தனிமை 😄
தனிமை 😄
தனிமை ஒரு கொடிய நோய்... ஊரார் அனைவரும் உறங்கிடும் நேரம் இவன் விழி உறங்கா சொப்பணத்தில் ஆழ்ந்திட்டான்.. தோள் சாய தோளும் தலை கோத விரல்களும் கண்ணீர் துடைக்க கைகளும் வந்து போயின அவன் சொப்பணத்தில்.. வாழ்வில் செல்வம் பெற்றான் வயிறாற உண்டான் ஆனாலும் அவன் முகத்தில் புன்னகையில்லை.. புன்னகையைத் தேடி தூக்கத்தை விட்டான்.. தனிமையிலுருந்து விடுபட வானை நோக்கி நிலவிடம் அனைத்தும் பகிர்ந்தான்... நிலவையும் மேகம் பகிர்ந்தது.. வாழ்வை பௌர்ணமி போல காண நினைத்த அவன் காணுவதோ அமாவாசையைத்தான்