தனிமைச் சுரங்கம்
தனிமைச் சுரங்கம்
அமைதியின் இரைச்சல் காதுகிழிக்கும்
மௌனம் தைத்துக்கொள்வாய்
வலியின் வருடல் சீழ்கோர்க்கும்
சகிப்புத்தன்மை பூசிக்கொள்வாய்
வெறுமையின் கைகள் கழுத்துநெறிக்கும்
சுதந்திரம் மீட்டுக்கொள்வாய்
இளமையின் முதிர்வு தவறவைக்கும்
பக்குவம்பழகிக்கொள்வாய்
பொய்மையின் உண்மை வாயிலெடுக்கும்
பொறுமை ஜீரணித்துக்கொள்வாய்
தண்மையின் வன்மை சுட்டெரிக்கும்
நடுநிலை போர்த்திக்கொள்வாய்
வெற்றியின் தோல்வி குழிபறிக்கும்
தன்னம்பிக்கை வளர்த்துக்கொள்வாய்
தனிமையின் சேர்க்கை ஜடமாக்கும்
சுயத்தை உணர்ந்துகொள்வாய்!!!!