தங்கச்சுரங்கம்
தங்கச்சுரங்கம்
மனம் எனும் தங்கச்சுரங்கம்!
உணரப்படாமல்
அறியப்படாமல்
வீணே கிடக்கிறது!
இதயத்தில் ஊறும் அன்பை
அறியாது
வெளியே பணம்தேடி
மனம் அலையும் அவலம்!
இதயத்தின் ஆழத்திலும்
மனதின் உட்புறத்திலும்
அமைதியின் ஔியும்
அன்பின் கருணையும்
தங்கச்சுரங்கம் என்பதை
உணரவில்லை நாம்!
கவலைகளையும்
பயத்தையும்
மன இறுக்கங்களையும்
தூக்கி எறிந்து விட்டு
உள் மனதின் ஔியை
அமைதியை நேசித்தால்
தங்கச்சுரங்கம்
நம்முள்ளேயே இருப்பது புரியும்!
