Tamizh muhil Prakasam

Abstract

4  

Tamizh muhil Prakasam

Abstract

உடன்பிறப்பு

உடன்பிறப்பு

1 min
1.2K


ஒற்றைக் கருவறையை

பகிர்ந்தோம் -

அன்பிலே ஆனந்தம்

கொண்டோம் !

ஆயிரம் கதைகள்

பேசாவிட்டாலும்

செல்ல சண்டைகள்

ஓராயிரம் போட்டோம் !

சண்டைகளும் கோபங்களும்

நீடித்ததில்லை !

ஒருவரின் மற்றவருக்கான

தேடல் - அது எந்நாளும்

தீர்ந்ததில்லை !

காலம் அதன் போக்கில்

இருக்குமிடத்தின் இடைவெளி

அது அதிகரித்தாலும்

அன்பிற்கு இங்கே இடைவெளி 

ஏதுமில்லை !

உள்ளத்தில் உறைந்திட்ட

அன்பின் தித்திப்புகள் -

அவை ஒருநாளும்

திகட்டுவதில்லை !


Rate this content
Log in

Similar tamil poem from Abstract