உயிர்த்தெழும் அவள்
உயிர்த்தெழும் அவள்
தன்னுடல் மறைக்க
எவ்வாடை அணிய வேண்டுமென்று
சலனம் படிந்த
உயிர் ஒன்று கூறுகிறது.
இவ்வாடையிலும்
உடலை காண
முயற்சித்தோ முயற்சிக்காதோ
சலனம் கொண்ட ஓர் உயிர்.
உறைக்க உறைக்க
கூறினாலும்
உள்ளுர மறைத்து உடுத்தினாலும்
உள்மனம் கலங்கமற்று இருக்கவேண்டும்,
உரிமையை பெற
உயிர்த்தெழும் அவளை போற்ற.
