த அனுபவத்தினை அடையாளம் காட்டும்!
மனிதனின் வஞ்சக நண்பர்கள்மூலம் துரோகத்தினை உணரச் செய்து நல்ல மனிதர்களை அவனுக்கு அடையாளம் காட்டும்!
மனிதனின் எதிரிகளின் நடவடிக்கைகளைக் கண்டறியச் செய்து நல்ல நண்பர்களை அவனுக்கு அடையாளம் காட்டும்!
மனிதனின் நட்பு மற்றும் உறவினர்களின் தீமைகளை உணரச் செய்து நல்லவர்களை அவனுக்கு அடையாளம் காட்டும்!
மனிதனின் அன்பின் இழப்புகளை உணரச் செய்து தூய பாசத்தினை அவனுக்கு அடையாளம் காட்டும்!
மனிதனின் அன்றாடத் தோல்விகளைப் படிக்கச் செய்து உறுதியையும் துணிச்சலையும் அவனுக்கு அடையாளம் காட்டும்!
மனிதன் தனது அனுபவங்களை எதிர்கொள்வதன் மூலம் வாழ்வின் வெற்றியாளனாக அவனை இந்த உலகிற்கு அடையாளம் காட்டும்!