உள்ளத்தில் நல்ல உள்ளம்
உள்ளத்தில் நல்ல உள்ளம்


வாசலில் அணில் காகம்
நாய் பூனை எறும்பு என
பல்லுயிருக்கும்
சிறிது உணவிட்டு - பின்
தானுண்டு பசியாறும்
இன் பண்பு ! - இன்று
ஊரடங்கி வீட்டிற்குள்
தானுண்டு -
தன் பணி உண்டு என்றே
முடங்கிவிட
இரவெலாம் தெருக் காவலாய் அயராதிருக்கும் பைரவ சேனைகட்கு
நன்றி உணர்த்தலோ இது?
இல்லை - இல்லவே இல்லை
மனிதம் இன்னும்
மரித்து விடவில்லை எனும்
பேருண்மையின் சாட்சியே
இக் காட்சி !