உளைச்சலேன்?
உளைச்சலேன்?


உதிரம் உறைந்த உடலும்
உண்மை உறங்கும் உள்ளமும்
உழன்று உரிந்து உந்தையில்
உருண்டு உலாவும் உலகம்
உன்னை உழுது உலுக்கும்
உலர்ந்த உதடுகள் உளறி
உதிர்த்த உரைக்கு உருவில்லை
உரிமை உவந்து உருகியவர்
உதரிய உறவுக்கு உணர்வில்லை
உச்சியின் உதயமாய் உக்கிரமேன்?
உளி உராய்சிய உறுப்பாய்
உரக்க உறுமும் உள்ளமே
உவரி உமிழ்ந்த உப்பாய்
உவர்த்து உவட்டும் உயிரே
உலப்பு உறுதி, உளைச்சலேன்?